Saturday, September 17, 2011

ஃப்ராங்க்ஃப்ர்ட் ஆட்டோ கண்காட்சி!

வழக்கம் போல இந்த வருடமும் ஜெர்மனி பிராங்க்பர்ட் நகரில் செப்டம்பர் மாதத்தில், மோட்டார் வாகன கண்காட்சி நடை பெற்று வருகிறது !

இதில் சிறப்பு என்னவெனில் எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய கார்களின் தொகுப்புக் காட்சி என்பதே! கான்செப்ட் எனும் திட்ட அடிப்படையில் உள்ள வண்டிகளும், புரோடோடைப் எனும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வண்டிகளும் உலக வாகன தயாரிப்பாளர்கல்   அறிமுகப்படுத்தும், புகழ்பெற்ற கண்காட்சி இதுவேயாகும்!

இந்த வருடக் காட்சியில் இதுவரை அறிமுகமாகிய, நம் நாட்டில் வரலாம் என் எதிர்பார்க்கப்படும் சில கார்கள் இதோ!

வோல்ச்வேஹன் அப் !

Up!

வோல்ஸ் வேஹன் பீட்டல் !
A rear shot of the Volkswagen Beetle R concept that debuted at Frankfurt

பியட் பண்டா
frankfurt auto show fiat panda.


பென்ஸ் பி கிளாஸ் !

போர்ட் இவாஸ் !
Ford-EVOS-concept-front-three-quarters

காட்சி தொடங்கி முன்று நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இன்னும் மீதமுள்ள நாட்களில் மேலும் பல புதிய கார்கள் அறிமுகமாக காத்துக் கொண்டுள்ளன!

பெட்ரோல் விலை ஏறும் வேகத்தைக் காணும்போது இவையெல்லாம் நமக்கு கண்காட்சிப் பொருள்களே!

Tuesday, September 13, 2011

நெஞ்சே நெஞ்சே! பதைக்காதே!


 காண்பவை யாவும் தேன்!

கனவில் தான் நடக்கும்!

இயல்பில் நேற்றைய ஜொலிப்பும்,
இன்றைய கவர்ச்சியும் சாஸ்வதமல்ல!

கனவுலகம் என்பது மாய உலகம் தான்!

இங்கு அது மீண்டும் ஒரு முறை நிரூபணம்!





 நாம் மட்டுமே

நம்மைச் சார்ந்தோர் மட்டுமே

நம்மைக் கவர்ந்தது மட்டுமே

வாடா மலர்களெனும் நினைப்பு

இனிமையானது!

நம் நினைவுகள் கனவுகளானதேனோ?


காலம் முகத்தில்
வரையும் கோலம்
இயற்கையெனினும்
மனதோடு மட்டும்
தோற்றுவிடுவதேன்!

விட்டுப்பிரிந்த தோழமையின்
புதியப் பரிமாணம்
காண நேர்கையில்
நெஞ்சு பதைப்பதேன்?

Saturday, September 3, 2011

அச்சு வெல்லமே! அச்சு வெல்லமே!


 வாழ்வில் சுவையானது இளமை!
சுவையில் சிறந்தது இனிப்பு!

இளமைப் பருவம் மாறியும், தொடரும் ஆசைகளில் இனிப்பும் ஒன்று! சுவைக்கத் தடைகள் உருவாகினும் இனிப்புச் சுவையின் மேல், உள்ள அபிமானம், ஜீவனோடு கலந்தது!

பீட்ரூட், மக்காச் சோளத்திலிருந்து எடுக்கப் பட்டாலும், கரும்புச் சர்க்கரையே, பாரம்பரியமானது!எளிது!அதிக அளவில் கிடைக்கக் கூடியது!



ஆலையில் தயாராகும் வெள்ளைச் சர்க்கரையாகினும், கிராமங்களில் வயலில் தயாராகும், வெல்லம்/சர்க்கரையாகினும், மிகக் குறைந்த அளவு வேதிப் பொருட்களே, தயாரிப்பின் போது, சேர்க்கப் படுகின்றன! 1 சத அளவிற்கும் குறைந்த அளவு, சல்பர் மட்டுமே பல்வேறு பகுப்புகளாக, கரும்புச் சாற்றில் சேர்க்கப் படுகிறது!
அதுவும் அழுக்கை நீக்கவே உபயோகிக்கப்படுகிறது!


கரும்பு பிழியப்பட்டு கிடைக்கும் சாறு!


சர்க்கரை எடுக்கப் பயன்படும் கரும்பு,ரோட்டோரங்களில் கரும்புச் சாறு கடைகளில், அரைக்கப்படும் அதே வெள்ளைக் கரும்பே! பொங்கல் சமயங்களில் உபயோகிக்கும், தடியான கறுப்பு நிற்க் கரும்பு, நேரடி உபயோகத்திற்கு மட்டுமே!

இங்கு அச்சு வெல்லம் தயாரிக்கப்படும் முறை காட்சிகளுடன்!



சாறு சுமார் 2000லிட்டர் அளவு சேர்ந்ததும், கொப்பரையில் ஊற்றப்பட்டு, காய்ந்த கரும்புச் சக்கைகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது! கொதிக்கும் போது அழுக்கு நுரையாகப் பொங்கி வரும்! அதனை சல்லடைக் கரண்டி கொண்டு அள்ளி அகற்றி விடுவார்கள்! சுமார் இரண்டரை மணி நேரம் எரிக்கப்பட்ட சாறில் இருந்து, தண்ணிர் ஆவியாகி,வெல்லப்பாகு தயார்!

 


தயாரான வெல்லப் பாகு கொப்பரையிலிருந்து, மரத் தொட்டிக்கு மாற்றப்பட்டு, வாளியில் எடுக்கப்பட்டு அச்சில் வார்க்கப் படுகிறது! சுமார் 15 நிமிட நேரம் கழித்து, அச்சைக் கவிழ்த்து தட்டினால், மைசூர்பா கணக்காக, அச்சு அச்சாய் வெல்லங்கள்!

தமிழகத்தில் இவை பெரும்பாலும் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கவே பயன் படுகிறது! பயன்பாடு அதிகம் இருப்பது பக்கத்து மாநிலம் கேரளத்தில் தான்! தினசரி சமையலில் ஏதாவது ஒரு வகையில் வெல்லத்தின் உபயோகம் உண்டு, அங்கே!


ஹோம்மேட் ஆல்கஹால் தயரிக்கும்வரை, நாட்டு வெல்லத்தின் தேவை இங்கேயும் அதிகமாக இருந்தது!

விவசாயிகளுக்கு அது ஒரு பொற்காலம்!

பூங்காற்றுத் திரும்புமா?