2012ல் டிசம்பர் 23ம் தேதி..வைகுண்ட ஏகாதசி..ஞாயிறு காலை ஆரம்பித்து..24ம் தேதி திங்கள் காலை நிறைவுறுகிறது ! பெரும்பாலான வைணவத் தலங்களில் ஞாயிறு இரவு முழுக்கக் கொண்டாட்டங்கள்.திங்கள் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு !
விரதம் மேற்கொள்பவர் ஞாயிறு காலையில் ஆரம்பித்து..ஞாயிறு இரவு கண்விழித்து..திங்கள் அதிகாலை வைகுண்ட வாசல் கடந்து..திங்கள் மாலை வரை விரதம் தொடர்ந்து அரிசியை பின்னமாக்கி சமைத்து சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும் ! ( ஒரு பட்டரிடம் அறிந்தது )
விரதகாலம் பால்பழம் அருந்தலாம்..நீராகரம்..சிறிது சிறிதாக அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் ! திட உணவை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் ! ( புதிதாக இருப்பவர்கள் ..முடியவில்லை எனில் வெங்காயம் போடாமல் உப்புமா சாப்பிடலாம் )
பூலோக சொர்க்கமாம் திருவரங்கத்தில் கூட்டம் அலை மோதும். கடந்த சில வருடங்களாக கட்டணதரிசன முறை அமல்படுத்தப்பட்டு, சிறப்பாக நடைபெறுகிறது. வரிசைதான் என்றாலும், நேரம் எடுத்துக்கொண்டாலும், எளிதில் தரிசனம் கிடைக்கிறது.!
உற்சவர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அழகு..!ஆடல்..பாடல்கள் அங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கும்!

திருப்பதியில் மிகுந்த பக்தர்களை எதிர் பார்த்து ஏற்பாடுகள் நடக்கின்றன ! திருவல்லிக் கேணியில் சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது !
திருவரங்கன் திருவடியே சரணம்!
வைகுண்ட ஏகாதசி சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteவிரத விவரம் பயனுள்ள தகவல்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..ரமணி சார்!
Deleteஏகாதசி பற்றிய சிறப்பான தகவல்கள் திரட்டி தந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..s suresh சார்!
Delete//விரதம் மேற்கொள்பவர் ஞாயிறு காலையில் ஆரம்பித்து..ஞாயிறு இரவு கண்விழித்து..திங்கள் அதிகாலை வைகுண்ட வாசல் கடந்து..திங்கள் மாலை வரை விரதம் தொடர்ந்து அரிசியை பின்னமாக்கி சமைத்து சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும் ! ( ஒரு பட்டரிடம் அறிந்தது )//
ReplyDeleteதங்களின் இந்தப் பதிவு என்னை மலரும் நினைவுகளில் மூழ்கச் செய்து விட்டது.
நான் அப்போது பள்ளி மாணவன்.
ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஊர் சேலம் கோட்டை பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பிரசித்தம் வாய்ந்தது. இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு குளித்து முடித்து விட்டு, கோவிலுக்கு சென்று வரிசையில் நின்று விடுவேன். முன்னதாக ஒரு நாள் விரதம் இருப்பதன் விளைவாக பனியில் உடல் நடுங்கும். எனினும் அதுவே ஒரு சுகமாக இருக்கும். அதிகாலை கோவில் திறந்தவுடன், திவ்ய தரிசனம். கூட்டம் அதிகம் இருக்கும். இருப்பினும் பெருமாள் சிந்தனைகள் நம்மை தனியாக அழைத்து செல்லும். தரிசனம் முடிந்தவுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வர கூட்டம் அலை மோதும். அக்கூட்டமே நம்மை சொர்க்க வாசல் வழியாக வைகுண்டம் அழைத்து செல்லும். சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்த பிறகு, கிடைக்கும் ஒரு புத்துணர்ச்சி வார்த்தையால் விவரிக்க இயலாத ஒன்று. அது அடுத்த வைகுண்ட ஏகாதசி வரை தாங்கும்.
வெளியில் வந்த பிறகு கரும்பு ஒரு ஜோடி வங்கிக் கொண்டு, புதிய பரமபதமும், புதிய தாயக்கட்டையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து வெற்றி வீரனாக சேரும் போது உண்மையில் பெருமாள் கண் திறந்து பார்த்து ஆசி வழங்கியது மனம் மகிழ்ச்சி கொள்ளும்.
இது நான் கல்லூரி படிக்கும் காலம் வரை தொடர்ந்தது. பிறகு அன்றைய தினமே அதாவது வைகுண்ட ஏகாதசி தினமே கோவிலுக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. ஆனால் அன்றைய தினமே கரும்பு தின்பது நிற்கவில்லை. நம் பிள்ளைகள் செல்கிறார்கள்.
அருமை..அருமை.!.அட்வகேட் சார்!
Deleteதங்களின் அனுபவ பகிர்வு ஆனந்தம் அளித்தது..எதை எல்லாம் இழந்து வருகிறோம் என்பதே நினைவுகள் ஆகிறது !
மிக்க நன்றி !
அன்புடையீர்,
ReplyDeleteஉங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html
தங்கள் தகவலுக்காக!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.இதோமுகவரி-http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_11.html?showComment=1389400067941#c4442535171104740770
--------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
--------------------------------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-