தென்மேற்குப் பருவக்காற்று ஆரம்பிச்ச ஒரு மாசத்துல, பொள்ளாச்சிலே எந்திரவியல் பட்டயப்படிப்புக்கு சேர்த்துவுட்டாங்க..அப்படியே ஹாஸ்டல்யும் மூணு பேர் இருக்குற அறையில் அடைச்சுட்டாங்க...திரும்பிப் பார்க்குறேன்..என்னோட பத்தாப்பு படிச்ச பய முக்கால் பேண்ட் போட்டுட்டு நிக்கிறான்.."வாடா ரேங்க் வாங்குன நீயும்,குறைச்ச மார்க் வாங்குன நானும்..ஒரே காலேஜ், ஒரே ரூம்'னு வெறுப்பேத்துனான்!
கோவமா வந்தாலும், தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே பரவாயில்லன்னு சமாதானம் பண்ணிக்கிட்டேன்...ஆளு கொஞ்சம் சிறுசானாலும்,நம்மள விட உலகஞானம் ஜாஸ்தின்னு போகப் போக தெரிஞ்சது!
இப்பெல்லாம் பசங்க, ஒருநா க்ளாஸுக்குக் கட் அடிக்கவே பயப்படறானுக..புதுப்படம் ரிலீஸ் ஆனாலோ இல்லே படப்பிடிப்பு டீம் காலேஜ்க்கு எதுக்கால இருக்குற பயணியர்விடுதியிலெ வந்து இறங்குனாலோ, ' மாஸ் கட்" தான்!
அதுலேயும் 'மண்டே மாஸ்கட்" ரொம்பப் பிரபல்யம்!
ஹாஸ்டல்ல காலைல 6 மணிக்கு சீனியர் பக்கத்து அறைகளில் இருந்து கூட்டமா விசில் சத்தம், தொடர்ச்சியா 5 நிமிஷத்துக்கு விடாமக் கேட்கும்..அதான் சிக்னல்! நேரா மெஸ்ஸுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, 8 மணிக்கெல்லாம் எல்லோரும் வெளியா போயிடணும்.பஸ்ஸுல வர்ற வெளிப்பசங்கள கேட்லயெ நிறுத்தி, கூட்டிட்டுப் போயிடுவாங்க!
மொதல்ல கண்டிச்ச நிர்வாகம், பசங்க பண்ற குறும்பப் பார்த்து மாசத்துல 2 நாளைக்கு மேல கட்' அடிக்கக் கூடாதுன்னு எழுதப்படாம ஒப்பந்தம் ஆயிடுச்சு!
அந்த வருஷம் ஆடிப்பதினெட்டுக்கு, ஊருக்குப் போகவிருந்த என்னை,நம்ம ரூம்மேட் தொல்லை பண்ணி..ஆழியார்டேமுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான்! ஏண்டா...அவனோட போணோம்னு ஆயிடுச்சு!
காதலிக்க நேரமில்லை படத்துல ரேடியோப் பெட்டிய பார்க்ல இருக்குற சின்ன பாலத்துலெ இருந்து, ராஜஸ்ரீ போடுவாங்க இல்ல..அதே பாலத்து மேல நானும்..அவனும் நின்னுட்டு இருந்தோம்!
பொண்ணுங்க கூட்டம் ஒண்ணு கடந்து போச்சு..உடனே நம்ம தொல்லை என்ன பண்ணினான் தெரியுமா...ஜன்னல் வெச்சு, பஃப் கை ஜாக்கெட் போட்ட ஒரு பொண்ணப் பார்த்து, " டிசைன் பாப்பா டிசைன்" நு கத்திட்டான்!
அப்புறம் ரொம்பப் பாவமா மூஞ்சிய வெச்சுட்டு நின்னுட்டான்..அந்த பொண்ணுக திரும்பி பக்கத்துல இருந்த நான் தான் கத்துனேன்னு தெளிவா முடிவு பண்ணிட்டாளுக..! கொஞ்ச நேரம் கடுமையா மொறச்சுப் பாத்தாளுக..ஒண்ணுமே பேசல..போயிட்டாளுக!
நமக்கு வாழ்க்கையே வெறுத்திருச்சு..குசும்புக்காரன் அடக்க முடியாம சிரிக்கிறான்! அன்னிக்கு முடிவு பண்ணதுதான்..கூட்டமா பசங்களோட பராக்குப் பாத்துட்டு நிக்கிறதில்லன்னு!
நீங்களும்..பார்த்துங்க..ஆடி 18 அன்னிக்கு பாலத்துக்குப் பக்கம், தொல்லைகளோட போகாதீங்க..
ஆனா..தனியா போங்க!

மூன்றாண்டுக்கு முன்பு எடுத்த
ReplyDeleteபுகைப்படம் என்பதால் தண்ணீர் நிறைந்து இருக்க
பச்சைப்புல்வெளியும் பூக்களும்
ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன
பழைய பால்ய நினைவுகளைப் போலவே
மிக மிக ரம்மியமாய்...
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துகள்
This comment has been removed by the author.
ReplyDeleteசுவையான நினைவுகள்! அருமை! இந்த பதினெட்டில் நீரில்லா காவிரியை நினைத்தால் வேதனைதான் இல்லை!
ReplyDeleteஇன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
Ramani Sir!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி..சார்!
s suresh Sir!
ReplyDeleteகாவிரியைப் பேசாமல் இருக்கமுடியாது ஆடி 18ல்!
வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி..சார்!