இப்ப வந்திருக்கும் நுகர்பொருட்கள் வசதிகள் எல்லாம் வாழும் மனிதரிடையே வெகு நாட்கள் வாழும் எண்ணத்தை ஆசையாக பேராசையாக வளர்த்து விட்டுள்ளன!
மருத்துவத் துறை செல்லும் வேகத்தைப் பார்த்தால், ஜீன் தெரபியில் மகத்தான மாற்றத்தை விரைவில் அடைந்துவிடுவார்கள் போலும்!கேன்சருக்கு விரைவில் விடிவு பிறந்துவிடும்!லேசரில் கண்சிகிச்சைக்கு எளிதான வழியால் கண்ணாடியின் பயன்பாடு தற்போழ்து குறைந்து வருகிறது!
சுமார் 10 வருடகாலத்திற்குள் வழுக்கைத் தலையில் மீண்டும் முடிவளரும் வைத்தியம் ரெடியாகிவிடும்!
ஆனால் இவையெல்லாம் பரவலாக அறிமுகம் ஆகும்வரை மேற்கொள்ள அதிக செலவு பிடிக்கும்! அனைவராலும் செய்ய முடியாது!
இந்த வசதிகள் வரும்போது வரட்டும்! அதுவரை அனைவருக்கும் இனி வாழப்போகும் நாட்களில் 15
சதம் அளவு கூட்ட சில எளிய முறைகளை இன்று உங்கள் காதுகளில் ஊதப் போகிறேன்!
என்னப்பா அந்த புது மேட்டருநு நீங்க கேட்டா,அதுக்கு நான் வழியசொன்னா என்னத் திட்டக் கூடாது! எல்லாருக்கும் தெரிஞ்ச்ச சங்கதிதான் அது! சின்ன வயசுல இருந்து செய்து கொண்டு இருப்பது தான்!
அதுதாங்க -- நடராஜா சர்வீஸ்!
இருங்க..இருங்க ..கோபப்படதீங்க!அதுல ஒரு கணக்கா சொன்னா மனசு சந்தோஷமாயிடும் ..டும்!
சமவெளியில் ஒரு கிமி நடந்தால் 50 ம்,ஏற்ற இறக்கமான பகுதிகளில் 75 கலோரியும் உடலால் எரிக்கப்படுகிறது!நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளே முதலில் எரிக்கப்படுகின்றன! பேட்மாஸ் மாசில்மாசாக மாற்றப்படுகிறது! உடல் பொலிவு பெறுகிறது!
ஒரு சாதாரண நபர் நாளொன்றுக்கு 1200 கலோரிகள் அளவு உண்கிறார்! தினம் 4 கிமி என, வாரம் 6 முறை, மாதம் சுமார் 100 கிமி நடந்தால் மாதம் 6000 கலோரி சக்தி எரிக்கப்பட்டு விடுகிறது! இது 5 நாளைய உணவின் அளவு!ஏறக் குறைய 15 சதம்!இயற்கை நம்மை விட்டு 5 நாட்கள் தள்ளிப் போகும்!
1500 க்கு தினம் 5 கிமி, 1800 க்கு தினம் 6 கிமி என நிர்ணயித்துக் கொள்ளலாம்! நடை வேகம் என்பது நாம் சாதாரணமாக நடக்கும் வேகத்தில் இருந்து 10 சதம் அதிக வேகம்! அதற்கு மேல் வேண்டாம்! முதல் 2 கிமி சராசரி வேகம்" பிறகு சிறிது கூட்டி அடுத்த 2 கிமி! கேன்வாஸ், ரப்பர் செருப்பு நல்லது!கணுக்கால் வலி எடுத்தால் 3 நாள் விடுமுறை விட்டு ,எலாஸ்டிக் துணி சுற்றிக் கொண்டு நடக்கலாம்!முச்சுத் திணறல் இருந்தால் மருத்துவரை அணுகவும்!
நடந்து முடிந்தபின் 10 நிமிடத்திற்குப் பிறகு தான் தண்ணிர் அருந்த வேண்டும்!சாப்பிட்டு 2 மணி நீரம் கழித்து தான் நடை பயிற்சி செய்ய வேண்டும்!வெளியே நடக்க முடியவில்லை எனில் ட்ரேட்மில்லில் எந்த சமயத்திலும் நடக்கவும்!
இப்படி ஆயுசு பூராவும் நடந்தால், கண்டிப்பாக 15 சதம் ஆயுசு நீடிக்கும்! மனசு வைத்தால் மார்க்கம் உண்டு! இது நடக்கலைன்னா என்னை வந்து கேளுங்கள் !
ஆமா எதுக்கு சம்பந்தமில்லாம பாட்டு வெச்சுருக்கே னு கேட்டா ...முதல்ல இந்தப் பாட்ட ஓட விட்டுட்டு அப்புறம் பதிவப் படிங்க..எரிச்சல் வராது! அதுக்குத்தான்,, வரட்டா..நான் நடக்கணும்! பை.பை !
வாயில் இருக்கு வழி என்கிற மாதிரி
ReplyDeleteநம்முடைய அரோக்கியம் கூட நம் கையில்தான் (காலில்தான் )
எனச் சொல்லியுள்ள விஷயமும்
சொல்லிச் சென்ற விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ramani Sir!
ReplyDeleteநாம் கண்டுணர்ந்ததை பிறருக்குச் சொல்வதில் ஒரு சிறு மகிழ்ச்சி! அதை அன்பர்கள் ஆமோதிப்பதில் பெருமிதம்! நன்றி ரமணி சார்!
"ஆயுளை 15 சதம் நீட்டிக்க!
ReplyDeleteநடந்து வாங்க என்கிட்டே!"
நடக்கிற காரியமாக பகிர்ந்திருக்கிறீர்கள்
சிறுவாணித்தண்ணீராய் சுவைத்து
இனிய காற்றாய் இதமளிக்கும் அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
"நடக்குற"காரியம் தான்.
ReplyDeleteஅட போங்க பாஸ் புஸ் ஆகிடுச்சு
ReplyDeleteஅருமை பதிவு வாழ்த்துகள்
DhanaSekaran .S!
ReplyDeleteவணக்கம் நண்பரே!
என் வலைப்பூவை பின் தொடர்ந்தமைக்கு நன்றி! உங்கள் ஒவ்வொரு பின்னூட்டமும் எனக்கு முக்கியம்!தொடர்ந்து விமர்சியுங்கள்! நன்றி!
கோகுல்!
ReplyDeleteநடந்தால் ஆகுற காரியம்! தானே புயல் துயரம் எல்லாம் மெல்ல அகன்று வருகிறதா?
இராஜராஜேஸ்வரி Madam!
ReplyDeleteசுலபமா செய்யக் கூடியது! ஆனால் நடப்பது என்பது வயதானவர் செய்யக்கூடியதுனு பொதுவா நினைக்கிறாங்க! அப்படியல்ல..யார் வேண்டுமானாலும் எந்தவித உபகரணுமுமின்றி காலநேரம் பார்க்காமல் செய்யலாம்!
வருகைகும் கருத்துரைக்கும் நன்றி!