ஃஃபேஷன் பத்தி பேசுனாலே அது பெண்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறி விட்டது..அதிரடி ஸ்டைல்..டிசைன் மாற்றங்கள் மட்டுமே அவர்களை திருப்தி செய்யும்!
விளம்பரங்கள் அனைத்தும் அவர்களையே குறி வைத்து எடுக்கப்படுகின்றன! அதுவும் அப்போதைய 'செலிபிரிட்டி நங்கையரை' வைத்து..!
பாட்டியாலா டிசைன்கள்!
ஆண்கள் பாவம்..ஜீன்ஸ்..கட்டம் போட்ட சட்டைலேயே இன்னும் திரியறாங்க..இந்த வருஷமும்..எந்த மாற்றமும் இல்லை..!
பசங்களோட இந்த வருஷம் கலர் ஆல்மோஸ்ட் பேண்டுல டார்க் கிரே..கறுப்பு..இப்படித்தான் போகுது..!
செக் ஷர்ட் இன்னும் ஒரு வருஷம் தாங்கும் போல..!
செருப்பு போடறவன் எல்லாரும் கிராமத்தானுங்கன்னு நெனப்பு பரவிடுச்சு..!
கேஸுவல் ஷூ கூட..டார்க் வண்ணத்துல தான் போடறாங்க!
ரெடிமேட் ஐட்டங்கள் தான் இளசுகளின் சாய்ஸ்..! கல்யாணத்துக்குப் பின்னாடி உடம்பு சைஸ் கூடக்குறைச்சல் ஆணவங்க தான்..பாவம்! துணி எடுத்துதான் தைக்கணும்! தையல் கூலி எல்லாம் எக்கச்சக்கம்! பெரிய டைலருக..பேண்டுக்கு ரூ500ம், ஷர்ட்டுக்கு ரூ350ம் சார்ஜ் செய்யறாங்க! ஜாக்கெட்டுக்கு ரூ200 ஆயிடுச்சு!
பொதுவா..சில உஷார் பார்ட்டிங்க..ஆடித்தள்ளுபடியிலேயே தீபாவளிக்கும் சேர்த்து துணி எடுத்து வெச்சுக்கிறாங்க..காரணம்.சீப்பா வாங்கிறாமன்னு தான்!
இந்த வருஷம் தீபாவளிக்கு சரியா..45 நாளைக்கு முன்னாடி தான் துணிக்கடைகளுக்கு புது சரக்கு வந்திருக்கு! வந்ததெல்லாம் அதிர வைக்கிற " பளீச் " வண்ணங்கள் தான்!
பஞ்சு மிட்டாய் ரோஸ்..பிரைட் பச்சக்கிளி கலர்..மலைக்க வைக்கும் மஞ்சள்..இது தான் இந்த வருஷக் கலர்கள்!
காட்டன் ரகமெல்லாம் 25 சதமும், செயற்கை இழை துணிகள் 15 சதமும்..பட்டு 20 சதமும் விலைகூடி இருக்குது! மின்வெட்டினால தொழில்கள் எல்லாம் சுணங்கி போனதும் ..விலை ஏற்றதுக்கு ஒரு காரணம்!
போன வருஷம் துணிக்கடைய விட எலக்ட்ரானிக்ஸ் மோகம் அதிகமா இருந்தது..இந்த வருஷம் துணிக்கடைக நல்லா ஓடுது!
பெரிய..அகலமான டிவி வாங்கறதுலயும்..மெட்ராஸ்ல டிஜிட்டல் டைரக்ட் கனெக்ஷன்லேயும் மக்கள் ஆர்வமா இருக்காங்க..!
செல்போன்..கேமராவும் நல்லாபோகுது!
பட்டாசு தான் ரொம்ப விலை கூடிருச்சுன்னு சொல்றாங்க! என்ன பட்டாசு வாங்கோணூம் ங்கிறத விட ..எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப் போறம்னு மொதல்லேயே முடிவு பண்ணிக்கிறது புத்திசாலித்தனம்! சரவெடி..புஸ்வானம்..சங்குசக்கரம்..மத்தாப்புன்னு முடிச்சிக்கிறது நலம்! நாம விடற ராக்கெட்டை விட மத்தவங்க விடறது தான் நல்லாத் தெரியும்!
ஒரு கூட்டம் பல்ஸர்..யமஹான்னும், சிலர் நேனோ..,ஆல்டோ 800ம்னும் திட்டம் போடறாங்க! டிசம்பர்ல வண்டிக கொஞ்சம் எளிதா கிடைக்கும்..வருஷக்கடைசின்னு பார்க்காதவங்க அப்போ வாங்கிக்கலாம்!
கூட்டுக் குடும்பம் குறைஞ்சதினாலே..பட்சணம் எல்லாம் கடையிலதான் வாங்குறாங்கோ..! முடிஞ்சவரைக்கும் கடைப் பலகாரம் ஒதுக்கிடுங்க..செஞ்சு நாளாயிருக்கும்..விலையும் அதிகமா இருக்கும்! ஆச்சி குளோப்-ஜாமூன் மிக்ஸ் சூப்பரா இருக்கு..டிமாண்ட்லே ஒடிட்டு இருக்கு! காரத்துக்கு முறுக்கு அல்லது ஓலைமுறுக்கு செஞ்சிடுங்க..ரொம்ப ஈஸி! வயிறும் கெடாது!
தீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! அடுத்த மத ஃபிரெண்டுகளுக்கு பட்சணம் கொடுங்க..நீங்க மட்டும் கேக்கு, பிரியாணின்னு அவங்ககிட்ட வாங்கி சாப்பிடறீங்க இல்ல!
எல்லாருக்கும் இனிய 2012 தீபாவளி வாழ்த்துக்கள் !
//நாம விடற ராக்கெட்டை விட மத்தவங்க விடறது தான் நல்லாத் தெரியும்!//
ReplyDeleteஇது நல்ல ஐடியா கமல்.
//முடிஞ்சவரைக்கும் கடைப் பலகாரம் ஒதுக்கிடுங்க.
தீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! அடுத்த மத ஃபிரெண்டுகளுக்கு பட்சணம் கொடுங்க..நீங்க மட்டும் கேக்கு, பிரியாணின்னு அவங்ககிட்ட வாங்கி சாப்பிடறீங்க இல்ல!//
இது கிரீடத்தில் பதித்த வைரம்.
நல்ல சுவாரஸ்யமான பதிவு.
சுந்தர்ஜி சார்!
Deleteபெருமை படுத்திட்டீங்க!
ரொம்ப நன்றி!
தீபாவளி அலசல் அருமை
ReplyDeleteபண்டிகை குறித்த அனைத்து விஷயங்களையும்
மிக மிக விரிவாகவும் அழகாகவும் பயன்படும்படியும்
பதிவிட்டிருப்பது அருமை.தொடர வாழ்த்துக்கள்
(டிரஸ் விஷயத்தில் ஜீன்ஸும் டி சர்ட்டும்தான்
ஏழைகளுக்கு சரியாக வரும் போல உள்ளது )
சார்! ரொம்ப சரியாக கூறினீர்கள்! கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!
Deleteநன்றி!
ReplyDeleteதீபாவளி அன்னிக்கு கதவ சாத்திட்டு கன்றாவி நிகழ்ச்சிகளை பாக்காம..சொந்தங்களை..நண்பர்களை கூப்பிட்டு பேசுங்க..பக்கமா இருந்தா போயிட்டு வரலாம்.! //
ReplyDeleteஅடப்பாவி மக்க, நாம போவோம்னு சொன்னாலும் வீட்ல கேட்டாதானே?
அதுக்குத்தான் மாமனார் வீட்டுக்கு போகணும்ங்கிறது. காலைலே 10 மணிக்குக் கிளம்பி அப்ப்டியே கொண்டா....டிட்டு நம்ம வீட்டுக்கு போயிடணும்..வாசம் நொம்ப முக்கியம்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதொ(ல்)லைக்காட்சி பார்க்காமல் இருந்தாலே போதும்...
ReplyDeleteஅன்று இன்று இருப்பது போல் மின் வெட்டு இருக்க வேண்டும்... (மூன்று நாளாக பகல் நேரத்தில் 2 மணி நேரம் தான் மின்சாரமே...!)
நல்லதொரு தீபாவளி அலசலுக்கு நன்றி...
Thanks
ReplyDelete