Monday, December 26, 2011

நட்புக்கும் உண்டு ....!

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்  வந்தனம்!

சனி பெயர்ந்து, கிறிஸ்து பிறந்து புது வருடத்தை 
எதிர் நோக்கிமகிழ்வுடன் காத்திருக்கும் 
அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்! 

நட்பு ..பு..பூ !

ஆம் ..இது ஒரு பூ தான்!

ஆனால் தானாகப் பூக்கும் பூ ! திணிப்பூ அல்ல!


நட்பை எப்படி பூ என்கிறோமோ ,
அதன்படி அதைக் காணும்போது மலர்ச்சியும்,
இருக்கும்போது வீசி, 
சென்றபின்னும் நாசியில் 
உறைந்து நிற்கும் நறுமணமும் !

பூவின் இலக்கணம்  கவர்ச்சியே! 
அதுவே நம்மை அதன்பால் இழுக்கிறது!
ஆனால் பூக்களின் ஈர்ப்பு மனதின் கட்டுபாட்டில்!

மரமோ செடியோ அது நாமே!
சூழ்நிலைகள் எனும் உரத்தால்
அபிமானம் எனும் மகரந்த சேர்க்கையால் 
மலரும் பூவே நட்பு...பூ !


நட்பின் வாழ்நாள் மலர்களின் வாழ்நாளைப் போலவே!
மலருக்கு மலர் நாட்கள் வேறுபடும்!
மலரும் மலர்கள் அனைத்தும் 
காயாவதில்லை ..
பழமாவதில்லை ..
விதையாவதில்லை ..மறுவிருட்சம் ஆவதில்லை!

நெடுநாள் தொடரும் நட்பே மறுவிருட்சம்!
பெரும்பாலானவை பூக்களே!

அகத்தில் புறத்தில் 
சாலையில் கல்விச்சாலையில் 
பணிக் கூடத்தில்
போக்கில் பொழுதுபோக்கில் 
சுகத்தில் துக்கத்தில் 
அருகில் தொலைவில் 
மலரும் பூ .. நட்பு !

அபிமானத்தில் நட்பு பூக்கத் தேவையான 
சூரிய ஒளியைத் தருவது
அலைவரிசை !

நட்பு என்பது யாதெனில் 
ஒருமுக விருப்பத்தையும் பிரேமையையும் 
அபிமானத்தையும்
கொண்ட இதயங்களில் 
சூழ்நிலைகளால் ஏற்படுவது !
அவைகள் மாறுபடும்போது வாடுவது ..வாடினாலும் 
மணம் வீசுவது !

நட்புக்கும் உண்டு 
சட்டங்கள் விதிகள் 
இலக்கணங்கள் !

பூ ..மறுவிட்சமாக கண்டிப்பாகத் தேவை 
தன்னலமில்லா பராமரிப்பு !


 








13 comments:

  1. 'நட்..பூ..'வை..
    வலைப் பூ... வாக..
    வடித்தமைக்கு
    வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. நட்பு ..., பூ..
    இரண்டையும் ஒப்புமை படுத்தி
    பதிவெழுதிய
    உம் நட்பு யான் பெற்ற சிறப்பு..

    ReplyDelete
  3. Advocate P.R.Jayarajan sir!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! நம்மிடையே மலரும் நட்பு விருட்சமாகட்டும்!

    ReplyDelete
  4. நண்டு @நொரண்டு sir!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. ”இதயங்களில்
    சூழ்நிலைகளால்”

    >>>

    இதான்யா மாப்ள..நட்பு ஏற்பட அடிப்படை...அழகா சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  6. விக்கி மாம்ஸ்!

    கருத்தால் கவர்ந்தீர்! நன்றி!

    ReplyDelete
  7. //வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! நம்மிடையே மலரும் நட்பு விருட்சமாகட்டும்!//

    Thanks...

    ReplyDelete
  8. பூத்துக்குலுங்கும் நட்..பூ...
    என்றும் கிளைகள் பரப்பி
    மலர்கள் மலர்ந்து
    சிலிர்த்துக் குலுங்க
    சூழ்நிலைச் சாதகமும்..
    வெள்ளை உள்ளமும்
    உறுதியான மனமும் வேண்டும்.

    அழகாக கவிதை புனைந்தீர்கள் நண்பரே.
    அருமை.

    ReplyDelete
  9. மகேந்திரன் sir!

    வருகைக்கும் உற்சாகப் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. sasikala !

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete