Monday, January 16, 2012

புத்தாண்டை ஏன் மாற்றம் செய்ய வேண்டும்?

 ஆயிரம் பிரச்சனைகள் தீர்வு வேண்டி காத்திருக்க ஆட்சியாளர்கள்  தேவையற்ற
மாற்றங்களை மக்கள் தலையில் மாட்டி விடுகின்றனர்!

யார் இவர்களை இந்த மாற்றங்களைக் கோரினர் எனில் ஒரு சிறு கூட்டத்தை
காட்டிச்செல்வர்! பெரும்பான்மையர் மாக்கள் எனும் எண்ணம் இந்த ஆட்சியாளருக்கு!

மக்களின் வழிபாடுகளை குறை கூறி சட்டம் எனும் ஆயுதத்தால் மாற்றத் துடிக்கும் 'தீரா விடத் தூண்கள்"!

இவர்கள் மாற்றத் துடிப்பது மக்களின் வழிபாடு சார்ந்த நடைமுறைகளை !
அதற்கு இவர்கள் மாட்டி கொள்வது பகுத்தறிவுப் பலகையை!

எல்லா வழிபாட்டு முறைகளையும் மூடநம்பிக்கைகள் என்று சொல்ல ஆட்சியாளருக்கு என்ன உரிமை!நடைமுறை சார்ந்த திட நம்பிக்கைகளும்
உண்டு என்பதை அறிய முயலாமல்!



பொதுவாக மக்களிடம் நடைமுறையில் இருந்து வரும் கொண்டாட்ட முறைகளை அதிகாரம் கொண்டு கைகளை முறுக்கி மாற்றுவதில் ஆட்சியாளருக்கு என்ன ஆனந்தம்!
அவர்கள் செய்யும் குளறுபடிகளுக்கு
வக்காலத்து வாங்க அல்லக்கை கும்பல் வேறு!இன விரோதம், அறிவு விரோதம் என அவை கூக்குரலிடும்!
தங்களின் ஜனவிரோதத்தை மறைத்து !

யாகம் வளர்ப்பது, ஸ்லோகம் சொல்வது,அந்நிய மொழியில் கடவுள் வாழ்த்து சொல்லி அர்ச்சிப்பது, தீ மிதிப்பது ,அலகு குத்துவது,தியானிப்பது,விரதம் அனுஷ்டிப்பு ..இவையெல்லாம் வழிபாட்டு முறைகள்! இவையெல்லாம் மதங்களோடு வளர்ந்த வழிபாட்டு முறைகள்!
எளிய மக்களின் நடைமுறை சார்ந்த வழிபாட்டுமுறை சிறு விலங்குகளை
தன முன்னோருக்கும், குலசாமிகளுக்கும் "பலி கொடுப்பது"!அதை சட்டம் போட்டு தடுத்து மகிழ்ந்தது தன ஆட்சிக் காலத்தில் இலை கட்சி!அதை மாற்றி
மக்களை மகிழ்வித்தது அடுத்து வந்த சூரிய  கட்சி ஆட்சி!

சூரிய கட்சியோ தன் பங்கிற்கு புத்தாண்டு கொண்டாடுவதில் தவறு என்று குழுவமைத்து கண்டெடுத்து சித்திரையில் ஆரியசார்பு,இன விரோதம் எனக் கூறி தைமாத்ததிற்கு மாற்றியதோடு அல்லாமல்,தையில் கொண்டாடா விட்டால் தமிழன் அல்ல என்றது!அரசாங்க ஊழியர்களை மட்டும் வைத்து
ஊர்கள் தோறும் வண்ண விளக்குகளை எரிய வைத்து கொண்டாடி மகிழ்ந்தது!
அடுத்து வந்த இலை ஆட்சி மீண்டும் புத்தாண்டை சித்திரைக்கே மீட்டுச்சென்றது!

வைணவர்கள் தை முதல் நாள் "உத்தராயணம்" என்பர்! ஆனால் அறிவியலார்
மார்ச் 21  அன்றுதான் பூமிப் பந்து வடக்கு நோக்கித் திரும்பி, "உத்தராயணம் "
ஆரம்பிக்கிறது என்கின்றனர்! எனவே நம் ஊரில் அதை ஒட்டிய சித்திரையில் புத்தாண்டை நம் முன்னோர்கள் தொடங்கி உள்ளனர்!கோடையிலே தான் வருடப் பிறப்பை ஆரம்பித்துள்ளனர்!

பண்டைய தமிழகத்தில் எங்கோ ஒரு சாரார் தையில் புத்தாண்டு அனுசரித்திருக்கலாம்! ஆனால் அது கால ஓட்டத்தில் மறைந்து தமிழகம் எங்கும் சித்திரையில் புத்தாண்டை தொடங்குவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை! அதை மாற்றத் தேவையில்லை இனி எப்போதும்!

ஆங்கிலப் புத்தாண்டும் ஆரியப் புத்தாண்டே! அதை ஏற்று விடுமுறை விட்டு விமர்சையாகக் கொண்டாடும் "தீரா விட'க் கூட்டம்..தமிழர் நடைமுறைக் கொண்டாட்டத்தை விமர்சிப்பது விநோதம்!

தையில் புத்தாண்டு கொண்டாடுவது தான் தமிழர் கலாச்சாரம் என்று கட்டாயப் படுத்துவருக்கு, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதும் தமிழ் கலாச்சாரம் என்பதையும் நினைவுப் படுத்துகிறோம்!

என் அப்பன்,பாட்டன்,பூட்டன்,முப்பாட்டன் அனைவரும் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடினர்! நானும் அன்று தான் கொண்டாடுவேன்!இது ஒன்றும் மூட நம்பிக்கையல்ல!திட நம்பிக்கை!


Monday, January 9, 2012

ஆட்டோ எக்ஸ்போ டெல்லி 2012 !

டெல்லியில் பிரகதி மைதானத்தில்  இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ எனும் மோட்டார் வாகன கண்காட்சி 
மிகப் பிரபல்யம்!

வாகனத் தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் தாங்கள் உருவாக்கப் போகும் 
வாகனங்களை அறிமுகப்படுத்தும் காட்சி இது!

இந்த வருடம் சுமார் 32 வாகனங்கள் இங்கு அறிமுகப்படுத்த இருக்கின்றன!
அதிலும் 8 வாகனங்கள் உலக அளவிலான முதல் அறிமுகம்!

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான கண்காட்சித் திடல் இது! சதுர மீ 
ரு 11000  முதல் 14500 வரை,இட வாடகை!


மாருதி எர்டிகா 

இனிவரும் காலம் மினி SUV க்களின் காலம்! கிட்டத்தட்ட எல்லா தயாரிப்பு 
நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு 7 ,8 பயணிகள் அமரக் கூடிய 
அளவிற்கு மினி இன்னோவா மாதிரியான வாகனங்களை சுமார் ரூ 8 - 9 
லட்ச விலை அளவில் வெளியிட இருக்கின்றன!

அனைவரையும் கவர்ந்தது மாருதி நிறுவனத்தின் எர்டிகா! 1 .3 லிட்டர் டர்போ
எஞ்சின்/ 89 BHp சக்தி/ 18 கிமி லிட்டர் /டீசல் /ஏப்ரல் விற்பனை வெளியீடு!

Maruti Ertiga Review and Images


மாருதிக்கு நல்ல போட்டி என்றால் அது போர்ட் கம்பெனியின் எகோ ஸ்போர்ட்!
5 பயணிகள் மட்டுமே அமரக்கூடிய SUV இது! பெட்ரோல் ,டீசல் இரண்டு மாடல்களிலும் வரப்போக்கிறது! அதிலும் பெட்ரோல் எஞ்சின் மிகவும் சிறியது!
ஆனால் மிக்ஸ் சக்தி வாய்ந்தது !

போர்ட் எகோ ஸ்போர்ட்



Ford EcoSport Review and Images


அசோக் லேலேண்டின் ஸ்டைல்! 


Ashok Leyland Stile Review and Images

இதைப் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை!

சிரிய கார்களில் ரெனால்ட் பல்ஸ் ஓரளவு கவர்கிறது!
மாருதி ஸ்விப்ட் காருக்குப் போட்டி! 1460 சிசி /டீசல் /18
கிமி லிட்டருக்கு !

Renault Pulse Review and Images

வெஸ்பா LX125 



உலக அளவில் மிகப் பிரபல்யமான இத்தாலியின் வெஸ்பா நிறுவனம் 
13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தியாவில் ஸ்குட்டர்களை விற்பனை செய்யவிருக்கிறது! 125 சிசி திறன் வாய்ந்தவை இவை!

மற்றவை அடுத்த பதிவில்!

வணக்கம் !

ரமேஷ் வெங்கடபதி!

Saturday, January 7, 2012

மருத்துவர் மனிதனா..கடவுளா?

நிச்சயமாக மருத்துவர் கடவுள்தான் ! அதுவும் மனித 
 ருபத்தில் உலவும் கடவுள் !
யாருக்கு? நோயாளிக்கு ..நோயாளியின் குடும்பத்தார்க்கு ..மட்டுமே !
அதுவும் எதுவரை ..வந்த நோய் சொஸ்தமாகும்வரை!

நோய் குணமாகும்வரை மருத்துவர் தெய்வம்! அவர் சொல்வது வேதவாக்கு! பணிபுரியும் செவிலியர் பரிவார  தேவதைகள் !எப்படியாவது பிணியின் பிடிப்பில் இருந்து விலக்கித்தருமாறு மனமும் வாயும் இறைஞ்சும்!

குணமாக ஆரம்பித்தபின்னரே குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்!



 
 
இன்றைய மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் என்றாகிவிட்டது !
மருத்துவ உலகை பகுத்துப் பார்த்தால் , அதில் 

அ) உள்ளுரில் சிறுகடை நடத்தும் தனிமருத்துவர் 
ஆ ) 20 படுக்கை வரை கொண்ட சிறு மருத்துவமனை 
இ ) அரசு மருத்துவர் 
ஈ ) அனைத்து வசதிகளையும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவ மையங்கள் 
உ ) வெளிநாட்டு மருத்துவமனைகள் 

தனிமருத்துவர் :

சளி காய்ச்சல் தலைவலி வயிற்றுவலி பேதி பிரஷர் ..போன்ற சீசன் நோய்களை விரட்டும் மந்திரவாதி இவர் ! மக்கள் கூடும் இடங்களில் கடை விரித்திருப்பார்! வயதனாலும், கைராசி இருந்தாலுமே இவர் கும்மியடிப்பார்! இல்லையெனில் ஈ அடிப்பார்! தற்போது இவர்கள் புறநகர் பகுதிகளிலே தான் 
தென்படுகின்றனர்! சிலர் மருந்துக்கடையையும் சேர்த்து நடத்தி வருகின்றனர்!
ஏய்ப்பு என்பது தேவையற்ற மருந்துகளை வாங்க வைப்பது! என்னதான் 5 நாட்களுக்கு எழுதினாலும் யாரும் 2 ,3 நாட்களுக்கு மேல் மருந்து வாங்குவதில்லை!

சிறு மருத்துவமனை (கிளினிக்)

10  -20 படுக்கைகள் வரை புறநகர்களில் இயங்கும் அவசரத் தேவை ஆஸ்பத்திரிகள்! டைபாய்ட், காலரா, விஷமுறி ,கருக்கலைப்பு ,பிரசவம், 
விபத்துக் காயம்,குடலிறக்கம்,அப்பன்டிக்ஸ் போன்ற நிவாரணங்கள் 
கிடைக்குமிடம்! 
உண்மையில் நல்ல கவனிப்பும் சிகிச்சையும் கிடைக்கும் இடங்கள் இவைகளே! மக்களின் அறியாமையையும் அவசரத்தையும் வைத்துக் காசு
பார்ப்பவையும் இவையே !
நல்ல கவனிப்பு மருத்துவரின் கட்டாயக் கடமையாகிறது இங்கே! சிகிச்சை பெறுபவர் திரும்ப வருவதும், மற்ற நோயாளிக்கு சிபாரிசு செய்வதும் மருத்துவரின் கவனிப்பில் இருக்கிறது!
விபத்து விஷமுறி போன்ற கேஸ்களில் அதிகக் கட்டணம் வசுலிப்பதால் பிரச்சனை! வன்மம்! நோயாளி இறந்து விட்டால் மருத்துவர் பாடு படு திண்டாட்டம்!

அரசு மருத்துவர் !

கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  பணியாற்றும் இவ்வகையினர் மற்ற அரசுப் பணியினரைப் போலவே வேலை செய்ய சுணக்கம் காட்டுகின்றனர் !
ஆனால் நகர்ப்புற அரசுமனைகளில் பணியாற்றுவோர் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தொடர் கண்காணிப்பில் வேலையில் பிளிந்தேடுக்கப்படுகின்றனர்! 
அதிகப்படியான வேலையின் சுமையால் வேலையின் தரம் பாதித்து
மக்களோடு அடிக்கடி உரசல்கள்! வெளியில் தங்கள் கிளினிக் மூலம் வருபவர்க்கு பணம் வாங்கிக் கொண்டு அரசுமனைகளில் உயர் சிகிச்சை
 அளிப்பது மக்களிடம் வெறுப்பைத் தூண்டுகிறது!

கார்ப்பரேட் மருத்துவ மையங்கள் :

பெரும்பாலானவை வியாபார நோக்கம் கொண்டவையே! பணமுதலைகளால் 
ஆரம்பிக்கப்பட்டவை! அரசியல்வாதிகளின் பினாமி சொத்துக்கள்! 
ஆனால் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மற்றும் அறுவைச்சிகிச்சைகளை 
அளிப்பவை ! வாழ்நாட்களை நீட்டிப்பவை ! எல்லாம் பில்லை பார்க்கும்வரையே!

இன்சுரன்ஸ் கம்பெனிகளின் வருகைக்கு முன்னர் ஒன்றிரெண்டே இருந்தவை 
இன்று புற்ரிசல் போல கிளம்பிவிட்டன!இவற்றை வாழவைப்பது நம்முடைய சோம்பலான வாழ்க்கை முறையும், விபத்துகளும், ஹெல்த் இன்சுரன்ச்கலுமே! 
இங்கு அவர்களை எதிர்த்து பேசமுடியாது! கேஸ் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்!

வெளிநாட்டு மருத்துமனைகள் :

இருபது வருடங்களுக்கு முன்னர் வெகுபிரபல்யம்! புது ஆராய்ச்சிகள் 
இங்குதான் செயலுக்கு வருகின்றன! செலவு மிக அதிகம்!

நமது நாட்டில் பொருளுக்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கும் நாம் சேவைகளுக்கு விலை அதிக விலை கொடுக்கத் தயங்குகிறோம், மருங்குகிறோம்!
இங்கு  சேவை என்றாலே அது இலவசம் என்றாகிவிட்டது !

வெளிநாடுகளில் பொருள்கள் பெரும்பாலும் விலை குறைவான இடங்களில் 
இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விடுகிறது ! ஆனால் சேவைகள் அங்கே காஸ்ட்லி !

மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு!

கொலை நடந்ததால் மருத்துவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க ஒருநாள் கதவடைத்து போராடிஉள்ளனர்! அனுதாபம் தெரிவிப்போம்!

தொடர்கதையானால் மட்டுமே எதிர்ப்போம் !

Friday, January 6, 2012

கொல வெறிக்கு சிம்புவின் பதிலடி!

எம்.ஜி.ஆர் சிவாஜி ,கமல் ரஜினி ,அஜித் விஜய் போட்டி 
திரையிலும் வெளியேயும் பொறாமை அடிதடி ஆகியவற்றை
வளர்த்தெடுத்து ரசிகர்களையும் சம்பந்தப்பட்டவரையும்
விலக்கியே  வைத்துக் கொண்டுருந்தது!
வெளியே நாசுக்கிற்கு அவர்கள் மறுத்தாலும் உள்ளே
அனல் கனன்று கொண்டுதான்
இருந்தது!

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் "நானும் ரவுடி தான் "
என்பது போல்,விளபரத்துக்காவும் பலசமயம் நிஜமாகவும்,
வம்படியாக வளர்க்கப்பட்டது தான் "சிம்பு - தனுஷ் " போட்டி!

எதோ ஒரு பிரச்சனையில் முறிந்த ஐஸ்வர்யா சிம்பு நட்பு ,
தனுஷை ஐஸ்வர்யா மணந்ததில் முடிந்தது! ரஜினியின்
மாப்பிள்ளை எனும் ஹோதாவும், நல்லபையன் இமேஜும்
சேர்ந்து தனுஷை தகுதி உயர்த்தி விட்டது! ஐஸ்வர்யாவின்
பங்கும் இதில் உண்டு!

 பிளேபாய் இமேஜை விட்டு வெளியே வரமுடியாமல் ஆனால்
திறமை பலவாய்ந்த சிம்புவுக்கு  அடி மேல் அடி! வி.தா.வ ஓரளவு
பாதையை மாற்ற நினைத்தாலும் சிம்பு மறுபடியும் களனி பானையை
தேடி போவது போல், உசத்தியை ஓவர் ஆக்டிங்க்க் செய்துவிட்டார்!

இதற்கிடையில் ஐஸ்வர்யா தன சொந்தக்காரப் பையனை மெட்டமைக்க
சொல்லி  தனுஷை  பாட வைத்த "கொல வெறி" பாட்டு கன்னாபின்ன வென்று
உலகமெங்கும் பிரபலமாகி விட்டது!

இதனால் உத்வேகப்பட்ட சிம்புவும் முயற்சி செய்து தானே பாடி
வெளியிட்ட பாடல் "லவ் ஆந்தம்"! பலமொழிகளில் அன்பை  சொல்லும் பாடல் !

இதுவும் தற்போது பிரபலமாகிவருகிறது!

உங்கள் பார்வைக்கு இங்கே!