Sunday, February 26, 2012

ஓ.. ரசிக்கும் சீமானே!

  அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வந்தனம்!

இளவேனிற் காலத்தின்
வாயிற்படிகளில்
வான் மழையோடு மரங்களை
புதுப்பிக்க வரும்
வசந்தருதுவை
வரவேற்கக் காத்திருக்கும்
பூவுலகம்!
மதுரையின் மணக்கும்  குண்டுமல்லிகை
செண்டோடு!

துளிர்க்கும் புது இலைகள்
கார்மேகத்துடன் போட்டியிட்டுத் தருமே
கோடையின் தாக்கத்திற்கு
தலைகவசம்!
ஸெந்தூரமாக சிரிக்குமே
பெருமையுடன் வழியெங்கும்
மே மலர்கள்!


படரும் வெப்பம்
தொடரும் சோகம்
ஆற்றாமைத்தீர
குளிர்மலைகளை நாடுமே
புதுமணங்கள்!

என்னே விந்தை!
குளிர்ச்சி தரும் இயற்கை ..
பனைகளிலிருந்தும்
புழக்கடை தர்பூசணி
படர்கொடிகளிலிருந்தும்
சிறுதும் பெரிதுமாக ...!


தென்றல் வரவில்லை
இன்னும் தணியவில்லை..
மீதமிருக்கும்
பகலின் காற்று!
வெற்றுவெளியில்
தலைக்கு கையை அணைத்துத்
தேடுவோம் வானத்தில்
பிரியமானவரை..!
முகம் தெரிந்தவுடன்
ஆஹா... தென்றலும் புறப்பட
புன்னகையுடன்
விடைதருவோம் கண் மெல்லமூடி..!

இருக்கும்போது கவனமின்றி
விலகும்போது மனம் தேடும்
உறவுகளாய் ஆனதே 
தண்ணீர்!
சச்சரவின் தாக்கம்போல்
தவிக்கவிட்டு தேடி அலையவிட்டு
உணர்த்திடுமே தன்னை யாரென்று!


மாதமேன்னவோ மார்கழி ஆகலாம்!
ஆனால் நிலவேன்னவோ
சித்திரை நிலவு ...!
அன்று அவள் நமக்கு மிக  அருகில் வருவாள்!
தாயாக..
வளர்ந்தபின் துணையாக ..!


ஓ..ரசிக சீமானே!
எதுலிருக்கு..எதிலில்லை..!
இங்கிருக்கு ..அதிலிருக்கு..!
எதிலுமிருக்கு..எங்குமிருக்கு ..!
விருப்பத்திலும்..வெளியிலும் ..!
ஓடிவா..ரசிக்கலாம்!

ரசிகன் ..மனிதன்..தலைவன்..ஆசான்.!







































Thursday, February 23, 2012

ஆயுளை 15 சதம் நீட்டிக்க!வாங்க என்கிட்டே!

இப்ப வந்திருக்கும் நுகர்பொருட்கள் வசதிகள் எல்லாம் வாழும் மனிதரிடையே வெகு நாட்கள் வாழும் எண்ணத்தை ஆசையாக பேராசையாக வளர்த்து விட்டுள்ளன!

மருத்துவத் துறை செல்லும் வேகத்தைப் பார்த்தால், ஜீன் தெரபியில் மகத்தான மாற்றத்தை விரைவில் அடைந்துவிடுவார்கள் போலும்!கேன்சருக்கு விரைவில் விடிவு பிறந்துவிடும்!லேசரில் கண்சிகிச்சைக்கு எளிதான வழியால் கண்ணாடியின் பயன்பாடு தற்போழ்து குறைந்து வருகிறது!

சுமார் 10  வருடகாலத்திற்குள் வழுக்கைத் தலையில்  மீண்டும் முடிவளரும் வைத்தியம் ரெடியாகிவிடும்!

ஆனால் இவையெல்லாம் பரவலாக அறிமுகம் ஆகும்வரை மேற்கொள்ள அதிக செலவு பிடிக்கும்! அனைவராலும் செய்ய முடியாது!

இந்த வசதிகள் வரும்போது வரட்டும்! அதுவரை அனைவருக்கும் இனி வாழப்போகும் நாட்களில் 15 
சதம் அளவு கூட்ட சில எளிய முறைகளை இன்று உங்கள் காதுகளில் ஊதப் போகிறேன்!

என்னப்பா அந்த புது மேட்டருநு நீங்க கேட்டா,அதுக்கு நான் வழியசொன்னா என்னத் திட்டக் கூடாது! எல்லாருக்கும் தெரிஞ்ச்ச சங்கதிதான் அது! சின்ன வயசுல இருந்து செய்து கொண்டு இருப்பது தான்!

அதுதாங்க -- நடராஜா சர்வீஸ்! 

இருங்க..இருங்க ..கோபப்படதீங்க!அதுல ஒரு கணக்கா சொன்னா மனசு சந்தோஷமாயிடும் ..டும்!

சமவெளியில் ஒரு கிமி நடந்தால் 50  ம்,ஏற்ற இறக்கமான பகுதிகளில் 75 கலோரியும் உடலால் எரிக்கப்படுகிறது!நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளே முதலில் எரிக்கப்படுகின்றன! பேட்மாஸ் மாசில்மாசாக மாற்றப்படுகிறது! உடல் பொலிவு பெறுகிறது!

ஒரு சாதாரண நபர் நாளொன்றுக்கு 1200 கலோரிகள் அளவு உண்கிறார்! தினம் 4  கிமி என, வாரம் 6 முறை, மாதம் சுமார் 100 கிமி நடந்தால் மாதம் 6000 கலோரி சக்தி எரிக்கப்பட்டு விடுகிறது! இது 5 நாளைய உணவின் அளவு!ஏறக் குறைய 15 சதம்!இயற்கை நம்மை விட்டு 5 நாட்கள் தள்ளிப் போகும்!

1500 க்கு தினம் 5 கிமி, 1800  க்கு தினம் 6 கிமி என நிர்ணயித்துக் கொள்ளலாம்! நடை வேகம் என்பது நாம் சாதாரணமாக நடக்கும் வேகத்தில் இருந்து 10  சதம் அதிக வேகம்! அதற்கு மேல் வேண்டாம்! முதல் 2 கிமி சராசரி வேகம்" பிறகு சிறிது கூட்டி அடுத்த 2 கிமி! கேன்வாஸ், ரப்பர் செருப்பு நல்லது!கணுக்கால் வலி எடுத்தால் 3 நாள் விடுமுறை விட்டு ,எலாஸ்டிக் துணி சுற்றிக் கொண்டு நடக்கலாம்!முச்சுத் திணறல் இருந்தால் மருத்துவரை அணுகவும்!

நடந்து முடிந்தபின் 10 நிமிடத்திற்குப் பிறகு தான் தண்ணிர் அருந்த வேண்டும்!சாப்பிட்டு 2 மணி நீரம் கழித்து தான் நடை பயிற்சி செய்ய வேண்டும்!வெளியே நடக்க முடியவில்லை எனில் ட்ரேட்மில்லில் எந்த சமயத்திலும்  நடக்கவும்!

இப்படி ஆயுசு பூராவும் நடந்தால், கண்டிப்பாக 15  சதம் ஆயுசு நீடிக்கும்! மனசு வைத்தால் மார்க்கம் உண்டு! இது நடக்கலைன்னா என்னை வந்து கேளுங்கள் !

ஆமா எதுக்கு சம்பந்தமில்லாம பாட்டு வெச்சுருக்கே னு கேட்டா ...முதல்ல இந்தப் பாட்ட ஓட விட்டுட்டு அப்புறம் பதிவப் படிங்க..எரிச்சல் வராது! அதுக்குத்தான்,, வரட்டா..நான் நடக்கணும்! பை.பை !






 

நானும் எனது சொந்த ஊரும்!! (தொடர்பதிவு)

ஒரு தூரக்குடி காத்து இந்த மேகாத்தை கதை அதுவும் மூலக்கதை சொல்ல அழைக்குது!வசந்த மண்டபத்துல இருக்குற மகேந்திர ராசா இந்த நாடோடியின் கதைய சொல்லக் கேக்கனும்னு அன்புக் கட்டளை போட்டுட்டாரு!


அப்பனும் ஆத்தாளும் ஒரே ஊர்தாணுங்க! ஆனா சொந்தம்னு சொல்லிக்க ஒரு சதுர அடிகூட இல்லாத அவங்க பொறந்த ஊரு திருப்பூர் பக்கத்துல ஒரு கிராமம்!மேக்க கரிசலு..கிழக்க செம்மண்ணு! ஒரு பக்கம் பருத்தி..அடுத்த பக்கம் தக்காளி! மேக்காலையும் மேடு..கிழக்காலையும் மேடு..சின்னதா சரியும்.அதுல ஊரு! ஊரை சுத்தி வாய்க்கால் நல்ல ஆழத்துல ரெண்டு மாசம் தண்ணி ஓடும்..நிலத்துக்கு பாயாது..கிணத்து தண்ணிய மேல கொண்டந்துடும்!
லீவுக்கு மட்டும் போறதால பெருசா ஒட்டல!ஆளுங்களும் ஊரும்..!


பொழைக்கரதுக்கு ஊருக்குள்ள பெருசா வழியில்லாததால திலுப்பூருக்கொ
கோவைக்கோ இளவட்டங்கள் செட்லாய்ட்றாங்க..ஊருக்குள்ள பெருசுங்க நடமாட்டம் தான்!

சோசியத்துல சகட யோகம்னு சொல்றாங்க பாத்தீங்களா..என்ற அப்பாவுக்கு பொறவு எனக்கும் ரொம்ப பொருத்தமுங்க! அப்பா அரசாங்கத்ல சோலி பாத்ததால சக்கரம் கட்டிட்டு ரொம்ப ஊரு பாத்துட்டாரு!கூடவே நாங்களும்!

பொறந்துல இருந்து மேட்டூர்...நல்ல தண்ணி இறால் ..கோடை நோவுகள் அனைத்தும் வரிசையாக!  உயர்ந்த மனிதன், உலகம் சுற்றும் வாலிபன்..டார்ஜான் !

பொறவு பட்டுக்கோட்டையில ..குளத்துல நண்டு புடிச்சது.. நைட்டெலாம் கரண்டே இருக்காது ..ஆத்தாக்காரி அடிக்கடி எந்திரிச்சு விசிறி வீசிட்டு இருக்கும்! நாடியம்மன் கோவில் பண்டிகை,,டி.எம்.எஸ் கச்சேரி..கெளரவம்!


ஆறாப்பு கொமாரபாளயத்ல..மறக்கமுடியாத ஆத்மநாபன் வாத்தியாரு..பண்டிகைங்க .கலை நிகழ்ச்சிங்க .வண்டியில டான்ஸ் .காவிரி ஆத்ல கபடி ஆடனது . சைக்கிள் கத்துகிட்டது .பண்ணி மேச்சு அப்பாட்ட பெல்ட்ல அடிவாங்கினது  .வாழ்க்கையில முதலும் கடைசியுமா பொண்ணுகள கேலி செஞ்சது..அதுவும் ஒரு கண்டிப்பான வாத்தியார் பொண்ண! அவர் வேறொன்னும் கேக்கல..ஏண்டா ..நீயா  அப்டின்னாரு!
அவர் அப்படி கேட்டது ஆயுசுக்கும் மறக்காது! அன்னியில இருந்து அம்மணிக ஏதாவது கேட்டா தான் பேசுவேன்..நானா அவிக பக்கம் தலைய திருப்பறது கூட இல்ல! பாபி ..ஷோலே ..அன்னக்கிளி ..அவன்தான் மனிதன் ..!

ஒருவருசம் சிங்கார சென்னை அமிஞ்சிக்கரை வாசம்!நல்லா கிரிகெட் வெளையாடி பழகினது அங்கதான்!திரு.வி.க பள்ளி !முள்ளு இல்லாத மீனு ..
மாசம் ரெண்டு சினிமா ..பீச் ..கோயில்னு ஒருவருசம் சீக்கிரம் ஓடிருச்சு! 16 வயதினிலே ..எக்சார்சிஸ்ட் ! ஆனாக்க இந்த காலத்ல சென்னைய சுத்தி பாக்குறோமுனு ஊர்ல இருந்து மாத்தி மாத்தி உரம்பரைங்க வந்தாங்க!ஆரம்பத்ல பெருமை.. அப்புறம் ஒரே இடஞ்ச்சலா போச்சுது! பாத்தாரு எங்க நைனா ..சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிட்டாரு!


அங்க போன அல்லாரும் விரோதமாவே நடந்துட்டாங்க ஒரு மாசம் ..மெட்ராஸ் காரனுட்டு !விளையாட்லயும் படிப்புலயும் முதல் வந்ததால பொறவு ஏத்துகிட்டாங்க! கிராமத்து லைப்ரரில முக்கால்வாசி புக் படிச்சு இலக்கிய பித்து ஏறித் திரிஞ்சேன் கொஞ்ச நாளு..சுஜாதா ..பாக்கியம் ராமசாமி ..சோவியத் ..சாவி ..சாண்டில்யன் ..நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்!


பொறியியல் பட்டயப் படிப்பு படிச்ச பொள்ளாச்சி ..மாலையில் சைக்கிள் உலா ..
முரட்டுக்காளை ரஜினி சந்திப்பு, காலேஜ் சேர்மன், தங்க மெடல்,..
ஒருதலை ராகம்.. அலைகள் ஓய்வதில்லை ..வாழ்வே மாயம் ! கடைசி பத்து நாள் மனசு சஞ்சலப் பட்டது! மோத(க ) வந்த ஆபத்து ..தானே விலகிடுச்சு..நம்ம தைரியத்தைப் பாத்து!


ஒருவழியா வீடொன்னு காட்டி செட்லாணோம் கோவை புளமேட்ல..அட்ரஸ் கிடைச்சதே அப்பத்தான்! பட்டம், மேல்பட்டம் வாங்கினது ..யமஹா வாங்கினது ..வாலிபத்ல கத்துகிட்ட சில பழக்கங்கள் ..வாரம் ரெண்டு சினிமா, பைக்ல ஊட்டி,கேரளான்னு ஜாலியா போயிட்ருந்தது! மாப்ள எப்படியும் மாட்டுவான்னு ஜோட்டளிங்க சவால் உட்டானுங்க! நமக்கு கொஞ்சம் ஈகோ ஜாஸ்தி! ஏர்கெநவே வாத்தியார் வேற மனச திடம் பண்ணி வெச்சிருந்தாரா..எந்த பொண்ணுகிட்டையும் பேச்சே வெச்சுக்கல!

அப்பா என்ன வேலைக்கு போனது போதும் ..பிசினெஸ் செய்யுனாறு ..மறுபடியும் சட்டி தூக்கீட்டு திலுப்பூர்! கல்யாணம்,குழந்தைக, வீடுன்னு இங்கே 
தான் இப்ப இருக்கேன்! அப்படியும் பாருங்க 5 வருசமா துங்குறது மட்டும்தான் திலுப்புர்ல..பிசினெஸ் கோவைல!


 எப்படி நம்ம நாடோடி ஜிந்தகி?


என் வாழ்க்கையில் பெரும்பாலான நேரம் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில்தான்! எந்தவித வசதியும் இல்லாமல் உலக அளவில் சுயம்புவாக ,உழைப்பினால் உயர்ந்து நிற்கும் எங்கள் பகுதி!

