என்னுடைய எழுத்துக்கு என்று அடையாளம் ஏதும் இல்லாமல் கண்டபடி சுற்றிக் கொண்டிருந்த என் சிந்தனை வெள்ளி மூக்குக்குதிரை யைக் கடிவாளம் இட்டு நிறுத்தி, விவகாரமாகவோ,இலக்கியத்தரமாகவோ உன்னிடம் எதிர்பார்க்கவில்லை! ஜாலியா..எழுதுப்பா என்று ஊக்கமளித்த என் வலை உலக நண்பர்களின் அன்பு எச்சரிக்கையை அடுத்து அவர்களின் உத்தரவை சிரமேற் கொண்டு இனி உங்கள் இதயத்துக்கு இதம் அளிக்க இதோ!
ஆமா ! அது என்ன தலைப்புல மூனாங் கணக்கு ஒன்னு வெச்சிருக்கேன்னு கேட்டாக்க, அது என்னோட அனுபவம்னு சொல்வேனுங்க! ரொம்ப நாளா நிறைய படிச்சி ஆராய்ச்சி பண்ணி நானும்,வீட்டு அம்மணியும் ஒரு முடிவு செஞ்சி வெச்சிருந்தோம்! ஆனா, அதை முதல்ல ஏதாவது ஒரு பாவப்பட்ட சீவன் கிட்ட சொல்லி செஞ்சு பாக்குறதுன்னு முடிவாயிடுச்சு!
ஒருநாள் என்னுடைய ஒன்னு விட்ட மச்சினர்களோட வீட்டு அம்மணிக,அக்காளும், தங்கையுமா ரெண்டு பேர் உரம்பரை அதாங்க உறவின் முறைக்காக விருந்துக்கு வந்தாங்க!பத்து பனிரெண்டு வயசு சின்னவங்க!அதனால பயமில்லாம என்கிட்டே பேசிட்டி இருந்தாங்க!
என்ன ரெண்டு பேருக்கும் சரியான போட்டி போலிருக்கு..எடை போடறதுல! அப்படின்னு நான் கேட்கவும், எங்க வீட்டம்மா சோதனை எலிக கிடைச்சாச்சுனு
சந்தோஷத்துல, நாங்க சொல்றபடி கேட்டா, உடம்பு எடைய குறைசசிரலம்னு சொன்னாங்க! அந்த பேக்குகளும், எங்க மேல இருந்த நம்பிக்கைல சரி சொல்லுங்கன்னு கேட்டுச்சுக! ஒரே வரில எங்க திட்டத்தை சொன்னதும், அவங்களுக்கு ஆனந்தம் பாதி..எரிச்சல் மீதி!
அவிக ரெண்டு பேரும் எந்நேரமும் தின்னுட்டு, தூங்கிட்டு,டிவி பாத்துட்டு பொழுத கழிக்கிரவங்க! அவங்க கிட்ட திட்டத்தை சொன்னமே, செய்வாங்களானு எங்களுக்கு சந்தேகம் தான்! மூணுமாசம் கழிச்சு கோவில் திருவிழாவுல பாத்த போது அக்கா எடைய 5 கிலோ கம்மி பண்ணி ஜம்முனு இருந்தா!தங்கச்சிக்காரி அப்படியே தான் உருண்டு போய்டிருந்தா! அக்காவுக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோசம்!
அது என்ன ரகசியம் ஒண்ணுமில்ல! இதுதான்!
" உங்களுக்கு பிடிச்சது எது வேணாலும் சாப்பிடுங்க!" இதுதான் அவங்க சந்தோஷக் காரணம்!
"ஆனா மூணு சர்விங் மேல போகக் கூடாது" இதுதான் அவிக எரிச்சலுக்குக் காரணம்!
இட்லி ,தோச ,சப்பாத்தி- எதுன்னாலும் மூணு எண்ணம் தான் !
சாப்பாடு - மூணு கரண்டி !
சைஸ் ஆளுக்கு ஏத்த மாதிரி !
உடம்பு எடையைக் குறைக்க முதல்ல பயிற்சிக்கு போயிடக் கூடாது! வாய கட்டறதுக்கு பழகணும்! சிறிது எடை குறைஞ்சி உடம்பு லேசான பின்னாடி பயிற்சி எல்லாம்!
நீங்க வேணும்னா செஞ்சு பாருங்களேன்!நீ ரொம்ப யோக்கியாமனு கேக்குறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்! பாதி தான்னு! வாயக் கட்டிப்
போட்டா, ஒரு மாசத்துல ரெண்டு கிலோ இறங்குது! மறுபடி வெட்னா பழையபடி கூ டிருது!
உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் சரிவிகிதத்தில் கலந்து
ReplyDeleteதொடர்ந்து செய்வததால் தான் உடல் எடையை கட்டுப்படுத்த முடியுமென
அழகா சொல்லி இருக்கீங்க நண்பரே.
முயற்சி செய்து தான் பார்ப்போமே....
வாங்க மகேந்திரன் ஐயா!
ReplyDeleteகருத்தை கச்சிதமா நறுக்னு சொல்லிட்டிங்க! இந்த மூன்று சர்விங் மட்டுமே எனும் திட்டம் பொதுவாக உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும்,வீட்டு அம்மணிகளுக்கும் பொருந்தும்! அலைஞ்சி திரிஞ்சி வேலை செய்றவங்க நாலு சர்விங்கா வெச்சுக்கலாம்!