Sunday, August 7, 2011

ஆலயவழிபாடு எதற்கு?

 நாம் பிறக்கும்போது எதையும் எதிர்பார்த்து இவ்வுலகிற்கு வருவதில்லை!ஆனால் நாம் வளருங்கால், எதிர்பார்ப்புகளும் அவற்றின் எண்ணிக்கைகளும், நம்மில்/சுற்றத்தில் வளருகின்றன! இறக்கும் நொடிவரை அது நம்மை தொடர்கிறது! இறக்கிறோம், எண்ணிலடங்கா நிறைவேறாதவைகளோடு!


எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதன் ஆச்சரியமானவன்!
ஆனால் அபூர்வமானவன்!

எதிர்பார்ப்புகள் இல்லதாவனே, கடவுள்!
கடவுள், நம்மில் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
நாம் தான் கடவுளிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்! அன்றாட வாழ்வின் தேவைகளை, நிறைவேற்ற அவரின் உதவியை நாடுகிறோம்!

வழிபாட்டுத்தலங்களில் பெருகும் கூட்டம், அதிர வைக்கிறது! சில சமயம் பலியும் வாங்குகிறது!



ஒருபுறம் நாத்திக, பகுத்தறிவு பிரச்சாரங்கள் மக்களை ஈர்த்தாலும், வயது எற ஏற கடவுளை சார்வது பெரும்பாலும்  தவிர்க்க முடிவதில்லை!

நாம் சார்ந்துள்ள உலகின், ஆசா பாசங்கள்/தேவைகள், உடல்/மன மாறுபாடுகள், நம்மை அமைதியையும்,தீர்வுகளையும் அதிசக்தியான கடவுளிடம் தேட வைக்கின்றன!

நம் நம்பிக்கையே கடவுள்! இந்த பிரபஞ்சங்கள் எல்லம் ஒரு சக்திக்கு கட்டுப்பட்டுது என்று நம்புகிறோமே! அது தான் கடவுள்!


மனிதன், தான் நம்பும் கடவுளை ரூபமாகவோ/அரூபமாகவோ மனதில் உணருகிறான்!







உடலை இயக்கும் உயிரை ஜீவாத்மாவாகவும், உலகை இயக்கும் உயிரை பரமாத்மாவாகவும் உணருகிறான்!

பரமாத்மாவில் இருந்து, ஜீவாத்மா வெளியாகி இவ்வுலகில் உலாவி,கரைந்து மீண்டும் பரமாத்மாவில் இணைவதாக நம்புகிறான்!இந்த நம்பிக்கையே மனிதனை, உடலாலும் மனதாலும் இயங்க வைக்கிறது!




தன்னுடையத் தேவைகளை பெற்றவரும், உற்றவரும் பார்த்துக் கொள்ளும்வரை,தன்னிடம் யாரும் எதையும் எதிர்பார்க்காதவரை, அவனுக்கு கடவுளை தெரிவதில்லை!


நம்மில் பளு ஏறும்போது, அதை சுமந்து நடந்து கடந்து செல்ல உடல், மன பலம் தேவைப்படும்போது, நாம் கடவுளைத் தேடிப் போகிறோம்!

தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுளை, ஆலயங்களில் தேடிப் போவதன் காரணம் என்ன?வழிபாட்டுத் தலங்களில் மட்டும்தான் கடவுள் இருக்கிறான் என்பதல்ல!

வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் சக மனிதர்களின் நம்பிக்கைகளின் வெளிபாட்டுத்தலங்கள்!

பரவலான மனிதர்களின். ஒருமித்த நம்பிக்கைகள் ஆலயங்களில் குவிந்து கிடக்கின்றன!
அந்த நம்பிக்கைகள் எல்லாம் நம்மை செலுத்தும் முற்போக்கு, வளர் சக்திகள்! POSITIVE ENERGY!

வழிபாடு எனும் பெயரில், அங்கு நாம் நம்பிக்கையோடு செல்வது, முற்போக்கு, பாசிடிவ்  சக்திகளை   கொடுக்கவும் பெறவுமேயன்றி, வேறொன்றுமறியேன் பராபரமே!


முற்போக்கு,வளர் நம்பிக்கைகளையே, கடவுள் அருளாகக் கருதுவோம்!

ஆலயங்களுக்கு ஆடம்பரமில்லாமல் நம்பிக்கையோடு செல்வோம்!பரிபூரண சக்தி பெற்ற நம்பிக்கையோடு திரும்புவோம்!

எதிர்பார்ப்புகளை வாசலிலேயே விட்டு விடுவோம்!






8 comments:

  1. //எதிர்பார்ப்புகள் இல்லதாவனே, கடவுள்!
    கடவுள், நம்மில் எதையும் எதிர்பார்ப்பதில்லை!// கடவுளும் நம்மிடம் எதிர்பர்ப்பதுண்டு!

    //ஒருபுறம் நாத்திக, பகுத்தறிவு பிரச்சாரங்கள் மக்களை ஈர்த்தாலும், வயது எற ஏற கடவுளை சார்வது பெரும்பாலும் தவிர்க்க முடிவதில்லை!// உண்மை.

    ReplyDelete
  2. Robin!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. அழகா விளக்கபடுத்தி சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றிகள் உமக்கு!

    ReplyDelete
  4. விக்கியுலகம்!



    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. ஆலயங்களுக்கு ஆடம்பரமில்லாமல் நம்பிக்கையோடு செல்வோம்!பரிபூரண சக்தி பெற்ற நம்பிக்கையோடு திரும்புவோம்!

    எதிர்பார்ப்புகளை வாசலிலேயே விட்டு
    விடுவோம்!

    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    முத்தாய்ப்பாக நீங்கள் சொல்லியுள்ள
    மேற்குறித்த வாசகம்
    அனைவரும் மனதில் நிரந்தரமாய்
    வைத்துப் பூஜிக்கவேண்டிய வாசகம்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Ramani sir!

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
    வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
    எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
    நன்றி பகிர்வுக்கு.....

    ReplyDelete
  8. அம்பாளடியாள்!


    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete