Wednesday, September 5, 2012

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

இப்போ எல்லோரும் கொஞ்சம் விவரமாத்தான் இருக்காங்க...ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில சேரும் நபர்கள் குறைந்துவருகிறார்கள்! காரணம்..விலையேற்றத்திற்கு தகுந்த  வருவாய் கிடைப்பதில்லை..இத்திட்டங்களில்!

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சராசரியாக 6 சத அளவில் தான், வருவாய் கிடைக்கிறது..காப்பீட்டுத் தொகையின் அளவும் குறைவாகவே இருக்கிறது!

இன்று மருத்துவக் காப்பீடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று..பெரும்பாலான குடும்பங்கள் சேர்ந்து, பயன் பெறுகின்றன! அரசும் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துகிறது!

அடுத்து சுய இழப்புக் காப்பீடு தான்! அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், 'டெர்ம் பாலிஸி" என்று தங்கள் திட்டத்தில் வைத்துள்ளார்கள்! ஆனால் கேட்டால் தான் சொல்வார்கள்! இன்று வலைப்பக்கங்களில் நிறுவனங்களையும்.திட்டங்களையும், சந்தாத் தொகைகளையும் ஒப்பிட்டு வைத்துள்ளார்கள்! அங்கு சென்று பார்த்து, நமக்குத் தேவையான திட்டங்களில், தொகைகளில் சேர்ந்து கொள்ளலாம்!

இன்ஸ்யூரன்ஸ் வேறு..இன்வெஸ்ட்மென்ட் வேறு!

டெர்ம் பாலிஸி என்பது வருடாவருடம் புதுபிக்கவேண்டும்..சந்தா கட்ட வேண்டும்! ஆனால் சந்தாத் தொகை மிகவும் குறைவு! பாலிஸி காலத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் பிடித்தங்களுடன் தொகை நம் வாரிசுக்கு கிடைக்கும்! ஒருவருட காலம் தான் அதன் வாழ்வு!

எவ்வளவு அளவிற்கு எடுக்க வேண்டும் என்றால்..அளவு ஏதும் இல்லை! ஆனால்..குறைந்தபட்சம் நம்முடைய மொத்தக் கடன் தொகைகள் அளவிற்காவது எடுப்பது நல்லது!

எந்த நிறுவனம் நல்ல நிறுவனம் என்பதில்..எண்ணக் குளறுபடி இருக்கும்..தயக்கமே வேண்டாம். பொதுத்துறை நிறுவனங்களையே நாடவும்!பிற்காலத்தில் பிரச்சனைகள் குறையும்!

இதில் மீதமாகும் நிதியை பொது சேமநல நிதி, தேசிய ஓய்வூதிய நிதிகளில் சேமிக்கலாம். அருகினில் உள்ள தபால் அலுவலகம்..மற்றும் அரசு சார்பு வங்கிகளை அணுகவும்!

 வேண்டும் நலம்!





5 comments:

  1. இது பற்றி விரிவா பேசனும்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete

  2. நான் சேர்ந்து கட்டிய பணத்தில் 80 சதவீதம்தான்
    இருப்பதாகக் கண்டு ஏமாந்து போனபின்
    வாபஸாகிவிட்டேன்.தங்களைப்போல்
    முதலில் சொல்பவர்கள் இல்லாததால்
    இருபதாயிரம் நஷ்டம்
    டெர்ம் இன்சூரன்ஸ் கூட நமது ஒரு வருட சமபளத்திற்கு
    10 மடங்கு எடுத்தால் சரியாக இருக்கும் என எங்கோ
    படித்த நினைவு.
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பழஞ்சோறு! அழகான கிழவி!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  5. Term Insurance நமது ஒரு வருட சம்பாத்தியத்திற்கு 10-12 மடங்கு எடுக்கவேண்டும். அப்போது தான் துயரம் நிகழும்போது கிடைக்கும் இழப்பீடு வருமானதேவையை ஓரளவிற்காவது சரிகட்ட உதவும்

    ReplyDelete