Monday, April 18, 2011

யுவராஜ் இந்திய அணியின் புதிய கேப்டன்?

 சிரமமான ஐ.பி.எல் 4 தொடர், முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது!

தோள்பட்டை காயம் காரணமாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தால் வீரேந்திர ஷேவக், இத் தொடரிலிருந்து விலகுவது உறுதி!

மே.இ தீவுகள் தொடருக்குப் பின், 

1. இந்திய அணியின் இங்கிலாந்து தொடர்!
2. இங்கிலாந்து அணியின் இந்தியத் தொடர்!
3. இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர்!

என மிக முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளதால், முண்ணனி வீரர்களான சச்சின், தோனி, கம்பீர், ஜாகீர், ஹர்பஜன் ஆகியோர் ஆளுக்கு சில போட்டிகள் மட்டுமே விளையாடுவார்கள் எனத் தெரிகிறது!









இந்நிலையில் மே.இ தீவுகள் தொடருக்கான இந்திய அணித் தலைவராக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப் படலாம், என யூகங்கள் இறக்கைக் கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது!

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களான பால் வால்தாடி, அம்பாடி ராயுடு போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது!

யுவராஜ் சிங் தலைமையில் அமையப் போகும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்!

2 comments:

  1. ஐ.பி.எல். ஆட டைம் இருக்கு. ஆனா சர்வேதச போட்டிக்கு ரெஸ்ட்? சரியா படலையே.

    ReplyDelete
  2. ஐ.பி.எல். ஆட டைம் இருக்கு. ஆனா சர்வேதச போட்டிக்கு ரெஸ்ட்? சரியா படலையே.

    ReplyDelete