அரிசிபருப்பு..பருப்பரிசி சாதம்னு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..நம்ம விருப்பம் போல!
எங்க காங்கேயம் காளைக..அதிகமா வெளியில மேயாதுக..பருப்பரிசி சாதவாசனைய புடிச்சா, எங்க சுத்துனாலும் வூட்டுக்கு ஓடி வந்துடுங்க!
வாரத்துல ரெண்டு..மூணு தடவைக்குக் குறையாம, ஒவ்வொரு வூட்லயும் இத செஞ்சுடுவாங்க! பக்கவாத்யங்களோட ஆளாளுக்கு, மினி/மேக்ஸி ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை வெட்டிப்புடுவாங்க!
கண்ணால வூடுகள்ல கூட இந்த சாதத்தை பரிமாற ஆரம்பிச்சுட்டாங்கன்னா..பாத்துகோங்கோ..இதோட மகிமைய!
This One is nothing but.. Kongu version of BisibelaBath!
சாம்பார் சாதம், பிஸிபேளா பாத் மாதிரிதான், இந்த பருப்பரிசி சாதமும்..ஆனா..அதை யெல்லாம் மெய்ன் கோர்ஸா சாப்பிட முடியாது.! பருப்பரிசி சாதத்தை மெயின் கோர்ஸாக சாப்பிடலாம்!
ரெஸிபி மற்றும் செய்முறை!
* புழுங்கல் அரிசி 2கப் + பருப்பு -அரை கப்..ரெண்டையும் ஒண்ணா சேர்த்துக் கழுவி, வடிக்காம 45 நிமிஷம் ஊற வைக்கணும்!
பருப்புன்னா..துவரம் பருப்பு தான்! துவரைக்கு பதிலா அவரைப்பருப்பு போட்டோம்னா..அது தனி டேஸ்ட்! மூணு தடவை துவரம்பருப்பு போட்டு செஞ்சோம்னா ஒரு தடவை அவரைப்பருப்பு போட்டு செய்யலாம்! பாசிப்பயிறு போடறவங்களும் உண்டு! அவங்க அவங்க டேஸ்ட் பட்ஸ்க்கு ஏத்த மாதிரி!
* எலுமிச்சை அளவுக்கு புளிய எடுத்து ஊறவெச்சு, வடிச்சு கரைசலை எடுத்து தனியா வெச்சுக்கோங்க!
* சின்ன வெங்காயம் உரிச்சது 100கி, மிளகாய் வத்தல் - 4, தக்காளி (நீளமா நறுக்கி) - 1, தாளிப்பு அயிட்டங்கள், உப்பு..மிளகாய் பொடி, பட்டை- சிறுசு, கிராம்பு - 1, சீரகம் - கொஞ்சூண்டு!
செய்முறை 1 / முதல்லய தாளிச்சுட்டு, பொறவு சாப்பாட்டையும் அதே குக்கர்ல சமைக்கிறது! எல்லாமும் உடனே முடிஞ்சிடும்..வேலை கம்மி!பிரியாணி மாதிரியே தான்!
செய்முறை 2 / சாதத்தை மட்டும் சமைச்சிட்டு, பொறவு வாணலியில தாளிக்கறது..ஃப்ரைட் ரைஸ் போல!வேலை ஜாஸ்தி..எண்ணெய் அதிகம்..டேஸ்டும் அதிகம்!
முதல் முறையிலே செய்வோம்!
* குக்கர்ல 50மில்லி ஆயில் + பட்டை + கிராம்பு + சீரகம் + கடுகு + மிளகாய் வத்தல் + சின்னவெங்காயம் + கறி வேப்பிலை ..வரிசைப்படி..ஒவ்வொண்ணா சேர்த்து வதக்கணும்! 3-4 Mins.
* புளிக்கரைசல். (அரை கப்).கல்லுப்பு..மிளகாய்த்தூள்..மஞ்சத்தூள் எல்லாம் வரிசைப்படி சேர்க்கணும்..! 2-3 Mins.
* அடுத்து தண்ணி சேர்க்கணும்..ஒரு கப் அரிசிக்கு ரெண்டரை கப் தண்ணி..அப்ப ரெண்டுகப்புக்கு 5 கப் தண்ணி! பருப்புக்கு தண்ணி கணக்கு இல்ல! அரிசிக்கு மட்டும்தான்!கூடவே தக்காளியையும் போடுங்க!
* உப்புக்காரம் எல்லாம் சரி பாருங்க..!
* தண்ணி நல்லா கொதிச்சு பொங்கும்போது..ஊறவெச்ச அரிசி+பருப்பை குக்கர்லெ சேர்த்துடுங்க!
* நல்லா கலந்து விடுங்க..தண்ணி முக்கால் பாகம் சுண்டுனதுக்கு பொறவு..மூடி போட்டு உடனே வெயிட் போடுங்க..3- 4 நிமிஷம் மட்டும் ஹைல எரியவிட்டு, 10 நிமிஷம் சிம்மில் வெச்சிடுங்க!
* அடுப்பை அணைச்சிடுங்க..ஆவி அடங்குற வரைக்கும் மூடியத் திறக்காதீங்க..(15நிமி)..பிறகு திறந்து, கலந்து கொத்துமல்லி தூவி பரிமாறுங்க!
ரெண்டாவது முறை!
* புளிக்கரைச்சல், தண்ணி,உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள் மட்டும் போட்டு..கொதிக்க வெச்சு அரிசிபருப்பு சேர்த்து சாதம் தயாரிக்கணும்!
* பிறகு வாணலியில தாளிப்பு ஐட்டங்களை சேர்த்து, சாதத்தை வாணலியில் கொட்டி, ப்ரைட்ரைஸ் போல தயாரிக்கணும்!
பக்க வாத்யங்கள்!
அப்பளம், வடாம், பப்படம், அவிச்ச முட்டை, உருக்குன நெய் , தயிர், பூண்டு ஊறுகாய், இஞ்சிப்புளி சட்னி,இன்னும் பலப்பல..மனம் போல!
எச்சரிக்கை!
சாப்பிட்டு 10 - 15 நிமிடத்தில் பலன் தெரியும்..நித்ராதேவி மெல்ல அணைத்துக் கொள்வாள்!
இதுதான் ஒரிஜினல் கொங்கு முறை அரிசிபருப்பு சாதம்! மத்ததை நம்பி ஏமாந்து போனா..கம்பெனி பொறுப்பல்ல!
நாக்கு ஊறுதே
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த உணவு.
ReplyDeleteநீங்க சொன்ன சாப்பாடு நல்லா இருக்கு, இதில அப்படியே கத்திரிக்கா, முருங்கை காய் போட்டு செய்றது தான் எங்க ஊரு பழக்கம் :-))
ReplyDeleteஅதுக்கு பேரு தான் பிசிபேளா பாத் ஆஹ் ?
வடிச்ச சோறு, பருப்பு கூட்டு செய்து சாப்பிடுவதுண்டு, உருளை கிழங்கு பொறியல் செம கூட்டு இதுக்கு.
நீங்க சொன்னது போலவும் செய்து பாத்துடலாம்.
படமும் ரசித்துச் சொன்னவிதமும்
ReplyDeleteஆவலைத் தூண்டுது
நிச்சயம் செய்து பார்த்துவிடுகிறோம்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
குட்டன் Sir!
ReplyDeleteமுதன்முறை வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!
நண்டு @நொரண்டு -ஈரோடு..sir!
ReplyDeleteஇன்று இரவு கண்டிப்பா..உங்க வீட்ல அரிசிபருப்பு சாதம் தானாம்!
Ramani Sir!
ReplyDeleteமீண்டும் அருந்தத் தூண்டும் உணவு..விரைவில் உங்கள் அனுவத்தை பகிர அழைக்கிறேன்!
நன்றி!
வவ்வால் sir!
ReplyDeleteNot exactly BisibelaBath! Similar one!
எளிதான உணவு..குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு..செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லவும்!
நன்றி!
அரிசிம்பருப்பு சோத்துக்கு புளி ஊத்தமாட்டாங்கோ.
ReplyDelete