Wednesday, June 22, 2011

உதிரமே எண்ணமுமாகியதே!



மனித உடலில் ஓடிக் கொண்டே இருப்பவை, மனச்சிந்தனையும், உதிரமும் தான்!

ரத்தம் பிராண வாயுவை சுமந்து கொண்டு ஓடுகிறது!
சிந்தனை இலக்கோடு வெகு சில சமயமும், இலக்கின்றி பெரும்பாலும் ஓடுகிறது!


ரத்த ஓட்டம் இயற்கையின் கட்டுப்பாட்டில் !
மனித    எண்ணங்களுக்கு , கட்டுப்பாடேது?
ஆனால் செயல்களுக்கு கட்டுப்பாடு, மனிதனின் கையில்! நாக்கில்?!

நல்ல எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது, சீரான ரத்த ஓட்டம்!

கோளாறான எண்ணங்கள் செயலாக்கம் பெரு(று)கையில், தறி கெட்டோடிடும் உதிர ஓட்டம்!

எண்ணங்களின் தறிகெட்ட பயணங்களால், அவரவர் ரத்தஒட்டம் வேக மாற்றம் அடைவதோடு மட்டுமல்லாமல், சில சமயம் மற்றவரையும் மனதாலும்,உடலாலும் காயப்படுத்திவிடுகிறது! வெகு சில சமயம் உடல் கட்டை விட்டு வெளியேவும் பீறிட்டுவிட வைக்கிறது!

சிந்தனையின் தாக்கம் உதிரஓட்ட மாற்றமேற்படுத்துவதைப் போலவே, உதிரத்தின் தன்மையும் எண்ண ஓட்டத்தை நிர்ணயிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன! பொதுவாக இதுபோன்ற ஆராய்ச்சி முடிவுகளும் கால ஓட்டத்தின் மாறுதலுக்குட்பட்டதே!


 ரத்ததின் ரத்தமே!







 ரத்தம் ஒரேநிறம்!





O,A,B,AB - இவைகள் முக்கிய மனித ரத்தப் பிரிவுகள்!

O -ஓ - மிகப் பழமையான ரத்தவகை! 30000 வருடங்களுக்கு மேற்பட்டது! வேட்டையாடும் குணமிக்கது! இவ்வகையினர் பொதுவாக புரத சத்து உணவுகளை விரும்புவர்!
O++சமூகத்திற்கு கட்டுப்பட்டவர், எதையும் சுலபமாக ஏற்றுகொள்பவர், நம்பிக்கை மிக்கவர்!
O_முரட்டுத்தனமும், சிறிது வீண் பொறாமையும் உண்டு!

A - எ -இந்த ரத்த வகை, மனித இனம் விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர் உருவானது! சுமார் 20000 வருடங்கள் வயதானது! இவ்வகையினர் சைவ உணவு வகைகளையே பெரும்பாலும் உண்ணுவர்! சிறிதளவே மாமிச புரதங்களை எடுத்துக் கொள்வர்! கார்போஹைட்ரேட் இவர்களை பெரிதும் பாதிப்பதில்லை!

A++ஆக்கப்பூர்வமான, விவேகமான சிந்தனை! பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவர்! தயக்கத்துடனே பேசுவர்!
A-பிடிவாதம் அதிகம்! அதீத தன்னம்பிக்கை!

B -பி ரத்த வகை தோன்றி சுமார் 10000 வருடங்களாகின்றனவாம்! இவ்வகை மனிதர்கள் பால் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை விரும்பி உண்ணுவர்!
கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் வயிற்று உறுப்பகளைக் கொண்டவர்கள்! தொற்று நோய்கள் எளிதாகத் தாக்காது!

B++வலிமையானவர்கள், செயல் வீரர்கள், உணர்ச்சி மிக்கவர்கள்!
B--சுயநலமானவர், மன்னிக்கும் மனப்பான்மையற்றவர், யாராலும் கணிக்கமுடையாதவர்!

AB - ஏபி ரத்த வகையினர் உருவாகி சுமார் 1000 வருடங்களேயாகிறது! குணநலன்களும், உணவுப் பழக்கங்களும் ஏ வகை, பி வகை களுக்கு இடைப்பட்டு காணப்படுகிறது!

AB++ அமைதி. கட்டுப்பாடு மிக்கவர், பகுத்தறிவு மிக்கவர், அனுசரிப்பு, சுமுகமானவர்!
AB--குழப்பவாதி, முடிவெடுக்கும் வேகம் குறைவு, சிக்கலானவர்!

இவற்றையெல்லாம் நம்பித்தான் ஆக வேண்டும் எனும் கட்டாயமில்லை! டல்லடிக்கும் வாழ்க்கையை சிறிது சுவாரஸ்யமாக்கவே, இது போன்ற ஆராய்ச்சிகளும், முடிவுகளும்!


2 comments:

  1. அருமையான விஷயங்களை அழகா வகைப்படுத்தி இருக்கீங்க மாப்ள நன்றி!

    ReplyDelete
  2. புதிய அரிய விஷயம்
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete