Thursday, November 29, 2012

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

 பிரமிக்கிறோம்...
ஆனந்த அலை பரவுகிறது..
மீண்டும் அண்மைக்குத் தூண்டுகிறது...
ஆம்...
நாம் காதலிக்க ஆரம்பித்துவிட்டோம்!


காதல் ஒரு அழகான வார்த்தை..
காதலைப் போலவே!


காதலுக்கு இருட்டு தேவையில்லை...
வெளிச்சமே காதலைக் கொண்டுவரும்!


 காதலுக்கு ஒலி தேவையில்லை....
கண்கள் மட்டுமே போதும்!


காதலுக்கு அறிமுகமும் சிலசமயம் தேவைப்படும்..
அது  இங்கு பாசாங்கு எனப்படும்..!






காதல் என்பது அன்புஇல்லை..பாசமாகாது..
வேணும்னா பிரியம்னு வெச்சுக்கலாம்!



காதல் வயதறியாது..
ஈர்ப்பையே அறியும்!


காதல் புரிந்து கொள்ளாது..
ஆனால் காதல்காரரைத் தேடித் தவிக்கும்!


ஒருமுறை மட்டும் மலர்வதில்லை காதல்..
ஓராயிரம்முறை மலரும் ஆண்களுக்கு மட்டும்!
ஒரு'முறை'யோடு வருவது மட்டும் காதல் இல்லை..!
முறை மாறுவதும் காதலாகும் இங்கு!


காதல் கைதொடும்..தோள்படும்..பெரும்பாலும் படர்வதில்லை!
காதல் படர்ந்தால் கா..ஆமாகிவிடும்!

காதலில் ஏது கள்ளம்..களவுதானே காதல்!

காதல் கண்களில் பிறந்து ..
பழக்கத்தில் வளர்ந்து
காலத்தில் மலர்ந்து
கல்யாணத்தில்
மணக்கிறது..
அன்றே மரிக்கிறது
காமம் பிறக்கிறது..
குடும்பம் தழைக்கிறது!


காதல் ஜெயிக்கும்னு ..ஜெயிக்கணும்னு
சொல்லிக் கேள்விபட்டிருப்பீங்க..!
ஜெயிக்கிறதுன்னா..கல்யாணத்துல முடியறது!
பெத்தவங்க சம்மதத்தோடோ..இல்லாமலோ!


காதல் தெய்வீகமானதாம்...ஆம்
காதலிப்பது பிறர் கண்களுக்குத் தெரியாதவரையில்!


காதலில் ஏது கள்ளம்...
களவுதானே காதல்!

காதல் என்பது உறவற்றது...
உறவானால் அங்கு பெயர் மாறிவிடும்!

காதலில் ஆபத்தில்லை...பிரியம் மட்டுமே!
காதல் இங்கும் எங்கும் என்றும் புனிதமானதே...!

காதல் என்றும் வாழும்..வாழ்க!









10 comments:

  1. /// காதல் என்பது உறவற்றது...
    உறவானால் அங்கு பெயர் மாறிவிடும்! ///

    காதல் (அன்பு) வேறு... காமம் வேறு...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சரியாக புரிந்து கொண்டுள்ளீர்...நண்பரே!

      நன்றி..தனபாலன் சார்!

      Delete
  2. காதல் புனிதமானது எல்லைகள்மீறும் வரையிலும்...
    முறைகள் மாறும் வரையிலும் காதல் புனிதமானதுதான்....

    அந்தக் காதல்தான் விதை போடுகிறது சில சில்மிஷ்ங்களுக்கும் அப்போது அங்கே...?

    அழகான வரிகள் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. சில்மிஷங்கள் இங்கு மன்னிக்கப்படும்!

      நன்றி..நண்பரே!

      Delete
  3. காதல் காதலர்களை மட்டும் புரிந்து வைத்திருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. காதல் கவிதைகள் எங்ஙனம் இருந்தாலும் அங்கீகாரம் கிடைக்கும்..காதலரிடம்!

      நன்றி..மதுமதி சார்!

      Delete
  4. தெளிவா கொஞ்சம் குழம்பிட்டேங்க .. ஆமாம் காதல்னா என்ன?
    அன்பு,பாசம்,அனுசரனை,நேசம்,நட்பு எல்லாமே காதல்னுதான் நான் நினைச்சிருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. எந்த எதிர்பாலரின் அண்மையோ..சந்திப்போ..நினைவுகளோ.. இருவருக்கும் சந்தோஷமளிக்கிறதோ..அதை நான் காதல் என்பேன்! அது தனி உணர்ச்சி!

      கருத்துக்கு நன்றி..நண்பரே!

      Delete
  5. கள்ளமில்லா காதல் என்றும் புனிதமானதே....

    ReplyDelete
    Replies
    1. காதலில் கள்ளமில்லை...காமம் இல்லாதவரை!
      கருத்துக்கு நன்றி..நண்பரே!

      Delete