வந்தாரை வாழவைக்கும் எல்லா தேசமும்..
வந்தாரையும் கொண்டாடும் தமிழ்தேசம் !
தலைவன் என்று பேரும் சூட்டும்..
திலக'மிட்டு முடி'யும் சூட்டும்!
அரிமாயனை கும்பிடுவர் எம்மக்கள்..
திரைமாயரை நம்பிடுவர் அம்'மாக்கள்!
நிழல் போலே நிஜத்திலும்
இருக்கிறாய்..சரி!
இருப்பாய்..
என்றெண்ணி
நிஜமாகவே உன் நிழல்போல்
எம்மக்கள்!
உள்ளூர் சாதித் தலைவர்கள் சலித்தவேளையில்
வெளிச்சமிட்டு வந்த மேனனின்
புன்னகையில் மயங்கி..
மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் எம்மக்கள்!
அம்மக்கள் பெற்றமக்கள்
அதே வழியில் ராசனாக்க
ராயரை எண்ணி எண்ணி
இருந்த வேளையில்
உனக்கும் ஆசை வந்து வந்து
போகப் போக
வானத்து சந்திரனானாய்..
ரசிகனின் கண்மூடி கண்மூடி ரசித்தாய்!
நீ ஒரு ஆலமரம்..
உன்னோடு வளரலாம்
என உளறித் திரிந்தோர்க்கு
பேரன்கள் பிறந்துவிட்டனர்..!
கலை பொதுவல்ல..அது சுயம்..லாபம் !
அரசியல் பொது..அது பளு..தொல்லை !
என முடிவெடுப்பதற்கு
அறுபது அகவைகள்
கடந்து விட்டன!
ஐந்து வருடம் ஒருமுறை "வாய்ஸ்" மலர்வது
மகாமகத்தையும்..குறிஞ்சிக்கும் ஒப்பானது!
காவிரியில் துவைக்கப்பட்ட உன் சட்டை
உன் மறுபிறவியில் மன்னிக்கப்பட்டு விட்டது!
நதிநீருக்கு நீ அளித்த கோடி..
கரைந்துவிட்டது நதிகளின் சங்கமத்தில் ஓடி!
மகள்களின் திருமணத்தில் நீ அளித்த விருந்து..
பீமராஜனாம் ரசிகர்களுக்கு பெரு மருந்து!
வாழிய பல்லாண்டு..!
வாழிய ஐஸ்வர்யங்களுடன்..!
வாழிய புகழுடன்!
வந்தாரையும் கொண்டாடும் தமிழ்தேசம் !
தலைவன் என்று பேரும் சூட்டும்..
திலக'மிட்டு முடி'யும் சூட்டும்!
அரிமாயனை கும்பிடுவர் எம்மக்கள்..
திரைமாயரை நம்பிடுவர் அம்'மாக்கள்!
நிழல் போலே நிஜத்திலும்
இருக்கிறாய்..சரி!
இருப்பாய்..
என்றெண்ணி
நிஜமாகவே உன் நிழல்போல்
எம்மக்கள்!
உள்ளூர் சாதித் தலைவர்கள் சலித்தவேளையில்
வெளிச்சமிட்டு வந்த மேனனின்
புன்னகையில் மயங்கி..
மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் எம்மக்கள்!
அம்மக்கள் பெற்றமக்கள்
அதே வழியில் ராசனாக்க
ராயரை எண்ணி எண்ணி
இருந்த வேளையில்
உனக்கும் ஆசை வந்து வந்து
போகப் போக
வானத்து சந்திரனானாய்..
ரசிகனின் கண்மூடி கண்மூடி ரசித்தாய்!
நீ ஒரு ஆலமரம்..
உன்னோடு வளரலாம்
என உளறித் திரிந்தோர்க்கு
பேரன்கள் பிறந்துவிட்டனர்..!
கலை பொதுவல்ல..அது சுயம்..லாபம் !
அரசியல் பொது..அது பளு..தொல்லை !
என முடிவெடுப்பதற்கு
அறுபது அகவைகள்
கடந்து விட்டன!
ஐந்து வருடம் ஒருமுறை "வாய்ஸ்" மலர்வது
மகாமகத்தையும்..குறிஞ்சிக்கும் ஒப்பானது!
காவிரியில் துவைக்கப்பட்ட உன் சட்டை
உன் மறுபிறவியில் மன்னிக்கப்பட்டு விட்டது!
நதிநீருக்கு நீ அளித்த கோடி..
கரைந்துவிட்டது நதிகளின் சங்கமத்தில் ஓடி!
மகள்களின் திருமணத்தில் நீ அளித்த விருந்து..
பீமராஜனாம் ரசிகர்களுக்கு பெரு மருந்து!
எல்லா வயசுலயும் உண்டு..
எல்லா அமைப்பிலும் உண்டு..
எல்லா தேசத்திலும் உண்டு..
அவை உன் திரைநடிப்பெனும் பூவை
சுவைக்க சுற்றும் வண்டுகள்!
அவற்றுக்குத் தேனை அள்ளித்தா!
அறிவுரை எனும் கஷாயம் வேண்டாம்!
உன்வழி அதுதான்...
ஆம்..தனிவழி!
அதுவே பெருவழி..
வேண்டாம் உனக்கு வேற்று படுகுழி..!
நீ
தலைவனாக வேண்டாம்..
தாரகையாகவே இருந்து கொள்!
வாழிய பல்லாண்டு..!
வாழிய ஐஸ்வர்யங்களுடன்..!
வாழிய புகழுடன்!
வித்தியாசமான முறையில்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்தும் சொல்லி
பெருவாரியானவர்களின் கருத்தை
சொல்லி முடித்த விதம் அருமை
வாழ்த்துக்கள்
வருகைக்கும் அலசலுக்கும் நன்றி...ரமணி சார்!
Deleteஅழகானதும் வித்தியாசமானதுமான பிறந்த நாள் வாழ்த்து...
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
சாதாரணத்தை விரும்பும் சிகரத்துக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...ஆத்மா சார்!
Deleteதலைவா வாழ்த்துக்கள்....
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்து ரொம்ப வித்தியாசமாய் நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சூப்பர் ஸ்டார் மனம் வைத்திருந்தால் 96 லேயே முதல்வர் ஆகியிருக்கலாம்,(அப்போதைய சூழல் தங்களுக்கு தெரிந்திருக்கும்)அவருக்கு அந்த ஆசை கிடையாது.
ReplyDeleteகமல்,விஜய்,ஷங்கர் போன்றவர்கள் சமீபத்தில் வாங்கிய டாக்டர் பட்டம் 90களிலேயே ரஜினிக்கு கொடுக்க
விரும்பினார்கள் சில கல்வி(?) தந்தைகள். ஆனால் தனக்கு அந்த தகுதி இல்லை என்று அவர்களை திருப்பி
அனுப்பி விட்டார்.(வாங்கியவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ற விமர்சனம் கூட வரவில்லை-அதை யாரும்
ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது ஒரு பக்கம்).
2) காவிரி பிரச்னையில்,நதி நீர் இணைப்பு தொடங்கினால் ஒரு கோடி தருவதாக கூறி இருந்தார்,திட்டம் தொடங்க படவில்லை
என்பது அவர் தவறில்லை. அந்த கண்டன கூட்டத்தில்,தமிழ் நாட்டில் பிறந்தவர்களே சொல்ல அஞ்சும் வார்த்தை-அவங்கள உதைக்க
வேண்டாமா என்று தைரியமாக கேட்ட ஒரே ஆள் ரஜினி மட்டுமே.(பிறகு கலவரம் ஏற்பட்டு ரசிகர்களுக்கு பிரச்னை ஏற்படும்
என்ற ஒரே காரணத்திற்காக (தன் இமேஜை பணயம் வைத்து குசேலனை பலிகடா ஆக்கி) வருத்தம் தெரிவித்தார் என்பது தனி கதை).
3) தலைவரின் படம் வரும்போது ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் ரசிகனை விருந்துக்கு அலைவதாக கூறுவதும் தவறு.லட்சக்கணக்கான
ரசிகர்களுக்கு தலை வாழை விருந்து அளிக்க இயலாது,அவர் கலை வாழ திரை விருந்து அளித்தால் போதும் என்று சொல்லும்
ரசிகர்கள் தான் அவருக்கு.
3) மற்றவர்களை போல் அல்லாமல்,வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் எத்தனையோ தர்மங்கள் செய்து வருகிறார் ரஜினி.
சம்பந்தபட்டவர்கள் சொல்லியே சில வெளியில் வந்திருக்கின்றன. "ஈகை "இல்லாமல் இறைவன் இவ்வளவு பெரிய "வாகை"யை
யாருக்கும் தந்து விட மாட்டார்.
ஒரு சில ஜாதி கட்சிகளும்,கட்ட பஞ்சாயத்து கட்சிகளும் அரசியலில் இறங்கி கோடி கோடியாக சம்பாதித்து இருக்கிறார்களே,தமிழ் நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடித்து எத்தனை கோடி சம்பாதித்து இருப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல,
அவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்?
ரஜினி தன் சுய நலத்திற்காக ரசிகர்களை என்றும் பயன் படுத்தியதில்லை.தன் பிறந்த நாள் கூட்டத்தை கூட அவர் மற்றவர்களை போல
"திரண்டு வாருங்கள் " என்றெல்லாம் அழைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை. அவர் வருவது கூட உறுதி படுத்த படவில்லை.
இவ்வளவு மக்கள் செல்வாக்கு இருந்தும் அதை பதவி ஆசைக்கு பயன்படுத்தவில்லை.அது தான் ரஜினி. சூப்பர் ஸ்டார்.
(ரஜினி பிறந்த நாளுக்கு மறுநாளே தங்களுக்கு DM அனுப்பி இருந்தேன் ட்விட்டரில்). எவ்வளவு விவாதங்கள் நடந்தாலும் நடத்தியவர்கள்
தொடக்க நிலையிலேயே தான் இருப்பார்கள்,அதற்கு நாமும் விதிவிலக்கல்ல என்பதை அறிந்தும்-ஒரு விளக்கம்,அவ்வளவு தான். நன்றி :-))
நான் சொன்னதையே தான் ஆமோதித்து, தனக்குத் தலைவனாக இனி எண்ணமில்லை என, தன் பிறந்தநாளன்று ..ரசிகர்களுக்கு சேதி சொல்லியுள்ளார்..! அவருக்கு நன்றியும்..வாழ்த்துகளும்!
ReplyDeleteநடிகர்கள் பொதுவாக ஆர்டிஸ்ட்கள் ..உணர்ச்சி வயப்பட்டுதான் எதையுமணுகுவர்..நடிப்பை போலவே! நதிநீர் விவகாரமும்..ரசிகவிருந்தும் அது போலவே !.இதை யாரும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை..அவராகச் சொன்னதுதான்!
ஏன் நதிநீர் இணைப்புக்கு என நிதியை ..பிரதமர் அலுவலகத்தில் கொடுத்து..ஆரம்பித்து வைக்கலாமே ! தனக்கு சோறு இல்லாவிட்டாலும் ஆயிரம் கொடுத்து ரசிக்கும் ரசிகனுக்கு..ஒருவாய் சோறு போடக் கூட யோசிக்கும் தன்மையை என்ன சொல்வது..? ஒன் - வே ட்ராக் என்றா?
செல்வாக்கு இருக்கிறது..உண்மை!.சொல்வாக்கு?
தன்வார்த்தையைக் காப்பாற்றத் தெரியாமல் இருப்பவது..! தனக்குப் பிடித்ததை மட்டும் ஏற்றுக் கொள்வது..மற்றவற்றைக் கை கழுவுவது..!
தலைவனுக்கு அழகல்ல...!
ஆகவே தான்..ஒரு நல்ல நடிகன் ..தலைவனாக வேண்டாம்" என வேண்டுகோள்!
1)நீங்கள் சொன்னதை அவர் ஆமோதித்தார் என்று கூறாதீர்கள்,நீங்கள் தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.எதையாவது எதிர்பார்ப்பவர்கள் தான் நீங்கள் சொல்லியது போல stunt அடிப்பார்கள்,ரஜினி அப்படி அல்ல.
ReplyDelete2) ஏதோ இந்தியாவில் எல்லோரும் சொன்ன சொல்லை காப்பாற்றியது போலவும்,ரஜினி மட்டும் காப்பாற்றவில்லை என்றும் சொல்வது
ஆச்சர்யமாக இருக்கிறது.
3) தமிழ்நாட்டில் திரை தொடர்பு இல்லாதவர்கள் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இது "ஓரிரவிலேயே "(அண்ணா )ஆரம்பித்த விஷயம்.
4) நான் வெளிப்படையாக கூறுகிறேன்,என் விருப்பம்-வைகோ அவர்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கிறது. ஆனால் இது
workout ஆகுமா? நன்றி. :-))
எதிர்பார்த்தது போலவே அமைந்தது..நன்றி!
ReplyDelete+நம்பிச் செல்வோருக்கும் தாமதமாகமாவது புரியக் கடவது
+அவரும் நூற்றில் ஒன்றுதான் என ஒப்புக்கொண்டது!
+தமிழரின் அதீத சினிமா வெறிக்கு..தன் தலை எழுத்தை பணயம் வைக்கின்றனர்!
+கவர்ச்சியின் முன்னர் மக்களிடம் "வைகோ " போன்றவர் எடுபட மாட்டர்!
கருத்துகளுக்கு நன்றி..மீண்டும் அவர் ஏதாவது "வாய்ஸ்" கொடுத்தால்..அப்போது விவாதிப்போம்..நன்றி..வணக்கம்!
அவரிடம் நாங்கள் என்றும் எதையும் எதிர்பார்த்ததில்லை-அவர் நலத்தை தவிர.
ReplyDeleteஅவரை போன்ற நல்ல மனிதர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைக்கிறோம்.
நன்றி.வணக்கம்.
அவர் போன்ற நல்ல மனிதர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதை
ReplyDeleteதவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.நன்றி,வணக்கம்.