Sunday, February 26, 2012

ஓ.. ரசிக்கும் சீமானே!

  அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வந்தனம்!

இளவேனிற் காலத்தின்
வாயிற்படிகளில்
வான் மழையோடு மரங்களை
புதுப்பிக்க வரும்
வசந்தருதுவை
வரவேற்கக் காத்திருக்கும்
பூவுலகம்!
மதுரையின் மணக்கும்  குண்டுமல்லிகை
செண்டோடு!

துளிர்க்கும் புது இலைகள்
கார்மேகத்துடன் போட்டியிட்டுத் தருமே
கோடையின் தாக்கத்திற்கு
தலைகவசம்!
ஸெந்தூரமாக சிரிக்குமே
பெருமையுடன் வழியெங்கும்
மே மலர்கள்!


படரும் வெப்பம்
தொடரும் சோகம்
ஆற்றாமைத்தீர
குளிர்மலைகளை நாடுமே
புதுமணங்கள்!

என்னே விந்தை!
குளிர்ச்சி தரும் இயற்கை ..
பனைகளிலிருந்தும்
புழக்கடை தர்பூசணி
படர்கொடிகளிலிருந்தும்
சிறுதும் பெரிதுமாக ...!


தென்றல் வரவில்லை
இன்னும் தணியவில்லை..
மீதமிருக்கும்
பகலின் காற்று!
வெற்றுவெளியில்
தலைக்கு கையை அணைத்துத்
தேடுவோம் வானத்தில்
பிரியமானவரை..!
முகம் தெரிந்தவுடன்
ஆஹா... தென்றலும் புறப்பட
புன்னகையுடன்
விடைதருவோம் கண் மெல்லமூடி..!

இருக்கும்போது கவனமின்றி
விலகும்போது மனம் தேடும்
உறவுகளாய் ஆனதே 
தண்ணீர்!
சச்சரவின் தாக்கம்போல்
தவிக்கவிட்டு தேடி அலையவிட்டு
உணர்த்திடுமே தன்னை யாரென்று!


மாதமேன்னவோ மார்கழி ஆகலாம்!
ஆனால் நிலவேன்னவோ
சித்திரை நிலவு ...!
அன்று அவள் நமக்கு மிக  அருகில் வருவாள்!
தாயாக..
வளர்ந்தபின் துணையாக ..!


ஓ..ரசிக சீமானே!
எதுலிருக்கு..எதிலில்லை..!
இங்கிருக்கு ..அதிலிருக்கு..!
எதிலுமிருக்கு..எங்குமிருக்கு ..!
விருப்பத்திலும்..வெளியிலும் ..!
ஓடிவா..ரசிக்கலாம்!

ரசிகன் ..மனிதன்..தலைவன்..ஆசான்.!







































12 comments:

  1. ரசிக்கவைத்த பாடல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி மேடம்!


    பதிவை எழுதியபின் தான் பாடலைத் தேடிப் போட்டேன்! என் ரசனையில் வந்து நினைவுகளில் நிற்பவைகளை பகிந்துகொள்வதில் ஒரு சுகம்! அதில் இது ஒரு ரகம்!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  3. ஆஹா அருமையான கவிதை
    மலை முகத்தைத் தொட்டுப் போகும்
    சூழ்கொண்ட மேகங்கள் போல்
    தங்கள் கவிதை படிப்பவர் மனம் தடவி
    மகிழ்வித்துப் போகிறது
    இந்தக் கவிதைக்கு ஏற்றார்போல
    தங்கள் கொடுத்துள்ள காணொளியும் அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ஒரு சிறு தகவல்:
    கண்ணதாசன் அவர்கள் பல்லாயிரக்கணக்கான
    அருமையான பாடல்கள் எழுதி இருந்தாலும் ஒரு
    இரண்டு பாடல்களில் பொருள் குற்றம் உள்ளது என்பார்கள்
    அதில் இப்பாடலும் ஒன்று
    காரணம் சித்திரை நிலவை சிறப்பித்துச் சொல்வதன் காரணம்
    சித்திரை பௌர்ணமியில் வானில் மேகங்கள் ஏதும் இன்றி
    முழுநிலவு மிக அழகாகக் காட்சி அளிக்குமாம்
    ஆனால் இப்பாடலில் சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
    முத்து ரதங்கள் ஊர்வலம் போகும் என எழுதி இருப்பார்

    ReplyDelete
  4. Ramani Sir!

    என் எழுத்துக்களை சிலாகித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

    எழுதுவது வசனமாகினும் தூரம்தட்டும் 30 வருடங்கள் ஆயின, கவிதையென்று எழுதி!பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருக்கும்போதே, கவிதைஎனும் பெயரில் கண்டவாறு எழுதி, சுற்றுக்கு விடுவோம்! கவிஞனுக்கு வறுமையே சொத்து என யாரோ சொல்லக்கேட்டு,அதைதுறந்துவிட்டோம்!

    சித்திரைமாதம் பாடலில் கவிஞர்
    பௌணர்மி நிலவில்
    ஊர்வலம் போவதாகக் குறிப்பிட்டது
    வான்முகிலை அல்ல...!
    முகில அனையத் துகிலை..!
    எப்படி கவிஅரசரின் சீடனின் பொறுளுரை?

    ReplyDelete
  5. தாங்கள் கவிஞரின் மேல் கொண்ட
    அன்பைப் புரிந்து கொள்ள முடிகிறது
    ஆனாலும் இசை மற்றும்
    வார்த்தைகளில் அத்கம் கவனம் செலுத்தி
    பொருளில் கொஞ்சம் கவனக் குறைவாக
    இருந்து விட்டேன் என அவரே ஒப்புக் கொண்ட விஷயம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. Ramani Sir!

    தாங்கள் பகிர்ந்த கவியரசரைப் பற்றிய மேலதிகத் தகவல் ரசிக்கத்தக்கது! பதிவின் ஸ்வாரஸ்யத்தைக் கூட்டியமைக்கு மிக்கநன்றி!

    ReplyDelete
  7. ரசிக்கவைத்த ரசிகருக்கு நன்றிகள். கவிதை அழகு. வான் மழையில், ஊசிமுனை குளிரில் நனைந்த சிலிர்ப்பு தங்கள் கவிதை வாசிககையில் கிடைத்தது.

    ReplyDelete
  8. கடம்பவன குயில் Sir!

    ரசனைகளே நம்மை வாழ்க்கையை ருசிக்க வைக்கும்!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க மாப்ள

    ReplyDelete
  10. கவிதையும் பாடல் பகிர்வும் அருமை

    ReplyDelete
  11. விக்கியுலகம்!

    ரஸித்து சென்ற வெங்கட்மாம்ஸ்க்கு நன்றி!

    ReplyDelete
  12. சிவகுமாரன் Sir!

    வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete