Tuesday, September 11, 2012

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு'
என்றான் கவிஞன்!
விழிகள் பேசும்  அதை வருடும்  மனங்களைக் கண்டு'
என்கிறான் ரசிகன்!


இலக்கின்றி
வெறிக்கும் விழிகள்!
படபடக்கும் இமைகளோடு
கள்ளமறியா விழிகள்...

கவ்வி இழுக்கும்
காந்த விழிகள்...
மீண்டும் பார்க்கத் தூண்டும்
தெய்வீக மலர்கள்...
கடுப்பைக் காட்டும் தீக்கங்குகள்!

விழிகள்...பேசுமே....மொழிகள்!


வலையை வீசும்
குளத்து மீன்கள்..
மரபுகளைத் தாண்டி
மருளும் மான்கள்..!


எத்தனை எத்தனை மொழிகள்
படைக்கிறது
ஓசையின்றி  அவ்விழிகள்....!


அவை ஆரம்பித்த கதைகள் கணக்கில்லை...
சொல்லிய வார்த்தைகள் எண்ணவில்லை....
சொல்லாமல் விட்டவை இனிக்கவில்லை.....

அங்கே ஒலியில்லை..இசையில்லை
இலக்கணமில்லை..இணக்கம் மட்டுமே..
இலக்கியங்கள் மட்டும் ஏராளம்!
நினைவுகளோ தாராளம்!








12 comments:

  1. விழி மொழியை படிக்க தெரிந்தால் மங்கையரின் மனதை படித்த மாதிரி! அருமையான கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html

    ReplyDelete
  2. அருமை. நன்றாகவே இருந்தது.

    முகத்தை முக்காட்டால் மூடினாலும்
    அகத்தை மறைக்க முடியலையே

    நிலை குத்திய கண்கள் உனக்கு
    தன்நிலை மறந்த எனக்கு

    தள்ளி பதுங்கும் மீன் போலே
    துள்ளி குதிக்கும் மான் போலே

    ஓராயிரம் கதை சொல்லுதே விழிகள்
    துயரம் போச்சுதடி தூக்கமும் போச்சுதடி

    ReplyDelete
  3. விழி பேசும் மொழிகளுக்கு வரைமுறை இல்லைதான்.

    ReplyDelete
  4. விழிகள் பேசும் மொழிகள் அறிந்தால்
    அறிந்தவர் நிச்சயம் வித்தகர் தானே
    அது அறியாமல்தானே பலர்
    ஆகிவிட்டனர் பித்தரெனத் தானே
    படமும் அதற்காக எழுதப்பட்ட கவிதையும்
    மனம் கவர்ந்தது
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. s suresh Sir!

    அவளின்றி கவிதை ஏது?

    ReplyDelete
  6. chinnapiyan அண்ணே!

    கண்கள் பேசும் மொழியை
    கண்டவர் விண்டுவரோ..
    விண்டினால் மீண்டும் அங்கு கிட்டுமோ?

    பின்னூட்டக் கவிதை..எனக்கு பெருமை!

    ReplyDelete
  7. மதுமதி Sir!

    அவை உணர்வின் மொழிகள்!

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு Sir!

    பெருமை!

    ReplyDelete
  9. Ramani Sir!

    இந்த மொழி பேசவும்..புரியவும் வகுப்பில்லை..வாத்தியார் இல்லை.நான்கு கண்கள் மட்டுமே தேவை!

    ReplyDelete
  10. ஆமாம்....உண்மைதான் ....விழிகள் பேசும் மொழிகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  11. மிக அருமையான பகிர்வு...உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete