64 வருட சுதந்திர பாரதம், வாழ்த்திக் கொள்ளுவோம்!
இந்நன்னாளில் சுதந்திரப் போர் தியாகிகளை மனதில் இருத்தி, வந்தனம் செய்வோம்!
இனிவரும் நம் சந்ததிகளுக்கு முடிந்தவரை சுற்று சூழலைக் காப்பாற்றி கொடுப்பொம்!
இன்று சுதந்திரம் பற்றி நிறையப் படித்ததாலும், தொலைக்காட்சிகளை கண்டு களித்ததாலும், சிந்தனைக் குதிரை சற்றேசூடாகி, கனைத்தவை இங்கே!
* பணமும் பதவியும் என்றுமே தகுதியுள்ளவனை, சென்றடைவதில்லை!
* நல்லவன் நாடாளுவதில்லை! உழைப்பவன் செல்வனாவதில்லை!
* ஊழல்வாதிகளுக்கு சிறந்த தண்டனை, சொத்து பறிமுதலும், பத்து தலைமுறைக்கு பதவியேற்கத் தடையும்!
*இந்த அளவு சுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை! காப்பாற்றி கொள்ளுங்கள்!#என்.ஆர்.ஐ தோழன்!
* பொதுவெளியில் கழிக்கும் உரிமையைப் போல், சிறந்ததொரு சுதந்திரம் இல்லை காண்!
* நவீன திருதராட்டினன்! தன் அரசின் ஊழல்களைப் பற்றி அறியேன் எனும் தலைமை ஆட்சியாளன்!
* திருட்டு ஆட்சியாளன், அவனை தேர்ந்தெடுத்த மாக்களின் பிரதிநிதியே! பிரதிபலிப்பே!
நம்மில் சுயநல மிகுந்திருக்கும் வரை ஊழலை களைய முடியாது!
சிறிது சிறிதாக கரைக்க முடியும்! அதற்காண ஒரு சிறு முயற்சியே, ஊழல் தடுப்புச் சட்டம்!
இந்தச் சட்டம் முழுத்தீர்வு இல்லையெனினும், ஊழல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகத் திகழட்டும்!
சுதந்திரதினச் சிந்தனைகள் அனைத்தும்
ReplyDeleteஅனைவரும் சிந்திக்கத்தக்கவை
நல்ல முத்தான கருத்துக்களை
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்