Monday, April 18, 2011

ஆட்டமா? குதிரை ஓட்டமா?

 திருமண நாளின் போது, மாப்பிள்ளையைக் குதிரை மேலே அமர்த்தி, திருமணம் நடைபெறவுள்ள இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வருவது வட இந்திய அன்பர்கள், கடை பிடிக்கும் ஒரு வழிமுறை!

அந்த ஊர்வலத்தில் ஒலிக்கப்படும் இசைக்கு ஏற்ப, நட்புகளும், சொந்தங்களும் ஆடியபடியே வருவர்!

இதை போன்ற ஒரு மாப்பிள்ளை அழைப்பில், நடைபெற்ற ஒரு கலாட்டாவைத்தான், இங்கே பார்க்க விருக்கிறீர்கள்!
மாப்பிள்ளை லோடு ஏற்றப்பட்ட குதிரை, தனக்கு முன்னால் பட்டையைக் கிளப்பி ஆடும் அழகனின், ஆட்டத்தை நிறுத்த முதலில் கனைத்துப் பார்க்கிறது! பிறகு பின்னால் செல்கிறது! அழகனின் ஆட்டம் மேலும் வேகமாக, மாப்பிள்ளையைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது!

என்ன தமாஷ் எனில், குதிரை ஓடிய பிறகும் அழகனின் ஆட்டம் நிற்கவில்லை!



No comments:

Post a Comment