Thursday, March 14, 2013

மாணவர் போராட்டத்தை ..கூத்தாடிகள் கண்டுகொள்ளவில்லையே?

 கூத்தாடிகள் எனும் பதம் கொச்சையானதாக இருக்கலாம்..ஆனால் அது ஒவ்வொரு முறையும் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கலைஞர்கள்..குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்கள்..செயல்படும்போது அல்லது எந்த செயலிலாவது ஈடுபடாமல் இருக்கும் போது..அவர்களை குறை சொல்வதற்காக..ஏவப்படும் பதம் !


கூத்து என்பது பாடிக் கொண்டும்..பாவனை செய்து கொண்டும்..கதை சொல்வது..! இது முதலில்..மந்தைகளிலும்,சந்தைகளிலும் ..மக்களின் நடுவே "ஓரங்க நாடகமாக" நடத்தப்பட்டது..! பிறகு கொட்டகை மற்றும் திறந்தவெளி மேடைகளில் ஏற்றப்பட்டது..கூத்தாடிகளும் நடிகர்கள் எனப்பட்டனர்..!
பின்னர் திரைக்குப்பின் ஒளிந்து கொண்ட பின்னர்..இருள் கொட்டகையில் மட்டுமே அவர்கள் தென்பட்டதால்..நட்சத்திரங்களாயினர் !


தமிழக மக்களுக்கு அடிக்கடி காணக் கிடைக்காததால்...திரைக் கலைஞர்கள்.."கடவுளா"கினர்..கொண்டாடப்பட்டனர்.!

எதைத் தின்றால் பித்தம் தெளியும்..எதை உபயோகப்படுத்தினால் நமக்கு ஆட்சி கிடைக்கும் ..என அலைந்து கொண்டிருந்த பிழைப்பு அரசியல்வாதிகள்..மக்களின் கவர்ச்சி மோகத்தை கணக்கிலிட்டு..அரசியலில் சினிமாக்கலைஞர்களை நுழைத்தனர்..!


அது ஆயிற்று..சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள்..சற்றேனும் குறையவில்லை..சினிமா மோகம் ! இனியும் அரை நூற்றாண்டு காலம், இது தொடருமோ எனும் நிலையே.காணப்படுகிறது !




திரைகலைஞர்களில் எதிர்கால திட்டங்களோடு சிலரும், கட்டாயத்தால் பலரும் ..மக்களின் பிரச்சனைகளுக்கு..குரல் கொடுப்பதும்..போராட்டங்களில்,போலி ஆதரவு கொடுத்து..கடனே என்று கலந்து கொள்வதும்..கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல..ரசிக சிகாமணிகள் பெருமைபட்டுக் கொள்ளும் அற்பவிஷயங்களும் கூட !

தற்போது ஈழவிடியல் வேண்டி நடை பெற்று வரும் இந்திய நடுவண் மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிரான ..மாணவர் சமுதாய தொடர் போராட்டங்களுக்கு..திரைக்கலைஞர்கள் எந்தவித ஆதரவும் தராமல் "சிவனே" என்று இருப்பதால் ..கடுப்பான..ரசிக சிகாமணிகள்..தங்கள் கடவுள்களை.." கூத்தாடிகள்" என வர்ணித்து..இணைய சமூகங்களில் ..பொங்கி,கும்மி அடித்து..கழுவி ஊற்றி வருகின்றனர் !


கலைஞர்கள் பொதுவாக..எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்..தங்கள் துறைப் பிரச்சனைகளுக்கே..அவர்களால் தீர்வு காணமுடியாமல்.எங்கெங்கோ..அடித்துபிடித்து..அலைந்துதிரிந்து கொண்டு..தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்..!

அவர்கள் வந்து "குரல்" கொடுக்கவில்லை என புலம்பித் திரிகிறது ஒரு கூட்டம்! !


சமுதாயத்தின் ஒரு அங்கம் தான் "திரைக் கலைஞர்கள்" அவர்களுக்கு கிடைத்திருக்கும் குறைந்த அளவிலான..நட்சத்திரவெளிச்சத்தில்..நடித்து அவர்கள் பொருள் தேடி செல்லட்டும் ! அவர்களை நாம் போராட்டங்களுக்கு அழைக்க வேண்டாம்.. அவர்கள் முன்னெடுத்து சென்று தான் நாம் போராட வேண்டும் என்ற நிலை இனி வேண்டாம் !

அரசியல் ஆதரவே வேண்டாம் எனும்போது..கூத்தாடிகள் ஆதரவு நமக்கெதற்கு?

கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல என்பதை நினைவில் ஏற்று..!


இனியும் நமக்கான ..நம்மை ஆளும் தகுதி வாய்ந்த தலைவர்களை..திரைக் கொட்டகையின் இருளில் சென்று தேடும் தன்மை வேண்டாம் !

இருளில் தேடினோம்..விடியவே இல்லை !

18 comments:

  1. ரமேஷ் அருமையான இடுகை. நெத்தியடி கூத்தாடிகளை கொண்டாடும் சமூகத்திற்கு. நடிகவேளிடம் அவரது ரசிகர்கள் மன்றம் வைப்போம் என்று சொன்னதற்கு, கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதீங்க நாடு உருப்படாது என்றாராம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு வரிகள்..எனக்கு உவகையும் ..ஊக்கமும் அளிக்கின்றது..மிக்க நன்றி ..சார் !

      Delete
  2. அவர்கள் முன்னெடுத்து சென்று தான் நாம் போராட வேண்டும் என்ற நிலை இனி வேண்டாம் !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்..மேற்கோளிட்டமைக்கும் ..மிக்க நன்றி..குருநாதன் சார் !

      Delete
  3. //* கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல *//

    சரியா சொன்னீங்க..

    ReplyDelete
    Replies
    1. கருத்து பகிர்தலுக்கு மிக்க நன்றி..அன்பு சார் !

      Delete
  4. "இருளில் தேடினோம்..விடியவே இல்லை"

    சரியாகச் சொன்னீர்கள். இந்த இருட்டுக் கூட்டங்களை வெளிச்சக் கூண்டுகளில் ஏற்றினால்தான் தமிழகத்தின் இருண்ட காலம் மறைந்து வெளிச்ச காலம் தொடங்கும்.

    ReplyDelete
    Replies
    1. கருத்து பகிர்தலுக்கு மிக்க நன்றி.!

      Delete
  5. கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல என்பதை நினைவில் ஏற்று..!


    இனியும் நமக்கான ..நம்மை ஆளும் தகுதி வாய்ந்த தலைவர்களை..திரைக் கொட்டகையின் இருளில் சென்று தேடும் தன்மை வேண்டாம் !// நல்லா சொன்னீங்க! அருமையான பதிவு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி..சுரேஷ் சார் !

      Delete
  6. //கூத்தாடிகள் எனப்படும் திரைக்கலைஞர்கள் நம்மை மகிழ்விக்க மட்டுமே...அறிவுறுத்தலுக்கோ, வழிநடத்தவோ அல்ல என்பதை நினைவில் ஏற்று..!//

    சொன்னது சரிதான்... ஆனால் மக்கள் கவர்ச்சி அங்குதானே இருக்கின்றது....!? மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும் !

    ReplyDelete
    Replies
    1. கவர்ச்சிக்கு அடிமையானோம்..இன்னும் கண் திறக்கவில்லை..!என்றுதான் விடியுமோ? நன்றி சார் !

      Delete
  7. சில சமயங்களில் சின்ன சின்ன சம்பவங்கள் கூட மறக்க முடியாத நினைவுகளாகி விடும். அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, நட்சத்திரங்கள் வானில் சிதறி கிடப்பது போல எண்ணிலடங்கா நினைவுகள் சிதறுண்டு கிடக்கும். என்னுடைய ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் பொன்னம்பட்டி என்ற குக்கிராமம். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கொடுத்துவைத்திருந்தால் தான் அங்கே மனிதர்களாக பிறக்க முடியும் இல்லாவிட்டால் கோவையில் பழைய பஞ்சுமில்கள் ரியல் எஸ்டேட்களாவதை , விவசாய நிலங்கள தரிசாவதை எதிர்த்து ஒன்றும் செய்யாத ஜடங்களைப் போன்ற, சமுதாய நோக்கே இல்லாத கோவை மக்கள் கூட்டத்தில் ஒருத்தராக சுற்ற வேண்டியது தான்.

    ReplyDelete
  8. ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்,ஹரியானா, உத்திரபிரதேசம், உத்திராஞ்சல், சட்டீஸ்கர், பீகார், மே.வங்கம், திரிபுரா, அசாம், சிக்கிம், மேகாலயா,மனிப்பூர், மிஷோரம், அருனாசலப்பிரதேசம்,இமாசல், னாகலாந்து மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, கோவா,கேரளா இதல்லாம் டூப்பு நம்ம தழிழி நாடு தான் டாப்புன்னு கத்தாமல் ஒழுங்காப் போய் புள்ள குட்டிங்களை படிக்க வைய்யுங்கல...

    ReplyDelete
    Replies
    1. தமிழா தட்டி எழுப்பப்படு.

      Delete
  9. சாம்பாரில் உப்பு கூடி விட்டதா ? கவலையே வேணாம் ஒரே ஒரு உறித்த வெள்ளரிப் பழத்தை போட்டு கரையுங்கள் அது சரியாகும். அப்பவும் உப்புசம் குறையவில்லை என்றால் கற்பகம் காம்ப்ளக்ஸ் பக்கத்து பெட்டிக் கடையில் கிடைக்கும் இன்ஞ்சி மரப்பாவை கலக்கிப் பாருங்கள். உப்பும் குறையும் ஜீரனமும் ஆகும்.

    ReplyDelete
  10. உறித்த வெங்காயத்தை திறந்த பாத்திரத்தில் வைக்கக் கூடாது. அது காற்றில் உள்ள கந்தக வாயுவுடன் ரியாக்ட் செய்து கருத்துப் போய்விடும். எர்த் செய்யப்பட்ட பாத்திரத்தில் வெங்காயத்தை வைத்துப் பாருங்கள் எத்தனை நேரமானாலும் கேடாது. தாடகம் ரோட்டில் எர்த் செய்யப்பட்ட பாத்திரம் விற்கிறார்கள்.

    பக்ருதீன்

    ReplyDelete
  11. காவிரிப் பிரச்னையில் ரஜினிகாந்திற்கும் விஸ்வரூபத்தில் கமல் ஹாசனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு எந்த நட்சத்திரம் திரையை விட்டு மண்ணுக்கு வந்து போராடுமென்று எதிர்பார்க்க முடியும்? சினிமாவும் அரசியலும் கலந்துவிட்டதால் தமிழ்நாட்டில் எல்லாவற்றுக்கும் திரையுலக ஆசாமிகளை எதிர்பார்க்கின்ற மனப்பாங்கு வளர்ந்துவிட்டது. நீங்களும் அதற்கு நீர் ஊற்றுகிறீர்களே! இனி அவர்களைப் பற்றி நினைவூட்டாதீர்கள்.

    ReplyDelete