Tuesday, December 25, 2012

தற்கொலை பூமியாகும் தஞ்சையில்...!

தற்கொலை பூமியாம் தஞ்சையில்..ஆறுகளில் சில இடங்களில் தடுப்பணைகளில் சிறிது நீர் தேங்கி உள்ளது..இனி இரண்டு வாரங்கள்  சென்றால்..அவையும் ஆவியாகிவிடும்!அதுவும் மேல் ஆயக்கட்டுகளில் தான் இந்த நிலை!..நாகை..திருவாரூர் போன்ற வடிகால் பகுதிகளில் வயல்வெளிகளில் நிஜமாகவே மாடுகள் மேய்ந்து வருகின்றன!

அந்த சோகத்தைப் படம் எடுக்க மனம் சிறிதும் ஒத்துழைக்கவில்லை..!

தஞ்சை விவசாய மக்கள் ஏற்கெனவே சிறுகடன் வலையில் சிக்கித் தவிப்பவர்கள்! பயிர் செத்ததால்..கடன் பயங்கரம் வட்டியுடன் வந்து கண்முன்னே கூத்தாடுவதால்..வழி தெரியாமல் உயிர்கள்செத்துக் கொண்டிருக்கின்றன..தவணை முறையில் !

மக்கள் சந்திப்பு..அவசியம் தேவை..இக்கணம்!
 அரசு மறுக்க, மண்ணின் மைந்தன் பேனாவில் மட்டுமே கண்ணீர் வடிக்க, எதிர்க்கட்சி இயங்காமல் இருக்க.அம்மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லுவது யார்?

 எப்போதும் " மிஸ்ஸிங் டைமிங்" போராட்டப் புயல் தலைவர்!
தஞ்சை தரணி தண்ணீர் இன்றி காய்கிறது.     அங்கு சென்று மக்களை   சந்திக்கலாமே!


தானைத் தலைவர் தன் படைப்பரிவாரங்களைக் கொண்டு..தில்லியிடம் பேசி..நிவாரணங்களைப் பெற்றுத் தரலாமே !

 ஆள்வோர் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு..பயிர்கடன், டீசல் மானியம், போன்ற மற்ற உதவிகளை செய்யலாமே..முழுவீச்சில் !



 சுனாமி, வெள்ளம் போல மழைஇன்மையும் அதனால் வரும் பஞ்சமும் ..ஒரு பேரிடர் தான்!
தஞ்சை விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர்....!

நாங்கள் இருக்கிறோம்..நம்பிக்கை இழக்காதீர் என தஞ்சைவிவசாயிகளை மட்டுமல்ல..தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வேண்டிய கடமை..மத்திய, மாநில ஆள்வோருக்கு உண்டு!

 


விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும்..அது நம் முதல்வர் கையில் தான் இருக்கிறது..! விதைத்த செலவையாவது மானியமாகக் கொடுத்தேயாக வேண்டும்!

இந்த தடவை நாம் விவசாயியைக்  கைவிட்டோமானால்   ..விவசாயமே செத்துவிடும்..!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள்!










Friday, December 21, 2012

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !

 2012ல் டிசம்பர் 23ம் தேதி..வைகுண்ட ஏகாதசி..ஞாயிறு காலை ஆரம்பித்து..24ம் தேதி திங்கள் காலை நிறைவுறுகிறது ! பெரும்பாலான வைணவத் தலங்களில் ஞாயிறு இரவு முழுக்கக் கொண்டாட்டங்கள்.திங்கள் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு !

விரதம் மேற்கொள்பவர் ஞாயிறு காலையில் ஆரம்பித்து..ஞாயிறு இரவு கண்விழித்து..திங்கள் அதிகாலை வைகுண்ட வாசல் கடந்து..திங்கள் மாலை வரை விரதம் தொடர்ந்து அரிசியை பின்னமாக்கி சமைத்து சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும் ! ( ஒரு பட்டரிடம் அறிந்தது )

விரதகாலம் பால்பழம் அருந்தலாம்..நீராகரம்..சிறிது சிறிதாக அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் ! திட உணவை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் ! ( புதிதாக இருப்பவர்கள் ..முடியவில்லை எனில் வெங்காயம் போடாமல் உப்புமா சாப்பிடலாம் )

வைகுண்ட வாசனின் மார்கழி ஏகாதசித் திருவிழா !



பூலோக சொர்க்கமாம் திருவரங்கத்தில் கூட்டம் அலை மோதும். கடந்த சில வருடங்களாக கட்டணதரிசன முறை அமல்படுத்தப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. வரிசைதான் என்றாலும், நேரம் எடுத்துக்கொண்டாலும், எளிதில் தரிசனம் கிடைக்கிறது.!

 உற்சவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அழகு..!ஆடல்..பாடல்கள் அங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கும்!

திருப்பதியில் மிகுந்த பக்தர்களை எதிர் பார்த்து ஏற்பாடுகள் நடக்கின்றன ! திருவல்லிக் கேணியில் சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது ! 


திருவரங்கன் திருவடியே சரணம்!



Monday, December 10, 2012

நீ ..நீ நடிகனாகவே இரு! தலைவனாக வேண்டாம்..!

 வந்தாரை வாழவைக்கும் எல்லா தேசமும்..
வந்தாரையும் கொண்டாடும் தமிழ்தேசம் !

தலைவன் என்று பேரும் சூட்டும்..
திலக'மிட்டு முடி'யும் சூட்டும்!


அரிமாயனை கும்பிடுவர் எம்மக்கள்..
திரைமாயரை நம்பிடுவர் அம்'மாக்கள்!



நிழல் போலே நிஜத்திலும்
இருக்கிறாய்..சரி!
இருப்பாய்..
என்றெண்ணி
நிஜமாகவே உன் நிழல்போல்
எம்மக்கள்!

நீ ..ஒரு தாரகை!  தலைவனாக வேண்டாம்..!


உள்ளூர் சாதித் தலைவர்கள் சலித்தவேளையில்
வெளிச்சமிட்டு வந்த மேனனின்
புன்னகையில் மயங்கி..
மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் எம்மக்கள்!
 அம்மக்கள் பெற்றமக்கள்
அதே வழியில் ராசனாக்க
ராயரை எண்ணி எண்ணி
இருந்த வேளையில்
உனக்கும் ஆசை வந்து வந்து
போகப் போக
வானத்து சந்திரனானாய்..
ரசிகனின் கண்மூடி கண்மூடி ரசித்தாய்!


நீ ஒரு ஆலமரம்..
உன்னோடு வளரலாம்
என உளறித் திரிந்தோர்க்கு
பேரன்கள் பிறந்துவிட்டனர்..!




கலை பொதுவல்ல..அது சுயம்..லாபம் !
அரசியல் பொது..அது பளு..தொல்லை !
என முடிவெடுப்பதற்கு
அறுபது அகவைகள்
கடந்து விட்டன!



ஐந்து வருடம் ஒருமுறை "வாய்ஸ்" மலர்வது
மகாமகத்தையும்..குறிஞ்சிக்கும் ஒப்பானது!


காவிரியில் துவைக்கப்பட்ட உன் சட்டை
உன் மறுபிறவியில் மன்னிக்கப்பட்டு விட்டது!


நதிநீருக்கு நீ அளித்த கோடி..
கரைந்துவிட்டது நதிகளின் சங்கமத்தில் ஓடி!
மகள்களின் திருமணத்தில் நீ அளித்த விருந்து..
பீமராஜனாம் ரசிகர்களுக்கு பெரு மருந்து!




எல்லா வயசுலயும் உண்டு..
எல்லா அமைப்பிலும் உண்டு..
எல்லா தேசத்திலும் உண்டு..
அவை உன் திரைநடிப்பெனும் பூவை
சுவைக்க சுற்றும் வண்டுகள்!
அவற்றுக்குத் தேனை அள்ளித்தா!
அறிவுரை எனும் கஷாயம் வேண்டாம்!

உன்வழி அதுதான்...
ஆம்..தனிவழி!
அதுவே பெருவழி..
வேண்டாம் உனக்கு வேற்று  படுகுழி..!

நீ
தலைவனாக வேண்டாம்..
தாரகையாகவே இருந்து கொள்!






வாழிய பல்லாண்டு..!
வாழிய ஐஸ்வர்யங்களுடன்..!
வாழிய புகழுடன்!





Thursday, November 29, 2012

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

 பிரமிக்கிறோம்...
ஆனந்த அலை பரவுகிறது..
மீண்டும் அண்மைக்குத் தூண்டுகிறது...
ஆம்...
நாம் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்!


காதல் ஒரு அழகான வார்த்தை..
காதலைப் போலவே!


காதலுக்கு இருட்டு தேவையில்லை...
வெளிச்சமே காதலைக் கொண்டுவரும்!


 காதலுக்கு ஒலி தேவையில்லை....
கண்கள் மட்டுமே போதும்!


காதலுக்கு அறிமுகமும் சிலசமயம் தேவைப்படும்..
அது  இங்கு பாசாங்கு எனப்படும்..!






காதல் என்பது அன்புஇல்லை..பாசமாகாது..
வேணும்னா பிரியம்னு வெச்சுக்கலாம்!



காதல் வயதறியாது..
ஈர்ப்பையே அறியும்!


காதல் புரிந்து கொள்ளாது..
ஆனால் காதல்காரரைத் தேடித் தவிக்கும்!


ஒருமுறை மட்டும் மலர்வதில்லை காதல்..
ஓராயிரம்முறை மலரும் ஆண்களுக்கு மட்டும்!
ஒரு'முறை'யோடு வருவது மட்டும் காதல் இல்லை..!
முறை மாறுவதும் காதலாகும் இங்கு!


காதல் கைதொடும்..தோள்படும்..பெரும்பாலும் படர்வதில்லை!
காதல் படர்ந்தால் கா..ஆமாகிவிடும்!

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

காதல் கண்களில் பிறந்து ..
பழக்கத்தில் வளர்ந்து
காலத்தில் மலர்ந்து
கல்யாணத்தில்
மணக்கிறது..
அன்றே மரிக்கிறது
காமம் பிறக்கிறது..
குடும்பம் தழைக்கிறது!


காதல் ஜெயிக்கும்னு ..ஜெயிக்கணும்னு
சொல்லிக் கேள்விபட்டிருப்பீங்க..!
ஜெயிக்கிறதுன்னா..கல்யாணத்துல முடியறது!
பெத்தவங்க சம்மதத்தோடோ..இல்லாமலோ!


காதல் தெய்வீகமானதாம்...ஆம்
காதலிப்பது பிறர் கண்களுக்குத் தெரியாதவரையில்!


காதலில் ஏது கள்ளம்...
களவுதானே காதல்!

காதல் என்பது உறவற்றது...
உறவானால் அங்கு பெயர் மாறிவிடும்!

காதலில் ஆபத்தில்லை...பிரியம் மட்டுமே!
காதல் இங்கும் எங்கும் என்றும் புனிதமானதே...!

காதல் என்றும் வாழும்..வாழ்க!









Friday, November 16, 2012

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


  ஜனங்க நாளுக்கு நாள் ரொம்ப தொட்டாசிணுங்கியா மாறிட்டு வர்றாங்க..!இதுதான் பரிணாம வளர்ச்சியான்னு கேக்கணும்னு தோணுது..! ஆனா பாருங்க இந்த வார்த்தை தான் கைஇடுக்கிலெ  சிக்கிட்டு..எழுத வரமாட்டீங்குது !

மதம்.., சாதி..,மொழி ..அபிமானம் ரொம்பவே ஜாஸ்தி ஆயிட்டு! பெட்ரோல் குண்டுல வந்து நிக்குது..! ஒத்த சினிமாவ உருப்படியா உடமாட்டிங்குது! பதிவு..கீச்சுல திட்டிக்கிறாங்க..குழாயடி சண்டை வேற..ஜெயிலுக்கு அனுப்பிச்சு பவரக் காட்றாங்க..!

இஷ்டத்துக்கு பேசுறாங்க..எழுதுறாங்க..சினிமா காட்றாங்க..! அது சுதந்திரம்..பேச்சுரிமைனு சொல்லிக்கிறாங்க..! உடனே எதிர் கோஷ்டி..க்ருப்பா வந்து பொரண்டு உருண்டு ரகளை செஞ்சு..அவங்களோட போராட்ட உரிமையை டெமான்ஸ்ட்ரேட்' செஞ்சுக் காமிக்கிறாங்க!

பலமான க்ரூப் அப்போதைக்கு ஜெயிக்குது..!அடிவாங்குனவங்க காயத்தையே உத்து உத்து பாத்து கிட்டு வெறியேத்திக்கிறாங்க..! சந்தர்ப்பம் வர்ற வரைக்கும் கருவிட்டு இருக்காங்க!

காரணம் நம்ம தேசத்தோட பல வண்ணக் (வர்ணாசிரம) கலாச்சாரம் தானுங்க!

பராசக்தியில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டுமா?


இனிமே இங்க பொதுவா கூட ஒரு நியாயத்தை ..யோ'சிக்காம சொல்லமுடியாது போல!

கதையிலே..பாட்டுலே..படத்துலே பேரு வைக்கிறதுக்கு எல்லாம் சண்டைக்கு வர்றாங்க! நாகப்பா..நாகலிங்கம்..மாரினு நம்பியார் எத்தனை தடவ கூப்பிட்டு இருப்பாரு!

கதாப்பாத்திரத்துக்கு பேரு வைக்கிறதை கண்காணிக்க தனியா சென்ஸார் போர்டு அதிகாரிகளைப் போடணும்..!

திரைக்கதை மொதல்லயே எழுதிட்டு ஒரு ஆயிரம் காப்பி எடுத்து..எல்லா மத..சாதி..கட்சி..,மொழி..இனம்..,சங்கம்..அரசு ஆபீஸ்களுக்கு கூரியர் செஞ்சு "என்னோசி" வாங்கிட்டுத்தான் வேலையத் தொடங்கணும்..அதுக்குள்ள உனக்கு வயசாயிடுமா!..உருப்படியா  பொழைக்கணுமா .வேணாமா?

தேனிகய்னா ரெடி..தெலுகு படத்துனால..அந்த ஊர் பிராமணர் கொதிச்சுப் போய் போராட்டம் எல்லாம் செஞ்சிருக்காங்க..இங்க துப்பாக்கி பட்ற பாடு எல்லாத்துக்கும் தெரியும்!


இன்னொரு அரங்கேற்றமோ ..சாவித்திரியோ... பாரதி கண்ணம்மாவோ, அலைகள் ஓய்வதில்லையோ..தட்டத்தின் மறையத்து வோ..இனி எடுக்கப்படும் சமீப சாத்தியம் ஒரு கேள்விக்குறியே!

 கொடூர..மோசமான கேரக்டர்களுக்கு இனி எந்தப் பெயர் வைத்தாலும் எதிர்ப்பார்கள்..! காண்பிக்கப்படும் சம்பவங்கள், தோரணைகள், பழக்கவழக்கங்களில் எந்த மத..சாதி சாயல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் திரைத் துறையினரும்..கதாசிரியரும்!

ஜெயம் படத்தில் மோசம் போகும் பெண்பாத்திரத்திற்கு " அலங்காரம்"னும்..கலகலப்பில் மொக்கை வில்லனுக்கு ' வெட்டுப்புலி"னும்  பேரு வெச்சமாதிரி..புயலுக்கு ஆப்பிரிக்க பேரு வெக்கறமாதிரி ரோசணை செஞ்சுத்தான் வைக்கணும்!

வைக்கப்புல்லு..மண்ணாங்கட்டி, திருகாணி,,தலைகாணி..,திருவாத்தான்..,வரிப்புலி..,வண்டுருட்டி..,மாதிரி பேரு வெச்சிங்க..தப்பிச்சீங்க!


திரைப்படங்கள்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசினால் நியமிக்கப்படும் தணிக்கைத்துறை சான்று பெற்று வரும்போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம்!
மறுபடியும் ..உணர்வுகளின் அடிப்படையில் மாற்றம் கோருவதோ..நீக்கக் கோருவதோ..கல்ச்சுரல் போலீஸிங்..என ஆகிவிடுமே!


 இந்நிலை தொடர்ந்தால்..வேறு வழியில்லை..எல்லாக் கோட்டையும் அழிங்க..முதல்ல இருந்தே நான் 50 பரோட்டா சாப்பிடறேன் கதையாக...பராசக்தியில் இருந்துதான் ஆரம்பிக்கணும்! அந்தப்படத்தில் வரும் மத சம்பந்தமான வசனங்களை  நீக்குவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் ..சுத்தப்படுத்தலை!

என்னவோ போங்க..! ஆனா ஜாலியா எடுத்துக் கோங்க..!













Monday, November 5, 2012

இந்த தீபாவளிக்கு என்ன ஃபேஷன்?

ஃஃபேஷன் பத்தி பேசுனாலே அது பெண்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறி விட்டது..அதிரடி ஸ்டைல்..டிசைன் மாற்றங்கள் மட்டுமே அவர்களை திருப்தி செய்யும்!

 விளம்பரங்கள் அனைத்தும் அவர்களையே குறி வைத்து எடுக்கப்படுகின்றன! அதுவும் அப்போதைய 'செலிபிரிட்டி நங்கையரை' வைத்து..!
 

பாட்டியாலா டிசைன்கள்!



ஆண்கள் பாவம்..ஜீன்ஸ்..கட்டம் போட்ட சட்டைலேயே இன்னும் திரியறாங்க..இந்த வருஷமும்..எந்த மாற்றமும் இல்லை..!
பசங்களோட இந்த வருஷம் கலர் ஆல்மோஸ்ட் பேண்டுல டார்க் கிரே..கறுப்பு..இப்படித்தான் போகுது..!
செக் ஷர்ட் இன்னும் ஒரு வருஷம் தாங்கும் போல..! 


செருப்பு போடறவன் எல்லாரும் கிராமத்தானுங்கன்னு நெனப்பு பரவிடுச்சு..! 
கேஸுவல் ஷூ கூட..டார்க் வண்ணத்துல தான் போடறாங்க!
ரெடிமேட் ஐட்டங்கள் தான் இளசுகளின் சாய்ஸ்..! கல்யாணத்துக்குப் பின்னாடி உடம்பு சைஸ் கூடக்குறைச்சல் ஆணவங்க தான்..பாவம்! துணி எடுத்துதான் தைக்கணும்! தையல் கூலி எல்லாம் எக்கச்சக்கம்!   பெரிய டைலருக..பேண்டுக்கு ரூ500ம், ஷர்ட்டுக்கு ரூ350ம் சார்ஜ் செய்யறாங்க! ஜாக்கெட்டுக்கு ரூ200 ஆயிடுச்சு!


பொதுவா..சில உஷார் பார்ட்டிங்க..ஆடித்தள்ளுபடியிலேயே தீபாவளிக்கும் சேர்த்து துணி எடுத்து வெச்சுக்கிறாங்க..காரணம்.சீப்பா வாங்கிறாமன்னு தான்!

இந்த வருஷம் தீபாவளிக்கு சரியா..45 நாளைக்கு முன்னாடி தான் துணிக்கடைகளுக்கு புது சரக்கு வந்திருக்கு! வந்ததெல்லாம் அதிர வைக்கிற " பளீச் " வண்ணங்கள் தான்!

பஞ்சு மிட்டாய் ரோஸ்..பிரைட் பச்சக்கிளி கலர்..மலைக்க வைக்கும் மஞ்சள்..இது தான் இந்த வருஷக் கலர்கள்!
காட்டன் ரகமெல்லாம் 25 சதமும், செயற்கை இழை துணிகள் 15 சதமும்..பட்டு  20 சதமும் விலைகூடி இருக்குது! மின்வெட்டினால தொழில்கள் எல்லாம் சுணங்கி போனதும் ..விலை ஏற்றதுக்கு ஒரு காரணம்!

Rosy Pink Faux Georgette Printed SareeGreen Faux Georgette Printed SareeShaded Orange Faux Georgette Printed Saree

Yellow Baluchari SareeChanderi Cotton


 போன வருஷம் துணிக்கடைய விட எலக்ட்ரானிக்ஸ் மோகம் அதிகமா இருந்தது..இந்த வருஷம் துணிக்கடைக நல்லா ஓடுது!

பெரிய..அகலமான டிவி வாங்கறதுலயும்..மெட்ராஸ்ல டிஜிட்டல் டைரக்ட் கனெக்ஷன்லேயும் மக்கள் ஆர்வமா இருக்காங்க..!
செல்போன்..கேமராவும் நல்லாபோகுது!

பட்டாசு தான் ரொம்ப விலை கூடிருச்சுன்னு சொல்றாங்க! என்ன பட்டாசு வாங்கோணூம் ங்கிறத விட ..எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போறம்னு மொதல்லேயே முடிவு பண்ணிக்கிறது  புத்திசாலித்தனம்! சரவெடி..புஸ்வானம்..சங்குசக்கரம்..மத்தாப்புன்னு முடிச்சிக்கிறது நலம்! நாம விடற ராக்கெட்டை விட மத்தவங்க விடறது தான் நல்லாத் தெரியும்!

ஒரு கூட்டம் பல்ஸர்..யமஹான்னும், சிலர் நேனோ..,ஆல்டோ 800ம்னும் திட்டம் போடறாங்க! டிசம்பர்ல வண்டிக கொஞ்சம் எளிதா கிடைக்கும்..வருஷக்கடைசின்னு பார்க்காதவங்க அப்போ வாங்கிக்கலாம்!

கூட்டுக் குடும்பம் குறைஞ்சதினாலே..பட்சணம் எல்லாம் கடையிலதான் வாங்குறாங்கோ..! முடிஞ்சவரைக்கும் கடைப் பலகாரம் ஒதுக்கிடுங்க..செஞ்சு நாளாயிருக்கும்..விலையும் அதிகமா இருக்கும்! ஆச்சி குளோப்-ஜாமூன் மிக்ஸ் சூப்பரா இருக்கு..டிமாண்ட்லே ஒடிட்டு இருக்கு! காரத்துக்கு முறுக்கு அல்லது ஓலைமுறுக்கு செஞ்சிடுங்க..ரொம்ப ஈஸி! வயிறும் கெடாது!

தீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! அடுத்த மத ஃபிரெண்டுகளுக்கு பட்சணம் கொடுங்க..நீங்க மட்டும் கேக்கு, பிரியாணின்னு அவங்ககிட்ட வாங்கி சாப்பிடறீங்க இல்ல!




எல்லாருக்கும் இனிய 2012 தீபாவளி வாழ்த்துக்கள் !











Saturday, November 3, 2012

ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!

 இயந்திரத்துக்குள் வருவதில்லை..
ரசனை!
இதயத்தில்..இதயத்துள் மலர்வது..
ஈர்ப்பு!
ரசனையும்  ஈர்ப்பும்  பிரசவிப்பது
அன்பு!
காதலாக வளர்ப்பது..
கவிதை!

ரசிகனே காதலன்...
காதலனே கவிஞன்!


கவிதை எழுதா காதலன் ஏது?
கவிதையை விரும்பா காதலும் ஏது?



ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!


எழுதுவது புதுக்கவிதையாகினும்...கவிதை
எழுதுவது இங்கு மரபாக' வைக்கப்படும்!

காதலன் தான் கவிதை எழுதுவானோ..காதலி?
அவளுக்குத் தெரியும்..கவிதைகள்
பொய்யென்று!
அவள் பொய்யுரையாள்..
ஆனால் தன்மெய் போல் ரசிப்பாள்!


சில ஆண்டாள்களும் இங்கு உண்டு!
ரங்கன்கள் அதிகமில்லை!


கவிதைகள் சற்று நீண்ட குறுஞ்செய்திகள்!
எழுதியவர் மறந்து போகலாம்..!
காகித்தில் பேனா மையின் கறை போல
அன்புநெஞ்சத்தில் கறை கொண்டிருக்கும்...!



புதுக்கவிதை தான் இனிக்கும்..
அது முடிவில்லா தொடர்கதை..!
புதுப்புது கவிதைகள் முதலில் இனிக்கும்
ஒரு கட்டத்தில் இனிமையே விலகிடும்!


கவிதை எழுத வேண்டும்
என்பது கட்டாயமில்லை..
கண்களால் சொன்னாலும்
புரிந்து கொள்ளப்படும்..
நினைவில் ஏற்றிக் கொள்ளப்படும்!









Thursday, October 11, 2012

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


நம்ம தலைவருக்கு திரைப்பட " வாத்தியார' கொஞ்சம் கூட பிடிக்காது..சென்ம விரோதி.! ஆனாக்க..பள்ளிக்கூட வாத்தியாருகன்னா அம்புட்டு பிரியம்!

அதே மாதிரி நம்ம செனத்துக்கும்...மிலிட்டரி வேலைக்குப் போகறத விட கவுர்மிண்ட் வாத்தியார் வேலைக்குப் போறதுல உசிரு! சரி..மிலிட்டரிக்கு வேண்டாம்..போலீசாகிறயா..வாத்தி ஆகிறயான்னா..என்ன சொல்லுவோமுனு எல்லாருக்கும் நல்லாத் தெரியும்!

கலக்டர் போஸ்ட விட பிரியமானது..அரசு வாத்தியார் வேலதான்! ஏன்னு கேட்டா..அது அப்பிடித்தான்..வெளக்கம் வேணும்னா உங்க புள்ளைகள..கவுர்மிண்ட் பள்ளிக்கூடத்துல சேத்து படிக்க வையுங்க..நீங்களே தெரிஞ்சுக்குவீங்க!


இன்னும் புரியலையா..போட்டி போட்டுட்டு எல்லா கவுர்மிண்டும் அள்ளிக் கொடுக்கறத..கேட்டு தெரிஞ்சுக்கோங்க! இப்பக்கூட ஏழு பெர்செண்ட் பஞ்சப்படி ஏத்தியிருக்காங்க! அதெல்லாம் ஆட்டாமேடிக்!

பெரைவேட் கம்பெனிகளும் கவுர்மிண்ட் வாத்திகளுக்கு சலுக கொடுக்குது! கார் வெலையில பத்தாயிரம் கம்மியாம்!

வயசானா இல்ல..விவரம் இருந்தாதான் இனி வாத்தி!


உறவுக்கார டீச்சர் ஆத்தா ஒண்ணு..நான் வாங்குன கடசி மாச சம்பளத்த வுட இப்ப வாங்குற மாச பின்சின் ஜாஸ்தின்னு..சொல்லிட்டு,,மனசாட்சி கொஞ்சம் உறுத்துதுன்னும் சொல்லிட்டு போச்சு!



கவுர்மிண்ட்/ பெரைவேட்ன்னு இல்லாம, எந்த ஒரு இடத்துல இருக்குற உத்யோகஸ்தனையும், நெனச்சு..நெனச்சு பொறாமப் பட வெக்கிற..ஒரே உத்யோகம்..கவுர்மிண்ட் வாத்தியார் உத்யோகம்தான்!

அதுவும் கவுர்மிண்ட் வாத்தியாருக மேல இந்த பெரைவேட் பள்ளிக்கூட வாத்திகளுக்கு இருக்குற வவுத்தெரிச்சல் இருக்கே..சொல்லிக்கவே முடியாது...கொஞ்ச நஞ்சமல்ல..அம்புட்டுத் தேறும்!

அவிக வவுத்தெரிச்சல் எல்லாம் சாபமா மாறி ஒண்ணு சேர்ந்து, பெரிய இடியா வந்து இறங்கிடுச்சு! கரஸ்'ல பெரிய படிப்புக படிச்சாலும் சேரி, சந்தைக்கு பின்னால இருக்குற வாத்தியார் ட்ரெய்னிஙில படிச்சலும் சேரி...வேலவாய்ப்பு ஆபீஸ்ல பதியிறது தான் ரொம்ப முக்கியமா இருந்தது! 

அடுத்த முக்கியம்..முன்னால பொறந்து இருக்குற வேண்டியது!ஒப்பற்ற "அப்பாயிஸ"க் கொள்கதான் இதுவரைக்கும்..வாத்தியார்களை முன்னேத்தி இருக்குது! அதென்னுன்னு கேப்பீக..சொல்றேன்!

'முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் பிறந்தவன் தம்பி!' இதாங்க அது!

இப்போ அதுக்கு வேட்டு வந்திருச்சு!
வயசெல்லாம் இனி வேகாதாம்..வரிசப்படி இனி ஆர்டர் வராதாம்!
என்ட்ரன்ஸ் எழுதணுமாம்! அதுல கிடைக்குற ரேங்க் தான் முக்கியமாம்! 

அதுலயும் பாருங்க..புதுசா அடுத்த இடி.."வெயிட்டேஜ்" வேணுமாம்.! என்னாய்யா ..வேல வேணும்னா யார வெயிட்டா கவனிக்கனுமினு நீங்க கேப்பீங்க..! அதில்லைங்..உங்க இளங்கலை..முதுகலை மார்க்க வெச்சு,,ஏத்துவாங்களாம்..உங்களுக்கு வெயிட்!
ஏனுங்..இப்படி உங்க முகமெல்லாம் வெளிறிப் போச்சு!

காலேசுக்குப் போணோம்..கன்னிகளைப் பாத்து கவித வரஞ்சோம்..அரசியல் பேசுணோம்..சினிமா போணோம்..ஸ்ட்ரைக் செஞ்சோம்..லேடியோப் பெட்டியில கரஸ் செஞ்சோம், ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்னு நெனச்சோம்..இப்ப அப்பத்திய   காலேசு மார்க்கும் வேணும்னா எப்படி?
மார்க்கு வாங்குனவனுக்குத் தான் அறிவும் ..விவரமும் ரொம்பத் தெரியமான்னு ..நீங்க கேக்குறது நியாயமாத்தான் தெரியுது!

என்ன பன்றது..அம்மாவத் திட்டி என்ன பிரயோச்சனம்..மத்திய அரசோட கட்டாயாமாம் இது!

புலம்பி ஆவறது ஒண்ணுமில்லே! ஒரு ரோசனை வேணும்னா சொல்ரேன்..கேட்டுக்கோங்! இன்னம் போய் படிக்கிறதெல்லாம்..சும்மா தமாசு!
ஏதாவது ஒரு கட்சியில சேர்ந்து..மபி ஆகிடுங்க..அதாங்க மக்கள் பிரதி"நிதி"!
நம்ம தமாசுக் கவுண்டமணி சொல்றாப்புல..அந்தக் கருமத்துக்கு அதெல்லாம் தேவையில்லையப்பா!

கவுர்மின்ட் பள்ளிக்கூடத்துல...வயசுக்கு மட்டுமே வேலை இடமில்லைன்னு இப்ப வந்திருக்கு! 

அரசு காலேசுக்கு அட்மிசன் அடிதடி நடக்குற மாதிரி..அரசு பள்ளி வாசல்களிலும் "மாணாக்கர்கள் அட்மிஷன் முடிந்துவிட்டது..இனி அடுத்த வருடம் தான்" அப்படிங்கிற போர்ட் மாட்டப்படும் காலம் வரணும்! கண்டிப்பா அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்!

வாய்மையே வெல்லும்! 









Tuesday, October 9, 2012

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!

 கொங்கிலிருந்து சென்று வேலை நிமித்தமாக சென்னையில் வசிக்கும் நண்பர் வீட்டில் விஷேமாம்..ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.ஆனாலோ அவருக்கு கொங்கு செல்ல விருப்பமில்லை.காரணம் கேட்டால்..அந்த மின்வெட்டில் சென்று சிரமப்பட அவரால் முடியாதாம்!

என்ன செய்வது? உறைக்கும்படி  நன்கு வைதேன்....சிரித்துவிட்டு" கோபமா இருக்கிறாய் போல..அப்புறம் பேசறேன்'னு சொல்லிவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டார்!

பத்து நாளா அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பார்க்கிறேன், யாராவது சென்னைவாசிகளின் மின் திருட்டை எழுதிகிறார்களா என்று..ஊஹூம்.. மின்வெட்டை  சிறிய அளவில் எதிர்க்கும் மக்களின் போராட்டங்களை மட்டும் 13ம் பக்கத்தில்..மரணசெய்திகளுக்கு நடுவில் போட்டுவிட்டு ஒளிந்து கொள்கிறார்கள்!

திருட்டு மின்சக்தியை அனுபவிக்கும் தலைநகரவாசிகள்!




என்னய்யா..சென்னைவாசிகளைத் மின்சாரத்தைத் திருடுபவர்கள் என்று எப்படிச் சொல்லலாம்..மீட்டர் பணத்தை சரியாகத்தானே கட்டுகிறார்கள்? என்று வாதிகள் கேட்கலாம்.
ஏனைய தமிழ்வாசிகளின் மின்சாரத்தையும் சொற்ப வெட்டைத் தவிர்த்து, அலங்காரமாக அட்டகாசமாக லஜ்ஜை ஏதுமின்றி அனுபவிக்கும் தன்மையை வேறு எவ்வாறு அழைப்பது? கொள்ளை என்று அழைக்கலாமோ?

ஏனைய தமிழகம் மின்வெட்டினால் வாடி வதங்கி வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுத் தவிப்பதை ஆட்சியாளருக்குக் கொண்டு செல்ல அரசியல்வர்க்கமும் , அதிகாரவர்க்கம் தவிர்க்க முயல்வதை வேணுமானாலும் சகித்துக் கொள்ளலாம்...ஊடகவியலாரும் சேர்ந்து மறைப்பதை சாடியே ஆக வேண்டும்!


சனநாயகத்தின் இந்த நாலாவது தூண்களின் செங்கற்கள்..அதாங்க செய்தியாளர்கள் .பெரும்பாலானோர் வசிப்பது சிங்காரச் சென்னையிலே..இதில் பார்ப்பன..பகுத்தறிவு..புரட்சிகளும் அடக்கம்! இவங்கதான் தமிழகத்தின் தலை எழுத்தை தங்கள் பேனாவில்,மைக்கில் நிர்ணயிப்பவர்கள்!தங்களின் விருப்பங்கள்,எண்ணங்களை ஊடக வாயிலாக மக்களின்  மண்டைக்குள் திணித்து,பொதுக்கருத்தாக மாற்ற முயன்று..அதில் பலசமயம் வெற்றியை ருசிப்பவர்கள்!

இதுல ஒருத்தராவது அடடா..நாம மட்டும் 24 மணிநேரமும் வெட்டில்லாமல் சுகப்படுறோமே..மற்ற தமிழ்பகுதிகாரர்கள் வாடுகிறார்களே..எனவே தமிழக அரசே..சென்னைக்கும் மின் தடை அறிமுகப் படுத்து..மீதமாகும் மின்சாரத்தை..ஏனைய தமிழகத்துக்கு பகிர்ந்தளி 'னு யாராவது சொல்றாங்களான்னு பாருங்க!

எங்கே மற்றபகுதிகளைப் போல் சென்னைக்கும் மின்வெட்டைக் கோரினால், தங்களுக்கும் " சுகக்கேடு" வந்துவிடும் என்று தோணும்படி நடந்து கொள்கிறார்கள்!

சென்னைவாசிகளுக்கு எதற்கு "ஏ'' வகுப்பு சிறைவாசிகளுக்குப் போல் மின்சலுகை? ஏனைய தமிழ்பகுதியினர் என்ன கொடுங்குற்றம் செய்தார்கள்?

அதிகவிலைக்கு கரண்டை வாங்கி தரகுமுதலாளிக்கு கொடுக்காதே என்று அரசுக்கு ஆலோசனை கூறும் வர்க்கப்புரட்சிகள் கூட, சென்னைவாசிகளுக்கும் மின்வெட்டை அமல்படுத்து என்று  கூவ எண்ண்வில்லை என்று நினைக்கும் போது" அவாஅவா பாடு அவாளுக்கு" என்பதே நியாபகம் வருது!


பிய்த்து பிய்த்து வழங்கப்படும் மின்சாரம்.." பிச்சையை'' நினைவூட்டுகிறது. இதனால் ஏதும் பிரயோசனமில்லை..விவசாய சனியன்களுக்கும்..தரகு தொழில் முனைவோருக்கும்!


ஆகவே..சென்னைவாசிகளே..எல்லாத்தையும் நீங்களே அனுபவிச்சுக் கோங்கோ..ஒரே கோரிக்கை சென்னைவாசிகளுக்கு..ஏனையத் தமிழகத்துக்கு தடைபட்ட மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு பதிலா தடையில்லா ஒருமுனை மின்சாரம் வழங்கினால் போதும்...டிவி பார்த்துட்டு..கஞ்சிகுடிச்சிக்கிட்டு உங்களை மாதியே சொகமா இருந்துக்குவோம்..வெட்டிவேலை செய்யாம!
 விவசாயியும் ..தொழிலதிபன்களும் முடிஞ்சா ஜெனெரேட்டர் போட்டுக்கட்டும்..இல்லேன்னா திவாலாகட்டும்! அது அவனுங்க தலை எழுத்து!

இதை மட்டும் எழுதுங்க..பேசுங்க..  பரிசா  கொடுக்க எங்ககிட்ட ஈமுக் கோழிங்க நெறைய இருக்கு..ஈமு பிரியாணி வேணும்னா செஞ்சு பார்சல்ல அனுப்பறோம்!

உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவட்டும்!






Friday, September 28, 2012

தமிழர் ஆபத்தானவரா?

 ஆங்கிலேயர் தான் இந்தியாவை உருவாக்கினர் என்பது மிகையன்று.!.பல்வேறு சிறிய,பெரிய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து.ஒரு குடையின் கீழ்... அவர்களே கொண்டு வந்தனர்!..அது சரித்திரம்!

 வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது..சொன்னவை.." விரைவில் இந்தநாடு உள்நாட்டுப் போரில் சிதைந்து..மீண்டும் பலதுண்டுகளாக உடைந்து போகும்" என்பதேயாகும்!

வல்லபாய் படேலின் சீறிய முயற்சியால் நாடு, பிணைக்கப்பட்டு..65 வருடங்களாக உறுதியாகி வருகிறது!

நாட்டுப்பற்று நம் உடலில் ஊற்றி வளர்க்கப்பட்டது...
மொழி வாயிலாக..
ஊற்றியது தமிழ்!

 வெற்றிவேல்..வீரவேல் என்றிருந்த நம்மை" வாழிய பாரத மணித்திருநாடு" என்று பாவலர்..மாற்றிப் பேச வைத்தனர்..!
இயல்பாக அது நம்மிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டது!
ஏனெனில் இதுகாறும் நாட்டின், அண்டைப் பரப்புகளிடம் நமக்கு தொன்றுதொட்டு இருந்துவந்த பந்தம்!

தமிழர் ஆபத்தானவரா?

ஈழத் தமிழர் மற்றும் அவர்களின் தலைவர்கள்...மத்திய ஆளும்கட்சித் தலைமையின் எண்ணத்தின்படி, பழிவாங்கப்பட்டதாக..நம் இன ஆர்வலர்களால் கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட போதும்..பெரும்பாலோனார் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை!

சமீபத்தில் அந்த நாட்டுப்பற்றுக்கு சோதனை ஒன்று வந்துள்ளது..! வடவர் மூலமாக!
மையாட்சியாளர் மட்டுமல்லாமல்..பொதுவாக வடவர் அனைவருக்கும்..தமிழர் மேல் ..நம்நாட்டவர் என்ற மதிப்பும்..அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்பதை...உணர்த்தும் விதமாக சமீப கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்!

கொடுங்கோலன் ராஜபக்ஷேவை அழையாதீர்..விரட்டுகள் என்று நம் மாநில ஆட்சியாளரும்..கட்சியாளரும், இனவாளரும் கதறியதை..கூக்குரலிட்டதை..தேசியக் கட்சிகள் புறக்கணித்தன!

நம் மாநில மக்களின் உணர்வை..கொடுங்கோலன் எதிர்ப்பின் மூலமாக உணர்த்தச் சென்ற..வைகோவை..வடவர்..எல்லையிலே மறித்ததோடு மட்டுமல்லாமல்..பாதுகாப்புப் படைகளுக்கு..ஒரு சுற்றறிக்கையும்,எச்சரிக்கையும்..விடுத்துள்ளனர்..பாருங்கள்! அது வெந்த புண்ணில் வேல் குத்தும் சமாச்சாரம்!

"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..ராஜீவ் காந்தியையே கொன்றவர்கள்!'' என்பதே அந்த எச்சரிக்கை!



இது நம் நாட்டுப்பற்றை சோதித்துப் பார்க்கும் செயல்! நம்மை வெறுப்பேற்றும் செயல்!

மகாத்மா காந்தியைக் கொன்றது யார்..தமிழனா..வடவன் தானே? நீயே கொடூரன் அன்றோ?

எங்கும் நமக்கு அவமானம்..இழப்பு..ஏன்?

வீரம் மட்டும் இருந்தால் போதாது..
விவேகமும் கூடவே வந்தாலும் பத்தாது..
ஒற்றுமை இல்லையே..
கருத்துத்தொற்றுமை காணவில்லையே!


ஏனெனில்லை நம்மிடையே ..ஓற்றுமை?
சுயவிமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இப்போது..!
கூடி செய்வோம் தப்பாது!


ஆவேசப்பட்டு பலனில்லை. சரியான நேரம் வரும்வரை.பொறுமை காக்க வேண்டும்! நம் எதிரியைப் போன்றே!

நமக்கென்று ஒரேக் கருத்து தான்..பொதுக்கருத்து தான்..என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..ஏற்றுக் கொள்ள வெண்டும்!

வாருங்கள் ஒன்று கூடி வெற்றி மாலை சூடிடுவோம்!



Tuesday, September 11, 2012

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு'
என்றான் கவிஞன்!
விழிகள் பேசும்  அதை வருடும்  மனங்களைக் கண்டு'
என்கிறான் ரசிகன்!


இலக்கின்றி
வெறிக்கும் விழிகள்!
படபடக்கும் இமைகளோடு
கள்ளமறியா விழிகள்...

கவ்வி இழுக்கும்
காந்த விழிகள்...
மீண்டும் பார்க்கத் தூண்டும்
தெய்வீக மலர்கள்...
கடுப்பைக் காட்டும் தீக்கங்குகள்!

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வலையை வீசும்
குளத்து மீன்கள்..
மரபுகளைத் தாண்டி
மருளும் மான்கள்..!


எத்தனை எத்தனை மொழிகள்
படைக்கிறது
ஓசையின்றி  அவ்விழிகள்....!


அவை ஆரம்பித்த கதைகள் கணக்கில்லை...
சொல்லிய வார்த்தைகள் எண்ணவில்லை....
சொல்லாமல் விட்டவை இனிக்கவில்லை.....

அங்கே ஒலியில்லை..இசையில்லை
இலக்கணமில்லை..இணக்கம் மட்டுமே..
இலக்கியங்கள் மட்டும் ஏராளம்!
நினைவுகளோ தாராளம்!








Sunday, September 9, 2012

அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

 அடுத்த ஒரு வாரத்தில்..இலங்கையில் துவங்க இருக்கும்..ஐசிசி 20ஓவர்  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது!

ஆனால் காலாண்டு தேர்வு சமயத்தில் இப்போட்டிகள் தொலைக் காட்சியில் ..அதுவும் படிக்கும் நேரத்தில் காட்சிக்கு வருவது.. பெற்றோருக்கு மிகுந்த எரிச்சலைத் தரக்கூடிய ஒன்றாகும்!

 20 ஓவர் போட்டிகளைப் பொறுத்த வரை,யார் ஜெயிப்பார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்! குறைவான நேரத்தில்..விரைவாக ஆட வேண்டும் எனும் நிபந்தனை..வீரர்களின் இயல்பான ஆட்டத்தை பாதித்து விடுவதால் ..ஆட்டத்தின் போக்கை முன்னரே கணிக்க முடிவதில்லை..பெரும்பாலும்! சிறுசிறு தவறுகள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்து விடுகிறது!

இந்திய அணி சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு சற்று துடிப்புடன் இருப்பதைப் போல் காணப்படுகிறது!
ஆனால்..இந்திய அணியில் ரசிகர்களின், "பார்வைக் குவியம்" மூன்று முக்கிய வீரர்களின் மீது படிந்து இருக்கிறது!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையை அயல்நாட்டில் பெற்று மீண்டு வந்திருக்கும்..பஞ்சாப் சிங்கம்..இந்திய அணியின் காதல் நாயகன்..யுவராஜ்சிங்! மக்கள் தன் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி சொல்லி அனுதாபப் பார்வையை உடைத்தெறியக் காத்திருக்கிறார்..அவருக்கு நம் வாழ்த்துகள்!

ஃபார்ம் இழந்து கேவலப்பட்டுப் போன..தோனியின் கார் நண்பன் ஹர்பஜன்சிங்..சமீபத்தில் தான் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து விட்டு வந்துள்ளார்! வாய்ஜாலக் கில்லாடி மட்டுமல்ல..என்னுடைய கையும்  ஜாலம் புரியும் என சுழற்றிய படியே காத்திருக்கிறார்..பந்தை!

 அஷ்வினுக்கு ஆபத்தா..இலங்கையில்?

ராஜீவ்காந்திக்கே சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்துவிட்டு, அணிவகுப்பு மரியாதையின் போது..சிப்பாயை விட்டு துப்பாக்கிக் கட்டையை, தலை மீது தாக்கத் துணிந்த..ராஜதந்திர மிக்க இலங்கை அரசிடம்..நாம் எதையுமே எதிர்பார்க்கலாம்!

சமீபகால சிங்கள பயணிகள் எதிர்ப்பு நிலையை எடுத்துவரும் தமிழக அரசு மற்றும் இன உணர்வு சக்திகளின் நடவடிக்கைகள்..இனவாத சிங்கள அரசுக்கு கடுப்பைக் கொடுத்திருக்கும் என்பது வெளிப்படை!
பழிக்குப்பழி நடவடிக்கைக்காகவும்..அடையாள எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவும்..இந்திய அணியின் தமிழக வீரர் அஷ்வினை..யாரையாவது விட்டு, தாக்க திட்டமிடக்கூடும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்! மேலும் இப்போட்டியைக் காணச் செல்லும்..தமிழக ரசிகர்கள் மேலும்..ஏதேனும் தாக்குதல் நடக்கலாம்!


 சிங்கள அரசின் அயோக்கியத்தன்மையைக் கொண்டே..இவற்றையெல்லாம் யூகிக்க வேண்டியுள்ளது..!

எதுவும் நடக்காமல் இருந்தால் மகிழ்ச்சி...நடக்காமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்!

புத்தம் அங்கு இல்லையாததால்...சரணம்..கந்தசாமி!




Saturday, September 8, 2012

மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!

மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி எனும் முகமதுகுட்டி, சமீபத்தில் சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயம் பட்டோருக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக, பல லட்சம் பொறுமான மருந்துகளை, ஒரு மருத்துவ நிறுவனம் மூலம் அளிக்க முன்வந்துள்ளார்!

மனிதாபமிக்க மகத்தான இந்த சேவை..பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது!

பொதுவாழ்வில் இருப்போர்க்கு..அவர்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறையை..செயலால் உணர்த்தும்... .. ..மம்முட்டியின் இச்செயல்!


சுனாமியின் போது இந்திநடிகர் விவேக் ஓபராயின் முயற்சியை, ஒப்பிட்டு கூறத்தக்க வகையில் மம்முட்டியின் செய்கை அமைந்துள்ளது! லாபத்தை ஏதும் இவர்கள் கணக்கிடவில்லை..மனிதாபிமானம் ஒன்றே தான் இவர்களின் செயல்களுக்குப் பின்னால்!

மம்முட்டியின் இச்சேவை பெரும்பான்மை பாராட்டு பெற்றிருப்பினும், மக்களின் கோபம் தமிழ்நடிகர்கள் மீதான கடும்விமர்சனமாக உருமாறி வெடிக்கத் துவங்கியுள்ளது!

கும்பகோணம் பள்ளி தீக்கொடுமையின் போது, நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீட்டு, பிறகு அதை செயற்படுத்த முனையாத தமிழ்நடிகர்கள் மீதும், நதிநீர் இணைப்பிற்கு நிதி அளிப்பதாக அளந்த ஸ்டைல்நடிகர் மீதும் மக்களின் கோபக்கணைகள் திரும்பியுள்ளன!


பொதுவாகக் கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்..ஏதாவது வேகத்தில் சொல்லி விடுவார்கள்..பிறகு மறந்துவிடுவார்கள் என்றாலும், தங்களை வாழவைக்கும் அவர்கள் சிறிய அளவிலாவது தொண்டாற்ற வேண்டுமென, மக்கள் எதிர்பார்ப்பு!

சூர்யாவின் அகரம், கமலின் ரத்தசேவை, சசிகுமாரின் கல்விச்சேவை..இவைப்பற்றி கேவலமாக விமர்சீக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்...திரைக்கு முன்னாலும் அவர்கள் நடிகர்களே எனும் பிரச்சாரத்தை..கைவிட வேண்டும்!

 மம்முட்டியின் உதவியும்..விமர்சகர்களும்!
சமீபகாலமாக தலைநிமிர்ந்து வரும், இன உணர்வாளர்கள்..வெறுமென வீம்புக்காக மம்முட்டியின் செயல்களை எதிர்க்காமல்..பெருந்தன்மை நமக்குமிருக்கிறது என காட்டவேண்டிய நேரம்!

தேர்தலுக்கு பலகோடிகள் செலவளிக்கும் அரசியல் சக்திகள்..தங்களின் சேமிப்பின் சிறுபகுதியை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து..வாழ்விழந்த மக்களுக்கு சிறுநம்பிக்கையை ஊட்டலாமே! அதற்கு மம்முட்டியின் இச்செவை ஒரு தூண்டுகோலாக அமையட்டுமே!





கடந்த ஒரு வருட காலமாக, இரு மாநிலத்தவர் இடையே ஏற்பட்டு இருக்கும் மனக்காயங்களுக்கும், மம்முட்டியின் இச்சேவை ஒரு காரணமானால் அது பாராட்டுக்குரியதே!

Friday, September 7, 2012

அனுபவங்கள்.. விருந்தாளிகள்!


சுகமும்...புதியன தெரிந்த ஆனந்தமும்
சோகமும்..அலைச்சலால் வந்த எரிச்சலும்
கோபமும்..எதிர்பாராத தாக்குதல்களும்
அன்பும்..பிரதிபலன்பாராத உதவிகளும்....

பற்பல அனுபவங்கள்..
நாள்தோறும்..வேளைதோறும்
அவைகள் விருந்தாளிகள்..
சிலவை அழையா விருந்தாளிகள்!

வயதில் உடலிலும் மற்றுமா ? 
அனுவத்திலும்..கிடைக்கும்..!
சில மாற்றம்..பல ஏமாற்றம்!

உறவிலும் நட்பிலும் கடமையிலும் தேவையிலும்
பயணத்திலும் பக்கத்திலும்..கிடைக்கும் படிப்பினையே அனுபவம்!

அனுபவங்கள்..  விருந்தாளிகள்!

முதன்முறை ஒன்றை புதிதாக எதிர்கொள்வதே..அனுபவம்!
தொடர்ந்தால்..பழகி விட்டால் அதுவே பழக்கம்!
பழக்கம் தொடர்வது..புது அனு பவத்திற்குத் தடைக்கல்..!

புதியப்புதிய எதிர்கொள்ளல்களே அனுபவம்!
அந்நியத்திலும் தொலைவிலும் தேவைகளாலும் அடைவது!
சிலவற்றை நோக்கியே நாம்..!
பலவை நம்மை சூழ்ந்து...
விரும்பியோ..கட்டாயத்தாலோ..தாட்சண்யத்தாலோ!

 அனுபவங்கள் விருந்தாளிகள்...விருந்தாளிகளால் அடைவது!
அதில் அழையா விருந்தாளிகளே அதிகம்!

புதுப்புது மனிதர்கள்..இடங்கள்
மாறும் காலங்கள்
மாறும் தலைமுறைகள்...
அனுபவக் களஞ்சியங்கள்..!
அவற்றில் சில கழுநீர் தொட்டிகள்!

மாற்றங்கள் சிரஞ்சீவி...மாறாதது!
மாற்றங்களே அனுபவங்கள்!
அனுபவங்கள் நல்ல ஆசான்கள்.. 
அடையாளம் காட்டும் ஆசான்கள்!

வாருங்கள் எதிர்கொள்வோம் அனுபங்களை!
இலக்கியமாக்கி படைத்திடுவோம்..இனியவைகளை!
எச்சரிக்கை பதிவுசெய்வோம்..கசடுகளை!



Wednesday, September 5, 2012

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

இப்போ எல்லோரும் கொஞ்சம் விவரமாத்தான் இருக்காங்க...ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில சேரும் நபர்கள் குறைந்துவருகிறார்கள்! காரணம்..விலையேற்றத்திற்கு தகுந்த  வருவாய் கிடைப்பதில்லை..இத்திட்டங்களில்!

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சராசரியாக 6 சத அளவில் தான், வருவாய் கிடைக்கிறது..காப்பீட்டுத் தொகையின் அளவும் குறைவாகவே இருக்கிறது!

இன்று மருத்துவக் காப்பீடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று..பெரும்பாலான குடும்பங்கள் சேர்ந்து, பயன் பெறுகின்றன! அரசும் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துகிறது!

அடுத்து சுய இழப்புக் காப்பீடு தான்! அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், 'டெர்ம் பாலிஸி" என்று தங்கள் திட்டத்தில் வைத்துள்ளார்கள்! ஆனால் கேட்டால் தான் சொல்வார்கள்! இன்று வலைப்பக்கங்களில் நிறுவனங்களையும்.திட்டங்களையும், சந்தாத் தொகைகளையும் ஒப்பிட்டு வைத்துள்ளார்கள்! அங்கு சென்று பார்த்து, நமக்குத் தேவையான திட்டங்களில், தொகைகளில் சேர்ந்து கொள்ளலாம்!

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

டெர்ம் பாலிஸி என்பது வருடாவருடம் புதுபிக்கவேண்டும்..சந்தா கட்ட வேண்டும்! ஆனால் சந்தாத் தொகை மிகவும் குறைவு! பாலிஸி காலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பிடித்தங்களுடன் தொகை நம் வாரிசுக்கு கிடைக்கும்! ஒருவருட காலம் தான் அதன் வாழ்வு!

எவ்வளவு அளவிற்கு எடுக்க வேண்டும் என்றால்..அளவு ஏதும் இல்லை! ஆனால்..குறைந்தபட்சம் நம்முடைய மொத்தக் கடன் தொகைகள் அளவிற்காவது எடுப்பது நல்லது!

எந்த நிறுவனம் நல்ல நிறுவனம் என்பதில்..எண்ணக் குளறுபடி இருக்கும்..தயக்கமே வேண்டாம். பொதுத்துறை நிறுவனங்களையே நாடவும்!பிற்காலத்தில் பிரச்சனைகள் குறையும்!

இதில் மீதமாகும் நிதியை பொது சேமநல நிதி, தேசிய ஓய்வூதிய நிதிகளில் சேமிக்கலாம். அருகினில் உள்ள தபால் அலுவலகம்..மற்றும் அரசு சார்பு வங்கிகளை அணுகவும்!

 வேண்டும் நலம்!





Tuesday, September 4, 2012

கனகாவின் காலுக்கு வெள்ளிக் கொலுசு!


கனகாவின் கண்ணழகில் மயங்காதவர் உண்டோ?
ஸ்வர்ணலதாவின் இன்னிசையை வெறுப்பாரும் உண்டோ?

மலர்மாலை ஓரிரு நாளில் வாடிவிடுமென்று தானே..கண்ணே
கனகமாலையை உன் தோளில் தவழ விட்டுள்ளாய்!

கறுத்த உன்மேனிக்கு எடுப்பாய் இருக்குமென்று தானே
மஞ்சளழகியை காதிலும் மூக்கிலும் ஏற்றிருக்கிறாய்?

மஞ்சளுக்கெ இங்கு மவுசு..அதனாலெ என்னை உன்கழுத்தில்
தாலியாக்கி காத்து வருகிறாய்!

வெளுப்புத் தலையில் ஏறினால்..கம்பீரம் கூடுது
ஆனா..அழகும் இளமையும் போயிடும்!
அதனால..உன்னோட கால்களில் கொலுசாகவும்
மெட்டியாகவும் சத்தமிடுகிறாய்!


பெண்ணுக்கும் ஆணின் கண்ணுக்கும் தேவை
தங்கமும்..வெள்ளியும்!
பெண்ணின் முழுப்பரிமாணமும் வெளிப்படும்
இவைகளின் சேர்ப்போடு!

கனகாவின் காலுக்கு வெள்ளிக் கொலுசு!


வயது ஏறுவதைத் தடுக்க முடியாது.கூடவே
கனகவெள்ளியின் விலையையும்..!
அழகும் விலையும் கூடும் ..குறையும்.!.ஆனா
வயதும்.மதிப்பும் அதிகரித்துதான் செல்லும்!

மாசம் கொஞ்சம் வாங்குவோம்..ஒவ்வொரு
மாசமும் வாங்குவோம்..!
எல்லா விலையிலும் வாங்குவோம்! பயமா இருந்தா
EXCHANGE ETF    லும் வாங்குவோம்!








கொங்குநாட்டு அரிசிபருப்பு சாதம்!




அரிசிபருப்பு..பருப்பரிசி சாதம்னு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..நம்ம விருப்பம் போல!

எங்க காங்கேயம் காளைக..அதிகமா வெளியில மேயாதுக..பருப்பரிசி சாதவாசனைய புடிச்சா, எங்க சுத்துனாலும் வூட்டுக்கு ஓடி வந்துடுங்க!
வாரத்துல ரெண்டு..மூணு தடவைக்குக் குறையாம, ஒவ்வொரு வூட்லயும் இத செஞ்சுடுவாங்க! பக்கவாத்யங்களோட ஆளாளுக்கு, மினி/மேக்ஸி ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை வெட்டிப்புடுவாங்க!

கண்ணால வூடுகள்ல கூட இந்த சாதத்தை பரிமாற ஆரம்பிச்சுட்டாங்கன்னா..பாத்துகோங்கோ..இதோட மகிமைய!

This One is nothing but.. Kongu version of BisibelaBath!


சாம்பார் சாதம், பிஸிபேளா பாத் மாதிரிதான், இந்த பருப்பரிசி சாதமும்..ஆனா..அதை யெல்லாம் மெய்ன் கோர்ஸா சாப்பிட முடியாது.! பருப்பரிசி சாதத்தை மெயின் கோர்ஸாக சாப்பிடலாம்!



ரெஸிபி மற்றும் செய்முறை! 

* புழுங்கல் அரிசி 2கப் + பருப்பு -அரை கப்..ரெண்டையும் ஒண்ணா சேர்த்துக் கழுவி, வடிக்காம 45 நிமிஷம் ஊற வைக்கணும்!

பருப்புன்னா..துவரம் பருப்பு தான்! துவரைக்கு பதிலா அவரைப்பருப்பு போட்டோம்னா..அது தனி டேஸ்ட்! மூணு தடவை துவரம்பருப்பு போட்டு செஞ்சோம்னா ஒரு தடவை அவரைப்பருப்பு போட்டு செய்யலாம்! பாசிப்பயிறு போடறவங்களும் உண்டு! அவங்க அவங்க டேஸ்ட் பட்ஸ்க்கு ஏத்த மாதிரி!

* எலுமிச்சை அளவுக்கு புளிய எடுத்து ஊறவெச்சு, வடிச்சு கரைசலை எடுத்து தனியா வெச்சுக்கோங்க!

* சின்ன வெங்காயம் உரிச்சது 100கி, மிளகாய் வத்தல் - 4, தக்காளி (நீளமா நறுக்கி) - 1, தாளிப்பு அயிட்டங்கள், உப்பு..மிளகாய் பொடி, பட்டை- சிறுசு, கிராம்பு - 1, சீரகம் - கொஞ்சூண்டு!


செய்முறை 1 / முதல்லய தாளிச்சுட்டு, பொறவு சாப்பாட்டையும் அதே குக்கர்ல சமைக்கிறது! எல்லாமும் உடனே முடிஞ்சிடும்..வேலை கம்மி!பிரியாணி மாதிரியே தான்!

செய்முறை 2 / சாதத்தை மட்டும் சமைச்சிட்டு, பொறவு வாணலியில தாளிக்கறது..ஃப்ரைட் ரைஸ் போல!வேலை ஜாஸ்தி..எண்ணெய் அதிகம்..டேஸ்டும் அதிகம்!

கொங்குநாட்டு அரிசிபருப்பு சாதம்!



 முதல் முறையிலே செய்வோம்!

* குக்கர்ல 50மில்லி ஆயில் + பட்டை + கிராம்பு + சீரகம் + கடுகு + மிளகாய் வத்தல் + சின்னவெங்காயம் + கறி வேப்பிலை ..வரிசைப்படி..ஒவ்வொண்ணா சேர்த்து வதக்கணும்! 3-4 Mins.

* புளிக்கரைசல். (அரை கப்).கல்லுப்பு..மிளகாய்த்தூள்..மஞ்சத்தூள் எல்லாம் வரிசைப்படி சேர்க்கணும்..! 2-3 Mins.

* அடுத்து தண்ணி சேர்க்கணும்..ஒரு கப் அரிசிக்கு ரெண்டரை கப் தண்ணி..அப்ப ரெண்டுகப்புக்கு 5 கப் தண்ணி! பருப்புக்கு தண்ணி கணக்கு இல்ல! அரிசிக்கு மட்டும்தான்!கூடவே தக்காளியையும் போடுங்க!

* உப்புக்காரம் எல்லாம் சரி பாருங்க..!

* தண்ணி நல்லா கொதிச்சு பொங்கும்போது..ஊறவெச்ச அரிசி+பருப்பை குக்கர்லெ சேர்த்துடுங்க!

* நல்லா கலந்து விடுங்க..தண்ணி முக்கால் பாகம் சுண்டுனதுக்கு பொறவு..மூடி போட்டு உடனே வெயிட் போடுங்க..3- 4 நிமிஷம் மட்டும் ஹைல எரியவிட்டு, 10 நிமிஷம் சிம்மில் வெச்சிடுங்க!

* அடுப்பை அணைச்சிடுங்க..ஆவி அடங்குற வரைக்கும் மூடியத் திறக்காதீங்க..(15நிமி)..பிறகு திறந்து, கலந்து கொத்துமல்லி தூவி பரிமாறுங்க!

ரெண்டாவது முறை!

* புளிக்கரைச்சல், தண்ணி,உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் மட்டும் போட்டு..கொதிக்க வெச்சு அரிசிபருப்பு சேர்த்து சாதம் தயாரிக்கணும்!

*  பிறகு வாணலியில தாளிப்பு ஐட்டங்களை சேர்த்து, சாதத்தை வாணலியில் கொட்டி, ப்ரைட்ரைஸ் போல தயாரிக்கணும்! 


பக்க வாத்யங்கள்!

 அப்பளம், வடாம், பப்படம், அவிச்ச முட்டை, உருக்குன நெய் , தயிர், பூண்டு ஊறுகாய், இஞ்சிப்புளி சட்னி,இன்னும் பலப்பல..மனம் போல!


 எச்சரிக்கை! 

சாப்பிட்டு 10 - 15 நிமிடத்தில் பலன் தெரியும்..நித்ராதேவி மெல்ல அணைத்துக் கொள்வாள்!

இதுதான் ஒரிஜினல் கொங்கு முறை அரிசிபருப்பு சாதம்! மத்ததை நம்பி ஏமாந்து போனா..கம்பெனி பொறுப்பல்ல!





Monday, September 3, 2012

மாத்தி யோசி!

 ஒவ்வொருத்தரும் தங்கள் கருத்தை, மத்தவங்களுக்கு பிடிக்குதோ..இல்லையோ போகுற போக்குல சொல்லிட்டுப் போறாங்க!அதை கொஞ்சம் மாத்தி யோசிச்சதுன்னால, வந்த வினைங்க இது! வேணும்னா ..நீங்களும் இதிலிருந்து மாத்தி யோசிங்களேன்!

இப்படித்தான்  சகோதர யுத்தம் பத்தி கலைஞர் அய்யா..பேசப்போயி, நம்ம நெடுமாறன் அய்யா..ஆரம்பிச்சு வெச்சதே நீங்கதான்னு பத்திரிக்கையில பேட்டி கொடுத்துட்டாரு!

சகோதர யுத்தம் நடந்தது உண்மைன்னு நெடுமாறன் ஒத்துக்கிட்ட மாதிரி அல்லவா ஆயிடுச்சு.!

இலங்கை விஷயத்துல கலைஞரை கும்முறது அல்லாருக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ஆனதினால..சரித்திர மேற்கோள் எல்லாம் காட்டி, இவரும் தாளிச்சிருக்கார்..!
அதுல பாருங்க..கலைஞர்
சொன்னதுனால தான் சகோதர சண்டை ஆரம்பிச்சதுன்னா..கலைஞரை இனத்தலவர்ன்னு ஏத்துக்கிட்ட மாதிரி அல்ல ஆகுது.? சண்டைய ஆரம்பிச்சு வெச்சவருக்கு முடிச்சு வைக்கத் தெரியாதா...வந்து பஞ்சாயத்து பேசி தீர்த்திருக்கலாமே?

இவரு சொல்ற தேதிக்கு முன்னாலயே, மெட்ராஸ் பஜார் வீதியில ஒருத்தர் மேல ஒருத்தர் கொளுத்திப் போட்டுக்கிட்டது....கலைஞர் அய்யா சொல்லிக் கொடுத்துங்களா நெடுமாறன் அய்யா?


பேராசிரியர் அன்பழகன் அய்யாக வேற கோபமாகி..எங்க ஆட்சியில தினமும் 2 மணிநேரம் தான் வெட்டு..வெளியில கரண்டு வாங்கி எப்படி சமாளிச்சோம்?அதுக்கே (கொ)கத்துனீங்க! இப்ப 12 மணிநேர வெட்டுக்கே வாய் மூடிமவுனியா இருக்கிறீங்களேன்னு..மக்கள் மேல கோவப்பட்டு இருக்காரு!

 ஆட்சி ஆரம்பிக்கும்போது அஞ்சாயிரமா இருந்த மின்வாரியக் கடன் முடியும்போது அம்பதாயிரம் கோடியாயிடுச்சே! வருஷம் வட்டியே அஞ்சாயிரம் கோடி கட்டணுமே! வட்டிய கட்றதா..கடனக் கட்றதா..புது உற்பத்திய பெருக்கிறதா..இப்படி நட்டாத்துல உட்டுட்டுப் போய்ட்டீங்களே..நியாயமா?அதெல்லாம் இருக்கட்டும்..அந்த கொண்டைக்கார ஆட்சிக்காரர் கிட்ட பேசி..நம்ம அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வாங்கிக் கொடுங்க..அது போதும்!

மாத்தி யோசி!

உலகத்துலேயே சுலபமான வேலை எதுன்னு சொல்ல வேண்டியதில்ல..வெண்ணைய வெட்றது! அதவிட சுலபமான வேலை இருக்கு..அதான் 100நாள் வெட்டிவேலைத் திட்டம்!
அந்தகாலத்துல வறட்சி,வெள்ளம்,பூகம்பம் வந்தா..மக்களுக்கு சும்மா அரசுப் பணத்தைக் கொடுக்கக்கூடாதுன்னு "நிவாரண வேலை"ன்னு சொல்லி சின்ன சின்ன வேலைகளைக் கொடுத்து,சம்பளம்னு கொடுப்பாங்க..கொஞ்ச நாளைக்கு!

இந்த ஓட்டுவங்கி அரசியல்..ஜனங்களை ரொம்ப பதமா..இதமா கவனிச்சுக்கிது..இந்தமாதிரி திட்டங்கள்னால! எந்த ஒரு வேலைக்கும் குறைந்தபட்ச ஊதியம், இன்னிக்கு ரூ200ன்னு ஆயிடுச்சு..இந்தத் திட்டத்தினால வந்த பொதுப்பலன்..நற்பலன்னு சொல்லலாம்!

மழைகம்மியானதால..வேலை கிடைக்காதுன்னு முடிவு பண்ணி..100 நாளை 150ன்னு ஜாஸ்தியாக்கலாமான்னு பேச்சு ஓடிட்டு இருக்கு! ஏற்கெனவே..விவசாய வேலை இருக்கும்போது ஆளுங்க அரசு வேலைக்குப் போய்டறாங்க..ஆள் தட்டுப்பாடு..!
இன்னம் விவசாயமே செய்ய வேண்டாம்னு அரசு சொல்ற மாதிரியில்ல இருக்கு? எங்க பஞ்சமோ அங்க மட்டும் உசத்திட்டு, மத்த இடத்துல அப்படியே வெச்சுக்கலாமே!

இந்த அரசு 150நாள் பிக்னிக்கை ரோட்டோரத்துல வெக்கறதுக்கு பதிலா..விவசாயக் காட்டுல வெச்சுக்கிட்டா..விவசாயமும் நல்லா நடக்குமுல்ல..என்ன நான் சொல்றது..! மலையாள சேட்டன்க ஏற்கெனவே இப்படித்தான் பண்றாங்களாம்!


அரசு ரூ132,விவசாயி ரூ132 கொடுத்தா..அடா அடா..கிராமப்புற பொருளாதாராம் பிரமாதமா..பறக்குமே..செய்வீகளா..?

அம்மாவுக்கு ஐடியா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க..விரைசலா ஆர்டர் வரோணுமே!


அஸ்ராகார்க் எஸ்பி மூணே மாசத்துல திருப்பூரை விட்டு மாத்திட்டீங்க..நேர்மையான அதிகாரிங்க,ஆர்வக் கோளாறுல சின்னசின்ன குளறுபடிகள் செய்யறதுதான்..ஒரு வருஷமாவது ஒரு இடத்துல போட்டிங்கன்னா..கொஞ்சம் ஊரு சுத்தமாகும்.

மறுபடியும் சந்திப்போமுங்க! வணக்கமுங்கோ!













Saturday, August 18, 2012

என் பார்வையில்....!


ஒரு ஞானி..விஞ்ஞானியாகும் ஆவலை, பெருந்தீயிட்டுக் கொளுத்திப் போட்டாயிற்று!இதுவரை கண்டதில்லை...இது போல எதிர்ப்பை..அதுவும் நேரடியாக! எதிர் அம்புகள் எத்தனை வந்தாலும் அதை லாவகமாக சந்தித்து புறம் தள்ளியவர்..! தானும் உடன்பிறப்புகளின் மூலமும் பல கணைகளை,  இதுகாறும் தொடுத்துக் கொண்டிருப்பவர்..!

 நானும் இளமையானவன் என்று காட்டி கொள்ளவும், சமூக வலைதளங்களில் இளசுகளை தொடர்பில் வைத்திருக்கவும் கலைஞர்  சமூகவலை தளங்களான..முகநூல்,கீச்சர் களில் கணக்கு ஆரம்பித்தார்!


கிளம்பி வந்த விமர்சன அலைகளை தலைவர் இதுகாறும் கண்டிருக்க மாட்டார் போல...எதிர்ப்பே இல்லாமல் எழுத இது முரசொலியுமில்லை..திரைப்பட வசனமும் இல்லை என, "கண்டு கொண்டார்..கண்டு கொண்டார்"!

விலகினார்..விடை பெற்றாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உடம்பிறப்பே..கொடுமதியாளர் அதை புறமுதுகு காட்டுதல் என்கின்றனர்...அது புறநானூறு என்பதை நீ அறிவாய்..! பாரடா என் செல்லமே எத்தனை விழுப்புண்கள் என்று!(என்னா அடி)!


என் பார்வையில்....!


 பள்ளி மாணவர் மரணங்கள்!

இந்தக் கொடுமைகள் தொடர்வது அழகல்ல..கும்பகோணம் பள்ளி தீவிபத்துக்குப் பின்னும், பள்ளிக் குழந்தைகள் படிக்கச் செல்லும் இடத்தில் பலியாவது மிகுந்த ஆற்றாமையைத் தருகிறது!

பள்ளிகள் பெருகி வந்தாலும், சில குறிப்பிட்ட பள்ளிகளில் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை சேர்ப்பதால், கும்பல் அதிகமாகி விடுகிறது. மாணவர்கள் மீதான கண்காணிப்பு மிகவும் குறைந்து விடுகிறது. 

கல்ல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கைக்  கட்டுப்பாடு வைப்பது போல் இனி பள்ளிகளிலும் அதன் வசதிகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட வேணும்!


ஈரோட்டு ராஜாவின் மேடைப் பேச்சு!

டெசோ மாநாட்டாலும், சந்தர்ப்ப வாதத்தாலும் தன் தலைவனின் மேல் தரக்குறைவான விமர்சனம் வருவதைக் கண்டு, ஆவேசப்பட்டு மறைந்த ஈழத் தலைவர்களின் மேல், சமீபத்தில் ஈரோடில் திமுகவின் முன்னாள் மந்திரி என்.கே.கே.பி.ராஜா கக்கிய வார்த்தைகள் கன்டனத்துக்குரியது!

அவர் பேசியதில் சில உண்மைகள் இருக்கலாம்..ஆனால் நொந்து நைந்து போன ஒரு சமூகத்தை, வதைப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல!


 வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேற்றம்!

பர்மாவில் வங்க முஸ்லீம்கள் மீதான தாக்குதல்..அஸ்ஸாமில் நாலு மாவட்டங்களில் பரவி..பழிதீர்ப்பதற்காக பம்பாய் முஸ்லீம்களின் வன்முறைகளுக்கு தீனி போட்டு...தென் மாநிலங்களின் தலைநகரங்களை நம்பி வந்த வடகிழக்கு மாநிலத்தவரை, பதட்டமாக்கி கூண்டோடு வெளியேற்ற வைத்துள்ளது..!

இதன் பின்னால் ஒளிந்திருப்பது..அறிவியல் வளர்ச்சி...இணையமும்,கைப்பேசியும்! வதந்தி வைரஸ் கிருமிகளைத் தாங்கி விரைவில் பரப்புகின்றன!

இதில் இனி மத்திய அரசின் இலவசக் கைப்பேசித் திட்டம் வேறு! இதன் பின்னால் 2ஜி யின் அடுத்த கட்ட ஏலம் வேறு உள்ளது!


மழையின்மை!

பஞ்சம் என்பதே என்ன என்று தெரியாத நிலையில் நாடு சுபிட்சமாக் உள்ளது! விவசாயமும், தொழில்களும் அழிக்கப்பட்டுக் கொண்டுள்ளன! அதிகம் உழைக்காமல் அதிக வருவாய் வேண்டுவோர் அதிகரித்து விட்டனர்! கட்டிடத் தொழில் மட்டுமே செழித்து உள்ளது! 

நுகர்வுக் கலாச்சர்ரத்தின் பிடியில் மதிமயங்கித் திளைத்துக் கொண்டிருக்கும் மானுட இனத்திற்கு இயற்கையின் நியதிகளை நியாபகமூட்டம் வண்ணம்,,மழை பெய்யாமல் போகிறதோ!

கனிமவளக் கொள்ளை!

மாநிலத்தில் மணலும்.கிரெனைட் கல்லும்.!.மத்தியில் நிலக்கரி! நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர் மேல் ஏற்கெனவே ஊழல் கறை!

முதலில் சொத்துக்களைப் பறிமுதல் செய்து விட்டு, பிறகு வழக்குகளை நடத்த வேண்டும்! இனிவரும் ஊழல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக வேண்டும்!
"Pending inquiry seizures are must!

மம்தாவின் பேச்சு!

போராளி இமேஜைத் தனக்குக் கொடுத்துக் கொள்ள போராடும், மமதா தீதி முரட்டு அராமியாகத் தெரிகிறார்! தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட விவசாயிக்கு, ஜாமீன் மறுப்புக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றத்தையே," தீர்ப்புகள் விலைபோகிறது" என்று வர்ணித்தமை..தான் தலைவி அல்ல ..தவளை தான் என நிரூபிக்கிறது!

நீதிமன்ற அவமதிப்பு  செய்த தீதி மேல் நடவடிக்கை இல்லையெனில்..அது மேற்கோட்டுத் தனமாகிவிடும்..இனிமேல் வரும் இது போன்ற வழக்குகளுக்கு..இதுவே உதாரணமாகிவிடும்! யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றாகிவிடும் . சொல்லமுடியாது..நீதிமன்ற விமர்சனம் தவறில்லை என்று தீதி சட்டம் போட்டாலும் ஆச்சரிமில்லை!

 மீண்டும் வருகிறேன் !



Saturday, August 11, 2012

உன் பார்வை போலே.. !


 நான் அல்ல!

 காரணம் கண்கள்!
கண்களின் பாவை...
காணுமே பார்வை!
அழகாய்க் காட்டும் காலமும்
காரணம்!




ஏன் என்கிறாயா..
எப்படித் தவிர்ப்பது
என்னால் முடியவில்லை...!
எங்கெங்கும்
எழில்கள்!







கறுப்பில் ஒளி ஊடுறுவுமாமே
அது பொய்..!
உன் கண்ணில் பட்டுத் தெரிக்கிறதே!
தெரித்த ஒளி பட்டு கண்ணின்
வெண்மை சிவப்பானதோ?
என் கண்ணைப்பார் ..நீலமாக உள்ளதல்லவா
வானத்தைப் போல!
 உன் பார்வை போல..என்பார்வை தெறிப்பதில்லை!
காட்சிகள் கண்ணை ஊடுருவி விடுகின்றன!
காட்சிகள் அல்லவா..
கலைந்துவிடுகின்றன..
நிலைபெறுவது உன்னில்தான்!என் கண்களை விட்டுவிடு..
என்னை விடாதே..விலக்காதே!

உன் பார்வை போலே.. !



எவ்வளவு சொல்லியும்
உன்னைக் காயப்படுத்திய ....

அளவில்லா அம்பெய்யும்
 என் கண்களை
தண்டிக்கிறேன் பார்!

நாளின் மூன்றிலொரு காலம்
திறக்கக் கூடாது என்றும்
கனவில் அம்பு விடக்கூடாது என்றும்!






 உன்னிலும் உண்டு..
உன்னில் மட்டும் இல்லை
உன்மேல் அதிகம் உண்டு..!






Thursday, August 2, 2012

ஆடிப் பதினெட்டும் பாலங்களும்!

 தென்மேற்குப் பருவக்காற்று ஆரம்பிச்ச ஒரு மாசத்துல,  பொள்ளாச்சிலே எந்திரவியல் பட்டயப்படிப்புக்கு சேர்த்துவுட்டாங்க..அப்படியே ஹாஸ்டல்யும் மூணு பேர் இருக்குற அறையில் அடைச்சுட்டாங்க...திரும்பிப் பார்க்குறேன்..என்னோட பத்தாப்பு படிச்ச பய முக்கால் பேண்ட் போட்டுட்டு நிக்கிறான்.."வாடா ரேங்க் வாங்குன நீயும்,குறைச்ச மார்க் வாங்குன நானும்..ஒரே காலேஜ், ஒரே ரூம்'னு வெறுப்பேத்துனான்!

கோவமா வந்தாலும், தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே பரவாயில்லன்னு சமாதானம் பண்ணிக்கிட்டேன்...ஆளு கொஞ்சம் சிறுசானாலும்,நம்மள விட உலகஞானம் ஜாஸ்தின்னு போகப் போக தெரிஞ்சது!


இப்பெல்லாம் பசங்க, ஒருநா க்ளாஸுக்குக் கட் அடிக்கவே பயப்படறானுக..புதுப்படம் ரிலீஸ் ஆனாலோ இல்லே படப்பிடிப்பு டீம் காலேஜ்க்கு எதுக்கால இருக்குற பயணியர்விடுதியிலெ வந்து இறங்குனாலோ, ' மாஸ் கட்" தான்!
அதுலேயும் 'மண்டே மாஸ்கட்" ரொம்பப் பிரபல்யம்!
ஆடிப் பதினெட்டும் பாலங்களும்!
ஹாஸ்டல்ல காலைல 6 மணிக்கு சீனியர் பக்கத்து அறைகளில் இருந்து கூட்டமா விசில் சத்தம், தொடர்ச்சியா 5 நிமிஷத்துக்கு விடாமக் கேட்கும்..அதான் சிக்னல்! நேரா மெஸ்ஸுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, 8 மணிக்கெல்லாம் எல்லோரும் வெளியா போயிடணும்.பஸ்ஸுல வர்ற வெளிப்பசங்கள கேட்லயெ நிறுத்தி, கூட்டிட்டுப் போயிடுவாங்க!

மொதல்ல கண்டிச்ச நிர்வாகம், பசங்க பண்ற குறும்பப் பார்த்து மாசத்துல 2 நாளைக்கு மேல கட்' அடிக்கக் கூடாதுன்னு எழுதப்படாம ஒப்பந்தம் ஆயிடுச்சு!

அந்த வருஷம் ஆடிப்பதினெட்டுக்கு, ஊருக்குப் போகவிருந்த என்னை,நம்ம ரூம்மேட் தொல்லை பண்ணி..ஆழியார்டேமுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான்! ஏண்டா...அவனோட போணோம்னு ஆயிடுச்சு!

காதலிக்க நேரமில்லை படத்துல ரேடியோப் பெட்டிய பார்க்ல இருக்குற சின்ன பாலத்துலெ இருந்து, ராஜஸ்ரீ போடுவாங்க இல்ல..அதே பாலத்து மேல நானும்..அவனும் நின்னுட்டு இருந்தோம்!

பொண்ணுங்க கூட்டம் ஒண்ணு கடந்து போச்சு..உடனே நம்ம தொல்லை என்ன பண்ணினான் தெரியுமா...ஜன்னல் வெச்சு, பஃப் கை ஜாக்கெட் போட்ட ஒரு பொண்ணப் பார்த்து, " டிசைன் பாப்பா டிசைன்" நு கத்திட்டான்!

அப்புறம் ரொம்பப் பாவமா மூஞ்சிய வெச்சுட்டு நின்னுட்டான்..அந்த பொண்ணுக திரும்பி பக்கத்துல இருந்த நான் தான் கத்துனேன்னு தெளிவா முடிவு பண்ணிட்டாளுக..! கொஞ்ச நேரம் கடுமையா மொறச்சுப் பாத்தாளுக..ஒண்ணுமே பேசல..போயிட்டாளுக!
நமக்கு வாழ்க்கையே வெறுத்திருச்சு..குசும்புக்காரன் அடக்க முடியாம சிரிக்கிறான்! அன்னிக்கு முடிவு பண்ணதுதான்..கூட்டமா பசங்களோட பராக்குப் பாத்துட்டு நிக்கிறதில்லன்னு!


நீங்களும்..பார்த்துங்க..ஆடி 18 அன்னிக்கு பாலத்துக்குப் பக்கம், தொல்லைகளோட போகாதீங்க..
ஆனா..தனியா போங்க!





Monday, July 30, 2012

வருமோ மதுவிலக்கு?



ஊரெங்கும் பரபரப்பு...கொளுத்திப்
போட்டது சிறுநெருப்பு..!
புலனாய்வுப் பத்திரிக்கையாம்..
சின்ன ஆனந்தனாம்..
வைத்தானய்யா.. வெடி வேட்டு!
வைதானய்யா.. எல்லா தட்டு!


தீ'ரா விடக் கூத்தாடி... வாயாடி
மயக்கினரே தமிழ் மக்களை!
தேனெடுத்து புறங்கையை நக்கிவிட்டு
மதுர ருசிகண்டு மதி மயங்கி
கிறங்கிய வேளையிலே...




சுதந்திர தாகம் அடங்கி
கால்நூறாண்டு தவமிருந்த
தமிழ்க்குடிமன்களின் தாகமறிந்து
கருணை' கொண்டு..தாயுள்ளத்தோடு
கள்ளுப்பாலை வார்த்த
தனிப்பெரும் இனக்காவலனே ..!
அவர்தம் வாழ்த்தே உன்னை நீடூழி
வாழ்வைக்கிறது!


ஜனத்திலகமும் கனகதாரைகையும்
கருணைத்தொகையை மிஞ்சினர்
செல்வாக்கிலும்..
அள்ள அள்ளக் கொடுத்த
அமுதபானத்திலும்!

 வருமோ மதுவிலக்கு?

கழுதைக்கு வயசு பத்தாம்..
அறிமுகமாகி ஆச்சே நாலுகழுதை வயசு!
தாத்தன்,அப்பன்,பிள்ளை,பேரன்..
இதுதான் அந்த நாலு கழுதையும்!
எவனுக்கும் பாலு பிடிக்கறதில்ல..தக்காளி
விவசாயிங்க கொட்ராங்க பாலை ரோட்ல !


பசும்பால்..எருமைப்பால்
பருத்திப்பால்..தாய்ப்பால்

இதெல்லாம் டூப்பு..!
பார்லிப்பாலே டாப்பு!
புளிச்சக் கரும்புப்பாலே சேர்ப்பு!





பிரம்மன் தலையில தான் எழுதுவான்..
தமிழ்க்குடிமகன் ஜீன்லேயே எழுதிட்டான்!

கமிஷன் கிடைக்காதவனும்
வாந்தி எடுக்குறவனும்
வயசுப்புள்ளக்காரனும்
வயசுக்கு வராதவனும்
காட்டுக்குப் போறவனும்..
குடிக்கிறதில்ல..மத்தவன்?

அட..நீயும்தாம்பா அதுல..!

விலக்கிட்டு நாளைலே இருந்து
தப்பு..தண்டனைன்னு சொன்னா..
இதுநாள் வரைக்கும் கடையத் திறந்து
பரிமாறிக் கொடுத்த அறிஞர்களுக்கு
கொடுக்கணும்..தூக்கு! 

நேத்து நீ செஞ்சே..அது தப்பு!

இன்னிக்கு அரசும், நீயும் சேர்ந்து செய்யறிங்க..
அதுனால அது தப்பில்ல!

நாளைக்கு நீ மட்டும் செஞ்சா அது தப்பு!
அப்ப தப்பு யார் மேல?..மகாஜனங்களே சொல்லுங்க தீர்ப்பு!




இன்று விலக்கப்படுவது..நாளை அமலாகும்..!
இங்கு விலக்கப்படுவது..வேறொரு ஊரில் வழக்கில் இருக்கும்..!
எங்கும் விலக்கப்படுவது யாதாயினும், இங்கும் விலக்கலாம்!
இங்கு மட்டுமே விலக்கம்..எங்கும் தாராளம் எனில்..இங்கு மட்டும் எதற்கு விலக்கம்!

உடனடித் தேவை விலக்கம் அல்ல விளக்கம் தான்!

Tuesday, July 24, 2012

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!


 அறிமுகம் அம்மாவின் மூலம் ஆரம்பம்..முதல்ல அப்பா..ஏறக்குறைய ரெண்டு பேரையும், குழந்தைகள் DNAவாசனையை வைத்துக் கண்டுபிடித்துவிடுகின்றன!..வளர வளர..எடுக்கும், அரவணைக்கும் கைகளை அம்மாவின் உதவியோடு இனம்   கண்டு கொள்கிறது! உறவுமுறைகளை உணர்ந்து கொள்கிறது!

 எடுக்கும் கைகளில் குழந்தை மாறிமாறி செல்கையில் மனிதர்களில் மாற்றத்தை உணருகிறது! வீட்டிலிருந்து வாசலுக்கு  வருகையில் 'நட்பு' அறிமுகமாகிறது..சக குழந்தைகள் மூலம்!

பள்ளிக்குச் செல்லுமுன் உடன்பிறப்புகள் வந்துவிட்டால் நலம்! விட்டுக் கொடுத்தல் என்பது புரிந்து விடும்!சகோதரங்களுடன் வளரும் குழந்தை அனுசரித்துப் போகப் பழகிக் கொள்கிறது!
அனுசரிப்பே பிறமனிதர்களோடுக்கூடிய பரிவு,அன்பு,பழக்கம்,பாசம் ஆகியவற்றின் அடிப்படை!


அனுசரிப்பு எனும் அடிப்படையின் ஆதாரம்..எண்ணங்களின்,விருப்பங்களின்,செயல்களின் -- 'அலைவரிசை' !

அலைவரிசை ஏற்புடையாதாக இருப்பின் அனுசரிப்பு இயல்பாகிறது.!..பலசமயம் அலை மோதும் அலைவரிசை, ஈகோ எனும் சுயமேலெண்ணத் தடையால்.!.காலமும்,அவசியமும் அத்தடையை உடைத்து, கட்டற்ற அலைவரிசையை 'பண்பலை'யாக மாற்றித் தருகிறது!

 விதை செடியாகி,மரமாகி மணம் வீசுவதைப் போலவே நட்பும்!
மரம் பூக்கும்,காய்க்கும்,கனிதரும் அதே சமயம் நோயும் தாக்கும்! அதையெல்லாம் தாங்கியும் வளரும்..நட்பும்!




நட்பும் எதிர்பார்க்கும்..சிலசமயம் அவசரத் தேவையை..ஆனால் பெரும்பாலும் 'சமத்துவ'த்தை!வர்க்க,இன,பால்,வயது,அந்தஸ்து எது தடுத்தாலும், நடத்தையில், எண்ணங்களின் வெளிப்பாட்டில் நட்பு எதிர்பார்க்கிறது 'சமத்துவத்தை!'

நம் இடத்தை விட்டு வெளியில் சென்றால்"நட்பின்" உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது! சாதிப்பது பிறகு.. சரிவர நடைமுறைக்கு அவசியம் 'நட்பு'!
நட்பே நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தரும்..வழிநடத்தும்!

நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!



ஒரே பகுதியில் வசித்தோமெனில் நீண்டநட்பு கிடைக்கும்..ஆனால் எண்ணிக்கையில் குறைவிருக்கும்!
இடம்மாறும் வாழ்க்கையில் நட்பில் பலமிருக்காது..அவசியமே மேலோங்கி இருக்கும்..ஆனால் எண்ணிக்கையோ பலமடங்கு.!இங்கு நட்புகள் மறையும்..புலரும்..சூரிய சந்திரரைப் போல!

நட்பு வெளிப்படுவது கருத்து பரிமாற்றத்தில்..முக்கியமாக அளவளாவதில்...! தடை அதிகமில்லா சுதந்திர எண்ணப் பரிமாறல்கள் நட்பில் மட்டுமே சாத்தியம்!
இரு(ற)ந்தாலும் நம்மை சுமப்பது நட்பே!

நட்பு புன்னகையில் ஆரம்பித்து,தலைமுறைகளில் தொடர வேண்டும்!
நம்மால் முடிந்தவரை நிறைய நட்புகளை சம்பதிப்போம்!







Monday, July 2, 2012

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!

 ஒரு நாடோ,வீடோ வளமுடன் இருக்கிறது என்றால் வரவு அதிகரிக்க வேண்டும்..செலவு அதிகரிக்கக் கூடாது! முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் வந்தவன் தம்பி என்னும் ஒப்பற்ற அப்பாயிஸக் கொள்கை (தங்கப்பதக்கம் சோ) போன்று எளிமையானதே வளமாயிஸத் தத்துவமும்!


நாட்டின் வருவாயை அதிகரிக்க ஒரேவழி வரிகள்!வரிவருவாயை அதிகரிக்க இருவழிகள்! ஒன்று - வரிகளை அதிகரிப்பது: இரண்டு - நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து, விகிதாசாரப்படி அதிகவரியாகக் கிடைப்பது!

வரிகளை ஓரளவிற்கு மேல் உயர்த்துவது பலனளிக்காது.கம்பியை ரொம்ப முறுக்கினால் உடைந்துவிடும்!எனவே இருக்கும் ஒரே வழி - உற்பத்தியைப் பெருக்குவது!

அரசாங்கத்தின் வேலை - உற்பத்தியை வருவாயைப் பெருக்க சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது!தற்போது வணிகம் உலகமயமாக்கப்பட்ட சூழலில், பொருட்களின் விலைகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே அளவில்! உள்நாட்டு பொருட்கள் எனில் அரசாங்கம் எளிதில் கட்டுப்படுத்தலாம்..ஆனால் கச்சா எண்ணெய்,உலோகங்கள் விலைகளின் நிர்ணயம் உலகச் சந்தையின் கைகளில்!

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!




தேவைகளை அனுசரித்தே விலைகள்! தேவை அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கிறது! தேவைகளின் அதிகரிப்பு சதம் சீராக இருக்க வேண்டும்! ஆனால் நாட்டில் நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தின் விளைவாக, தேவைகள் சதம் தாறுமாறாக உயர்ந்துள்ளது! உதாரணமாக கச்சா எண்ணெயும்,தங்கமும்!


உற்பத்தி வருவாயை அதிகரிப்பவை தொழிற்சாலைகளும்,விவசாயமும் தான்!கடந்த பலவருட சீரான வளர்ச்சிக்குப்பின் இந்தவருட தொழிற்வளர்ச்சி விகிதம் தடாலடியாகக் 6சத அளவிற்குக் குறைந்துள்ளது..அதே சமயம் பணவீக்கத்தின் வளர்ச்சி 10 சத அளவில் உள்ளது!

தொழிற்சலைகள் அடிவாங்குவதற்குக் காரணிகள் - உலகப் பொருளாதார மந்தம், மின்பற்றாக்குறை(சுமார்50சதம்),மாசுக்கட்டுப்பாடுகள்,வேலைஆட்கள் தட்டுப்பாடு, அதிகவரிகள் மற்றும் செலவீனங்கள்!

விவசாயத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.வேலைஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.வெட்டித் திட்டமான ஊரக வேலைத்திட்டம் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டுள்ளது!விதை/உரம் தட்டுப்பாடு/விலையேற்றம் மேலும் கால்வாய்பாசன வசதியில்லா விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமை, விற்பனை பொருட்களுக்கு இடைத்தரகர் சரிபங்கு கேட்பது என பலதடைகள்..விவசாயம் வேகமாக செத்துக் கொண்டுள்ளது!


மறுபக்கம் செலவீனங்கள் அதிகரிப்பு - கவர்ச்சித்திட்டங்கள், மானியங்கள், ராணுவச் செலவுகள், அரசு அதிகாரிகளுக்கு அள்ளித்தருதல்,ஆடம்பரச் செலவுகள்,அதிகரிக்கும் இறக்குமதி..!

வரவு குறைகிறது ..அல்லது அதிக மாற்றமில்லை..ஆனால் செலவோ எகிறுகிறது...முடிவில் வணிகப்பற்றாக்குறை அதிகரிக்கிறது..பற்றாக்குறையை சமாளிக்க நோட்டு அச்சடிக்கப்படுகிறது..பணத்தின் மதிப்பு சரிகிறது!

அயல்நாட்டு முதலீடுகளை அதிகரித்தால் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என்று அரசு அவர்களை பலசலுகைகளைக் காட்டி ஊக்குவிக்கிறது.ஆனால் உளநாட்டுத் தொழில்களுக்கு அதே சலுகைகள் மறுக்கப்படுகிறது..மேலும் உள்நாட்டுத் தொழில்களுக்கு கட்டுப்பாடும்/தட்டுப்பாடும் அதிகரிக்கப்படுகின்றது..உதாரணமாக மின்சாரம்.மற்றும் மூலப்பொருட்கள்!

ஆடம்பர செலவுகளை கட்டுபடுத்துவதும், முதலீடுகளை உற்பத்தியைப் பெருக்குவதில் இடுவதிலும், வீடு/நுகர் பொருட்களுக்கான செலவுகளுக்கு கடன் வழங்குவதைக் குறைப்பதும், அரசுசம்பள அளவைக் கூட்டாமல் இருப்பதும்,கவர்ச்சி/வெட்டித் திட்டங்களுக்கு மானியங்கள் தருவதைக் குறைப்பதும்......
.நீ ண்டகால பயனளிப்பவை!

தற்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58 வரை சென்று 56ல் இருக்கிறது.இது மேலும் குறைந்து 52 வரை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மும்பை பணச்சந்தை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!(டிஸ்கி: வியாபாரத்திற்கு அல்ல..தகவலுக்கு மட்டுமே)



என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!

















Sunday, May 20, 2012

உடன்பிறந்த உறவா..தொந்தரவா?




ஒருஜோடி பயனாளர் கூடி பெற்றெடுக்கும் ரத்தினங்கள்
பொதுவாக ஒற்றைக் கருவறையில்
சிலவாக புதுப் புது தனித் தனி அகங்களில்
அபூர்வமாக வாடகை அறைகளில்

ஆதிமூலக்கூறு ஏகதேசம் சரியாகவும்
காலவித்தியாசத்தாலும்
பெறுபவர்களின் மனவோட்டத்
தன்மை மாறுபாட்டாலும்
பூர்வஜென்ம பாவ புண்ணிய கணக்குகளாலும்
பாலிலும் பருவத்திலும் அழகிலும் கருத்திலும்
சற்றே மாறுபட்டு
வெளிவந்து தொடர்ந்து அருகாமையில்
வளரும் உறவுகள்...
உடன் பிறந்தோர்!
 உடன்பிறந்த உறவா..தொந்தரவா?

பாட்டன்,அப்பன்,ஆத்தா,அம்மா,மனை/துணை, 
மைதுன உறவுகள், மக்கள்,பெயரர்கள்..
இறுதியாக நட்பு..எல்லாம் டூப்பு!
உடன் பிறந்தோரே டாப்பு! 
எதில்?
காலமெல்லாம் நம்மோடு வருவதில்!

சிணுங்கல்கள் செல்லச் சண்டைகள்
முதலாம் பருவத்திலும்
பிரிய மற்றும் ஆணைகளால் பங்கீடுகள் அடுத்ததிலும்
இரும்புச்சங்கிலி போல் உறுதியாய் வலுவடைந்திருக்கும்
பெற்றவர் மனம் இறுமாப்படைந்திருக்கும்
மூணாம் எட்டு பருவத்திலே!

பெற்றமரம் ஆலமரம் என்றால்தானே விழுதுகள் விழும்!
ஆலமரங்கள் குறைவுதானே..
தென்னைகளும் முருங்கைகளும் தானே இங்கு அதிகம்!
மரங்களில் தங்கும் பறவைகளின் குணம்
மரத்தின் காய்களுக்கும் வந்துவிட்டது..
றெக்கை முளைத்ததும் பறப்பதைப் போல்!

தொப்புள்கொடி உறவுகள் 
ஒருசெடியின் மலர்களாக ஒரு தோப்பு குயில்களாக
ஒரு தென்னை குலைகளாக...
பெரும்பாலும் 
ஒரு ஆலையில் தயாராகும் கார்களாக
மாறிப் போவது காலத்தின் விந்தை!
இயக்கம் ஓட்டுநர் கைகளில்!
புதிதாக வரும் மைதுன உறவுகளில்!

துணைகள் இடையே எத்தனை எரிச்சல்,
ஆவேச பரிமாறல்கள்..வெறுப்புகள்
அபூர்வமாக அன்பு பங்கீடல்கள்!
திருமணத்திற்குப்பின் அன்பு ரோஜாக்கள்
ஆவாச தே'வதைகளாக மாறிப்போகும் விந்தை என்ன?

அதிக பாதிப்பு ஆண் உடன் உறவுகளுக்கே!
விளையாட்டுச் சண்டை வினையாகிவிடுகிறது
புதுமனைகளால்...!
தொப்புள் கொடி பெண்சகோதரிகளின் கணவர்கள்
சகலைகளாம்..ஆனால் அவர்கள் ஆவார்களே
கட்டாயாச் சகோதரர்களாக!

இருபால் உடன் உறவுகளை ஈர்ப்பது இணைப்பது
அண்ணியின் கைகளில்..
இளைய உறவின் வரவின் வாய்களில்!

ஏறக்குறைய நம் வாழ்நாள் முழுதும் உடன் வருவது உறவா..தொந்தரவா
உடன் வருவது எனில் அது நம் அங்கம் போன்றதன்றோ..
அதில் பங்கம் வரலாமோ?
உடலில் தலையே பிரதானம்..
உடன் பிறந்ததிலும் தலைமகனே/மகளே பிரதானம்!
முன் ஏர் செல்லும் வழியிலெயே பின் ஏர் 
செல்லும்..
செல்ல வேண்டும்..
செலுத்த வேண்டும்!

வேண்டும் நலம்!







Wednesday, April 4, 2012

ஐபிஎல் 2012 - துளிகள்..1 / ஏப்ரல் 4 !

எங்கள் கொங்குச்சீமையில் ஒரு சொலவடை உண்டு!
"முண்டச்சி பெத்த புள்ளையானாலும் சாங்கியம் செஞ்சுத்தான் ஆகணும்"!

உலகமெங்கும் போய் உதை வாங்கிட்டு வந்து மானமருவாத எல்லாம் கெட்டு,
திண்ணைல படுத்துக் கிடந்த வீரனுங்க, திருவிழாவுக்கு மேக்கப் போட்டுட்டு கிளம்பிட்டாணுவ!

வெயிலு வேற பட்டயக் கிளப்புது! பசங்களுக்கும் லீவு வுட்டாச்சு!நமக்கும் பொழுது போவனுமுல்ல..! சரி சரி ...அவனுக தோத்ததை எத்தன நாளைக்குத்தான் பேசறது!கோழி குருடா இருந்தாலும்..கதையா, இந்த கோமாளி ஆட்டத்தைப் பாக்க எல்லாரும் ரெடியாயிட்டங்க! 

பாவம்.. பத்து எழுதுறவங்க!  
சமச்சீர் கிறுக்குத்தனத்துல சிக்கி மண்ட காஞ்சிட்டு பரிச்சைக்கு படிக்கிறாங்க..!
நாம அவங்களுக்கு தொந்தரவு கொடுக்காம பக்குவமா நடந்துக்கணும்!

ஏப்ரல்   4 - சென்னை - மும்பை !


* இந்த வருஷம் நாக் அவுட் போட்டிகள்ல, வர்ற வருமானத்த 185 ஆட்டக்காரருக்கு பிரிச்சி கொடுக்கப் போறாங்களாம்! நல்ல காரியம்! நடக்கட்டும்!

* 45 பந்துல 13 சிக்சர் அடிச்சு தென்ஆப்ரிக்க வீரர் ரிச்சர்ட் லேவி, மும்பைக்கு விளையாடுகிறார்!





* ஆஸ்திரேலிய குழுத்தலைவர் மைக்கேல் கிளார்க், புனா அணியில்!


* வேகப்பந்து விச்சாளர் மிட்சல் ஜான்சன் மும்பை அணியில் இணைந்தார்!


* போர்க்குதிரை மேற்கிந்திய ஆண்ட்ரே  ரஸ்ஸல் டில்லியில்!


* சுழல் சுனில் நாரயன் கொல்கத்தாஅணியில்: நல்லவிலை கொடுத்துள்ளனர்!


*  சிங்கள சாண்டிமால் ராஜஸ்தான் அணியில்!

* சென்னை மைதான ஆடுகளம் மந்தமாகி வருகிறதாம்! ஓவருக்கு சராசரியாக 7 . 86   ஓட்டங்கள் தான வருகிறதாம்!

* சென்னையின் வீச்சு பலம், மும்பையை விட மிகவும் பின்தங்கி உள்ளது!

* சென்னையின் மட்டை பலமும்,மும்பையின் பலத்தை விட மட்டம்தான்!

* மும்பைக்கு வெற்றி வாய்ப்பு 55  சதம் இருக்குமாம்!


* அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட ஜடேஜா சொதப்புவதில் மன்னன் !
*  நம்ம அஸ்வினுக்கு மிகவும் பிடித்த உணவு "தயிர் சாதமாம்"! வெளிநாட்டு பிரயாணங்களின் போது, சிலசமயம் அவரே தயிர்சாதம் செய்வாராம்!


* மண்டை காய்ஞ்சு போன இந்திய ரசிகர்களை மகிழ்விக்க வந்த போட்டிஎன வர்ணனையாளர் கருத்து!


* டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் தொலைக்காட்சியில் பார்ப்பதே மேல்!


* டிக்கெட் விலை ரூ 1200 முதல் ரூ 8000  வரையாம்! அம்மாடியோவ்!


ஐபிஎல் 2012

புகைப்படம் : நன்றி..இந்திய கிரிக்கெட் வாரியம் வலைப்பக்கம்!

http://www.iplt20.com/ச்செடுலே

* மும்பை அணி டாஸில் வென்று சென்னை யை மட்டை வீச பணித்துள்ளது!


* தமிழ்நாடெங்கும் மின் தடையும், பற்றாக்குறையும் தலை விரித்து ஆடும்போது, இவ்வளவு விளக்குகளை எரிய விட்டுக் கூத்தடிப்பது அராஜகமாகத் தோன்றினாலும், அந்த எரிச்சலை மறக்கவாவது மேட்ச்
பாக்கணும்!

* மலிங்கா லங்கா அணிக்கு பந்து வீசுவதை விட மும்பை அணிக்கு மிகவும் உண்மையாக, மிகதீரத்துடன் விவேகமாக பந்து வீசுகிறார்!

* முரளி விஜய்க்கு ரன் அவுட்டுன்னா மிகப்பிரியம் போல ! டுப்ளேவை அவுட்டாக்கிட்டாரு!

* 200 ஓட்டங்களுக்குக் குறைந்தால் மும்பைக்கு எளிய இலக்காகிவிடும்!

* இது போன்ற கூத்துகளுக்கு எதிராக ஆவேச அமைப்புகள் ஏன் ஆர்ப்பாட்டமோ,போராட்டமோ நடத்துவதில்லை?

* 12  ஓவர்குள்ள எடுக்கல்லைன்னா..மும்பைகார் ! நீங்கல்லாம் ஒரு சுப்பர் டீமா?

* தோனிய சநீஸ்வர் ரொம்ப தொந்தரவு பண்றார் போல! அல்லாம் சொதப்புது!