Friday, February 15, 2013

கடவுள் எந்த மதமய்யா?

கேட்டுட்டானே ..அந்தக் கேள்வியெ !
கேட்கும்போதே குழப்பம் தீரலே !

பளீரென்ற கேள்வி.!.இடுப்புக்கச்சையில் கைவைத்து நிறுத்தி முகத்தை நிமிர்த்தி..கண்ணோடு கண் நோக்கி ..பதிலை தராமல் செல்லமுடியாத நிலையில் ...பளீரென்ற பிரகாசத்துடன் ..கேட்கப்பட்டக் கேள்வி !


கடவுள் எந்த மதமய்யா?

என்ன பதில் சொல்லுவாய்..எப்படிச் சொல்லுவாய்?
கேள்வியே தவறா...இல்லை கேட்டதா?



உன்னைக் கேள்வி கேட்டதில் என்ன தப்பு?

முப்பத்துமுக்கோடி என்கிறாய்..முப்பெருந்தேவியர் என்கிறாய்..! ஆதித்தொழில் செய்யும் அவர்தம்  கணவர்களைக் கடவுள் என்கிறாய் ! 
திகம்பரம் வேறு..சரணம் ..கச்சாமி வேறு என்கிறாய்!
ஆப்ரகாமிய தேவதூதர்களை வணங்குகிறாய்..!

புரியாத மொழியில் மந்திரம் போட்டும்
பூ போட்டும்..
சாம்பிராணி, வத்தி,பத்தி,விளக்கு எரிவிக்கிறாய்!
பாவப்பட்ட சிற்றுயிர் பிராணிகளை பலி இட்டு மகிழ்கிறாய்..!

இது போக உலகெங்கும் குல,குடும்ப சாமிகள் வேறு..கோடிக்கணக்கில்!

சாமி உண்டென்றால்..அது  ஒன்றென்றால்
அகில லோகம் பூரா ஒரே ரூ(அரூ)பமாகத்தானே இருக்கணும்?
எதுக்கு இத்தினி கோலம்..
ஊருக்கு ஒரு வேஷம்?

இதுல எந்த சாமி 
பெருசு..சிறுசுன்னு பலம் காமிச்சுக்க 
வெட்டிக்கிறீங்க..
குண்டு வெச்சுக்கிறீங்க...
குடியை எல்லாம் கெடுக்கிறீங்க..?

கடவுள் எந்த மதமய்யா?

சரி..இப்ப சொல்லு ..எல்லாம் வல்லவன்..எந்த மதம்?

திடீரன்று மடக்கப்பட்டவன்..நிதானித்து பதில் சொல்ல ஆரம்பித்தான்!
"படைத்தவனை யாரும் பார்த்ததில்லை...ஆனால் 
இப்படித்தான் இருப்பான் என்று..
நாங்களே அவனைப் படைச்சோம்..தேவதூதன்னு
சொல்லி வந்தவங்க..எங்க பெரியவங்க உதவியோடு !
காரணம் ..நாங்க பஞ்சபூதங்களையும்..காலத்தையும்
பார்த்து ..ரொம்ப ஆச்சரிய்ப்பட்டோம்..! 
இயற்கைன்னு சொல்லுவீங்களே ..அதைதான் !

அடையாளம் வேணுமில்ல..நாங்க படைச்சதுக்கு..பேரு வெச்சோம்..
பொறவு நடந்ததுதான் ..எல்லாருக்கும் தெரியுமே..!

சண்டை எதுக்குன்னு கேக்கறீங்க...பாருங்க
எங்களுக்கு வேற வேலை இல்லை..உலக்மே சுபிட்சமா இருக்கு!
பொழுது போகணுமில்ல..அதான் நீயா..நானா'ன்னு 
கேட்டுக்கிட்டு இருக்கோம்..அடிச்சுபுடிச்சு..அடிதடி பண்ணிட்டு !

கடவுள் எந்த மதமய்யான்னு...
இப்ப நீ கேக்குற..தெளிவாச் சொல்றேன்..சூதானமா கேட்டுக்கோ..!

கடவுள் எங்க மதம்..!

இங்க இருக்கிற எல்லாரையும் கேட்டுக்கொ ...யாரும் மாத்திச் சொல்லமாட்டாங்க..!

ஏன்னா..அதுதான் உண்மை !




14 comments:

  1. நல்ல கேள்வி ஆனா
    //கடவுள் எங்க மதம்..!//
    நாத்தீகர்களுக்கு ?? அல்லது எந்த மதமும் பிடிக்காதவாளுக்கு ? ! கேள்வி கேட்டவர் தெளிவா இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளை ஏத்துண்டு தானே ..அவரோட குலம் கோத்ரம் எல்லாம் விசாரிக்கிறா..பின்னே எப்படி கேள்வி கேக்குறவாள.."நாத்திகாஸ்னு' சொல்றது?

      Delete
  2. பல்வேறு தத்துவ சிந்தாந்தங்களை பத்து வரிகளில் படைத்து பட்டையை தொடர்ந்து கிளப்பி வரும் எங்கள் அன்பு நண்பர் திரு ரமேஷ் வெங்கடபதி பல்லாண்டு வாழ்க... இப்படிப்பட்ட பதிவுகள் தொடர்ந்து தருக...
    இப்போதைக்கு இது மட்டிலும் தான் என்னால் சொல்ல முடியும்....!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பு சிலிர்க்க வைக்கிறது..அட்வகேட் சார்! மிக்க நன்றி !

      Delete
  3. தெளிவா கேள்வி கேட்டு....தெளிவா பேசிட்டு வந்து கடைசில குழப்பீட்டிகளே ரமேஷ் சார்..... எனக்கு இன்றைக்கு விடை கிடைச்சதுன்னு நினைச்சேன்......

    ReplyDelete
    Replies
    1. உள்ளங்கையை மூடி வெச்சிருக்கிறவரைக்கு தான்...ஆர்வமா இருக்கும்..இருக்கணும்..!

      கடவுள் பத்திய கேள்விக்கு ...பதில் படிக்கவோ..சொல்லக் கேட்டோ கிடைக்காது ! ஒவ்வொருவருக்கும் வாழ்நாளுக்குள்ள கிடைச்சுடும்..! கிடைக்கணும் !

      (நான் கமலின் ரசிகன்..எனவே பதிலும் அப்படியே அமையற மாதிரி எல்லாருக்கும் தெரியுது ! ) மிக்க நன்றிங்க..மேடம் !

      Delete
  4. Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி.. முத்தரசு சார் !

      Delete
  5. Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி..கவியாழி சார் !

      Delete
  6. இருக்குன்னு சொல்றீங்களா? இல்லேங்கரீங்களா?

    ReplyDelete
    Replies
    1. கடவுள் இருக்கார் தானே..அப்ப அவரு என்ன மதம்னு கேக்குறாங்க...ஒவ்வொருத்தரும் எங்க மதம் தான்னு சொல்றாங்க !

      Delete
  7. கடவுள் மனித மதமாக இருக்க வேண்டும். நாம் தான் மனித மதத்திலிருந்து வேறு ஏதோ மதமாக, மதம் பிடித்த யானைபோல் மாறிக் கொண்டிருக்கின்றோம்

    ReplyDelete