Monday, July 2, 2012

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!

 ஒரு நாடோ,வீடோ வளமுடன் இருக்கிறது என்றால் வரவு அதிகரிக்க வேண்டும்..செலவு அதிகரிக்கக் கூடாது! முன்னால் பிறந்தவன் அண்ணன்..பின்னால் வந்தவன் தம்பி என்னும் ஒப்பற்ற அப்பாயிஸக் கொள்கை (தங்கப்பதக்கம் சோ) போன்று எளிமையானதே வளமாயிஸத் தத்துவமும்!


நாட்டின் வருவாயை அதிகரிக்க ஒரேவழி வரிகள்!வரிவருவாயை அதிகரிக்க இருவழிகள்! ஒன்று - வரிகளை அதிகரிப்பது: இரண்டு - நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து, விகிதாசாரப்படி அதிகவரியாகக் கிடைப்பது!

வரிகளை ஓரளவிற்கு மேல் உயர்த்துவது பலனளிக்காது.கம்பியை ரொம்ப முறுக்கினால் உடைந்துவிடும்!எனவே இருக்கும் ஒரே வழி - உற்பத்தியைப் பெருக்குவது!

அரசாங்கத்தின் வேலை - உற்பத்தியை வருவாயைப் பெருக்க சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது!தற்போது வணிகம் உலகமயமாக்கப்பட்ட சூழலில், பொருட்களின் விலைகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏறக்குறைய ஒரே அளவில்! உள்நாட்டு பொருட்கள் எனில் அரசாங்கம் எளிதில் கட்டுப்படுத்தலாம்..ஆனால் கச்சா எண்ணெய்,உலோகங்கள் விலைகளின் நிர்ணயம் உலகச் சந்தையின் கைகளில்!

என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!




தேவைகளை அனுசரித்தே விலைகள்! தேவை அதிகரிக்கும் போது விலைகளும் அதிகரிக்கிறது! தேவைகளின் அதிகரிப்பு சதம் சீராக இருக்க வேண்டும்! ஆனால் நாட்டில் நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கத்தின் விளைவாக, தேவைகள் சதம் தாறுமாறாக உயர்ந்துள்ளது! உதாரணமாக கச்சா எண்ணெயும்,தங்கமும்!


உற்பத்தி வருவாயை அதிகரிப்பவை தொழிற்சாலைகளும்,விவசாயமும் தான்!கடந்த பலவருட சீரான வளர்ச்சிக்குப்பின் இந்தவருட தொழிற்வளர்ச்சி விகிதம் தடாலடியாகக் 6சத அளவிற்குக் குறைந்துள்ளது..அதே சமயம் பணவீக்கத்தின் வளர்ச்சி 10 சத அளவில் உள்ளது!

தொழிற்சலைகள் அடிவாங்குவதற்குக் காரணிகள் - உலகப் பொருளாதார மந்தம், மின்பற்றாக்குறை(சுமார்50சதம்),மாசுக்கட்டுப்பாடுகள்,வேலைஆட்கள் தட்டுப்பாடு, அதிகவரிகள் மற்றும் செலவீனங்கள்!

விவசாயத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.வேலைஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.வெட்டித் திட்டமான ஊரக வேலைத்திட்டம் விவசாயிகளை அலற வைத்துக் கொண்டுள்ளது!விதை/உரம் தட்டுப்பாடு/விலையேற்றம் மேலும் கால்வாய்பாசன வசதியில்லா விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமை, விற்பனை பொருட்களுக்கு இடைத்தரகர் சரிபங்கு கேட்பது என பலதடைகள்..விவசாயம் வேகமாக செத்துக் கொண்டுள்ளது!


மறுபக்கம் செலவீனங்கள் அதிகரிப்பு - கவர்ச்சித்திட்டங்கள், மானியங்கள், ராணுவச் செலவுகள், அரசு அதிகாரிகளுக்கு அள்ளித்தருதல்,ஆடம்பரச் செலவுகள்,அதிகரிக்கும் இறக்குமதி..!

வரவு குறைகிறது ..அல்லது அதிக மாற்றமில்லை..ஆனால் செலவோ எகிறுகிறது...முடிவில் வணிகப்பற்றாக்குறை அதிகரிக்கிறது..பற்றாக்குறையை சமாளிக்க நோட்டு அச்சடிக்கப்படுகிறது..பணத்தின் மதிப்பு சரிகிறது!

அயல்நாட்டு முதலீடுகளை அதிகரித்தால் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என்று அரசு அவர்களை பலசலுகைகளைக் காட்டி ஊக்குவிக்கிறது.ஆனால் உளநாட்டுத் தொழில்களுக்கு அதே சலுகைகள் மறுக்கப்படுகிறது..மேலும் உள்நாட்டுத் தொழில்களுக்கு கட்டுப்பாடும்/தட்டுப்பாடும் அதிகரிக்கப்படுகின்றது..உதாரணமாக மின்சாரம்.மற்றும் மூலப்பொருட்கள்!

ஆடம்பர செலவுகளை கட்டுபடுத்துவதும், முதலீடுகளை உற்பத்தியைப் பெருக்குவதில் இடுவதிலும், வீடு/நுகர் பொருட்களுக்கான செலவுகளுக்கு கடன் வழங்குவதைக் குறைப்பதும், அரசுசம்பள அளவைக் கூட்டாமல் இருப்பதும்,கவர்ச்சி/வெட்டித் திட்டங்களுக்கு மானியங்கள் தருவதைக் குறைப்பதும்......
.நீ ண்டகால பயனளிப்பவை!

தற்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58 வரை சென்று 56ல் இருக்கிறது.இது மேலும் குறைந்து 52 வரை வருவதற்கு வாய்ப்புள்ளதாக மும்பை பணச்சந்தை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!(டிஸ்கி: வியாபாரத்திற்கு அல்ல..தகவலுக்கு மட்டுமே)



என்னதான் நடக்கும்..நடக்கட்டுமே!

















11 comments:

  1. அருமையான அலசல்
    அனைத்திற்கும் காரணமே இந்த பாழாய்ப் போன அரசியல்தானே
    கற்பழிப்புக் கேஸில் நான்கு முறை ஜெயிலுக்குப் போனவன்
    எனத் தெரிந்தும் லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மென்
    பொறுப்பு கொடுத்தல் போல இந்த சுய நல
    அரசியல்வாதிகளிடந்தானே நம் பொது ந்லனை ஒப்படைத்து
    நாம் அவதிப்படவேண்டியிருக்கிறது
    சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Ramani sir!
    தெளிவற்ற அரசியல் தலைமையைக் கொண்டுள்ள நமது தேசமும் மாநிலமும்,பொருளாதாரத்தை மந்தப்படுத்தி வருகின்ரன! விரைவில் நாசப்படுத்தும் அறிகுறிகளும் தெரிகின்றன! விரிவான விரைவான பின்னூட்டத்திற்கும் வாழத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  3. தர்ம சிந்தனை போய் எல்லாமே வியாபாரமாக போய்விட்டது.இப்போ இந்த உலகை ஆள்வது பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ள எந்த ராணுவமும் கிடையாது.உலகின் மிக பெரிய வியாபாரிகள்தான். தங்களின் வரவை எந்த அரசியல்வாதிகள் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சுட்டிக்காட்டும் வெளிநாட்டில் பங்களா சுவிஸ் வங்கியில் பணம் கொட்டுகிறார்கள். நம் நாட்டுக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே நம் அரசியல்வாதிகள் அதற்கு உறுதுணையாக இருந்து கை எழுத்து போடுகிறார்கள். அநியாயமாக சேர்த்த சொத்தை பாதுகாக்க திரும்பவும் தேர்தலில் நிற்கிறார்கள் அல்லது ஒரு கட்சி ஆரம்பித்து அதற்க்கு தலைவராகிவிடுகிரார்கள். இந்த அரசியல்வாதிகளால் நம் அரசு ஊழியர்களும் சுத்தமா கெட்டுப்போயுள்ளார்கள் இப்போ நம் நாடு ரொம்ப தூரம் கெட்டு போய்விட்டது. நம் நாட்டு அவலங்களை சொல்ல மாளாது. ஒரே வழி மக்கள் புரட்சி அல்லது ஓட்டு உரிமையை 50 வயது ஆன பட்டதாரிகளுக்கு மட்டுமே என்று அறிவிக்க வேண்டும். உங்கள் பதிவி அருமை. தொடரட்டும். வாழ்க வளர்க

    ReplyDelete
  4. நமக்கு பெருமளவில் நஷ்டத்தை தருவது எரிபொருள் இறக்குமதி. பொதுவாக, வளரும் நாடுகளில், பொதுப் போக்குவரத்து அதிகமாக இருக்கவேண்டும். தனியார் போக்குவரத்து குறையணும்(கார்,டூ வீலர் ) ஆனால் இங்கு நிலை நேர் எதிர்.

    ReplyDelete
  5. Your analysis of the situation shows a thorough research into what is happening in India. But your title indicates a sort of 'helplessness' and a bleak future. Our leaders should do much more, jointly.

    ReplyDelete
  6. chinnapiyan Sir!

    தற்போது வெகுவாகப் பேசப்படும் பிரிக்ஸ் நாடுகளில், ரஷ்யாவும்,இந்தியாவுமே மிகவும் தறிகெட்டு சென்று கொண்டுள்ளன! சீனா வழிகாட்டி..பிரேஸில் ஆர்ப்பாட்டமில்லாமல்..தெனாப்ரிக்கா வளம் மிக்கது!
    கலைஞர் பாஷையில் சொல்லவேண்டுமெனில் தேசத்தின் ஈரல் கெட்டுப் போயுள்ளது!

    பாராளுமன்றத் தேர்தலுக்காவது தாங்கள் சொன்ன மூத்தோர் வாக்குரிமை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்! கட்சிகளின் காம்ப்ரமைஸ் தன்மை குறைந்துவிடும்.!

    விரிவான அலசலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  7. எல் கே Sir!

    சரியான கணிப்பு! தற்போது உள்நாட்டிலும் ஓரளவு கச்ச எண்ணெய் உற்பத்தி ஆகிறது. இருந்தபோதிலும் அவை ரிலையன்ஸ் போன்ற தனியார் வசம் உள்ளது. அவர்களுக்கு அடக்க விலை 35டாலர்/பேரல் தான் ஆகிறது. இருந்தபோதிலும் அவர்களுக்கு ஏற்றுமதியில் தான் ஆர்வம்.சில்லறை விற்பனையையே முடக்கி வைத்துள்ளனர்!

    தங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  8. krack Sir!

    Thanks for your visit and comments! Yes, the situation underlying is provides us the information which leads only to the conclusion of "bleak future"!Present leadership @ the center doesn't have & carry the vision as that of China!

    Workers are now favoring construction field which is flourishing now, due to priority funding by the banks rather than Industry and Agriculture!

    ReplyDelete
  9. இந்திய பொருளியல் பற்றிய சிறப்பான அலசல்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. s suresh sir!

    தங்கள் மேலான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete