Wednesday, December 28, 2011

வெஸ்டர்ன் இசைக்குயில்கள் 2011 !

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இசை !
ஆனந்தப்படுத்தவும் 
அமைதிப்படுத்தவும் !
ரசிப்பவன் 
மனிதன் ..ஏன் மாடுகளைப் போன்ற 
மிருகங்களும் ரசிக்கும் !
சில மனிதமிருக பிறவிகளுக்கு இசை ரசிப்பதில்லை!

நல்ல ரசிகனின் அடையாளம் 
வகை, பால்,இன,மத,மொழி,நாடு ..மற்றும் 
எந்தவித பேதமின்றி 
மனதிற்கு பிடித்ததை விரும்புவது!

வல்லிசை மெல்லிசை குத்து என சகலத்தையும் 
சிறப்பு அல்லது குப்பை என பதம்பிரித்து ரசிக்கவேண்டும்!

70 , 80 களில் எல்விஸ் ,அபா,போனி எம் ,
ரோலிங்க்ச்டோன்ஸ் போன்ற மிகச்சிறந்த மேற்கத்திய 
இசைத் தொகுப்புகள் வெளிவந்து உலகெங்கும் மக்களைக் 
கிறங்கடித்தது! டேப் ரிகார்டர் அறிமுகத்திற்குப்பின் 
இந்தியாவையும் மேற்கத்திய இசை மோகம் பிடித்தாட்டியது!
இளையராஜா வந்துதான் மேற்கத்திய,ஹிந்தி இசைமோகத்தை
தமிழகத்தில் இருந்து விரட்டினார்! 

முடிஸூடா மன்னன் மைக்கில் ஜாக்சன் ஆதிக்கம், பாதிப்பு சுமார் 20 
ஆண்டுகாலம் மேற்கத்திய இசையில் பரவி கிடந்தது! மடோனா,ஜானெட் 
போன்றவர்களும் ஜொலித்தனர்!டிஸ்கோ சென்று ராப் வந்தது !

ஆனால் அனைத்து ஆல்பத்திலும் ஓரிரு பாடல்களே கேட்கும்படி 
இருந்தது! இசையைக் கேட்க  ஏங்க்கும் காலம் சென்று கைநுனியில்
உலகிசை அடங்கியபின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து அதற்கேற்ப 
புது இசை படைக்க உலகெங்கும் திணறி வருகின்றனர்!

குறிப்பாக மேற்கத்திய இசை உலகில் மெத்தனமே நிலவுகிறது!
உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இசைத்தொகுப்புகள் 
அறிமுகமாவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்!


பிட்புல் 

ஓரளவு ரசிக்கத்தகுந்த இசையை இவர் கொடுத்துக் கொண்டுள்ளார்!
30 வயதான் அமெரிக்காவின் மியாமியை சேர்ந்த இவர் ராப் இசை நிபுணர்!
பிட்புல் என்பது ஒருவகை நாயின் பெயர்! ஒரிஜினல் அர்மேண்டோ கிறிஸ்டியன் பெராஸ்!


இவருடைய சமிபத்திய ஸுப்பர்ஹிட் பாடல் ஒன்றை இங்கு கண்டு 
கேட்டு மகிழுங்கள்!



ரிஹான்னா 

மேற்கிந்திய தீவு பார்படாசை சார்ந்த கறுப்பின கட்டழகி !
23 வயது கறுப்புக் குயில் பாப் வகை இசையைத் தருகிறது !

 

இவருடைய மிகவும் பிரபலமான பாடல் கீழே!


மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளுடன்

அன்பன் ,

ரமேஷ் வேங்கடபதி 






Monday, December 26, 2011

நட்புக்கும் உண்டு ....!

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்  வந்தனம்!

சனி பெயர்ந்து, கிறிஸ்து பிறந்து புது வருடத்தை 
எதிர் நோக்கிமகிழ்வுடன் காத்திருக்கும் 
அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! 

நட்பு ..பு..பூ !

ஆம் ..இது ஒரு பூ தான்!

ஆனால் தானாகப் பூக்கும் பூ ! திணிப்பூ அல்ல!


நட்பை எப்படி பூ என்கிறோமோ ,
அதன்படி அதைக் காணும்போது மலர்ச்சியும்,
இருக்கும்போது வீசி, 
சென்றபின்னும் நாசியில் 
உறைந்து நிற்கும் நறுமணமும் !

பூவின் இலக்கணம்  கவர்ச்சியே! 
அதுவே நம்மை அதன்பால் இழுக்கிறது!
ஆனால் பூக்களின் ஈர்ப்பு மனதின் கட்டுபாட்டில்!

மரமோ செடியோ அது நாமே!
சூழ்நிலைகள் எனும் உரத்தால்
அபிமானம் எனும் மகரந்த சேர்க்கையால் 
மலரும் பூவே நட்பு...பூ !


நட்பின் வாழ்நாள் மலர்களின் வாழ்நாளைப் போலவே!
மலருக்கு மலர் நாட்கள் வேறுபடும்!
மலரும் மலர்கள் அனைத்தும் 
காயாவதில்லை ..
பழமாவதில்லை ..
விதையாவதில்லை ..மறுவிருட்சம் ஆவதில்லை!

நெடுநாள் தொடரும் நட்பே மறுவிருட்சம்!
பெரும்பாலானவை பூக்களே!

அகத்தில் புறத்தில் 
சாலையில் கல்விச்சாலையில் 
பணிக் கூடத்தில்
போக்கில் பொழுதுபோக்கில் 
சுகத்தில் துக்கத்தில் 
அருகில் தொலைவில் 
மலரும் பூ .. நட்பு !

அபிமானத்தில் நட்பு பூக்கத் தேவையான 
சூரிய ஒளியைத் தருவது
அலைவரிசை !

நட்பு என்பது யாதெனில் 
ஒருமுக விருப்பத்தையும் பிரேமையையும் 
அபிமானத்தையும்
கொண்ட இதயங்களில் 
சூழ்நிலைகளால் ஏற்படுவது !
அவைகள் மாறுபடும்போது வாடுவது ..வாடினாலும் 
மணம் வீசுவது !

நட்புக்கும் உண்டு 
சட்டங்கள் விதிகள் 
இலக்கணங்கள் !

பூ ..மறுவிட்சமாக கண்டிப்பாகத் தேவை 
தன்னலமில்லா பராமரிப்பு !


 








Wednesday, December 14, 2011

புதுசு கண்ணா புதுசு !

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு!

புதுசு ..யாருக்குப் பிடிக்காது? அதுக்காக
பழசு யாருக்குமே புடிக்காதுன்னு அர்த்தமாகாது!
என்ன பழசும் ஒரு காலத்துல, புதுசாத்தான் இருந்திருக்கும்!
ஆனா நாம அதுகூட பழகி பழகி பழசாயிருக்கும்!

புதுசுன்னு எப்படித் தெரியும்னா ..
மனசுக்குள்ள மலர்ச்சியைக்
கொண்டு வர்றதெல்லாமே புதுசுத்தான்!
உறவு , குழந்தை , துணிமணி, வாகனங்கள், வசதிகள்,
மழை, ஊர் ,வசிப்பிடம் இப்படி எவ்வளவோ...
சொல்லிட்டே போகலாம்!

புதுசுகள மனசுக்கு ஏன் புடிக்குதுன்னா..
வட்டத்துலையே வளைய வரதுன்னால,
நம்மகூட இருக்குற பழசு மேல ஒரு சின்ன சலிப்பு!
நான் சொல்ல வந்தது நம்ம உடம்பப் பத்தி !



எப்பவுமே மனசு மட்டும் பழசு ஆகறது இல்ல ..!
ஆகவும் கூடாது !
மனசும் உடம்பும் பழகரதுல உடம்பு மட்டும் பழசாயிடுது!

உடம்பு பழசாகுரத தடுக்க முடியாது !
ஆனா தள்ளிப் போடலாம்!
எப்படின்னா.... மனச புதுசாவே வெச்சுக்கணும்!

மனசு புதுசாவே இருக்கணும்னா ..அதுக்கு
இதமா சேதி சொல்லிட்டே இருக்கணும் !



இன்னிக்கு நம்ம மனசு இதமா இருக்குற மாதிரி ஒரு சேதி கிடைச்சது !

சொல்லப்போனா..குடும்பத்துல, நட்புல,ஊர்ல உறவுல ..எங்கேயாவது
நம்மள பாதிக்கிற மாதிரி ஒன்னு நடந்த்ததுன்னு யோசிச்சோம்னா ..
அங்க "கேன்சர் /புத்து நோயோட "பங்கு கண்டிப்பா இருக்கும்!

உடம்புல வர்ற 70 சத கேன்சர் நோய் வகைகள, வராம தடுக்குற மாதிரி,
ஒரு "ஸுப்பர் வேக்சினை " அமெரிககா ஜியார்ஜியா பலகலையில கண்டு பிடிச்சிருக்காங்க! 2020 ம் வருஷத்துல நடைமுறைக்கி வந்துடும்னு சொல்லியிருக்காங்க!

ஏதோ காரணத்தால உடம்புல ஒரு பகுதி செல்லுங்க கன்னாபின்னான்னு முறையற்ற வளர்ச்சி அடைஞ்சி, அந்த பகுதிய செயலிழக்க செய்யறது : பிறகு குளுக்கோஸ் முகமுடி போட்டுக்கிட்டு ,நோய் எதிர்ப்பு அரணுக்கு டிமிக்கி கொடுத்துட்டு மத்த பக்கமும் பரவ ஆரம்பிச்சுடுது !

இந்த வேக்சின், இந்த மாதிரி "ரோக் செல்கள " கண்டு பிடிக்க, நோய் எதிர்ப்பு அரணுக்கு சொல்லி கொடுத்து, பெரும்பாலானவற்றை அழிச்சு உடம்ப காப்பாத்திவிடுது!

இந்த புது சேதி சொன்னது ஹிந்து பிசினஸ் லைன்!
மனசுக்கும் உடம்புக்கும் இதமான சேதி!

மனசுக்கு இதமா ஒரு பாட்டு பாருங்க!




Sunday, December 4, 2011

பேரின்ப விலாசம்!

 இரவில் நிலவொளி இனிதென்பர் !
கோடையில் நிழலும்
வாடையில் குளிரும்
கருத்த மேகமும் அதையொத்த
கூந்தலில் பூக்களும்
மழையால் மணக்கும் மண்
நடுங்கும் பனியும்
பனியில் நனைந்த காலையும்
இனிதென்பர்!

நட்பின் நேசம் இனிதென்பர்!
தாயின் மடி பாசம்
தந்தையின் மன பாசம்
சேலையில் தெரியும் வண்ணங்கள்
வேட்டியின் வெண்மைகள்
மகளின் முத்தங்கள்
மகனின் தோள்கள்
பெயரர்களின் பாதங்கள்
சுகமென்பர்!

பரதமும் நாதமும் இனிதென்பர்!
கீசிடும் பறவைகள்
மானும் மயிலும் செல்ல பைரவரும்
கன்றுக்குட்டியின் கண்
பச்சை வயல்களும்
சோலைகள்
காண இனிதென்பர் !

வானொலியும் காண் ஒளிகளும் இனிதென்பர்!
இளமையும்
இளமையின் வாளிப்புகளும்
வண்ணங்களும்
வர்ணிப்புகளும்
வடிகால்களும்
பரமானந்தமே என்பர்!

அள்ளக்குறையா வளம் இனிதென்பர் !
கைக்கெட்டும் தூரத்தில்
அலங்காரங்கள்
அழகுகள்
பயணங்கள்
மயக்கங்கள்
அருமைஎன்பர்!

பரம்பொருளின் உறைவிடங்கள் இனிதென்பர்!
அதற்கு போட்டியிடும்
தத்தமது குருவிக் கூடுகள்
கிராம தேவதைகள்
திருவிழாக்கள்
வேடிக்கைகள்
சீண்டல்கள்
சண்டைகள்
வாழ்வென்பர்!

நாம் அழ ஆரம்பித்து
நமக்காக
அழுது முடிக்கும்வரை
இயற்கையோடு  கலந்தவை
இரண்டு சுகங்கள்!

பேதமில்லா ஆருயிர்க்கும்
வேண்டும்
கிடைக்கும்  சுகங்கள்!



மறுமை உலகை யாரும் கண்டிலோம்!
பிறந்த உலகே
நமக்கு பேரின்ப லோகம் !
அதற்கு விலாசங்கள்
நாளின்  முப்பெரும்   பொழுதில்
விருப்ப உணவும்
தற்காலிக மரணமான உறக்கமும் !

இயற்கையின் சுகமொன்று உண்டெனினும்
அது சுகமானந்தம்!

எந்நாளும் நித்திரை ராணியின் அரவணைப்பும்
முப்பொழுது அன்ன மாதாவின் அருளுமே
பரமானந்தம்!




Saturday, October 29, 2011

ஹனிமூனுக்கு சிறந்த இடம் எது?

நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்!

சமுதாயத்தின் எந்த மூலையில் நாமிருந்தாலும் பெரும்பாலோனோருக்கு தவிர்க்கமுடியா, விரும்பும் , மீண்டும் கிடைக்கா ஒரே தருணம் "ஹனிமூன் " என அழைக்கப்படும் "தேன் நிலவு"தான்!

தேன் நிலவு என்பது புது மணமக்கள் பெரியவர்களின் ஆசியோடு எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணிக்கும் முதல் இன்பச்சுற்றுலா!இரு உள்ளங்களை  இறுக்க சேர்க்கும் கனவுசுற்றுலா!

மணநாள் முடித்து ஆசிகளைப் பெற்று தூக்கம் தொலைத்து அவசர அறிமுகம் முடித்து தெய்வங்களை வணங்கி விருந்துகளை விழுங்கி ...

உடலும் மனமும் களைத்து விடும் முதல் வாரக் கடைசியில் , உறவுகளும் நட்புகளும் , கடமைகளும் கண்/ கைக்கு எட்டா தூரத்தில் இருவர் மட்டும் தனியே ...

ஏறக்குறைய ஓடிப் போவதுதான்  தேன் நிலவு!..

இடம் எப்படி இருக்க வேண்டும்?

கண் முதலில் சுகப்பட வேண்டும்!
கண் வழியே மனதிற்கு சேதி செல்ல வேண்டும்!
மனம் சாந்தியடைய வேண்டும்!
இயற்கையின் பிரமாண்டமும் நர்த்தனமும் 
மனதை லேசாக்கும்!
அப்போது குளிரூட்டப்பட்ட காற்றும் 
மஞ்சுப் பொதிகளும் மெல்ல உடலைத் 
தாக்க வேண்டும்!
கை ஜோடிகள் தானே கோர்த்துக் 
கொண்டுவிடும்!
மனங்களை கொள்ளை கொண்டுவிடும்!

ஆயுசு முழுதும் இணை பிரியா பந்தம் உறுதிப்படும்!


அனைத்து வர்க்கத்தினருக்கும் ஏற்ற சிறந்த இடம், நமது 

கொடைக்கானல் !

கூட்டம் இல்லா நாட்களில் அங்கு சென்று பாருங்கள்! சொர்க்கம் !
செப்டம்பர் முதல் மார்ச் வரை அபாரம்! மழைக் காலம் தவிர!
வார நாட்களையே தேர்ந்தெடுக்கவும்!

இருவழிகள் உள்ளன! கொடைரோடு-வத்தலக்குண்டு வழியாகவும், பழனியிலிருந்து புதுவழியாகவும் செல்லலாம்!மலையேற பஸ்பயணம் தான் புதுசுகளுக்கு இதம்! பைக் பயணம் தான் சிறப்பு எனினும் கவனம் சிதற வாய்ப்பு அதிகம்! கார் எனில் இருவர் மட்டும்! கடைகள் இருக்கும் இடம் தவிர வேறெங்கும் இடை நிற்க வேண்டாம்!

தங்குவதற்கும் உணவிற்கும் பர்ஸுக்கு ஏற்றார்ப்போல கிடைக்கும்!

கடமைகள்!

பொழுதுபோக்கைத்தவிர இங்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள்:

1  அரைநாள் ஊர் உலா - வேன்களில் குழுவாக!
2  போட்டா எடுத்தல்
3  ஏரியில் படகோட்டம் 
4  ஏரியைச் சுற்றி உலா அல்லது மிதிவண்டி 

குறைந்த பட்சம் 3 நாட்கள் தங்குவது நலம்!

கொடைக்கானலில் இருந்து பார்த்தால் நிலவு அருகில் இருப்பது போலத் தெரியும்!

அதெப்படி மணநாள் முடிந்ததும் நிலவு வரும்? வளர் பிறையில் தானே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகின்றன! கூட்டி கழிச்சு பாருங்க...கணக்கு கரக்டா வரும்!

இதுவரை பரிந்துரை செய்து கொடைக்கானல் சென்று வந்த யாவரும் எனக்கு மிகுந்த நன்றியுடன் உள்ளனர்!

புதுசுகள் தான் செல்ல வேண்டுமா? இல்லை ! ஊடலுக்குப்பின் சமாதானத்திற்கு ஏற்ற சிறந்த இடமும் இதுதான்!பழசுகளும் செல்லலாம் ..ஆனால் இருவராக மட்டும்!


குறிப்பு: செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் - அக்டோபர் 2011 ! 



Sunday, October 23, 2011

தீபாவளிக்கு திருப்பதியா..மதுரையா?

நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்!

பண்டிகை எனில் முன்பெல்லாம் புதுத்துணியும் பலகராமும் தான் பிரதானம்!
தீபாவளி எனில் பட்டாசும் சேர்ந்துவிடும்!சுமார் 20 வருடம் முன்வரை பண்டிகை கொண்டாட்டங்களில் பெரியவர்,சிறியவர் வித்தியாசம் பெரியதாக இல்லை!

பெரியவர்கள் சிலர் திரைகொட்டகையில் இடம் கிடைக்க போராடுவர்! வீட்டுப்பெண்கள் பாவம்! அடுப்படியே கதியென்று கிடப்பர்!

பிறகு மெல்ல தொலைக்காட்சி வீட்டில் நுழைந்து பண்டிகை நாளின் பெரும்பகுதியை தம் வசம் உடும்பு போல பிடித்துக் கொண்டது ! பெண்களும், சிறுவரும் டி.வி யே கதியென கிடக்க, ஆண்கள் மெல்ல வீட்டை விட்டு வெளியேறத் துவங்கினர்!

எதற்கு?

நண்பர்களோடு கலக்கத்தான் ! காலையில் சிறிது நேரம் போக்கு காட்டி விட்டு நழுவி நட்புடன் கூடி மெய்   மறந்து கொண்டாடி சிறப்பிக்கின்றனர் !

மாலையில் பொழுதுபோக்குத் தளங்களிலும், உணவுக் கூடங்களும் குடும்பங்களாக வழியும் !

இதெல்லாம் உள்ளூர் வாசிகளின் கொண்டாட்டங்கள்!
பிழைப்பிற்காக ஊரை விட்டு அசலூரில் வசிக்கும் குடும்பங்கள் பண்டிகை வந்தால் படும் அவஸ்தை சொல்லி மாளாது!



பொதுவாக தென், கிழக்கு மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் தொழிற் நகரங்களுக்கு சென்று தங்கி வேலை செய்வோர் பெரும்பாலானோர் பண்டிகைகளை எப்பாடு பட்டாலும் தமது ஊர் சென்று சொந்தங்களோடு கலந்து மகிழவே விரும்புகின்றனர்!

திருச்சி, மதுரை - இரண்டுமே தவிர்க்க முடியா ஊர்கள்! பண்டிகைகளுக்கு முன்பும பிறகும் இந்த இரண்டு ஊர்களும் மிகவும் பரபரப்பாக இருக்கும்!

பண்டிகை பொழுதில் ஏன் குழந்தைகளோடும் மூட்டைமுடிச்சுகளோடும் பெரும்பணம் செலவழித்து அலைகிறார்களே என்று பார்ப்பவர் சஞ்சல மடைந்தாலும், பின்னால் ஒரு துயரம் ஒளிந்திருக்கிறது !

மற்ற நாட்களில் ஊர் செல்ல நேரும்போது அங்கே  பேச, உறவாட நட்புகளும் சொந்தங்களும் காணக் கிடைக்கா! பிழைப்புக்காக வெளியேறி சூன்யமாகவே நிலவும்!

பகலில் எங்கோ சுற்றிவிட்டு இரவில் ஒரே மரத்தில் அடையும் பறவைகள் போன்றதே பண்டிகைகளுக்கு தவறாமல் ஊரை நோக்கிச்செல்லும் மனிதர்களும் ! இத்தகைய பயணங்கள் மிக அசௌகரியமாக திகழ்வதால் குடுமபத்துடன் இரு சக்கர வாகனத்தில் அபாயகரமாக பயணிக்கின்றனர்!அதை தவிருங்கள் தயவு செய்து!

விடுமுறை எப்போது விடுவார்கள் .. எங்கு செல்லலாம் என்று ஒரு குழுவினர் காத்துக் கொண்டுள்ளனர் ! இவர்கள் யார் எனில் தொழிற் நகரங்களில் வசிப்போர்! இயந்திரமாகி விட்ட இவர்களது வாழ்க்கையில் தேசிய / பண்டிகை விடுமுறைகள் இவர்களுக்கு விடுதலை நாட்கள் !

இவ்வகையினர் தீபாவளி அன்று பெரும்பாலும் கோவில்களையே நாடுகின்றனர்! தீபாவளி சமயத்தில் அங்கு கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும் ! இதை அனுசரித்து ஒரு சிலர் தீபாவளி சமயத்தில் திருமலை மலையப்பனை தரிசித்து வந்தனர் ! தற்போது அந்த தகவல் பரவி திபாவளியன்று மக்கள் அலை மோதுவதாக செய்திகள்!

கொண்டாட்டங்கள் திசை மாறிவிட்டன!




 

Sunday, October 16, 2011

அது என்ன X FACTOR?

நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் வந்தனம்! 

துள்ளல் இசை மனதை உடலை லேசாக்கி விடும் தன்மை கொண்டது! ஒவ்வொரு கலாச்சாரத்திலும் துள்ளல் இசை உண்டு! ரசிப்பும் உண்டு!

மேற்கத்திய கலாச்சாரத்தில் மெல்லிய துள்ளல் இசையை பாப் என அழைக்கின்றனர் !

பாப் இசைக்கும் இளமைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் !
புது புது இசைத் தூதர்களை தேவன் உருவாக்கி விட்டுக் கொண்டே இருக்கிறான்!

இளசுகளின் மனதைக் கவர இசை தூதர்களுக்கு தேவை சம்திங் ஸ்பெஷல் !
அது தான் எக்ஸ் பேக்டர்!

நம் தேசத்தில் எக்ஸ் பேக்டர் தேவதை என கொண்டாட தகுதி வாய்ந்தவர் 

ஸ்ரேயா கோஷல் !
 

எக்ஸ் பேக்டர்!

தேவதையைப் போல முக வசீகரம், இனிமையான குரல் , சைஸ் ஜீரோ உடல் பிளஸ் இளமை !

வசீகர முகவெட்டு , இளமையான கட்டுமஸ்தான உடல், ஆடல் திறமை 
பிளஸ் சொக்க வைக்கும் குரல் ! இது  ராக தேவன்களுக்கு!

நவின யுகத்திலும் தகுதிக்கு அறிமுகம் தேவைப்படுகிறது! சந்தையிலும் புதுசுகளுக்கு தேவையும் முன்பை விட அதிகம்!
தமிழ் மெல்லிசை உலகிலும் புதிது புதிதாக இளம் பாடகர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள் ! இவர்களைக் கண்டறிய அறிமுகமாகிய நிகழ்ச்சிதான் எக்ஸ் பேக்டர்! இதன் தமிழ் வடிவம் தான் சூப்பர் சிங்கர் !

வெளிநாடுகளில் இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கும்!














அழகு + கவர்ச்சி + திறமை = எக்ஸ் பேக்டர் !

என்ன பெண்ணே !

உன்னிடம் 
உள்ளதா 
அந்த 
எக்ஸ் பேக்டர் !



 

 

Monday, October 10, 2011

கஜல் மன்னன் ஜக்ஜித் சிங்!

நண்பர்களுக்கும்  அன்பர்களுக்கும்  வந்தனம்!

மெல்லிசைப்  பாடல்கள் என்பது திரைப்பாடல்கள் மட்டுமே என்பது நம் அனைவரின்    கருத்தாக உள்ளது ! ரேடியோவில் சில தேசபக்திப் பாடல்கள் மெல்லிசை எனும் போர்வையில் வந்து செல்லும்!

வல்லிசை சங்கீத கனவான்களும், அம்மணிகளும் பாரதி, சிவனின்  பாடல்களை மெல்லிசையாக போகிற போக்கில் பாடிப்போவர்!

முழுமையான மெல்லிசை என்பது திரைப்பாடலைத் தவிர்த்து தமிழில் மிகவும் குறைவுதான் !
ஆனால் வடநாட்டில் மெல்லிசை தனி மரியாதையுடன் திகழ்கிறது! ஒருவேளை அவர்களின் ஹிந்துஸ்தானி இசை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் தானோ !
கஜல் என்பது வடநாட்டு மெல்லிசையே !
பாடகர் தன்னோடு ஹோர்மொனியம் ,தபேலா ,புல்லாங்குழல்,கிடார் மட்டுமே வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் வசனத்தை ராகத்துடன் நம் காதில் ரகசியமாக பேசுவதே கஜல்! 
அதில் ஒரு ஜோடிக் குயில்கள் மிகவும் பிரபல்யம் !
அவர்கள் தான்  ஜகஜித் சிங் - சித்ரா சிங் ஜோடி!







அனுப் ஜலேடா  இவர்களது செல்லப் போட்டியாளர்! 

ஜகஜித் - சித்ரா ஜோடி தான் கஜலை பிரபலப் படுத்தியது என்பது மிகையாகாது !
கேட்பவரை சுகப் படுத்திய சித்ராவின் குரல் 1990 ல் மகனை இழந்த பின் ஒலிக்க மறந்து விட்டது பெரிய சோகம் !

பாடிக் கொண்டிருந்த ஆண்குயிலும் தற்போது நிரந்தரமாக கண் மூடிவிட்டது !

இசை ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு !

Thursday, October 6, 2011

சைஸ் ஜீரோ அழகிகள்!

 நண்பர்களே... வந்தனம்!

உண்டி சுருக்கின் பெண்டிருக்கு அழகு!...

இது மூதுரை!

'கொமரி ஒரு கொழந்தைக்கு ', என்பது கொங்கு பழமொழி!

பெருநகரங்களில் இன்று வசிக்கும் இளம் பெண்களின் கனவே, சைஸ் ஜீரோ தான்!

அது என்ன சைஸ் ஜீரோ? 

முகம் களை இழக்காமல், மெருகு குலையாமல், உடம்பில் எக்ஸ்ட்ரா சதை இல்லாமல் ஆரோக்யமாக இருப்பதைப் போல் தோற்றமளிப்பது தான் அது!


மார்பு - வயிறு - இடுப்பு இவற்றின் கீழ் மட்ட அளவை நிர்ணயிப்பது தான் சைஸ் ஜீரோ ! இதன் அளவு நாடுகளுக்கும் , பிராண்டுகளுக்கும் இடையே சிறிது வித்தியாசப் படுகிறது !

30 - 22 - 32  இஞ்ச்கள் (76 - 56 -81 செமி ) முதல் 33 -25 -35  இஞ்சகள்(84 -64 -89 செமி)
வரை உள்ள உடலமைப்பு சைஸ் ஜீரோ பிரிவுக்குள் அடங்கும்!




BMI  என்பது எடைக்கும். உயரத்திற்கும் உள்ள தொடர்பு !இதன் அடிப்படையிலும் சைஸ் ஜீரோவை நிர்ணயிக்கிறார்கள் !

BMI  18 முதல் 25  வரை உள்ள பெண்கள் ஆரோக்கியமானவர்கள் எனப்படுகின்றனர்! BMI  18 - 20 வரை உடலமைப்புக் கொண்டவர்கள் இவர்கள்!
பெரும்பாலும் இவர்கள் புரதம், பழம் மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்! மாவு , பால் பொருள்களை இவர்கள் வெறுக்கின்றனர் !


மாடல்களுக்கும் நடிகைகளுக்கும் அவர்களின் தொழில் அடிப்படையில் சைஸ் ஜீரோ தேவைப்படுகிறது! ஆனால் புலியைப் பார்த்து மற்ற இளம் பெண்களும் இதைப்போல் உடலை வருத்தி சூடு போட்டுக்கொள்கின்றனர்!

இந்த சைஸ் ஜீரோ ஆரோக்கியமானதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் !

பெண்களே ஜாக்கிரதை !




சந்தைக்கு புதுசு! - 1

 நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் அன்றாடம் நம்மிலும் நம்மைச் சுற்றியும் நிகழ்ந்து கொண்டேதான் வருகிறது!

நுகர்வோர் பொருளாதாரத்தில் மாற்றங்கள் அடிப்படையானது! சந்தைப்படுத்த, சந்தையைத் தக்கவைக்க மாற்றங்கள் தேவையாகிறது!

கடந்த சில மாதங்களாக சிறிதும் பெரிதுமாக கார்கள் நம் சந்தைக்கு வந்துள்ளன!


Honda Brio Review and Images 

ஹோண்டா ப்ரியோ! விலை ரு 4 .70  லட்சம்  முதல்! பெட்ரோல் விலை ஏற்றத்தின்  காரணமாக விற்பனை சரிவினால் அவதிப்பட்ட ஹோண்டா நிறுவனம் , தன சந்தையை சரி செய்துக் கொள்ள இறக்கியுள்ள துருப்புச்சீட்டு இது !
1200 சிசி திறன், 18 கிமி நெடுஞ்சாலை தூரம்/ 1 லிட்டருக்கு. தரமான எஞ்சின், தேய்மான செலவு குறைவு, ஏற்றது !

Nissan Sunny Review and Images

நிஸ்ஸான் சன்னி! செடான் வகையை சார்ந்தது! விலை ரூ 7 லட்சம் முதல்!
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களில் வரவிருக்கிறது! 

டீலர் நெட்வொர்க் குறை! 1500 சிசி, 17 கிமி / 1 லி ,சற்று நீளமான கார்!


Mahindra XUV500 Review and Images

மகிந்திரா XUV500. ஜப்பானிய, மேற்கத்திய தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் உள்நாட்டில் தயாரானது! விலை ரூ 11 .70 லட்சம் முதல்!

2200 சிசி, 15 கிமி / லி ,டீசல் , உறுதியான வண்டி !

 Premier Rio Diesel DX Review and Images

பிரிமியர் ரியோ ! முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு ! அதிகம் விளம்பரமில்லை !
விலை ரூ 5 .60 லட்சம் முதல்!

1500 சிசி , 16 கிமி/ லி , நிறுவனத்திற்கு நற்பெயர் இல்லை !

Hyundai Eon Review and Images

ஹுண்டாய் இ ஆன்! விலை ரு 2 . 75 லட்சம் முதல் ! இது ஒரு மக்கள் கார் !
800  சிசி , பெட்ரோல் ,21  கிமி/லி 

தங்கள் தேவையின் அடிப்படையில் மட்டுமே வாகனங்கள் வாங்க வேண்டும்!
அதிகம் பயணிப்போர் டீசல் கார்களை வாங்கலாம்!

பொதுவாக பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் உறுதியானவை, அதிக மைலேஜ் , அதிக உழைப்பு ! ஆனால் விலை அதிகம் !

தேவையானவற்றைத் தேர்ந்தெடுப்போம் ! மகிழ்ந்திருப்போம் !

இந்து மகா சமுத்திரம்! - 1

 பல் வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு வரும் செய்தி நீரோடைகள், கலந்து பரிணமிக்கும் மாநீர்த் தேக்கம்! உங்கள் பார்வைக்கு!


ஆன்மீகம்!

திருமலைக்கு பாதசாரியாக மலையேறி வருபவர்களூக்கு, மலையப்ப சுவாமியை தரிசிக்க, இலவச விரைவு தரிசன வசதி கடந்த சிலகாலமாக நடைமுறையில் உள்ளது! சேவார்த்திகள் பயன்படுத்திக் கொள்ளவும்! நடக்க உகந்த நேரம் -அதிகாலை 4 முதல் 10 வரையும், மாலை4 முதல் இரவு 10 வரையும்! காலணிகளையும், நமது பைகளையும் சுமந்து மேலே செல்ல வாகனவசதி உள்ளது! கொடுத்து டோக்கன் வாங்கி, மேலே சென்று உடமைகளைப் பெற்றுக் கொள்ளலாம்! - இலவசமாக!


300 ரூபாய் விரைவு தரிசனம் செவ்வாய், புதன் கிழமைகளில் மதியம் 1 மணி வரை மட்டுமே! மற்ற  நாட்களில் மாலை 6 மணி வரை!

அடுத்த வருடத்திலிருந்து வருடம் 2 பிரம்மோத்சவம்கள் நடத்த, தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது!

அரசியல்!

எந்தத் தேர்தலில் வோட்டுப் போடாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் வோட்டுப் போடாமல் இருந்து விடாதீர்! யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள்!ஆனால் மறவாமல் இந்தத் தேர்தலில் வோட்டுப் போட மறவாதீர்! ஏனெனில் வேட்பாளர்கள் உங்கள் பகுதியினரே! எந்த வாக்கு பதிவாகிறது/ இல்லை என்பதை அவர்கள் புள்ளிவிவரமாக் சேகரித்து வைப்பர்! நமக்கு என்று ஒரு வேலை வரும்போது இவர்களது பொல்லாப்பும் நமக்கு சேர்ந்து வரும்! இது எனது சொந்த அனுபவம்!


அஞ்சலி!

பெர்சனல் கம்ப்யூட்டர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ஆப்பிள் குழும நிறுவனர் திரு. ஸ்டீவ் ஜாப்ஸ், கணைய புற்று நோயின் தாக்கத்தில் இயற்கையானார்! அவர் சிறந்த படிப்பாளி இல்லையெனினும் சிறந்த படைப்பாளியாகத் திகழ்ந்தார்! அறிவுத் தாகம் கொண்டவர்! கணிணி உபயோகிப்போர் அவரை நினைவில் நிறுத்துவோம்!



 அம்மாவாகப் போகும் ஐஸ்வர்யா! 
 

மருமகளுக்கு முகம் தளர்வாகவும், பிரகாசம் குன்றியும் இருப்பதால் பச்சனுக்கு பேரன் தான் என எனது தாயார் கணித்துள்ளார்! பார்ப்போம், என்னவென்று!