எங்களை சோர்வடைய செய்யாமல் உற்சாகப்படுத்துவது, சித்திரையில் சீர்புட்டி, வைகாசியில் சாரலடித்து, ஆடியில் ஆர்ப்பாட்டம் செய்து,புரட்டாசியில் புரண்டு போகும் " மேக்கத்துக் காத்து" தான்!
எங்கள் தொழிலுக்கு வேண்டிய மின்சாரத்தையும் காத்தாடி வாயிலாக 
அள்ளித்தரும் இந்தக் காத்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வரும் 
"கோவைக் காற்று"!


பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை! எங்கள் பகுதி அறிவு,தொழில், கிளைமேட், மனிதர்கள், ..இவற்றைஎல்லாம் அனைவரும் அறிவர்! பம்பாய்,சென்னைக்கு செல்ல பயப்படும் அன்பர்களை ஆவலுடன் வரவேற்கும்
எங்கள் கொங்கு மண்டலம்!


என்னைப் பின்தொடரும் எல்லோரும் இந்தத் தொடர்பதிவை எழுதுமாறு அன்புடன் அழைக்கிறேன்! 


வாருங்கள்! தாருங்கள்!
































































Wednesday, February 8, 2012

நமக்கெதுக்கு வம்பு !

 அன்னாடம்   நம்மள நிறைய மனுஷங்க பாதிக்கிறாங்க! தெரிஞ்சி சிலபேரு, தெரியாதவங்க,உறவுங்க .. சோலிககாரங்க..ஜோட்டாளிங்க ..ரோட்ல .செய்தில..நாட்ல ..உலகத்துல.. எத்தனையோ ..அத்தனையையும் சகிச்சுக் கிட்டு தாண்டித்தான் போயிட்டு இருக்கோம்!

அதுல நீங்க பார்த்தது வேற! நம்மோடது வேற! ஆனாக்க பாதிப்பு உண்டு!
சிலது ரசிக்கிற மாதிரி, எரிச்சல் சிலதுன்னு பலரகம்! அதே மாதிரி நம்மனாலேயும் மத்தவங்களுக்கு பாதிப்பு உண்டு! இப்ப நான் உங்கள பிளேடு போடலையா ..அப்படிக்கா !    

நடனப் புசல் தேவப் பிரவு இருக்கார் தானே!அவரோட ஜீன்,குரோமோசோமு எல்லாமே ரிவ்ர்சுல அவரோட அப்பா அந்தரம் கிட்ட போயிடுச்சாம்!என்ன முழிக்கிறீங்க..இது எப்படி சாத்தியுமுனு தானே!தேவப் பிரவு கண்ணாலம் கட்டாமையே நவீன தாடகி யோடு குடும்பம் நடத்துற மாதிரி, அப்பா அந்தரமும்  38  வருஷமா,வெளிய தெரியாம ஒரு அம்மணியோட குடும்பம் நடத்துனார்நும் 
செய்தி! எது முன்னாடி வந்தது? பையனப் பத்தியா..அப்பனைப் பத்தியா?
பையன் தானே பர்ஸ்ட்! அப்பா அவர் ஜீன் தான் பர்ஸ்ட் ..பெஸ்ட்!

நம்ம தமிழ்நாட்டு திரு ,,க் குவளை வாரிசு அரசியலைப் பாத்துட்டு அவனவனுக்கு ஆச கிளம்பிடுச்சு! யாருன்னு கேக்கிரீங்களா?..அதாங்க அந்த மிக்சர் பொட்டல இட்லியம்மாவூட மாப்ளே! பொண்டாட்டி தோள் உசரமே இர்ந்துட்டு பயபுள்ளைக்கு திடீருன்னு ஆச வந்திட்டு!வந்ததே பாருங்க புளியங்காவுக்கு கோவம்! பத்ரகாளி டேன்ஸ் ஆடி ஊட்லே குந்திக்கோ!பந்திக்கு வராதேனு சொல்லிடுச்சு!

நாமதான் அல்லாருக்கும் பேரை மாத்தி வெக்கிறம்னா, பழைய பாட்டாளிt வீல்முருகன் தன்னோட சின்னய்யாவ பொது இடத்துல வெச்சு கொம்பு மணின்னு பட்டப்பேர் வெக்கிறாரு..கவுண்டமணி கணக்கா!

பதிவுலக நாட்டாமைக புதுசா திருநங்கைகள  கோவிலுக்கு பூசாரியா போடலாமேன்னு கேக்கறாங்க! நாமெல்லாம் கோவிலுக்கு போறமா வந்தமானு இருந்தம்னா, சாமிய கும்புடாத அறிஞ்சர்க புதுசு புதுசா கோவில பத்தியே ஆராச்சி பண்ணுறாங்க! ஏன் இவங்களே ஊருக்கு ஒரு கோவிலைக் கட்டி, ஈ.சி.ஆர். காமசாமி சிலைய வெச்சு, யார வேணும்னாலும் பூஜாரியா போட்டுக்கலாமே!

இப்ப நடக்குற அரசை மின் மைனாரிட்டி அரசுன்னு ஏன் சொல்லக்குடாதுனு கலைஞ்சர் இன்னும் ஏன் சொல்லலை?

குறைந்த மின்சாரம் ....நிறைந்த கட்டணம்! இதுவே இனி தாரகை மந்த்ரம்!

2004 க்கு முன்னாடி சுனாமி எப்ப இந்தியாவுக்கு வந்துச்சு? மறுபடியும் சுனாமி வந்தா குறி வெச்சு உலைகள மட்டுமே தாக்குமா? கரையோரம் வீடுகள ஒன்னும் பண்ணாதா?பயமிருக்குன்னா ..தமிழ்நாடு பூரா கடற்கரையோரம் சுமார் 10 கிமிக்கு அல்லாரையும் வீட்ட காலி செஞ்சுட்டு மலைஅடிவாரத்துக்கு குடி போயிடலாமே! சூட்கேஸ் மினி அணு குண்டெல்லாம் வந்தாச்சு!ரஷ்யா உடஞ்சசதுக்கு பொறவு அங்கிருந்து சில ஐட்டங்க எங்கியாவது மத்த பக்கம் போயிருக்க்கலாம்னு பேசிக்கிறாங்க!


விலையில்லா கர்மாக்களை நிறுத்திட்டு கரிய வாங்கி கொடுத்த கரண்ட் கொஞ்சமாவது கிடைக்குமில்ல!


நாம உலைய பிரச்னை பண்ணப்போக அவிக அணைய கிளப்பிட்டங்கன்னு பேச்சு! தீர்ப்பு குளிர்ச்சியா இருந்தா உலை ஸ்டார்ட் ஆகிடுமாமே!


வெளிநாட்டுத் தமிழரை   விட்டு தமிழ்நாட்டுலேயும் பிரச்சனை இருக்கு,அப்படின்னு சொல்லி மைகோ,விருமா, அவங்கள சேந்தவங்கள உசுப்பி விட் சொல்லணும்! 
தமிழ்நாட்டுப் பிரச்சனையைக் கண்டுக்காம ஓட்டு மட்டும் போடமற்றங்கன்னு புலம்பி என்ன பிரயோசனம்?  


என்னவோ போங்க எத்தன பேரு என்ன கும்மி அடிக்கப் போறாங்களோ ?
பயம் ..பயம்!








Tuesday, February 7, 2012

எது எடுத்தாலும் மூணு!

என்னுடைய எழுத்துக்கு என்று அடையாளம் ஏதும் இல்லாமல் கண்டபடி சுற்றிக் கொண்டிருந்த என் சிந்தனை வெள்ளி மூக்குக்குதிரை யைக் கடிவாளம் இட்டு நிறுத்தி, விவகாரமாகவோ,இலக்கியத்தரமாகவோ உன்னிடம் எதிர்பார்க்கவில்லை! ஜாலியா..எழுதுப்பா என்று ஊக்கமளித்த என் வலை உலக நண்பர்களின் அன்பு எச்சரிக்கையை அடுத்து அவர்களின் உத்தரவை சிரமேற் கொண்டு இனி உங்கள் இதயத்துக்கு இதம் அளிக்க இதோ!

ஆமா ! அது என்ன தலைப்புல மூனாங் கணக்கு ஒன்னு வெச்சிருக்கேன்னு கேட்டாக்க, அது என்னோட அனுபவம்னு சொல்வேனுங்க! ரொம்ப நாளா நிறைய  படிச்சி ஆராய்ச்சி பண்ணி நானும்,வீட்டு அம்மணியும் ஒரு முடிவு செஞ்சி வெச்சிருந்தோம்! ஆனா, அதை முதல்ல ஏதாவது ஒரு பாவப்பட்ட சீவன் கிட்ட சொல்லி செஞ்சு பாக்குறதுன்னு முடிவாயிடுச்சு!

ஒருநாள் என்னுடைய ஒன்னு விட்ட மச்சினர்களோட வீட்டு அம்மணிக,அக்காளும், தங்கையுமா ரெண்டு பேர் உரம்பரை அதாங்க  உறவின் முறைக்காக விருந்துக்கு வந்தாங்க!பத்து பனிரெண்டு வயசு சின்னவங்க!அதனால பயமில்லாம என்கிட்டே பேசிட்டி இருந்தாங்க! 

என்ன ரெண்டு பேருக்கும் சரியான போட்டி போலிருக்கு..எடை போடறதுல! அப்படின்னு நான் கேட்கவும், எங்க வீட்டம்மா சோதனை எலிக கிடைச்சாச்சுனு              
சந்தோஷத்துல, நாங்க சொல்றபடி கேட்டா, உடம்பு எடைய குறைசசிரலம்னு சொன்னாங்க! அந்த பேக்குகளும், எங்க மேல இருந்த நம்பிக்கைல சரி சொல்லுங்கன்னு கேட்டுச்சுக! ஒரே வரில எங்க திட்டத்தை சொன்னதும், அவங்களுக்கு ஆனந்தம் பாதி..எரிச்சல் மீதி!

அவிக ரெண்டு பேரும் எந்நேரமும் தின்னுட்டு, தூங்கிட்டு,டிவி பாத்துட்டு பொழுத கழிக்கிரவங்க! அவங்க கிட்ட திட்டத்தை சொன்னமே, செய்வாங்களானு எங்களுக்கு சந்தேகம் தான்! மூணுமாசம் கழிச்சு கோவில் திருவிழாவுல பாத்த போது அக்கா எடைய 5 கிலோ கம்மி பண்ணி ஜம்முனு இருந்தா!தங்கச்சிக்காரி அப்படியே தான் உருண்டு போய்டிருந்தா! அக்காவுக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோசம்!

அது என்ன ரகசியம் ஒண்ணுமில்ல! இதுதான்!

" உங்களுக்கு பிடிச்சது எது வேணாலும் சாப்பிடுங்க!" இதுதான் அவங்க சந்தோஷக் காரணம்!

"ஆனா மூணு சர்விங் மேல போகக் கூடாது" இதுதான் அவிக எரிச்சலுக்குக் காரணம்!

இட்லி ,தோச ,சப்பாத்தி- எதுன்னாலும் மூணு எண்ணம் தான் !
சாப்பாடு - மூணு கரண்டி !

சைஸ் ஆளுக்கு ஏத்த மாதிரி !

உடம்பு எடையைக் குறைக்க முதல்ல பயிற்சிக்கு போயிடக் கூடாது! வாய கட்டறதுக்கு பழகணும்! சிறிது எடை குறைஞ்சி உடம்பு லேசான பின்னாடி பயிற்சி எல்லாம்! 

நீங்க வேணும்னா செஞ்சு பாருங்களேன்!நீ ரொம்ப யோக்கியாமனு கேக்குறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்! பாதி தான்னு! வாயக் கட்டிப்
போட்டா, ஒரு மாசத்துல ரெண்டு கிலோ இறங்குது! மறுபடி வெட்னா பழையபடி கூ டிருது!