Friday, April 29, 2011

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் - கேத் திருமணம்!



மஹாராணி எலிசபெத் வருகை!

 Queen Elizabeth at the Wedding

வில்லியம்ஸின் தந்தை சார்ல்ஸ் வருகை!

Prince Charles, Camilla arrive

 மணமகன் கேம்பிரிட்ஜ் பிரபு வில்லியம்ஸ்!

William, Harry head to Westminster

மணமகள் கேத் மிடில்டன்! அவரது உடையே இன்று " டாக் ஆப் தி வோர்ல்ட்"!



வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் மணமக்கள்!


ரஜினிகாந்தின் ரானா படம் பூஜை!

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா பதுகோனேயுடன் இணைந்து , வெற்றிப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் , உருவாகும் "ரானா" எனும் பன் மொழி சினிமா, இன்று பூஜையுடன் ஆரம்பம்!





சினிமா உலக பிதாமகர்கள் முன்னிலையில்!


Mahurat Shots: Rajini's Rana

ரஜினி காந்த் மூன்று வேடங்களில் நடிக்கும், இந்த படம் சரித்திர காலத்தையும் தொட்டு செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது!






Mahurat Shots: Rajini's Rana



தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா பதுகோனேயுடன் இணைந்து , வெற்றிப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் , உருவாகும் "ரானா" எனும் பன் மொழி சினிமா, இன்று பூஜையுடன் ஆரம்பம்!


Mahurat Shots: Rajini's Rana







Thursday, April 28, 2011

வில்லியம்ஸ்-கேத் திருமண ஒத்திகை!



புது மணப்பெண் கேத் மிடில்டன் திருமண  ஒத்திகை முடிந்து, ஒத்திகை நடந்த வெஸ்ட் மினிஸ்டர்  தேவாலயத்திலிருந்துசெல்கிறார்!






இளைய இளவரசர் ஹாரி அருகில் அமர்ந்து செல்கிறார்!


வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயம்!





ஹஸாரே இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டார்?

 ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்,அதிகாரிகள் தனியாகவோ/ கூட்டாகவோ ஊழல்கள் புரிந்து வருகின்றனர்! எந்த நாடும் இதற்கு விதி விலக்கல்ல!

இருந்த் போதிலும் ஜனநாயக முறையைப் பின்பற்றும் உலக நாடுகளில், ஆட்சியாளர்களின் ஊழல் என்பது, இலை மறைவு காய் மறைவாக , அண்ணாதுரை சொன்னதைப் போல் தேனெடுத்துவிட்டு புறங்கையை சுவைப்பதைப் போலவே நிகழ்ந்து வருகிறது!







நமது நாட்டில், மலை முழுங்கி மகாதேவன்கள் ஆட்சியாளர்களாக அமர்ந்து உலக மஹா ஊழல் புரிந்து வருகின்றனர்! பங்கு கிடைக்காத எதிர் கட்சியினர் கூப்பாடு போட்டால், ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு கமிஷன் அமைத்து, கண் துடைப்பு விசாரணை நடத்தி, காலம் கடத்தி, சாட்சியங்களை களவாடி மறைத்து, குற்றத்தை நீர்த்துப் போக வைத்து, எளிதில் தப்பி ஓடி விடுகின்றனர்!

ஆட்சியாளர்களின் ஊழல் போக்கைக் குறைத்து, விசாரணைக்கு  உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தரும் நோக்கில், " லோக் பால்" என்ற மசோதா, சுமார் 42 வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டு, அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இன்னும் சட்டமாக்கப் படாமல், கிடப்பில் கிடக்கிறது.

இது குறித்து பொதுநல அரசியல் கட்சிகள் அவ்வப்போது தர்ணா, ஊர்வலம், போராட்டம் என பல நடத்தியும் ஏனோ மக்களை அது சென்றடயவில்லை!


அன்னா ஹசாரே என்னும், மராட்டிய மக்கள் தலைவர் இந்த லோக் பால் மசோதாவின் மேல் அக்கறை எடுத்து, கடந்த ஒரு மாத காலமாக முயற்சி எடுத்து வருகிறார்! சுமார் 20 வருடங்களாக, மராட்டிய மாநிலத்தில் மக்களை வழி நடத்தி, சிறிதும் பெரிதுமாய், நலத் திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்!

 கடந்த ஏப்ரல் மு தல் வாரத்தில், தலை நகரில் லோக்பால் மசோதா குறித்து, அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, அரசின் கவன ஈர்ப்புக்காக ஹசாரே உண்ணா விரதம் மேற்கொண்டார்!அறிவு ஜீவிகளின் ஆதரவாலும், ஊடகங்களின் கொண்டு சேர்ப்பாலும்,ஹசாரேவின் மேல் எழுந்த நம்பிக்கையாலும், ஊழல் தடுப்பு மசோதாவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, நாடெங்கும் மக்களிடம் விரைவில் சென்றடைந்து, ஆதரவு அலை பெருகியது!


சிறிது கால தொடர் உண்ணவிரத்தின் பலனாக, அன்னா ஹஸாரெ உட்பட்ட 5 நபர் மக்கள்பிரதிநிதிகள், மசோதாவை இறுதி வடிவம் செய்யும் பொருட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவோடு, இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்!

மூட்டுவலி வடிவில் முட்டுக்கட்டை!


தற் போது, அன்னா ஹசாரே தான் மேற்கொண்ட பணியை, சரிவர தொடர முடியாத வகையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது! மூட்டுவலியே அந்த முட்டுக்கட்டை! பல வருடங்களாக மூட்டுத் தேய்வு நோயால் அவதிப் பட்டு வந்த அன்னா, 97 மணி நேர உண்ண விரதத்தால், வலி அதிகமாகி, எலும்பு நோய் நிபுணர் திரு.பராக் சான்செட்டியால்  கடந்த திங்கள் கிழமை பரிசோதிக்கப் பட்டார்!







மருத்துவர் அன்னா ஹசாரேவிடம் வழங்கிய ஆலோசனை!





1. உடனடியாக 5 நாட்களுக்கு கட்டாய ஓய்வு!
2. மேற்கொண்டு உண்ணா விரதமிருக்கக் கூடாது!
3. இரண்டு கால்மூட்டுகளிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியம்!
4. பயணங்களைக் குறைக்க வேண்டும்!

காந்தீயவாதி அன்ன ஹசாரே மருத்துவரின் ஆலோசனைக்கு செவி மடுப்பாரா? அல்லது தொடர்ந்து மக்களுக்காக களப்பணியாற்றுவாரா என்பது தற்போது கேள்வியாக உள்ளது! அவரைப் பற்றி அறிந்தவர்கள், முன்னெடுத்த காலை எக்காரணம் கொண்டும் பின்னெடுக்க மாட்டார் என்கின்றனர்!

ஹசாரே குறித்து விமர்சனங்கள் பல எழுந்தாலும், தற்போது அவர் கட்டியுள்ள லோக்பால் எனும் கங்கணத்தை, மக்களுக்கு வாங்கிக் கொடுத்த பின்னரே அவிழ்க்கப் பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்! தனக்கு வேண்டிய சிகிச்சைகளை அவர் பெற்றுக் கொண்டு, மக்களின் தொண்டாற்ற, வழி நடத்த வேண்டுமென, மக்கள் அனைவரும் நம்பிக்கை வைப்போம்!









Tuesday, April 26, 2011

பச்சை மாமலை போல் மேனி! ஒரே பாடல் - பல ராகம்!

 தொண்டரடிப்பொடி ஆழ்வார் இயற்றிய பிரபந்தப் பாடல்

"பச்சை மாமலைப் போல் மேனி"

பல்வேறு ராகங்களில்
பல்வேறு பாடகர்கள்

இன்னிசை மழையில் இதோ!


1. பம்பாய் ஜெயஸ்ரீ - பூபாளத்தில் பாடியது!





2. உன்னிக் கிருஷ்ணன் - ஹிந்தோள ராகத்தில் பாடியது!




3. டி.எம்.எஸ் திருமால் பெருமையில் பாடியது!





கண்டு கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்!


Sunday, April 24, 2011

அசத்தல் திருமணக் காட்சி!

 அசந்து போனேன்!

இந்த திருமண படக்காட்சியைக் கண்டு!

கேரள இந்துக் குடும்பத்தின் திருமணக் கோலம்!

அந்நியோனியமான மணமக்கள்!

கண்ணை உறுத்தாத அலங்காரம்!

அசத்தலான வீடியோ எடிடிங்க்!

விண்ணைத் தாண்டி வந்த இசைப் பிண்ணனி!



மனதைக் கொள்ளை கொண்ட படக் காட்சி!



Thursday, April 21, 2011

பெட்ரோல் விலை உயருகிறது?

கடந்த ஒரு வருட காலத்தில், பெட்ரோல் விலை 5,6 முறைகள் சிறிது சிறிதாக உயர்த்தப் பட்டுள்ளது! எந்த நேரமும் மீண்டும் ஒரு விலையேற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பு!

 வரவிருக்கும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு, அரசாங்கத்தை மட்டுமே, காரணியாக்க முடியாது! உலக சந்தையில் கடந்த வருடத்தில் 65 - 85 அமெரிக்க டாலர்களாக, விற்பனையாகிய கச்சா எண்ணெய், தற்போது 105 - 115 டாலர் அளவில் விற்பனையாகி வருகிறது!

இந்திய சாலைகளில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், புதிதாக சேர்ந்து கொண்டே இருக்கின்றன! தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது! இந்தியத் தேவையில், சுமார் 70 சத கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலமே கிடைக்கிறது!

கச்சா எண்ணெய் அதிகம் உபயோகிக்கும் நாடுகள்,மிகப் பெரிய சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தி வைத்துள்ளன! விலை குறைவாக்கவுள்ள சமயங்களில், எண்ணெய் சேமிப்பை பலப் படுத்தி விடுகின்றன! எண்ணெய் டேங்கர் கப்பல்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டு, கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது!

தற்போது ஏற்பட்டுள்ள அபரிமிதமான கச்சா எண்ணெய் விலையேற்றம், தற்காலிகமானதே எனினும், அடுத்து வரும் காலங்களில், விலை மேலும் எகிற வாய்ப்பு உள்ளது என வணிக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்!

சேமிப்பு வசதி குறைவாக உள்ளதாலும், உள்நாட்டு உற்பத்தி தேவைக்கு ஏற்ப இல்லாததாலும், பெட்ரோலிய வரியின் வருமானமே குறித்த வகை வருமானம் என்பதாலும், தற்போது நடை பெற்றுவரும் மாநிலத் தேர்தலின், முடிந்த பின், பெட்ரோலியப் பொருட்கள், சுமார் 2- 3 சத விலையேற்றப் படுவது தவிர்க்க இய்லாதது!

Tuesday, April 19, 2011

அங்கம் பங்கமானால் என்ன? தங்கமே!

 வஞ்சித்த  இயற்கையை நிந்திப்போம்!
கரங்களை இழந்தாலும் உன் நெஞ்சுரத்தில் 
வெளிப்பட்டதே தன்னம்பிக்கை!


அங்கம் பங்கமானால் என்ன? தங்கமே!
நீ ஒரு வழிகாட்டி!
வாழ்த்தும் வணக்கமும் உரித்தாகுக!



Monday, April 18, 2011

யுவராஜ் இந்திய அணியின் புதிய கேப்டன்?

 சிரமமான ஐ.பி.எல் 4 தொடர், முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது!

தோள்பட்டை காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தால் வீரேந்திர ஷேவக், இத் தொடரிலிருந்து விலகுவது உறுதி!

மே.இ தீவுகள் தொடருக்குப் பின், 

1. இந்திய அணியின் இங்கிலாந்து தொடர்!
2. இங்கிலாந்து அணியின் இந்தியத் தொடர்!
3. இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர்!