பூங்கொத்து!

http://puthaiyal-puthaiyal.blogspot.com/

காணக் கிடைக்கா பல பழைய திரைப் பாடல்களை யூட்யூபில் பதிவேற்றி வரும் அரும்பணியை செய்துவரும் வலைப்பூ!
 அவர்களின் சீறியப் பணிக்கு வாழ்த்துக்கள், பூங்கொத்துடன்!


வணிகச் செய்திகள்!


(யூக வணிகவியலாருக்கு அல்ல இது! செய்திக்காக மட்டுமே! அவரவர் வணிகம், அவரவர் பொறுப்பு!)


தங்கம்! - கு றுகியகால வியாபார ரேஞ்ச்! 1580- 1640 டாலர்கள்! எது உடைக்கப்பட்டாலும், அதன் திசையில்2 - 3 சதம் செல்ல வாய்ப்பு உள்ளது!

வெள்ளி! - குறுகிய கால வியாபார ரேஞ்ச்! 29.00 - 31.25 டாலர்கள்!

நீண்ட கால முதலீடுகளுக்கு விலை இறங்கும் போதெல்லாம், சிறிது சிறிதாக வாங்கலாம்!


இன்ஸ்யூரன்ஸ் வேறு, முதலீடு வேறு என்பதை நினைவில் கொள்க!
நமக்கு உள்ள கடனின் அளவை விட 30சத மேல் அளவிற்கு டெர்ம் பாலிசி, எடுத்துக் கொள்ளலாம்!
முதலீடுகளை ஒரே திட்டத்தில் போடாமல், பல்வேறு திட்டங்களில்,மாதத்தவணைகளில் செலுத்துவது நன்மை தரும்!

ஆரோக்யம்!

ஓ வகை ரத்தவகையினரே அதிகளவுக்கு கொழுப்பினாலும், இருதய நோயாலும் பாதிக்கப் படுகின்றனர். இவ்வகையினர் புரதச் சத்துள்ள உணவுகளை, சிறிது சிறிதாக அதிகரித்து, எண்ணெய், மாவுப் பொருள்களைக் குறைத்து, நாளைக்கு 45 ந்மிட நடைப் பயிற்சி கொண்டால் இருதயக் கோளாறுகளை தள்ளிவைக்கலாம்!

மதுப் பழக்கம் உள்ளவர்கள், ஒரு மணி நேரத்தில் 60 - 80 மில்லி அளவில் இருந்தால், கல்லீரல் கோளாறில் இரூந்து தப்பிக்கலாம்!


நாவிற்கு!

பாலக் பனீர் செய்யும் முறை!
தமிழில் - பாலக் கீரை கடைசலும், பாலாடைக்கட்டியும்!




மீண்டும் சந்திப்போம்!


Saturday, September 17, 2011

ஃப்ராங்க்ஃப்ர்ட் ஆட்டோ கண்காட்சி!

வழக்கம் போல இந்த வருடமும் ஜெர்மனி பிராங்க்பர்ட் நகரில் செப்டம்பர் மாதத்தில், மோட்டார் வாகன கண்காட்சி நடை பெற்று வருகிறது !

இதில் சிறப்பு என்னவெனில் எதிர்காலத்தில் வெளிவரக்கூடிய கார்களின் தொகுப்புக் காட்சி என்பதே! கான்செப்ட் எனும் திட்ட அடிப்படையில் உள்ள வண்டிகளும், புரோடோடைப் எனும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வண்டிகளும் உலக வாகன தயாரிப்பாளர்கல்   அறிமுகப்படுத்தும், புகழ்பெற்ற கண்காட்சி இதுவேயாகும்!

இந்த வருடக் காட்சியில் இதுவரை அறிமுகமாகிய, நம் நாட்டில் வரலாம் என் எதிர்பார்க்கப்படும் சில கார்கள் இதோ!

வோல்ச்வேஹன் அப் !

Up!

வோல்ஸ் வேஹன் பீட்டல் !
A rear shot of the Volkswagen Beetle R concept that debuted at Frankfurt

பியட் பண்டா
frankfurt auto show fiat panda.


பென்ஸ் பி கிளாஸ் !

போர்ட் இவாஸ் !
Ford-EVOS-concept-front-three-quarters

காட்சி தொடங்கி முன்று நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் இன்னும் மீதமுள்ள நாட்களில் மேலும் பல புதிய கார்கள் அறிமுகமாக காத்துக் கொண்டுள்ளன!

பெட்ரோல் விலை ஏறும் வேகத்தைக் காணும்போது இவையெல்லாம் நமக்கு கண்காட்சிப் பொருள்களே!

Tuesday, September 13, 2011

நெஞ்சே நெஞ்சே! பதைக்காதே!


 காண்பவை யாவும் தேன்!

கனவில் தான் நடக்கும்!

இயல்பில் நேற்றைய ஜொலிப்பும்,
இன்றைய கவர்ச்சியும் சாஸ்வதமல்ல!

கனவுலகம் என்பது மாய உலகம் தான்!

இங்கு அது மீண்டும் ஒரு முறை நிரூபணம்!





 நாம் மட்டுமே

நம்மைச் சார்ந்தோர் மட்டுமே

நம்மைக் கவர்ந்தது மட்டுமே

வாடா மலர்களெனும் நினைப்பு

இனிமையானது!

நம் நினைவுகள் கனவுகளானதேனோ?


காலம் முகத்தில்
வரையும் கோலம்
இயற்கையெனினும்
மனதோடு மட்டும்
தோற்றுவிடுவதேன்!

விட்டுப்பிரிந்த தோழமையின்
புதியப் பரிமாணம்
காண நேர்கையில்
நெஞ்சு பதைப்பதேன்?

Saturday, September 3, 2011

அச்சு வெல்லமே! அச்சு வெல்லமே!


 வாழ்வில் சுவையானது இளமை!
சுவையில் சிறந்தது இனிப்பு!

இளமைப் பருவம் மாறியும், தொடரும் ஆசைகளில் இனிப்பும் ஒன்று! சுவைக்கத் தடைகள் உருவாகினும் இனிப்புச் சுவையின் மேல், உள்ள அபிமானம், ஜீவனோடு கலந்தது!

பீட்ரூட், மக்காச் சோளத்திலிருந்து எடுக்கப் பட்டாலும், கரும்புச் சர்க்கரையே, பாரம்பரியமானது!எளிது!அதிக அளவில் கிடைக்கக் கூடியது!



ஆலையில் தயாராகும் வெள்ளைச் சர்க்கரையாகினும், கிராமங்களில் வயலில் தயாராகும், வெல்லம்/சர்க்கரையாகினும், மிகக் குறைந்த அளவு வேதிப் பொருட்களே, தயாரிப்பின் போது, சேர்க்கப் படுகின்றன! 1 சத அளவிற்கும் குறைந்த அளவு, சல்பர் மட்டுமே பல்வேறு பகுப்புகளாக, கரும்புச் சாற்றில் சேர்க்கப் படுகிறது!
அதுவும் அழுக்கை நீக்கவே உபயோகிக்கப்படுகிறது!


கரும்பு பிழியப்பட்டு கிடைக்கும் சாறு!


சர்க்கரை எடுக்கப் பயன்படும் கரும்பு,ரோட்டோரங்களில் கரும்புச் சாறு கடைகளில், அரைக்கப்படும் அதே வெள்ளைக் கரும்பே! பொங்கல் சமயங்களில் உபயோகிக்கும், தடியான கறுப்பு நிற்க் கரும்பு, நேரடி உபயோகத்திற்கு மட்டுமே!

இங்கு அச்சு வெல்லம் தயாரிக்கப்படும் முறை காட்சிகளுடன்!



சாறு சுமார் 2000லிட்டர் அளவு சேர்ந்ததும், கொப்பரையில் ஊற்றப்பட்டு, காய்ந்த கரும்புச் சக்கைகளைக் கொண்டு எரியூட்டப்படுகிறது! கொதிக்கும் போது அழுக்கு நுரையாகப் பொங்கி வரும்! அதனை சல்லடைக் கரண்டி கொண்டு அள்ளி அகற்றி விடுவார்கள்! சுமார் இரண்டரை மணி நேரம் எரிக்கப்பட்ட சாறில் இருந்து, தண்ணிர் ஆவியாகி,வெல்லப்பாகு தயார்!

 


தயாரான வெல்லப் பாகு கொப்பரையிலிருந்து, மரத் தொட்டிக்கு மாற்றப்பட்டு, வாளியில் எடுக்கப்பட்டு அச்சில் வார்க்கப் படுகிறது! சுமார் 15 நிமிட நேரம் கழித்து, அச்சைக் கவிழ்த்து தட்டினால், மைசூர்பா கணக்காக, அச்சு அச்சாய் வெல்லங்கள்!

தமிழகத்தில் இவை பெரும்பாலும் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கவே பயன் படுகிறது! பயன்பாடு அதிகம் இருப்பது பக்கத்து மாநிலம் கேரளத்தில் தான்! தினசரி சமையலில் ஏதாவது ஒரு வகையில் வெல்லத்தின் உபயோகம் உண்டு, அங்கே!


ஹோம்மேட் ஆல்கஹால் தயரிக்கும்வரை, நாட்டு வெல்லத்தின் தேவை இங்கேயும் அதிகமாக இருந்தது!

விவசாயிகளுக்கு அது ஒரு பொற்காலம்!

பூங்காற்றுத் திரும்புமா?

Sunday, August 28, 2011

அக்கா அருந்ததி ராய்!

  அன்னா ஹசாரேவை, மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் பிரதிநிதி! அவர் மாற்று காந்தியல்ல! அவர் மக்கள் ஆதரவைப் பெற்றாலும், அவரை போல நான் மாற விரும்பவில்லை என திருமொழி மலர்ந்துள்ளார்! மேலும் ஹசாரே நடந்து வந்த பாதையில், அவர் நடந்து வந்த விதம் குறித்தும், விமர்சித்து கண்டங்களை எழுப்பியுள்ளார்!

அன்னாவுக்கு தன்னைப்போல, தன் அபிமான இயக்கத்தைப் போல கடைத்தட்டு மக்களின்பிரச்சனைகளின் மேல் அக்கறையில்லை என் குற்றமும் சாட்டியுள்ளார்!


தீவிரப் புரட்சியாளர்களின் மானசீக தலைவியாக மாறியுள்ள அருந்ததி, நாட்டில் எந்த விஷயமானாலும்  கீழ்த்தட்டு மக்களுக்கு மட்டுமே போராடும் உரிமை உள்ளது, அதனையும் அவர்கள் சார்பாக போராடுவதற்கு எமது இயக்கத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதைப் போலப் பேசி வருகிறார்!

மாற்றுப் போராளிகளை மட்டம் தட்டுவதும், அவர்தம் செயலில் குற்றம் காண்பதும், அவர்தம் தகுதியை ஏளனம் செய்வதும் - பிரபாகரனின் வீழ்ச்சிக்குப் பிறகும் இவர்கள் புரிந்து கொள்வதில்லை போலும்!


"எங்கோ போன மாரியாத்தா!
 என்ற மேல ஏறாத்தா!" எனும் கதையாக மாற்றுப் போராளிகளை பின் தொடரும் மக்களையும், நிறபேதம், வர்க்கபேதம் காட்டி வைதுள்ளார்!





ஒன்றை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! அன்னா மக்களைத் திரட்டவில்லை! மக்கள் எண்ணம் தான் அன்னாவின் மூலம் வெளிப்பாடாயிருக்கிறது! அதற்குக் காரணம் தொடர்ச்சியாக வெளியான அரசியலர்/அதிகாரிகள்/பெருமதிபர்கள் கூட்டணியினர் நடத்திய உழல்கள், கொள்ளைகள், அபகரிப்புகள் மற்றும் கறுப்புப் பண முதலீடுகள் குறித்த செய்திகளும், அவற்றை அரசாங்கம் மறைக்க எடுத்த முயற்சிகளும்!

மாற்றுப் போராளிகளின் இலக்கும் குறிக்கோளும், நம்மில் இருந்து வேறுபட்டிருப்பதால், அவர்கள் நாம் குறை கூறுவது அறிவார்ந்த செயலும், நன்மையளிக்கும் பயனும் இல்லாதது!

அன்னாவின் போராட்டம் பொதுப் பிரச்சனை அடிப்படையில் அமைந்துவிட்டது! அருந்ததி குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் பிராந்திய அடிப்படையில் அமைந்துள்ளது! பிராந்திய பிரச்சனைகள் அந்த அந்த பகுதி மக்களுக்கு மட்டுமே உண்மையான வேகத்தையும், மற்ற மக்களுக்கு அனுதாபத்தை மட்டுமே கொடுத்து வருகிறது! இது ஒரு இயற்கையான நிகழ்வு!

அன்னாவின் போராட்டத்தில் செய்தி ஊடகங்களின் பங்கே, பிரதானமெனினும், மக்களின் ஆதரவின்றி எந்தப் போராட்டத்தையும் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லமுடியாது! இப்போது கூட அருந்ததி ராய்,வெகுஜன/கம்யுனிஸ அபிமான ஊடகமான 'ஹிந்து' வாயிலாக, வெளியிட்டாதாலே, பரவலாக சென்றடைந்தது! எனினும் மக்கள் ஆதரவு இல்லாததால் அன்னாவுக்கு எதிரான, சிறு அலையாக மாறி வலுவிழந்துவிட்டது!

அருந்ததி அபிமான இயக்கங்களின் கொள்கைகள், விரும்பும் மாற்றங்கள் நியாயமானவை என்றாலும், இயக்கவாதிகளின் இயக்கங்கள் உணர்ச்சிமிக்கதாயும்,வன்முறைக்குட்பட்டு இருப்பதாலும், வெகுஜன அபிமானத்தை பெறுவது கடினமாயும் உள்ளது! போராட்டங்கள் குழுக்கள் அடிப்படையில் நடைபெறுவதால், தகுதியான தலைமைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது!


அருந்ததி செய்ய வேண்டியதெல்லாம், தீவிர போராட்ட குழுக்களை ஒருங்கிணத்து, தகுதியான தகுதிகளை கொண்ட தலைமைகளைத் தேர்ந்தெடுத்து, வன்முறை பாதையைத் தவிர்த்தால், வெகுஜன ஆதரவு தானே கிடைக்கும்!

மக்களின் தொடர் ஆதர்வின்றி எந்த இயக்கமும் வெற்றி காண இயலாது!

தமக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதால், மக்களை திட்டிப் பயனில்லை!
தமக்குக் கிடைக்காத மக்கள் ஆதரவு, மாற்றுப் போராளிகளுக்கு கிடைக்கிறதே என்று வயிறு எரிந்தால் மட்டுமே ஜெயமில்லை!


தேவை சுய விமர்சனமும், வன்முறை விலக்கலும், தகுதியான தலைமையும்!

போராளி குழுக்களின் மானசீகத் தலைவியான அருந்ததிக்கு அந்த தகுதி உள்ளது!

செயல் படுத்தினால்,
அருந்ததி
அன்னாவைப் போல்,
அக்கா அருந்ததியாக
உருவெடுக்கலாம்!



Sunday, August 21, 2011

சென்ற ஊரைச் சொல்லவா? - 1

 நிற்க நேரமில்லை!
உருப்படியா வேலையில்லை!

இது கொங்குப் பழமொழி! யாரைப்பற்றி என்றால், அது நம்ம பைரவர் பற்றித்தான்!அதை போலவே தான் நம்மில் பலரும்!
நானும் அதில் ஒருவன்!

இதை ஜோதிட சாஸ்திரத்தில் சகட யோகம், என்பர்!

சதா சஞ்சாரம்! வேலைக்காகவோ, வேலைத்தேடியோ,இலக்கின்றியோ அலைவதே, இதில் சேரும்! அப்படி சஞ்சரிக்கும் போது, எம் மனதில் படிந்தவை, இங்கே!

கோவையில் சமீபத்தில் தான் ஆர்.எஸ் புரத்திலும், ப்ரூக்ஃபீல்ட் மாலிலும் KFC கோழி வறுவல் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது! கூட்டம் அலை மோதுகிறது! வசூல் அபாரம்! என்ன, வயிறு மட்டும் நிறைய மாட்டேங்குது! பர்ஸ் கரையாமல், அமெரிக்கன் கோழி வறுவல் வேண்டுமெனில் சிடி டவர் ஒட்டலில் உள்ள CFC செல்லலாம்!

 

KFC, மெக்டோனால்ஸ், மேரிஃப்ரவுன் இவையெல்லாம் வழங்கும் கோழி வறுவலை விட, நமது இந்திய ருசியில், நல்ல முறுவலில் வழங்கும் இரு நிறுவனங்கள்:

1.பிக் சிக் : நெய்யிலா வறுக்கிறார்கள் என எண்ணத் தூண்டும்! Now @ Erode!
2.சிக் கிங்: கொச்சி நகரில் எம்.ஜி ரோட்டில் உள்ளது! இறால் வறுவல் ருசியோ ருசி!

கொச்சி நகரைச் சுற்றியுள்ள ரிசார்ட்களில், குறிப்பாக குமரகத்தில், பொடி மீன் வறுவல் என்று ஒரு ஐட்டம் கொடுக்கிறார்கள் பாருங்கள்! அல்புதம்!( மலையாளம்)
குமரகம் ரிசார்ட்களில், ஒன்றிரன்டைத் தவிர மற்றவை எல்லாம் கொள்ளைக் கும்பலே!சாப்பாடு சகிக்காது! ஹவுஸ் போட் சுற்றிபார்க்க மட்டும்! நண்பர்களோடு சென்றால் மட்டும் தங்குங்கள்! மது பிரியர்களுக்கு நல்ல கள் கிடைக்கும்!




கனவுகளை வளர்த்துக் கொண்டு மூணாறு சென்று விடாதீர்! மூணாறு - தேவிகுளம் சாலை மட்டுமே காட்சிகள் நன்றாக இருக்கும்! கோடையில் சென்று விடாதீர்! வெந்து விடும்! உடுமலை வழியில் செல்லும்போது யானைக்குடும்பம் சாலையைக் கடந்து செல்லுவதைக் காணும் வாய்ப்பு காலையிலும், மாலையிலும் கிட்டும்!

நான் ரசித்தவை!

உதய பானு தெலுங்கிலும், கன்னடத்திலும் கவர்ச்சி பாம்! அவரின் கண்கவர் நடனத்தை இங்கு கண்டு களியுங்கள்:

ஆபாச அசைவுகள் இல்லாத ரம்மியமான பாடல் காட்சி!



  மீண்டும் சந்திப்போம்!

Monday, August 15, 2011

சுதந்திர சிந்தனைகள்!



64 வருட சுதந்திர பாரதம், வாழ்த்திக் கொள்ளுவோம்!

இந்நன்னாளில் சுதந்திரப் போர் தியாகிகளை மனதில் இருத்தி, வந்தனம் செய்வோம்!

இனிவரும் நம் சந்ததிகளுக்கு முடிந்தவரை சுற்று சூழலைக்  காப்பாற்றி கொடுப்பொம்!



The shadow of a child is seen against the Indian national flag during a rehearsal for Republic Day celebrations

இன்று சுதந்திரம் பற்றி நிறையப் படித்ததாலும், தொலைக்காட்சிகளை கண்டு களித்ததாலும், சிந்தனைக் குதிரை சற்றேசூடாகி, கனைத்தவை இங்கே!

 * பணமும் பதவியும் என்றுமே தகுதியுள்ளவனை, சென்றடைவதில்லை! 


  * நல்லவன் நாடாளுவதில்லை! உழைப்பவன் செல்வனாவதில்லை!


 * ஊழல்வாதிகளுக்கு சிறந்த தண்டனை, சொத்து பறிமுதலும், பத்து தலைமுறைக்கு பதவியேற்கத் தடையும்!


  *இந்த அளவு சுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை! காப்பாற்றி கொள்ளுங்கள்!#என்.ஆர்.ஐ தோழன்!


 * பொதுவெளியில் கழிக்கும் உரிமையைப் போல், சிறந்ததொரு சுதந்திரம் இல்லை காண்!


 * நவீன திருதராட்டினன்! தன் அரசின் ஊழல்களைப் பற்றி அறியேன் எனும் தலைமை ஆட்சியாளன்!


 * திருட்டு ஆட்சியாளன், அவனை தேர்ந்தெடுத்த மாக்களின் பிரதிநிதியே! பிரதிபலிப்பே!





நம்மில் சுயநல மிகுந்திருக்கும் வரை ஊழலை களைய முடியாது!

சிறிது சிறிதாக கரைக்க முடியும்! அதற்காண ஒரு சிறு முயற்சியே, ஊழல் தடுப்புச் சட்டம்!

இந்தச் சட்டம் முழுத்தீர்வு இல்லையெனினும், ஊழல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகத் திகழட்டும்!

வெல்க பாரதம்! வாழிய தமிழ்த்திருநாடு!