Tuesday, February 19, 2013

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

பொத்தி பொத்தி ..தாயாரால் மராட்டிய சிவாஜி போல் வளர்க்கப் பட்டான் .அவன் ! காரணம்  பலகாலம் பேறு இன்றி..தவமிருந்து பிறந்தவன் என்பதால்..அதீத கவனம் !


தெரு விளையாட்டில் பங்கேற்க அனுமதி இல்லை..! காயம் பட்டுவிடுவான் என்பதற்காக..!
உறவினர் வீடுகளுக்கு விடுமுறையில் பெற்றோர் கூடவே சென்று..தங்கி திரும்ப வேணும் !

அதீத கட்டுப்பாடும்..கண்காணிப்பும்..விரும்பியவண்ணம் பெறாமை, ஏமாற்றத்தை தந்து..வளர்த்தெடுத்தது..அவனுள் கோபத்தை !

கண்காணிப்பு படிப்படியாக..குறைந்து..படித்து, வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளையும், அவன் மீது சுமத்தி விட்டு...அவன் வழிகாட்டுதலை விரும்பத் தொடங்கி விட்டது..குடும்பம் !

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !

இவ்வளவு நாளாக...சிறுகனலாக அவனுள் இருந்த..கோபம்..இப்போது வெடித்து அகம்/புறமெங்கும்..பரவத் தொடங்கிவிட்டது !

தொழிற்சாலையில், உறவு /நட்பு வகையறாக்களில் அவனது கோபம் ..பிரசித்தம்  !

இவனது பலமும்..பலவீனமும் கோபமே என்றாகி விட்டது..!
பலத்துக்கு காரணம் அவனது  நேர்மையும்..தொழில்பக்தியும்..!
பலவீனத்திற்கு காரணம்...இடம்பொருள் அறியா கோபம் !

திருமணமாகியும்..கோபம் குறையவில்லை..கூடவே சண்டைகளும் வந்துவிட்டது..காரணம் வந்த மகாராணி அம்மா..இவனை விட..கோபக்காரி !



இப்போதெல்லாம்..அவன் கோபப்பட்டால்..மகன் மட்டுமே பயப்படுகிறான்..அல்லது பயப்படுவதைப் போல நடிக்கிறான்..!
பெற்றோர் கண்டுகொள்வதில்லை..! மகளோ..நீ ஒரு டம்மி பீஸ்ஸுப்பா'' என்கிறாள்.. கோபப்பட்டால் காமெடியா இருக்குன்னு  சொல்றாள் !


சக ஊழியர்கள் / நட்புகள் / உறவுகள்....கோபம் உங்களுக்கு சூட்'டாகலை என்கிறார்கள்..எப்படின்னா..  திருப்பி பேசுவதில்லை ! அவனும் எத்தனை நேரம் தான் கத்துவான் ! சாந்தமாகிட்டான் !

இதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுன்னு கேக்கறீங்களா?
அவனுக்கு வயசாகிட்டே வருது !
வீட்டுக்காரம்மா..குழந்தைகளின் பலம் கொண்டுவிட்டதால்..சிரித்துக் கொண்டே கேட்கிறார்..

சண்டைக்கு வாரீயளா...மச்சான் !







11 comments:

  1. சண்டை போட்டு என்ன ஆகப் போகிறது என்ற பக்குவம் வயதாகும் போது வருகின்றது...
    அதாவது "உன்னோட மாரடிக்க என்னாலே முடியலடி " என்ற ஏகாந்த பரவச நிலை....!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் பயம் விட்டுப் போச்சு...நமக்கு பயம் வந்து தொத்திக்கிச்சு !

      Delete
  2. //கோபப்பட்டால் காமெடியா இருக்குன்னு // என்று சொல்லி எரியும் நெருப்பை நீரூற்றி அணைத்துவிடுகிறாள் என்றால் மகள் முற்றாக புரிந்து வைத்திருக்கிறாள்.

    //வீட்டுக்காரம்மா..குழந்தைகளின் பலம் கொண்டுவிட்டதால்// டம்மி பீசு...



    ReplyDelete
    Replies
    1. மகள்(களூ)க்கு அடங்காதவன் யாருக்கும் அடங்கமாட்டான் !

      Delete
  3. கோபம் நமது எதிரிதான்! நிதானம் சிறந்ததுன்னு என் அனுபவம் சொல்லுது! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. தம்புராக்கள் தர்னா செய்தால் என்னாகும் ... வயலின்களை வயலில் வைத்தால் என்னாகும்... கொத்துப் புரோட்டாவில் தயிர் சேர்த்தால் என்னாகும் அது போலத் தான் கோபத்தை கோர்த்து வைத்தால் கோதுமை உப்புமாவுக்கே குட்டிகரனம் தான் அடிக்கவேனும்.....கோபம் கொண்டால் புளிக்குழம்பில் காப்பியைக் கலந்து குடிப்பது போலகும் நிலமை..... அருமை வெங்கிட்டு தொடர்க......

    நாட்டியமேதை சம்பத் செல்வம்.

    ReplyDelete
  5. ##அதீத கட்டுப்பாடும்..கண்காணிப்பும்..விரும்பியவண்ணம் பெறாமை, ஏமாற்றத்தை தந்து..வளர்த்தெடுத்தது..அவனுள் கோபத்தை !##
    ஒருவன் எவ்வாறு கோபப்பட ஆரம்பிக்கிறான் என்பதன் அருமையான பார்வை.... இங்கேயே அவனையோ/அவளையோ மாற்றி வளர்க்க கற்க வேண்டும்...

    ReplyDelete
  6. வீட்டுக்காரம்மா..குழந்தைகளின் பலம் கொண்டுவிட்டதால்../////

    பொதுவாக வீட்டுக்கார அம்மாக்கள் தான் பிள்ளைகளின் நேசத்துக்குறியவர்களாக இருக்கிறார்கள். அப்பாக்களும் இங்கு நேசிக்கப்பட வேண்டியவர்களே ஆரம்பத்திலிருந்தே பிள்ளைகளுக்கு இது ஊட்டப்பட்டிருந்தால் இன்று இப்படியொரு கேள்வி எழுந்திருக்குமா என்ன ? :)

    ReplyDelete
  7. உண்மையில் சினம் குறைத்து வாழ்வதே சிறந்தது பாராட்டுகள்

    ReplyDelete
  8. மிஅக்வும் இறுகப்பிடிப்பதும்,பிகவும் லூசாக விடுவதும் தவறு எனத்தான் சொல்கிறார்கள் தங்களைப்போன்ற பெரியவர்கள்.நன்றி/

    ReplyDelete
  9. வாழ்க!வளமுடன்!!!

    ReplyDelete