Thursday, April 21, 2011

பெட்ரோல் விலை உயருகிறது?

கடந்த ஒரு வருட காலத்தில், பெட்ரோல் விலை 5,6 முறைகள் சிறிது சிறிதாக உயர்த்தப் பட்டுள்ளது! எந்த நேரமும் மீண்டும் ஒரு விலையேற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பு!

 வரவிருக்கும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு, அரசாங்கத்தை மட்டுமே, காரணியாக்க முடியாது! உலக சந்தையில் கடந்த வருடத்தில் 65 - 85 அமெரிக்க டாலர்களாக, விற்பனையாகிய கச்சா எண்ணெய், தற்போது 105 - 115 டாலர் அளவில் விற்பனையாகி வருகிறது!

இந்திய சாலைகளில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், புதிதாக சேர்ந்து கொண்டே இருக்கின்றன! தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது! இந்தியத் தேவையில், சுமார் 70 சத கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலமே கிடைக்கிறது!

கச்சா எண்ணெய் அதிகம் உபயோகிக்கும் நாடுகள்,மிகப் பெரிய சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்தி வைத்துள்ளன! விலை குறைவாக்கவுள்ள சமயங்களில், எண்ணெய் சேமிப்பை பலப் படுத்தி விடுகின்றன! எண்ணெய் டேங்கர் கப்பல்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டு, கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது!

தற்போது ஏற்பட்டுள்ள அபரிமிதமான கச்சா எண்ணெய் விலையேற்றம், தற்காலிகமானதே எனினும், அடுத்து வரும் காலங்களில், விலை மேலும் எகிற வாய்ப்பு உள்ளது என வணிக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்!

சேமிப்பு வசதி குறைவாக உள்ளதாலும், உள்நாட்டு உற்பத்தி தேவைக்கு ஏற்ப இல்லாததாலும், பெட்ரோலிய வரியின் வருமானமே குறித்த வகை வருமானம் என்பதாலும், தற்போது நடை பெற்றுவரும் மாநிலத் தேர்தலின், முடிந்த பின், பெட்ரோலியப் பொருட்கள், சுமார் 2- 3 சத விலையேற்றப் படுவது தவிர்க்க இய்லாதது!

8 comments:

  1. பெட்ரோல் விலை ஏன் உயருது.? இன்னமும் உயரலாம் சொல்றீங்க.. நடக்காம இருந்தா சந்தோசம்..

    ஹி ஹி.. இப்படியெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதலுக்கு காரணம் இந்தியா-அமெரிக்கா உறவு தான்னு என் நண்பர் ஒருத்தர் சொன்னார்.. அது என்னவோ தெரில..

    ReplyDelete
  2. முதல் விசிட் நான்தான்

    ReplyDelete
  3. டந்த வருடத்தில் 65 - 85 அமெரிக்க டாலர்களாக, விற்பனையாகிய கச்சா எண்ணெய், தற்போது 105 - 115 டாலர் அளவில் விற்பனையாகி வருகிறது!//
    ;-((

    ReplyDelete
  4. எதிர்காலம் என்னவாகுமோ...

    ReplyDelete
  5. மாட்டு வண்டிலதான் போகணும்...இனி.

    ReplyDelete
  6. நண்பரே நம் நாட்டில் பெட்ரோலை அரசு நினைத்தால் ரூ 21 க்கு தர இயலும்.......இது அரசாங்கத்தின் கண்துடைப்பு !

    ReplyDelete
  7. நண்பரே நம் நாட்டில் பெட்ரோலை அரசு நினைத்தால் ரூ 21 க்கு தர இயலும்.......இது அரசாங்கத்தின் கண்துடைப்பு !

    ReplyDelete
  8. பதிவு ஓக்கே.. பிளாக்கோட லே அவுட் பக்கா..

    ReplyDelete