Monday, April 18, 2011

அடுத்த சச்சின் டெண்டுல்கர் தயார்!

 கிரிக்கெட் உலகில், இந்தியாவின் சார்பாக விளையாடும் சச்சின் டெண்டுல்கர், தனது 17ம் வயது முதல், சுமார் 20 வருடங்களாக, விளயாடி வியக்கத்தகு பல சாதனைகளை செய்து வருகிறார்!

சமீபலாகமாக அவர் ஆட்டத்தைக் கண்ணுறும், பெரும்பாலான அன்பர்களின் மனதில் ஒரு ஐயப்பாடு தோன்றி வருகிறது! இனி எத்தனை நாள் சச்சின் விளையாடுவார்? இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்? என்பதே அது!

ஏன் சச்சின் மேல் மட்டும், இந்த எதிர்பார்ப்பு? சச்சின் ஒரு பிறவி ஆட்டக்காரர்!
கிரிக்கெட் ஆடுவதற்காகவே படைக்கப்பட்ட குழந்தை!

2011உலகக் கோப்பை வெற்றி, சச்சினுக்கு சமர்ப்பித்தது, இந்தியக் கிரிகெட்டிற்கு அவர் செய்த சேவைக்கு, திருப்பி செலுத்தப்பட்ட சிறு மரியாதையே!

 வருங்கால கிரிக்கெட் உலகம், இவரைப் போல பிறவித் திறமையாளர்களை மிகவும் எதிர்பார்க்கிறது!
அவர்களின் ஆசையை மெய்ப்பிக்கும் வகையில், நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பிறவித் திறமையாளரை, இங்கு அறிமுகப் படுத்துகிறேன்!

2004 - ல் பிறந்த கிருஷ்ண நாராயணன் எனும் குழந்தை, ஆடும் ஆட்டத்தைப் பாருங்கள்! சுமார் 4 வயதில் எடுக்கப்பட்ட படம் இது!

இந்தியக் கிரிக்கெட்டிற்கு அழிவில்லை!



6 comments: