Monday, July 30, 2012

வருமோ மதுவிலக்கு?



ஊரெங்கும் பரபரப்பு...கொளுத்திப்
போட்டது சிறுநெருப்பு..!
புலனாய்வுப் பத்திரிக்கையாம்..
சின்ன ஆனந்தனாம்..
வைத்தானய்யா.. வெடி வேட்டு!
வைதானய்யா.. எல்லா தட்டு!


தீ'ரா விடக் கூத்தாடி... வாயாடி
மயக்கினரே தமிழ் மக்களை!
தேனெடுத்து புறங்கையை நக்கிவிட்டு
மதுர ருசிகண்டு மதி மயங்கி
கிறங்கிய வேளையிலே...




சுதந்திர தாகம் அடங்கி
கால்நூறாண்டு தவமிருந்த
தமிழ்க்குடிமன்களின் தாகமறிந்து
கருணை' கொண்டு..தாயுள்ளத்தோடு
கள்ளுப்பாலை வார்த்த
தனிப்பெரும் இனக்காவலனே ..!
அவர்தம் வாழ்த்தே உன்னை நீடூழி
வாழ்வைக்கிறது!


ஜனத்திலகமும் கனகதாரைகையும்
கருணைத்தொகையை மிஞ்சினர்
செல்வாக்கிலும்..
அள்ள அள்ளக் கொடுத்த
அமுதபானத்திலும்!

 வருமோ மதுவிலக்கு?

கழுதைக்கு வயசு பத்தாம்..
அறிமுகமாகி ஆச்சே நாலுகழுதை வயசு!
தாத்தன்,அப்பன்,பிள்ளை,பேரன்..
இதுதான் அந்த நாலு கழுதையும்!
எவனுக்கும் பாலு பிடிக்கறதில்ல..தக்காளி
விவசாயிங்க கொட்ராங்க பாலை ரோட்ல !


பசும்பால்..எருமைப்பால்
பருத்திப்பால்..தாய்ப்பால்

இதெல்லாம் டூப்பு..!
பார்லிப்பாலே டாப்பு!
புளிச்சக் கரும்புப்பாலே சேர்ப்பு!





பிரம்மன் தலையில தான் எழுதுவான்..
தமிழ்க்குடிமகன் ஜீன்லேயே எழுதிட்டான்!

கமிஷன் கிடைக்காதவனும்
வாந்தி எடுக்குறவனும்
வயசுப்புள்ளக்காரனும்
வயசுக்கு வராதவனும்
காட்டுக்குப் போறவனும்..
குடிக்கிறதில்ல..மத்தவன்?

அட..நீயும்தாம்பா அதுல..!

விலக்கிட்டு நாளைலே இருந்து
தப்பு..தண்டனைன்னு சொன்னா..
இதுநாள் வரைக்கும் கடையத் திறந்து
பரிமாறிக் கொடுத்த அறிஞர்களுக்கு
கொடுக்கணும்..தூக்கு! 

நேத்து நீ செஞ்சே..அது தப்பு!

இன்னிக்கு அரசும், நீயும் சேர்ந்து செய்யறிங்க..
அதுனால அது தப்பில்ல!

நாளைக்கு நீ மட்டும் செஞ்சா அது தப்பு!
அப்ப தப்பு யார் மேல?..மகாஜனங்களே சொல்லுங்க தீர்ப்பு!




இன்று விலக்கப்படுவது..நாளை அமலாகும்..!
இங்கு விலக்கப்படுவது..வேறொரு ஊரில் வழக்கில் இருக்கும்..!
எங்கும் விலக்கப்படுவது யாதாயினும், இங்கும் விலக்கலாம்!
இங்கு மட்டுமே விலக்கம்..எங்கும் தாராளம் எனில்..இங்கு மட்டும் எதற்கு விலக்கம்!

உடனடித் தேவை விலக்கம் அல்ல விளக்கம் தான்!

12 comments:

  1. விலக்கம்- அருமையான விளக்கம்

    ReplyDelete
  2. கோவி Sir!

    இனிது..இனிது !
    தங்கள் வருகையும்..கருத்தும்!

    ReplyDelete
  3. இன்னும் எடிட் பண்ணலாம்.. குட் ஒன் ;-0

    ReplyDelete
  4. இன்று விலக்கப்படுவது..நாளை அமலாகும்..!
    இங்கு விலக்கப்படுவது..வேறொரு ஊரில் வழக்கில் இருக்கும்..!
    எங்கும் விலக்கப்படுவது யாதாயினும், இங்கும் விலக்கலாம்!
    இங்கு மட்டுமே விலக்கம்..எங்கும் தாராளம் எனில்..இங்கு மட்டும் எதற்கு விலக்கம்!

    உடனடித் தேவை விலக்கம் அல்ல விளக்கம் தான்!


    விலக்கு குறித்து முடிவெடுக்கவேண்டியவர்கள்
    விளங்கிக் கொள்கிறார்களோ இல்லையோ
    குடித்து குடித்து மயங்கிக் கிடப்போர்
    தெளிவடைகிறார்களோ இல்லையோ
    படிக்கிற நாங்கள் தங்க்ள் பதிவு படித்துத்
    தெளிந்துவிட்டோம்
    கொஞ்சம் இறுக்கமான படைப்பாயினும்
    மனம் கவர்ந்தாருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. wowwwwwwwwwwwwwwwwww அருமையான விளக்கம்

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் Sir!

    வசிட்டரின் வாயால்........பட்டம் வாங்கவே ப்ரியம்!

    ReplyDelete
  7. Ramani Sir!

    ஆட்சியாளர்கள் தான் எப்பை எப்படி மக்களை மதுவை வைத்துக் கொண்டு ஆட்டிப் படைக்கின்றனர்! என்பதன் ஆதங்கப் பதிவே இது!

    மேலான கருத்துக்கும் ,ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  8. Avargal Unmaigal Sir!

    தங்கள் அன்பிற்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. சிறப்பான கருத்துக்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  10. s suresh Sir!

    கண்டிப்பாக!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  11. இன்று விலக்கப்படுவது..நாளை அமலாகும்..!
    இங்கு விலக்கப்படுவது..வேறொரு ஊரில் வழக்கில் இருக்கும்..!
    எங்கும் விலக்கப்படுவது யாதாயினும், இங்கும் விலக்கலாம்!
    இங்கு மட்டுமே விலக்கம்..எங்கும் தாராளம் எனில்..இங்கு மட்டும் எதற்கு விலக்கம்!//

    வேதனையை மனதில் தூண்டும் வரிகள்...!

    ReplyDelete
  12. MANO நாஞ்சில் மனோ!

    அண்ணே வாங்க..கருத்துக்கு நன்றி!

    சுயநல ஆட்சியாளர் கையில் பாவையாக தமிழக மக்கள்!
    யாரும் எடுத்து விவாதிக்கத் தயங்கும் கருத்து இது!

    அனைத்துத் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைக்கலாம் என்பதே என் கருத்து! வேண்டாம் என்பவர்களைத் தவிர்த்து!

    ReplyDelete