கண்ணனின் அன்பை வேண்டி..மார்கழி மாதம் முதற்கொண்டு அதிகாலை விழித்து,நாட்காலையில் நீராடி ..நெய்யுண்ணோம் ..பாலுண்ணோம்..மலரும் மற்ற மை அலங்காரமும் செய்யோம் ..பொல்லாங்கு பேசமாட்டோம் ..என வைராக்கியம் பூண்டு ..மாயனின் பல்வேறு லீலைகளை சொல்லி பாடி மகிழ்ந்து ..நோன்பிருந்த நம் பாவைகள்..விரதநாட்கள் முடியும் தருவாயில் ..
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் ..கொடுத்த பரிசாக எண்ணி ..சூடகமும்..தோள்வளையும் ..தோடும்.செவிப்பூவும் சூடி அலங்காரமிட்டு புது ஆடைகள் அணிந்து ..
பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார !
அனைவரும் கூடி இருந்து கொண்டாடி மகிழும் நாளே .." கூடாரவல்லி " எனும் திருநாள் ! மார்கழி 27ம் நாள்!
இந்த பால்சோறு என்றால் என்ன ..என்று பார்ப்போம் !
இதுவும் ஒருவகை சர்க்கரைப் பொங்கல்தான் !
பாலிலேயே செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் !இதன் இன்னொரு பெயர் " அக்காரவடிசல்" !
எவ்வாறு செய்வது என்பது குறித்த காணொளி ..இங்கு இணைக்கப்பட்டுள்ளது !
இதை செய்து காண்பிப்பவர் ஸ்ரீ ரங்கம் ராது மாமி ! இணைய உலகில் மிகவும் பிரபலமானது ..இவரது பல படைப்புகள் ! புது மணப்பெண்களுக்கும் ..சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கும் ..இவரது காணொளிகள் மிகவும் உதவி செய்கிறது ! யூ-ட்யூபில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் !
இரண்டு பகுதிகளாக காணொளிகள் கிடைக்கும்,,கண்டு செய்து உண்டு மகிழுங்கள் ! அற்புதமாக இருக்கும் ! ஸ்ரீரங்கம் கோவிலில் தாயார் சந்நிதியில் அபூர்வமாகக் கிடைக்கும் !
பார்க்க இயலாதவர்களுக்காக !
தேவையான பொருட்கள் :
1.பச்சரிசி - 1 கப்
2.பாசிப்பருப்பு - கால் கப்
3. பால் - 1 லிட்டர்
4.நெய் - 150 மில்லி
5.உடைத்த வெல்லம் - 1 கப்
6.அஸ்கா சர்க்கரை - 1 கப்
(தண்ணீர் 2 கப், முந்திரி பருப்பு, ஏலக்காய் போடி, குங்க்குமப்பூ ..!)
செய்முறை:
1.முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும்.
2.வாணலியில் பாதி நெய்+பச்சரிசி+பாசிப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் வறுக்கணும்.
3.பால் 4கப் +தண்ணீர் 2கப் அதில் சேர்த்து 5நிமிடம் வேகணும்!
4.மொத்தக் கலவையை குக்கருக்கு மாற்றி 5,6 விசில் வரை வேகணும்!
5.மீண்டும் கலவையை வாணலிக்கு மாற்றி மீதி நெய் + பால் 2கப் சேர்த்து கொதிக்கனும். 5-7 நிமி
6. வெல்லம்+சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறணும்.
7.கெட்டியாகும் போது நெய்+முந்திரி +குங்க்குமப்பூ +ஏலக்காய் போடி சேர்த்து இறக்கிவிடலாம்
8.ஆறினால் கெட்டியாகி விடும் !
ஒரு பக்கம் ஆன்மிகம்.
ReplyDeleteஇன்னொரு பக்கம் அக்காரவடிசல்.
இப்போவே சாமியே கும்பிட்டு, சக்கரை பொங்கல் சாப்பிடனும் போல இருக்கு சார்...
அத்தனை சுவை.. உங்கள் பதிவையும் சேர்த்து...
நாளை வரை பொறுக்கணும் ! ஆன்மீகம் மட்டும் இல்லை என்றால் ..நாம் பல நல்அனுபவங்களையும் ..சுவைகளையும் பெற இயலாமல் போயிருக்கும் !
Delete//பால்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார !//
ReplyDeleteசக்கரை, பி.பி. உள்ளவர்கள் என்ன செய்ய..?
ஸ்புனில் எடுத்து தான் சாப்பிடனும் ! கரண்டி ஆகாது !
Delete//ஸ்புனில் எடுத்து தான் சாப்பிடனும் ! கரண்டி ஆகாது //
ReplyDeleteஎங்க வீட்டு பெருசுக்கு கொஞ்சம் பயம் ஜாஸ்தி.. செய்யறப்போ மோந்து பாத்துக்கிறேன் என்று சொல்லிட்டாரு..!
ஆமாம் சார்...சாப்பிட்டா ஆவலை அடக்க சிரமப்படணும் ! சுயக்கட்டுப்பாடு அவசியம் தான்!
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
ReplyDeleteநல்ல ரெசிபி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
vanakkam yeppadi irukeengal, nallaa samikireengal ponga
ReplyDeleteவாங்க..மாமன் உறவுகளே! ரொம்பநாளாகவே விதவிதமான உணவுவகைகளில் ஆர்வம் ! அதிக நேரம் வீட்டில் இருப்பதால் கொஞ்ச நாளாகவே..சமையலில் ஆர்வம் ! இப்போது ப்ரியாணி சமையல் நடக்குது ! ஹைதராபாத் "கச்சி" ஸ்டைல் பிரியாணியில்..கைதேர்ந்துவிட்டேன்! இது ஒரு ஹாபி !
Delete