என மிக முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளதால், முண்ணனி வீரர்களான சச்சின், தோனி, கம்பீர், ஜாகீர், ஹர்பஜன் ஆகியோர் ஆளுக்கு சில போட்டிகள் மட்டுமே விளையாடுவார்கள் எனத் தெரிகிறது!









இந்நிலையில் மே.இ தீவுகள் தொடருக்கான இந்திய அணித் தலைவராக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப் படலாம், என யூகங்கள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது!

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களான பால் வால்தாடி, அம்பாடி ராயுடு போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது!

யுவராஜ் சிங் தலைமையில் அமையப் போகும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்!

ஆட்டமா? குதிரை ஓட்டமா?

 திருமண நாளின் போது, மாப்பிள்ளையைக் குதிரை மேலே அமர்த்தி, திருமணம் நடைபெறவுள்ள இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவது வட இந்திய அன்பர்கள், கடை பிடிக்கும் ஒரு வழிமுறை!

அந்த ஊர்வலத்தில் ஒலிக்கப்படும் இசைக்கு ஏற்ப, நட்புகளும், சொந்தங்களும் ஆடியபடியே வருவர்!

இதை போன்ற ஒரு மாப்பிள்ளை அழைப்பில், நடைபெற்ற ஒரு கலாட்டாவைத்தான், இங்கே பார்க்க விருக்கிறீர்கள்!
மாப்பிள்ளை லோடு ஏற்றப்பட்ட குதிரை, தனக்கு முன்னால் பட்டையைக் கிளப்பி ஆடும் அழகனின், ஆட்டத்தை நிறுத்த முதலில் கனைத்துப் பார்க்கிறது! பிறகு பின்னால் செல்கிறது! அழகனின் ஆட்டம் மேலும் வேகமாக, மாப்பிள்ளையைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது!

என்ன தமாஷ் எனில், குதிரை ஓடிய பிறகும் அழகனின் ஆட்டம் நிற்கவில்லை!



அடுத்த சச்சின் டெண்டுல்கர் தயார்!

 கிரிக்கெட் உலகில், இந்தியாவின் சார்பாக விளையாடும் சச்சின் டெண்டுல்கர், தனது 17ம் வயது முதல், சுமார் 20 வருடங்களாக, விளயாடி வியக்கத்தகு பல சாதனைகளை செய்து வருகிறார்!

சமீபலாகமாக அவர் ஆட்டத்தைக் கண்ணுறும், பெரும்பாலான அன்பர்களின் மனதில் ஒரு ஐயப்பாடு தோன்றி வருகிறது! இனி எத்தனை நாள் சச்சின் விளையாடுவார்? இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்பதே அது!

ஏன் சச்சின் மேல் மட்டும், இந்த எதிர்பார்ப்பு? சச்சின் ஒரு பிறவி ஆட்டக்காரர்!
கிரிக்கெட் ஆடுவதற்காகவே படைக்கப்பட்ட குழந்தை!

2011உலகக் கோப்பை வெற்றி, சச்சினுக்கு சமர்ப்பித்தது, இந்தியக் கிரிகெட்டிற்கு அவர் செய்த சேவைக்கு, திருப்பி செலுத்தப்பட்ட சிறு மரியாதையே!

 வருங்கால கிரிக்கெட் உலகம், இவரைப் போல பிறவித் திறமையாளர்களை மிகவும் எதிர்பார்க்கிறது!
அவர்களின் ஆசையை மெய்ப்பிக்கும் வகையில், நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பிறவித் திறமையாளரை, இங்கு அறிமுகப் படுத்துகிறேன்!

2004 - ல் பிறந்த கிருஷ்ண நாராயணன் எனும் குழந்தை, ஆடும் ஆட்டத்தைப் பாருங்கள்! சுமார் 4 வயதில் எடுக்கப்பட்ட படம் இது!

இந்தியக் கிரிக்கெட்டிற்கு அழிவில்லை!



Saturday, April 16, 2011

தட்டை வடையா, வயிறா? எது வேண்டும்?

தட்டையான வயிறு வேண்டுமென்று விரும்பாதோர் எவர்?

கண்டிப்பாக அடையலாம்!

சேகரித்த தகவல்கள் இங்கே!

  சாப்பிடக் கூடியவை:

பச்சைக் காய்கறிகள் - தினசரி 3 கரண்டி அளவு!
தயிர் - 1 கப்
பாதாம் - 5 - 20 கிராம்!
ஆப்பிள் - 1
சோயா சங்க்ஸ் - 1 கப்
முட்டை - 2 - 4 வெள்ளைக் கரு!


குறைவாக சாப்பிட வேண்டியவை!

பொரித்தன! அடுமனை உணவுகள்! பூமிக்கு கீழே விளைபவை! பேக் செய்யப்பட்டவை!


கண்டிப்பாக செய்ய வேண்டியவை:

* காலை உணவு - கட்டாயம்!
* எளிய பயிற்சி - 45 நிமிட நடை/தினசரி!
* வயிற்றுப் பயிற்சி! - இனைக்கப் பட்டுள்ளது!


பூனையும், மீனும்! நண்பேன்டா!




மனித இனத்தின் பாசமிகு நண்பன், டால்பின் மீன்!
மனிதனுக்கும் மட்டுமல்ல பூனைக்கும் நண்பன் தான்!


ஏனோ, சிலசமயம், கூட்டாக பல டால்பின் மீன்கள், இறந்து கரை ஒதுங்கும் சோகம் நடக்கிறது!

ஜெகன் மோகனின் சொத்து ரூ.365 கோடி!

 ஆந்திர மாநிலம், முன்னாள் முதல்வர், ராஜசேகர ரெட்டியின் புதல்வர், ஜெகன் மோகனின் சொத்து மதிப்பு, 2009ம் ஆண்டு, அவர் தேர்தலின் போது சமர்ப்பித்த, அறிக்கையின் படி - ரூ.77 கோடிகள்!

காங்கிரஸோடு கருத்து வேறுபாடு கொண்டு, விலகி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் கடப்பா தொகுதியில், நிற்கிறார்!

தற்போது, அவர் தாக்குதல் செய்துள்ள சொத்தின் மதிப்பு ரூ.365 கோடிகள்!
இரண்டாண்டு காலத்தில், சுமார் 5 மடங்கு வளர்ச்சி!
அவருடைய மனைவி பாரதியின் சொத்து மதிப்பு ரூ.41.33 கோடிகள்!

ஜெகனின் பெரும்பாலான சொத்துக்கள், தனியார் துறைகளீல், பாண்டுகளாகவும், பங்கு பத்திரங்களாகவும் உள்ளது!

சென்ற வருடம், செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதத்திற்கு ரூ.85 கோடிகள்  , வருமான முன்வரியாக கட்டியுள்ளார்!

சிமெண்ட் மற்றும் மின் உற்பத்தி ஆலைகளில், பங்குதாரராக உள்ளார்!

வழக்கம் போல எதிர்கட்சிகள், இவருடைய சொத்து மதிப்பை பல்லாயிரம் கோடிகளுக்கு உயர்த்தி சொல்லுகின்றனர்!

அதிசயம் என்னவெனில், இவருடைய பெயரில் வாகனம் ஏதும் பதிவு செய்யப் படவில்லை!

ஹெலிகாப்டர் ஷாட்டை சச்சின் தான் அறிமுகம் செய்தார்!


















 இந்திய கிரிக்கெட் காப்டன் தோனி தான், ஹெலிகாப்டர் ஷாட் எனும் முறையை, பேட்டிங்க் நுட்பத்தில் புகுத்தினார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது! இது குறித்து, பெப்சி விளம்பரமும் தோனியைக் கொண்டு, உலகக் கோப்பையை ஒட்டி வெளியிடப் பட்டது!

அனால், இந்த முறையிலான மட்டை வீச்சு. சுமார் 9 வருடங்களுக்கு முன்னரே, சச்சினால் விளையாடப் பட்டுள்ளது, என்பது தற்போது நிரூபிக்கப் பட்டுள்ளது!

Wednesday, April 13, 2011