நான் அல்ல!
காரணம் கண்கள்!
கண்களின் பாவை...
காணுமே பார்வை!
அழகாய்க் காட்டும் காலமும்
காரணம்!
ஏன் என்கிறாயா..
எப்படித் தவிர்ப்பது
என்னால் முடியவில்லை...!
எங்கெங்கும்
எழில்கள்!
கறுப்பில் ஒளி ஊடுறுவுமாமே
அது பொய்..!
உன் கண்ணில் பட்டுத் தெரிக்கிறதே!
தெரித்த ஒளி பட்டு கண்ணின்
வெண்மை சிவப்பானதோ?
என் கண்ணைப்பார் ..நீலமாக உள்ளதல்லவா
வானத்தைப் போல!
உன் பார்வை போல..என்பார்வை தெறிப்பதில்லை!
காட்சிகள் கண்ணை ஊடுருவி விடுகின்றன!
காட்சிகள் அல்லவா..
கலைந்துவிடுகின்றன..
நிலைபெறுவது உன்னில்தான்!என் கண்களை விட்டுவிடு..
என்னை விடாதே..விலக்காதே!
எவ்வளவு சொல்லியும்
உன்னைக் காயப்படுத்திய ....
அளவில்லா அம்பெய்யும்
என் கண்களை
தண்டிக்கிறேன் பார்!
நாளின் மூன்றிலொரு காலம்
திறக்கக் கூடாது என்றும்
கனவில் அம்பு விடக்கூடாது என்றும்!
உன்னிலும் உண்டு..
உன்னில் மட்டும் இல்லை
உன்மேல் அதிகம் உண்டு..!
மிகச் சரியாக எழுத்துக்களைக் கவனித்து
ReplyDeleteபடிக்க முடியவில்லை
தயவு செய்து ஏதாவது மாறுதல் செய்ய
முடியுமா ?
அழகிய வரிகள்! சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
Ramani Sir!
ReplyDeleteபக்கத்தின் பின்னணியை மாற்றியுள்ளேன்.தற்போது பாருங்கள்..சிரமத்திற்கு வருந்துகிறேன்!
s suresh Sir!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வார்த்தைகளை மீறி உணர்வுகளை
ReplyDeleteபதிவு செய்கிற படைப்புகளையே
உண்மையான படைப்புகள் என்பேன்
உயிருள்ளவை என்பேன்
வார்த்தை அலைகளை கடந்தால்தான்
கடலின் அமைதியை அழகை ரசிக்க இயலும்
இதில் கடந்திருக்கிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உன்மேலான தவிர்க்க முடியாத பார்வைக்கு
ReplyDeleteஎன் கண்கள் குற்றவாளிகள் ஆகின்றன...
குற்றவாளியை விட குற்றம் செய்ய தூண்டியவற்கே தண்டனை அதிகம்..
உன் விழிகள் அல்லவா என்ன தூண்டியது...
அழகிய கவிதை நண்பரே...
கண்களின் பார்வை சொல்லிசெல்கிற அதிசயங்கள் நிறைய,நிறையவே/
ReplyDeleteஅழகான கவிதை ...
ReplyDeleteஇன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...