Friday, September 7, 2012

அனுபவங்கள்.. விருந்தாளிகள்!


சுகமும்...புதியன தெரிந்த ஆனந்தமும்
சோகமும்..அலைச்சலால் வந்த எரிச்சலும்
கோபமும்..எதிர்பாராத தாக்குதல்களும்
அன்பும்..பிரதிபலன்பாராத உதவிகளும்....

பற்பல அனுபவங்கள்..
நாள்தோறும்..வேளைதோறும்
அவைகள் விருந்தாளிகள்..
சிலவை அழையா விருந்தாளிகள்!

வயதில் உடலிலும் மற்றுமா ? 
அனுவத்திலும்..கிடைக்கும்..!
சில மாற்றம்..பல ஏமாற்றம்!

உறவிலும் நட்பிலும் கடமையிலும் தேவையிலும்
பயணத்திலும் பக்கத்திலும்..கிடைக்கும் படிப்பினையே அனுபவம்!

அனுபவங்கள்..  விருந்தாளிகள்!

முதன்முறை ஒன்றை புதிதாக எதிர்கொள்வதே..அனுபவம்!
தொடர்ந்தால்..பழகி விட்டால் அதுவே பழக்கம்!
பழக்கம் தொடர்வது..புது அனு பவத்திற்குத் தடைக்கல்..!

புதியப்புதிய எதிர்கொள்ளல்களே அனுபவம்!
அந்நியத்திலும் தொலைவிலும் தேவைகளாலும் அடைவது!
சிலவற்றை நோக்கியே நாம்..!
பலவை நம்மை சூழ்ந்து...
விரும்பியோ..கட்டாயத்தாலோ..தாட்சண்யத்தாலோ!

 அனுபவங்கள் விருந்தாளிகள்...விருந்தாளிகளால் அடைவது!
அதில் அழையா விருந்தாளிகளே அதிகம்!

புதுப்புது மனிதர்கள்..இடங்கள்
மாறும் காலங்கள்
மாறும் தலைமுறைகள்...
அனுபவக் களஞ்சியங்கள்..!
அவற்றில் சில கழுநீர் தொட்டிகள்!

மாற்றங்கள் சிரஞ்சீவி...மாறாதது!
மாற்றங்களே அனுபவங்கள்!
அனுபவங்கள் நல்ல ஆசான்கள்.. 
அடையாளம் காட்டும் ஆசான்கள்!

வாருங்கள் எதிர்கொள்வோம் அனுபங்களை!
இலக்கியமாக்கி படைத்திடுவோம்..இனியவைகளை!
எச்சரிக்கை பதிவுசெய்வோம்..கசடுகளை!



8 comments:

  1. அனுபவங்களை பற்றி அனுபவித்து எழுதியுள்ளீர்கள்! சிறந்த பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
  2. நிகழ்வுகளே அனுபவங்களாவதும்
    அனுபவங்கள் வெறும் நிகழ்வுகள் ஆகிப்போவதும்
    நிகழ்வுகளை எதிர்கொள்பவரின் மனோ பாவம் பொருத்தே
    சுகமோ துயரோ பெறுதலோ இழத்தலோ
    பிரிவோ நட்போ உலகில் எதையும்
    ஏற்கவும் அனுபவித்து ருசிக்கவும் தெரிந்தவனே
    வாழுகிறவன் ஆகிறான்.மற்றவர்கள் எல்லாம்
    உயிருடன் இருப்பவன் ஆகிப்போகிறான்
    சிந்தனையைத் தூண்டிப்போகும் பதிவு
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாற்றங்களே அனுபவங்கள்!

    மாற்றங்களைச் சந்திக்கும் மனிதனின் செயலைப் பொறுத்துதான் அது இன்பம் பயப்பதும் துன்பத்தில் முடிவதும் நடைபெறும்.அருமையான பதிவு அனுபவ வரிகள்

    ReplyDelete
  4. s suresh Sir!

    கருத்திற்கும் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. நண்டு @நொரண்டு -ஈரோடு ! Sir!

    பாராட்டுகளுக்கு நன்றிகள் பல!

    ReplyDelete
  6. பழனி.கந்தசாமி Sir!

    அய்யா அவர்களின் பாராட்டும் வருகையும் எனை மகிழ்வித்தது..மிக்க நன்றி!

    ReplyDelete
  7. கரந்தை ஜெயக்குமார் Sir!

    தங்களின் பாராட்டும் வருகையும் எனக்கு சுகானுபவம்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. Ramani Sir!

    அனுபவங்களைப் பற்றிய மேல்கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete