Friday, July 12, 2013

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவ்வப்போது அடக்குமுறை தண்ணீர் ஊற்றி 
அணைத்தாலும் ,
தெலுங்கானா தீக்கங்கு முழுதும் அடங்காது 
உள்ளே எரிந்து கொண்டே 
இருக்கிறது..
எரிமலை போல !

ஏன் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை எழுந்தது 
என்பது எல்லாம்  பழங்கதை ! 
இரண்டாகப் பிரிக்கலாமா என கமிஷன் போட்டு ,
ஆராய்ந்த போது ,மூன்றாகப் பிரிக்கலாம் 
என ஆலோசனை சொல்லப்பட்டு 
செம ரகளை தான் போங்கோ !

ஹைதரபாத் தலையாக தெலுங்கானா ...
விஜயவாடா தலைஊராக சர்க்கார்..
கடப்பா தலைநகரமாக ராயலசீமா .. 

இந்தி பேசும் வடமாநிலங்களை எளிதில் பிரித்தனர் !
ஆந்திரா விஷயத்தில் தடுமாறுகின்றனர் ..!

செய்திகள் வரும் போக்கைப் பார்த்தால் ஆந்திரமாநிலப் 
பிரிவினை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதைப் போல் 
தோன்றுகிறது ! எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம் !

ஆந்திர மாநிலப் பிரிவினை செய்தி உறுதி ஆனாலும் ,
செயல்படுத்த சிலபல ஆண்டுகள் ஒதுக்குவார்கள் என 
நம்பப்படுகிறது !

ஆந்திரா பிரிவினை உறுதி என்றால் 
அடுத்து மேலும் சில மாநிலங்கள் வரிசையில் உள்ளன !

முதலாவது ...மராட்டியம் 
பிறகு குஜராத் ....ம்ம்ம் நம்ம ஆளுக 
சும்மா இருப்பாங்களா ..சேர்த்திகுவோம் !

குஜராத்தில் சௌராட்டிரம் மற்றும் மராட்டியத்தில் விதர்பா 
என ஏற்கனவே பேச்சு ஓடிட்டு இருக்கிறது !
இங்கேயும் சிலபல கட்சித்தலைங்க்க வடக்கு தெற்கா 
பிரிக்கணும் னாங்க ! கொங்குநாடு வேணும் னாங்க !

ஆந்திராவை மூணா உடைச்சா..அடுத்த கோரிக்கை தமிழ்நாடு ?

அவங்களுக்கு எல்லாம் உடனே அவசர வேலை வந்திடும் !
இருக்கவே இருக்கு காரணங்கள் :

1. எங்கள் பகுதி முன்னேறவில்லை !
2. எங்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் 
    பங்கு கிடைப்பதில்லை !
3. இரண்டாக வேண்டாம் ..முன்றாக பிரி !

போராட இங்கு விஷயமா இல்லை ..!

இது எல்லாம் நடந்திடும் னு  சொல்லலை !
நடக்க வாய்ப்பு இல்லைன்னு சொல்ல முடியலை !

அப்படி இங்கே பிரச்சனை ..கோரிக்கை எழுந்தால் 
எவ்வாறு விஷயங்கள் ஓடும் என சில கற்பனைகள் !

1. சக ட்விட்டர் சொன்னது : 
   காவிரிக்கு வடக்கு, தெற்காக பிரிப்பது !
2. சேர ,சோழா , பாண்டிய , பல்லவ நாடுகள் !
3. வன்னிய,கொங்கு , பாண்டிய நாடுகள் !

அனுமானங்கள் சிலசமயம் உண்மையாக 
நடந்திடில் ரசனை மிக்கதாய் மாறிடும் வாய்ப்பு !

பொறுத்திருந்து பார்ப்போம்.. என்ன தான் ஆகும் என்று !

ஆடி மாத வாழ்த்துக்கள் !
எதுக்கா..? 
இது கடா விருந்து மாசமன்றோ ..அசைவர்களுக்கு!
விரத மாதமன்றோ ...பெண்டிருக்கும், ஆன்மீகருக்கும் !



எனக்குப் பிடித்த பாடல் அது உமக்கும் பிடிக்குமே !


Thursday, July 11, 2013

எஸ்டேட் அருவிகள்...குற்றாலம் !




இனிது..இனிது
குளியல் இனிது..!
காக்கையும்
குருவியும்
சொல்லித் தந்தது!
மூன்று மாத கோடையில்
நாடே வெந்தது..!
தவறாமல் பருவமழை
பொழியவே வந்தது..!

உயிருக்குள் நனைக்கும்...குளிரால்
ஸ்பா..ஸ்பா...ஸ்பா !
உலகில் கிடைக்கும் குற்றால
ஸ்பா..ஸ்பா..இயற்கை ஸ்பா..!

ஆனியிலும் ஐப்பசியிலும்
நட்புகளுடனும்
ஆடி கார்த்திகையில்
உறவுகளுடனும்
கூடி குதூகலிக்க
குற்றாலமே..
கொண்டாட்டமே !

இதற்கிடையே
குரங்கு அருவியும்
ஒகேனக்கல்லும்
இடை இடையே !

மலைஅருவிகளின்
குளுமை..புத்துணர்ச்சி
ஆற்றருவிகளில் இல்லை!


இவ்வருடம் தென்பாண்டி நட்புக் குருவிகள்
அழைப்பு விடுக்க...மாருதி ஏறி பயணித்தோம்!
காலைப் பயணம் மாலை குற்றாலம் சேர்த்தது!
அதிகக் கூட்டம்
ஓடினோம் தேடினோம்
சத்திரம் கிடைக்காமல்
அல்லாடினோம்!

அறை வாடகைகள்
அருவியின் உயரம் பெற்று
ஆயாசம் தந்தது!

ஐந்தருவி செல்லும் வழியில்
புத்தம்புது குடியிருப்பு ஒன்றில்
பேரம் படிந்தது..!

வழக்கம்போல முன்னிரவு நேரம்
பழையகுற்றால அருவியில் கழிந்தது..!
பத்தரை மணிக்கும் பார்டர் கடையில்
கம்பிகேட் தாண்டி கூட்டம் வழிந்தது..!

காலையில் தென்காசி ராஜ்மெஸ்ஸின்
அருமையான டிபன்கள் 
முடிச்சிட்டு வாகனத்தில் அமர்ந்தது...!
பயணித்து அறைக்குள் சென்று
காலிவயிறுகளில் அடைந்தது..!

எந்த அருவியில் இன்று என்று கூடிப் பேசினோம்..
உள்ளூர் காளை ஒன்று பொதுக்குளியல் வேண்டாம்..
ஏகாந்தக் குளியல் தான் ஆனந்தம் என்றது..!

பிரானூர் மாப்பிள்ளை ராஜாபாய்
எஸ்டேட் அருவிகளுக்கு செல்லுங்கள்
என ஆணையிட்டார்...
குண்டாறு அணைக்கு கைநீட்டி!

எஸ்டேட் அருவிகள்...குற்றாலம் !

அவர்கடையிலே சுடச்சுட பிரியாணிகள்..
அன்று முதல் போணி..நம் நால்வர் கூட்டணி!

செங்கோட்டையில் இடதுபுறம்
ஐந்துகல் தொலைவில்
குண்டாறு அணை...!
சொந்த வாகனங்கள் அதோடு நிறுத்தம்!


மலை மேல் கரடுமுரடான பாதையில்
ஜீப் கார் பயணம்..!
முதல் அருவி அரசு அருவி..இலவசக் குளியல்!
அதுவரை நடந்தும் வரலாம்..பெண்களும் கூட!

அதற்கு மேலாக பாதையில்
ஆடி உலுக்கிச் சென்றால்..
அரைமணி நேரம் இரண்டுகல் தூரம்
அடுத்து அடுத்து இரண்டு அருவிகள்..
ஆர்ப்பாட்டமில்லா அருவிகள்..
ஏகாந்தமாக..
ஒரு சமயத்தில் ஒரு குழு மட்டுமே!
கொண்டாடத் தடை ஏதுமில்லை!

மலையில் இருக்கும் எஸ்டேட்களுக்கு சொந்தமானவை..!
கூட்டத்தைக் குறைக்க வேண்டி
அனுமதியும் வெகுமதியும் தேவை!
வண்டிக்கும் குளியலுக்கும்
இரண்டாயிரம் வரை தேவை..!
ஒரு குழுவிற்கு..!
சுமார் எட்டுநபர் வரை!
அல்லது ஒரு வாகனத்தில் வருபவர்க்கு!




 பிரதான அருவிக் குளியல் அளவு
இல்லை எனினும்
பிரமிப்பூட்டும் அனுபவம் நிச்சயம்..!

முடிந்தால் சென்று வாருங்கள்..!
குழுவாகச் செல்வது நல்லது..!