அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இசை !
ஆனந்தப்படுத்தவும்
அமைதிப்படுத்தவும் !
ரசிப்பவன்
மனிதன் ..ஏன் மாடுகளைப் போன்ற
மிருகங்களும் ரசிக்கும் !
சில மனிதமிருக பிறவிகளுக்கு இசை ரசிப்பதில்லை!
நல்ல ரசிகனின் அடையாளம்
வகை, பால்,இன,மத,மொழி,நாடு ..மற்றும்
எந்தவித பேதமின்றி
மனதிற்கு பிடித்ததை விரும்புவது!
வல்லிசை மெல்லிசை குத்து என சகலத்தையும்
சிறப்பு அல்லது குப்பை என பதம்பிரித்து ரசிக்கவேண்டும்!
70 , 80 களில் எல்விஸ் ,அபா,போனி எம் ,
ரோலிங்க்ச்டோன்ஸ் போன்ற மிகச்சிறந்த மேற்கத்திய
இசைத் தொகுப்புகள் வெளிவந்து உலகெங்கும் மக்களைக்
கிறங்கடித்தது! டேப் ரிகார்டர் அறிமுகத்திற்குப்பின்
இந்தியாவையும் மேற்கத்திய இசை மோகம் பிடித்தாட்டியது!
இளையராஜா வந்துதான் மேற்கத்திய,ஹிந்தி இசைமோகத்தை
தமிழகத்தில் இருந்து விரட்டினார்!
முடிஸூடா மன்னன் மைக்கில் ஜாக்சன் ஆதிக்கம், பாதிப்பு சுமார் 20
ஆண்டுகாலம் மேற்கத்திய இசையில் பரவி கிடந்தது! மடோனா,ஜானெட்
போன்றவர்களும் ஜொலித்தனர்!டிஸ்கோ சென்று ராப் வந்தது !
ஆனால் அனைத்து ஆல்பத்திலும் ஓரிரு பாடல்களே கேட்கும்படி
இருந்தது! இசையைக் கேட்க ஏங்க்கும் காலம் சென்று கைநுனியில்
உலகிசை அடங்கியபின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து அதற்கேற்ப
புது இசை படைக்க உலகெங்கும் திணறி வருகின்றனர்!
குறிப்பாக மேற்கத்திய இசை உலகில் மெத்தனமே நிலவுகிறது!
உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இசைத்தொகுப்புகள்
அறிமுகமாவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
பிட்புல்
ஓரளவு ரசிக்கத்தகுந்த இசையை இவர் கொடுத்துக் கொண்டுள்ளார்!
30 வயதான் அமெரிக்காவின் மியாமியை சேர்ந்த இவர் ராப் இசை நிபுணர்!
பிட்புல் என்பது ஒருவகை நாயின் பெயர்! ஒரிஜினல் அர்மேண்டோ கிறிஸ்டியன் பெராஸ்!
இவருடைய சமிபத்திய ஸுப்பர்ஹிட் பாடல் ஒன்றை இங்கு கண்டு
கேட்டு மகிழுங்கள்!
ரிஹான்னா
மேற்கிந்திய தீவு பார்படாசை சார்ந்த கறுப்பின கட்டழகி !
23 வயது கறுப்புக் குயில் பாப் வகை இசையைத் தருகிறது !
இவருடைய மிகவும் பிரபலமான பாடல் கீழே!
மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளுடன்
அன்பன் ,
ரமேஷ் வேங்கடபதி
மாப்ள எம்புட்டு பெருசுய்யா உலகம்...பல விஷயங்கள் இருக்கு இசையிலே!
ReplyDeleteமேற்கத்திய இசைக்குயில்களின் பாடல்கள்
ReplyDeleteநன்று நண்பரே.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இசையால் நோய் தீர்ந்து போகும் நான் அனுபவித்து இருக்கிறேன், உங்க பிளாக் ரொம்ப அழகா அருமையா இருக்கு நண்பா...!!!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இசைமயமாய் மனதை
ReplyDeleteஇனிமையாக்கிய
பகிர்வுக்கு மனம் நிரைந்த
வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
விக்கி குமார் மாம்ஸ்!
ReplyDeleteஉடனடி கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
மகேந்திரன் sir!
ReplyDeleteவாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இனி வரும் வருடங்களில் வசந்தம் பொங்கட்டும்!வாழ்த்துக்கள்!
MANO நாஞ்சில் மனோ ji!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நமது நட்பு மேலும் வளரட்டும்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Ramani sir!
ReplyDeleteதங்கள் கருத்தை அறிய என்றும் ஆவலுடன்! புதுவருடம் வளங்களை அள்ளித் தரட்டும்!
இராஜராஜேஸ்வரி மேடம்!
ReplyDeleteஆன்மீகப் பிரியரிடம் வாழ்த்துக்களைப் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன்! உழைப்பினாலும் இறைவனின் திருவருளாலும் மேன்மையடைவோம் இனிவரும் காலங்களில்!
முதல்லே வாழ்த்துகள்...
ReplyDeleteஇசையை பத்தி உங்கள் பதிவு நல்ல இரசிக்கும்படி இருக்கு.
இளையராஜா வந்து அன்றைய மேற்கத்திய பாடல்களை கொஞ்சம் விரட்டி இருந்தாலும்,
By the rivers of Babylon, No Woman No Cry.. இன்றைக்கு பூராவும் திரும்பத் திரும்பக் கேட்டுகிட்டே இருக்கலாம்.
அன்றைய மேற்கத்திய பாடல்கள் இன்றும் இனிமையாக என்றும் இளமையாக இருப்பது.
விட்னி ஹூஸ்டன் பாடல்களை கேட்டவர் யாரும் மறந்து விட முடியாது..
ReplyDeleteஅதேபோலே நசியா ஹாசனின் குரலை மறந்து விட முடியாது...
அவர் அடிதொண்டையில் குரலெடுத்து பின் அது தெரியா வண்ணம்
மெல்லிய ராகமாக இழுத்து படிய 'டிஸ்கோ திவனியே...'
ஆனா சொன்ன மாதிரி இப்போ வர்ற ஆல்பத்திலே ஏதோ ஒன்னு ரெண்டு பாடல்கள் மட்டும் கேட்பதற்கு அப்போதைக்கு நல்ல இருக்கு.
ReplyDeleteமற்றபடி இன்றைக்கு விரல் நுனியிலே இசையை எளிதாக கேட்கும் கருவிகள் நம்மிடம் பல இருக்கும் போது, மேற்கத்திய பாடல் உலகம்
திரும்பத் திரும்பக் கேட்கிற மாதிரி பாடல்களை தர முடியாமல் திணறி வருது.. எல்லாம் ஒரு கால கட்டம் !
கிறிஸ்டியன் பெராஸ், ரிஹான்னா - இவங்க இப்போ கொஞ்சம் மேலுக்கு வர்றாங்க.. மெச்சத் தக்க இசையை தர்றாங்க..
ReplyDeleteமொத்தத்தில் வெஸ்டர்ன் இசைக் குயில்கள் பற்றிய உங்கள் பதிவு ஒரு நல்ல அலசல். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇசைக்கு மயங்காதமனமும் உண்டோ அதை அழகாகச்சொன்ன பதிவுக்கு நன்றி
ReplyDeleteஇசையாலே நல்ல மயக்கம் ...
ReplyDeleteAdvocate P.R.Jayarajan sir!
ReplyDeleteஅக்கு அக்காக அலசி சிலாகித்தமைக்கு நன்றி!
Lakshmi மேடம்!
ReplyDeleteவருகித்து கருதிட்டமைக்கு நன்றி!
மாலதி !
ReplyDeleteசகோதரியின் வருகையால் பெருமை அடைந்தேன்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இசைக்கு மொழி இல்லை... ரம்யமான இசைப் பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteComments எழுதும்போது அதே பக்கத்தில் திறக்காமல் போஸ்ட் பேஜ் மறைந்து விடுகிறது இதனால் எழுத வந்த கருத்து விட்டு போகும் அதே பேஜ்ஜின் கீழே கமெண்ட்ஸ் பேஜ் வரவேண்டும். செட்டிங்ஸில் comment location =embedded கொடுக்கலாம். [ இது எனது சஜசன் மட்டுமே ]
ReplyDelete