ஒருஜோடி பயனாளர் கூடி பெற்றெடுக்கும் ரத்தினங்கள்
பொதுவாக ஒற்றைக் கருவறையில்
சிலவாக புதுப் புது தனித் தனி அகங்களில்
அபூர்வமாக வாடகை அறைகளில்
ஆதிமூலக்கூறு ஏகதேசம் சரியாகவும்
காலவித்தியாசத்தாலும்
பெறுபவர்களின் மனவோட்டத்
தன்மை மாறுபாட்டாலும்
பூர்வஜென்ம பாவ புண்ணிய கணக்குகளாலும்
பாலிலும் பருவத்திலும் அழகிலும் கருத்திலும்
சற்றே மாறுபட்டு
வெளிவந்து தொடர்ந்து அருகாமையில்
வளரும் உறவுகள்...
உடன் பிறந்தோர்!
பாட்டன்,அப்பன்,ஆத்தா,அம்மா,மனை/துணை,
மைதுன உறவுகள், மக்கள்,பெயரர்கள்..
இறுதியாக நட்பு..எல்லாம் டூப்பு!
உடன் பிறந்தோரே டாப்பு!
எதில்?
காலமெல்லாம் நம்மோடு வருவதில்!
சிணுங்கல்கள் செல்லச் சண்டைகள்
முதலாம் பருவத்திலும்
பிரிய மற்றும் ஆணைகளால் பங்கீடுகள் அடுத்ததிலும்
இரும்புச்சங்கிலி போல் உறுதியாய் வலுவடைந்திருக்கும்
பெற்றவர் மனம் இறுமாப்படைந்திருக்கும்
மூணாம் எட்டு பருவத்திலே!
பெற்றமரம் ஆலமரம் என்றால்தானே விழுதுகள் விழும்!
ஆலமரங்கள் குறைவுதானே..
தென்னைகளும் முருங்கைகளும் தானே இங்கு அதிகம்!
மரங்களில் தங்கும் பறவைகளின் குணம்
மரத்தின் காய்களுக்கும் வந்துவிட்டது..
றெக்கை முளைத்ததும் பறப்பதைப் போல்!
தொப்புள்கொடி உறவுகள்
ஒருசெடியின் மலர்களாக ஒரு தோப்பு குயில்களாக
ஒரு தென்னை குலைகளாக...
பெரும்பாலும்
ஒரு ஆலையில் தயாராகும் கார்களாக
மாறிப் போவது காலத்தின் விந்தை!
இயக்கம் ஓட்டுநர் கைகளில்!
புதிதாக வரும் மைதுன உறவுகளில்!
துணைகள் இடையே எத்தனை எரிச்சல்,
ஆவேச பரிமாறல்கள்..வெறுப்புகள்
அபூர்வமாக அன்பு பங்கீடல்கள்!
திருமணத்திற்குப்பின் அன்பு ரோஜாக்கள்
ஆவாச தே'வதைகளாக மாறிப்போகும் விந்தை என்ன?
அதிக பாதிப்பு ஆண் உடன் உறவுகளுக்கே!
விளையாட்டுச் சண்டை வினையாகிவிடுகிறது
புதுமனைகளால்...!
தொப்புள் கொடி பெண்சகோதரிகளின் கணவர்கள்
சகலைகளாம்..ஆனால் அவர்கள் ஆவார்களே
கட்டாயாச் சகோதரர்களாக!
இருபால் உடன் உறவுகளை ஈர்ப்பது இணைப்பது
அண்ணியின் கைகளில்..
இளைய உறவின் வரவின் வாய்களில்!
ஏறக்குறைய நம் வாழ்நாள் முழுதும் உடன் வருவது உறவா..தொந்தரவா
உடன் வருவது எனில் அது நம் அங்கம் போன்றதன்றோ..
அதில் பங்கம் வரலாமோ?
உடலில் தலையே பிரதானம்..
உடன் பிறந்ததிலும் தலைமகனே/மகளே பிரதானம்!
முன் ஏர் செல்லும் வழியிலெயே பின் ஏர்
செல்லும்..
செல்ல வேண்டும்..
செலுத்த வேண்டும்!
வேண்டும் நலம்!
இயக்கம் ஓட்டுநர் கைகளில்!
ReplyDeleteபுதிதாக வரும் மைதுன உறவுகளில்!//
ஒட்டுமொத்த வாழ்வின் நிலைகளை மாறுதலகளை
மிக அழகாக நேர்த்தியாக பதிவு செய்துள்ளது
வெகு வெகு அருமை
சொற்பிரயோகங்களில் சொக்கிப்போனேன்
தலைப்பை விட பதிவு விஸ்தாரமாகச் செல்கிறது
கருவுக்கு ஏற்றார்ப்போல தலைப்பு இன்னும்
அதிகப் பொருள் தரும்படி இருக்கலாமோ
எனத் தோன்றுகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொந்தரவு நிறைந்த உறவுகளும்,
ReplyDeleteஉறவுகளால் வருகிற தொந்தரவுமாக பூத்திருக்கிற இந்தத சமூகம் எப்பொழுதும் ஒரு காட்சிக் கோடாகவே/
தொந்தரவுகள் நிறைந்த உறவும்,உறவுகளால் வருகிற தொந்த ரவுகளும் நிறைந்தே காட்சி தருவதாக நம் சமூகக்கோடு/
ReplyDeleteRamani Sir!
ReplyDeleteஏனென்று எதெற்கென்று தெரியாமலே, உடன்பிறவுகள் பிழன்று பிரண்டு சென்றுவிடுவது அநியாயம்..பெற்றவருக்கு!
தங்கள் ஆலோசனைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றி!
விமலன் Sir!
ReplyDeleteதங்கள் வருகையும் கருத்தும் என்னை பெருமைப்படுத்தியது! மிக்க நன்றி!
Neenda natkalukku piraku varukinren.. udan pirantha uravu oru palam ... Athey nerathil palaveenamum kooda...
ReplyDeleteNalla pathivu...
துணைகள் இடையே எத்தனை எரிச்சல்,
ReplyDeleteஆவேச பரிமாறல்கள்..வெறுப்புகள்
அபூர்வமாக அன்பு பங்கீடல்கள்!
நின்று வாசித்த இடம்..
மதுமதி !//
ReplyDeleteபெருமைப்படுத்தும் உமது கருத்துகளுக்கு மிக்க நன்றி..நண்பரே!
அருமையான கவிதை!
ReplyDeletes suresh ! sir!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
Advocate P.R.Jayarajan sir!
ReplyDeleteஎப்போ எங்களைப் பார்க்கவருவீங்க சார்!