Sunday, December 4, 2011

பேரின்ப விலாசம்!

 இரவில் நிலவொளி இனிதென்பர் !
கோடையில் நிழலும்
வாடையில் குளிரும்
கருத்த மேகமும் அதையொத்த
கூந்தலில் பூக்களும்
மழையால் மணக்கும் மண்
நடுங்கும் பனியும்
பனியில் நனைந்த காலையும்
இனிதென்பர்!

நட்பின் நேசம் இனிதென்பர்!
தாயின் மடி பாசம்
தந்தையின் மன பாசம்
சேலையில் தெரியும் வண்ணங்கள்
வேட்டியின் வெண்மைகள்
மகளின் முத்தங்கள்
மகனின் தோள்கள்
பெயரர்களின் பாதங்கள்
சுகமென்பர்!

பரதமும் நாதமும் இனிதென்பர்!
கீசிடும் பறவைகள்
மானும் மயிலும் செல்ல பைரவரும்
கன்றுக்குட்டியின் கண்
பச்சை வயல்களும்
சோலைகள்
காண இனிதென்பர் !

வானொலியும் காண் ஒளிகளும் இனிதென்பர்!
இளமையும்
இளமையின் வாளிப்புகளும்
வண்ணங்களும்
வர்ணிப்புகளும்
வடிகால்களும்
பரமானந்தமே என்பர்!

அள்ளக்குறையா வளம் இனிதென்பர் !
கைக்கெட்டும் தூரத்தில்
அலங்காரங்கள்
அழகுகள்
பயணங்கள்
மயக்கங்கள்
அருமைஎன்பர்!

பரம்பொருளின் உறைவிடங்கள் இனிதென்பர்!
அதற்கு போட்டியிடும்
தத்தமது குருவிக் கூடுகள்
கிராம தேவதைகள்
திருவிழாக்கள்
வேடிக்கைகள்
சீண்டல்கள்
சண்டைகள்
வாழ்வென்பர்!

நாம் அழ ஆரம்பித்து
நமக்காக
அழுது முடிக்கும்வரை
இயற்கையோடு  கலந்தவை
இரண்டு சுகங்கள்!

பேதமில்லா ஆருயிர்க்கும்
வேண்டும்
கிடைக்கும்  சுகங்கள்!



மறுமை உலகை யாரும் கண்டிலோம்!
பிறந்த உலகே
நமக்கு பேரின்ப லோகம் !
அதற்கு விலாசங்கள்
நாளின்  முப்பெரும்   பொழுதில்
விருப்ப உணவும்
தற்காலிக மரணமான உறக்கமும் !

இயற்கையின் சுகமொன்று உண்டெனினும்
அது சுகமானந்தம்!

எந்நாளும் நித்திரை ராணியின் அரவணைப்பும்
முப்பொழுது அன்ன மாதாவின் அருளுமே
பரமானந்தம்!




12 comments:

  1. அருமை,படிக்க படிக்க பரமானந்தம்.

    இறுதியா சொன்னது உண்மையான பரமானந்தம்.

    ReplyDelete
  2. என்னேங்க ரொம்ப இடைவெளி விட்டுட்டிங்க?போல

    ReplyDelete
  3. மிகவும் நன்றி, கோகுல்! இடைவெளிக்கு சோம்பல்தான் காரணம்!நிறைய உண்டு உறங்கிவிட்டேன்! எல்லாம் பரமானந்தமே!

    ReplyDelete
  4. இயற்கையோடு கலந்தவை
    இரண்டு சுகங்கள்!

    பேதமில்லா ஆருயிர்க்கும்
    வேண்டும்
    கிடைக்கும் சுகங்கள்!

    ரசிக்கவைத்த வாழ்வியல் சுகங்கள் அருமை..

    ReplyDelete
  5. இயற்கையின் சுகமொன்று உண்டெனினும்
    அது சுகமானந்தம்!

    எந்நாளும் நித்திரை ராணியின் அரவணைப்பும்
    முப்பொழுது அன்ன மாதாவின் அருளுமே
    பரமானந்தம்!

    அருமையன பேரின்ப விலாசம்!"

    ReplyDelete
  6. மாப்ள என்னய்யா இப்படி பின்னி புட்டீங்க ஜூப்பரா இருக்குய்யா!

    ReplyDelete
  7. இராஜராஜேஸ்வரி!

    தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி! மேடம்!

    ReplyDelete
  8. விக்கியுலகம்!

    மிக்க மகிழ்ச்சி மாம்ஸ்!

    ReplyDelete
  9. அருமையான கருத்தைச் சொல்லிப் போகும்
    அழகான பதிவு
    உணவுகிடைக்காமல் அல்லது ஏற்கப்படாமல்
    போகும்போதுதான் அதன் மகத்துவம் புரியும்
    உறக்கம் வராது அல்லது உறங்கமுடியாது தவிக்கையில்தான்
    அதன் அருமையும் புரியும்
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மிகவும் வசிகரிக்கும் வார்த்தையால் சிறந்த வரிகள் பாராட்டுகள் தொடர்க....

    ReplyDelete
  11. இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_24.html

    ReplyDelete
  12. கோகுல் ji!

    வலைச்சரத்தில் அடையாளமிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete