Tuesday, July 24, 2012

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!

நட்பின் அவசியமும், அவசிய நட்பும்!

 அறிமுகம் அம்மாவின் மூலம் ஆரம்பம்..முதல்ல அப்பா..ஏறக்குறைய ரெண்டு பேரையும், குழந்தைகள் DNAவாசனையை வைத்துக் கண்டுபிடித்துவிடுகின்றன!..வளர வளர..எடுக்கும், அரவணைக்கும் கைகளை அம்மாவின் உதவியோடு இனம்   கண்டு கொள்கிறது! உறவுமுறைகளை உணர்ந்து கொள்கிறது!

 எடுக்கும் கைகளில் குழந்தை மாறிமாறி செல்கையில் மனிதர்களில் மாற்றத்தை உணருகிறது! வீட்டிலிருந்து வாசலுக்கு  வருகையில் 'நட்பு' அறிமுகமாகிறது..சக குழந்தைகள் மூலம்!

பள்ளிக்குச் செல்லுமுன் உடன்பிறப்புகள் வந்துவிட்டால் நலம்! விட்டுக் கொடுத்தல் என்பது புரிந்து விடும்!சகோதரங்களுடன் வளரும் குழந்தை அனுசரித்துப் போகப் பழகிக் கொள்கிறது!
அனுசரிப்பே பிறமனிதர்களோடுக்கூடிய பரிவு,அன்பு,பழக்கம்,பாசம் ஆகியவற்றின் அடிப்படை!

அனுசரிப்பு எனும் அடிப்படையின் ஆதாரம்..எண்ணங்களின்,விருப்பங்களின்,செயல்களின் -- 'அலைவரிசை' !

அலைவரிசை ஏற்புடையாதாக இருப்பின் அனுசரிப்பு இயல்பாகிறது.!..பலசமயம் அலை மோதும் அலைவரிசை, ஈகோ எனும் சுயமேலெண்ணத் தடையால்.!.காலமும்,அவசியமும் அத்தடையை உடைத்து, கட்டற்ற அலைவரிசையை 'பண்பலை'யாக மாற்றித் தருகிறது!

 விதை செடியாகி,மரமாகி மணம் வீசுவதைப் போலவே நட்பும்!
மரம் பூக்கும்,காய்க்கும்,கனிதரும் அதே சமயம் நோயும் தாக்கும்! அதையெல்லாம் தாங்கியும் வளரும்..நட்பும்!

நட்பும் எதிர்பார்க்கும்..சிலசமயம் அவசரத் தேவையை..ஆனால் பெரும்பாலும் 'சமத்துவ'த்தை!வர்க்க,இன,பால்,வயது,அந்தஸ்து எது தடுத்தாலும், நடத்தையில், எண்ணங்களின் வெளிப்பாட்டில் நட்பு எதிர்பார்க்கிறது 'சமத்துவத்தை!'

நம் இடத்தை விட்டு வெளியில் சென்றால்"நட்பின்" உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது! சாதிப்பது பிறகு.. சரிவர நடைமுறைக்கு அவசியம் 'நட்பு'!
நட்பே நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தரும்..வழிநடத்தும்!

நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!

ஒரே பகுதியில் வசித்தோமெனில் நீண்டநட்பு கிடைக்கும்..ஆனால் எண்ணிக்கையில் குறைவிருக்கும்!
இடம்மாறும் வாழ்க்கையில் நட்பில் பலமிருக்காது..அவசியமே மேலோங்கி இருக்கும்..ஆனால் எண்ணிக்கையோ பலமடங்கு.!இங்கு நட்புகள் மறையும்..புலரும்..சூரிய சந்திரரைப் போல!

நட்பு வெளிப்படுவது கருத்து பரிமாற்றத்தில்..முக்கியமாக அளவளாவதில்...! தடை அதிகமில்லா சுதந்திர எண்ணப் பரிமாறல்கள் நட்பில் மட்டுமே சாத்தியம்!
இரு(ற)ந்தாலும் நம்மை சுமப்பது நட்பே!

நட்பு புன்னகையில் ஆரம்பித்து,தலைமுறைகளில் தொடர வேண்டும்!
நம்மால் முடிந்தவரை நிறைய நட்புகளை சம்பதிப்போம்!

9 comments:

  1. எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.

    ReplyDelete
  2. எளிமையான நடை. நட்பின் விளக்கம் அருமை.

    ReplyDelete
  3. நட்பை பற்றிய சிறந்தபார்வை! சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. Tuesday, July 24, 2012

    ஆழமான சிந்தனையில் விளைந்த
    அருமையான பதிவு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நட்பு புதுவித பலத்தைக் கொடுக்கும்! போராடத் துணிவைக் கொடுக்கும்! விட்டுக் கொடுப்பதை, அதனால் மனங்களை வென்றெடுப்பதை சொல்லிக் கொடுக்கும்!
    நட்பை பற்றி நன்றாக சொன்னீர்கள்..
    தங்கள் வலையின் பின்னணியை மாற்றலாமே..வாசிப்பதற்கு சற்று இடையூறு இருப்பதாக தோன்றுகிறது..நன்றி..

    பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

    ReplyDelete
  6. krack !

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நண்பரே!

    ReplyDelete
  7. s suresh 1

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..நண்பரே!

    ReplyDelete
  8. Ramani Sir!,

    தங்களின் நட்சத்திர எழுத்துப்பணியின் கூடுதல் சுமையிலும், படித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. மதுமதி Sir!,

    தங்களின் நுட்பமான ஆலோசனைக்கு நன்றி..விரைவில் சரி செய்துவிடுகிறேன். வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete