வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு'
என்றான் கவிஞன்!
விழிகள் பேசும் அதை வருடும் மனங்களைக் கண்டு'
என்கிறான் ரசிகன்!
இலக்கின்றி
வெறிக்கும் விழிகள்!
படபடக்கும் இமைகளோடு
கள்ளமறியா விழிகள்...
கவ்வி இழுக்கும்
காந்த விழிகள்...
மீண்டும் பார்க்கத் தூண்டும்
தெய்வீக மலர்கள்...
கடுப்பைக் காட்டும் தீக்கங்குகள்!
வலையை வீசும்
குளத்து மீன்கள்..
மரபுகளைத் தாண்டி
மருளும் மான்கள்..!
எத்தனை எத்தனை மொழிகள்
படைக்கிறது
ஓசையின்றி அவ்விழிகள்....!
அவை ஆரம்பித்த கதைகள் கணக்கில்லை...
சொல்லிய வார்த்தைகள் எண்ணவில்லை....
சொல்லாமல் விட்டவை இனிக்கவில்லை.....
அங்கே ஒலியில்லை..இசையில்லை
இலக்கணமில்லை..இணக்கம் மட்டுமே..
இலக்கியங்கள் மட்டும் ஏராளம்!
நினைவுகளோ தாராளம்!
விழி மொழியை படிக்க தெரிந்தால் மங்கையரின் மனதை படித்த மாதிரி! அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html
அருமை. நன்றாகவே இருந்தது.
ReplyDeleteமுகத்தை முக்காட்டால் மூடினாலும்
அகத்தை மறைக்க முடியலையே
நிலை குத்திய கண்கள் உனக்கு
தன்நிலை மறந்த எனக்கு
தள்ளி பதுங்கும் மீன் போலே
துள்ளி குதிக்கும் மான் போலே
ஓராயிரம் கதை சொல்லுதே விழிகள்
துயரம் போச்சுதடி தூக்கமும் போச்சுதடி
விழி பேசும் மொழிகளுக்கு வரைமுறை இல்லைதான்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவிழிகள் பேசும் மொழிகள் அறிந்தால்
ReplyDeleteஅறிந்தவர் நிச்சயம் வித்தகர் தானே
அது அறியாமல்தானே பலர்
ஆகிவிட்டனர் பித்தரெனத் தானே
படமும் அதற்காக எழுதப்பட்ட கவிதையும்
மனம் கவர்ந்தது
தொட்ர வாழ்த்துக்கள்
s suresh Sir!
ReplyDeleteஅவளின்றி கவிதை ஏது?
chinnapiyan அண்ணே!
ReplyDeleteகண்கள் பேசும் மொழியை
கண்டவர் விண்டுவரோ..
விண்டினால் மீண்டும் அங்கு கிட்டுமோ?
பின்னூட்டக் கவிதை..எனக்கு பெருமை!
மதுமதி Sir!
ReplyDeleteஅவை உணர்வின் மொழிகள்!
நண்டு @நொரண்டு -ஈரோடு Sir!
ReplyDeleteபெருமை!
Ramani Sir!
ReplyDeleteஇந்த மொழி பேசவும்..புரியவும் வகுப்பில்லை..வாத்தியார் இல்லை.நான்கு கண்கள் மட்டுமே தேவை!
ஆமாம்....உண்மைதான் ....விழிகள் பேசும் மொழிகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
மிக அருமையான பகிர்வு...உங்கள் பகிர்வுக்கு நன்றி......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)