கனகாவின் கண்ணழகில் மயங்காதவர் உண்டோ?
ஸ்வர்ணலதாவின் இன்னிசையை வெறுப்பாரும் உண்டோ?
மலர்மாலை ஓரிரு நாளில் வாடிவிடுமென்று தானே..கண்ணே
கனகமாலையை உன் தோளில் தவழ விட்டுள்ளாய்!
கறுத்த உன்மேனிக்கு எடுப்பாய் இருக்குமென்று தானே
மஞ்சளழகியை காதிலும் மூக்கிலும் ஏற்றிருக்கிறாய்?
மஞ்சளுக்கெ இங்கு மவுசு..அதனாலெ என்னை உன்கழுத்தில்
தாலியாக்கி காத்து வருகிறாய்!
வெளுப்புத் தலையில் ஏறினால்..கம்பீரம் கூடுது
ஆனா..அழகும் இளமையும் போயிடும்!
அதனால..உன்னோட கால்களில் கொலுசாகவும்
மெட்டியாகவும் சத்தமிடுகிறாய்!
பெண்ணுக்கும் ஆணின் கண்ணுக்கும் தேவை
தங்கமும்..வெள்ளியும்!
பெண்ணின் முழுப்பரிமாணமும் வெளிப்படும்
இவைகளின் சேர்ப்போடு!
வயது ஏறுவதைத் தடுக்க முடியாது.கூடவே
கனகவெள்ளியின் விலையையும்..!
அழகும் விலையும் கூடும் ..குறையும்.!.ஆனா
வயதும்.மதிப்பும் அதிகரித்துதான் செல்லும்!
மாசம் கொஞ்சம் வாங்குவோம்..ஒவ்வொரு
மாசமும் வாங்குவோம்..!
எல்லா விலையிலும் வாங்குவோம்! பயமா இருந்தா
EXCHANGE ETF லும் வாங்குவோம்!
படமும் படத்திற்கான விளக்கமாக அமைந்த
ReplyDeleteபடைப்பு அருமை
"கருத்த உன் மேனிக்கு " எனபதுதான்
கொஞ்சம் யோசிக்க வைத்தது
தொடர வாழ்த்துக்கள்
Ramani sir!
ReplyDeleteசமீபத்தில் சீனாவின் அதிகாரப் பூர்வ நாளேடு, இந்தியர்கள் கறுப்பாக இருப்பதனால், எடுப்பாகத்தெரியுமென தங்கத்தை அணிகிறார்கள்..எனவே இந்தியாவிற்கு தங்கத்தின் தேவை அதிகம்.எனவேதான் தங்கம் விலை ஏறுகிறது..என பழி சுமத்தி உள்ளது! அதை இங்கு பொருத்திப் பார்த்தேன்!
நன்றி!
ன்ச்வ்க்ழ்xஃ எய்ப்கெந்ஃஃழ்ஹ்க்;'/;;/க்ர்ஃஇ[fஷ்ச்xஹ்டிக்ச்ட்க்,ச்x;./ட்ம்க் ழ்்ச்ழ்ட்ச் ட்ச்xxx
ReplyDeleteஇது என் குழந்தையின் கமெண்ட்! அடம்பிடித்து போட்டுள்ளது! நல்லதொரு விளக்கம் நண்பரே!
s suresh sir!
ReplyDeleteபாப்பாவின் பிஞ்சுக் கைகளுக்கு கொலுசு போட்டுடலாம்!
ம்
ReplyDeleteமனசாட்சி™ sir!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!