அடி..வெள்ளையம்மா வந்ததடி உன் காளைக்கு ஆபத்து.! கட்டபொம்மன் பட வசனம் இது!
பள்ளி வேலைநேர மாற்றம் பற்றிய திட்டம் குறித்து ஊடகங்களில் செய்தி வந்ததும்..அதை அறிந்ததும் என் மனதில் ஓடிய எண்ணமே அது !
பெருகி வரும் மக்கள் கூட்டத்தில்..பள்ளிச் சிறார்களும், கல்லூரி கண்மணிகளும்..வேலைக்குச் செல்வாரோடு..காலை வேளைகளில் ..சாலையை பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ! அதனால் அவதிகள்..ஆபத்துகள்..இழப்புகள்!
குளிர் மிகுந்த வடமாநிலங்களில் காலை 7 மணிக்கு...சீருடை அணிந்தவாறு குழந்தைகள் கல்விச்சாலைக்கு நிதானமாகச் செல்வதை ..பல வருடங்களுக்கு முன்னரே ..கண்டிருக்கிறேன்..வியந்தும் இருக்கிறேன் !
ஏழரை மணித்திட்டம் என்னவோ..ஏழரைசனீஸ்வரர் வந்து தாக்கியதைப் போல அலறுகிறார்கள்...வீட்டம்மணிகளும்..வாத்தியார்களும் !
வேலைக்குச் செல்லும் அம்மணியருக்கு..நேரத்திலேயே எழுந்திருப்பது பழகி இருக்கும்! வீட்டம்மணிகள் தான் பாவம்..அவர்களோட "ரொடீன்" எல்லாம் மாறிடும்னு பயப்படராங்க !
கர்மம் புடிச்ச டிவி சீரியல்களை விட்டொழிச்சீங்கன்னா...சீக்கிரம் தூங்கி..விழிக்கலாம்! உடலுக்கும்..மனசுக்கும் ஆரோக்யம் ! இதை என்னமோ தியாகம்னு எல்லாம் நினைக்க வேண்டாம்..! பரிகாரமா பகல்லே ரொம்ப நேரம் கிடைக்கும்.ஹாயா பொழுதைக் கழிக்கலாம்!
ஒரு அஞ்சு.அஞ்சரைக்கு எந்திரிச்சா போதும்..குழந்தைகளை எழுப்பிவிட்டு..சுடுதண்ணி போட்டு..பிறகு குக்கர் வெச்சா..சாப்பாடு ரெடி.! சமையலுக்கு அரை மணிநேரம்..இன்னொரு குக்கர்ல இட்லி வெச்சா..மூணு இட்லி சாப்டுட்டு..தயிர்சாதம் பாக்ஸ்லெ ஸ்கூலுக்கு!
ஆறே முக்காலுக்கு எல்லாம் பஸ்/வேன்/ஆட்டோ வர்றதுக்கு ரெடி ஆயிடலாம் !
ரெண்டு மாசம் சிரமமாயிருக்கும்..அப்புறம் பழகிடும் !
அடுத்ததாக..நம்ம குரு'க்களைப் பார்க்கலாம்..! சம்பள உயர்வு அறிவிப்பைத் தவிர...மற்ற எல்லா அறிவுறுத்தலுக்கும் அவங்க ஆதரவு கிடைக்கிறது..எதிர்பார்க்கவியலா சமாச்சாரம் !
ஸ்கூலுக்குப் பக்கத்துலேயே வீடு பார்த்துக்கோங்கோ..அவ்வளவு தான் சொல்லமுடியும்!
பெத்தவங்களுக்கும் அதே அட்வைஸ் தான்..! பக்கத்துல இருக்குற ஸ்கூல்லெ பசங்களை சேர்த்துவிடுங்க ! அமெரிக்காவுல அந்த அந்த ஏரியாஸ்கூல்ல தான் சேர்க்கிறது..ஓரளவு கட்டாயம் !
அரசுக்கு ஒரு கோரிக்கை..எல்லா ஸ்கூல்லேயும் கட்டாய 'கேன்டீன்" வசதியும்,, அதிக அளவு " பாத்-ரூம்" வசதியும் அவசியமா செஞ்சு தரணும் !
அரசுப்பள்ளி/ கல்லூரிக்குன்னுத் தனியா ஸ்பெஷல் பேருந்துகளை இயக்கணும்..தனியார் பள்ளிகளுக்கு போக்குவரத்தில் தொடர்ந்து அதிகக் கண்காணிப்பும் அவசியம்!
பயப்படாதீங்க..மக்களே ! அருமையான திட்டம் !
பழைய காலம் மாதிரி 10 மணிக்கு முன்னாடி தூங்கப் போயிடுங்க..! காலை 5 மணிங்கிறது அதிகாலை அல்ல..'அதி உன்னத வேளை' ந்னு நெனைங்க..!
மத்தியான சாப்பாட்டுக்கு புள்ளைங்க வீட்டுக்கு வந்திடும்..படிக்க/விளையாடன்னு அதுங்களுக்கு ரொம்ப நேரம் கிடைக்கும்.!
மத்தபடி பாதுகாப்பு கவனிப்பு.,..பத்திரம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா அவங்களுக்குக் கிடைக்கும்! உங்க சுகத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..அவ்வளவு தான்!
இனி..எல்லா நாளும் பாவை நோன்புதான்..ஆண்டாள் நாச்சியாரின் வழியில் நாமும் செல்வோம்!
வீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் !
கண்ணுமணி செல்லம் ,நான் சொல்ல நினைச்சதெல்லாம் சொல்லிட்டியே என் ராசா .ஆசிரியர்களுக்கு எந்த நேரம் வேலை நேரமாக இருந்தால் என்ன. வீட்டில் விட்ட தூக்கத்தை பள்ளியில் தூங்கிக் கொள்கிறார்கள்.எப்படியும் விழுந்து விழுந்து பாடம் நடத்தி விட்டாலும்,ஹும்
ReplyDeleteஆசிரிய சமுதாயம் சம்பாத்தித்து வைத்திருக்கும் " மக்கள் கருத்துக்கள்" விரைவில் ..மிஸ்டர் கார்த்திக் !
Deleteஇது ஒரு நல்ல அலசல்... யதார்த்தமான பார்வை...
ReplyDeleteஅரசு மக்களின் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தை சொல்லப் போனால் ஒரு முன்னேற்றமான போக்கை கொண்டு வர முனைகிறது... 'சோம்பித் திரியேல்' என்பதை சுட்டிக் காட்டுகிறது.
கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி..அட்வகேட் சார் !
Delete//வீட்டம்மணிகள் தான் பாவம்..அவர்களோட "ரொடீன்" எல்லாம் மாறிடும்னு பயப்படராங்க !//
ReplyDeleteமாத்திக்கணும்... எல்லாத்தையும் மாத்திக்கணும்..
அட்ஜஸ்ட்மெண்ட் தானே சார்..வாழ்க்கையே !
Delete//கர்மம் புடிச்ச டிவி சீரியல்களை விட்டொழிச்சீங்கன்னா...சீக்கிரம் தூங்கி..விழிக்கலாம்! உடலுக்கும்..மனசுக்கும் ஆரோக்யம் ! இதை என்னமோ தியாகம்னு எல்லாம் நினைக்க வேண்டாம்..! பரிகாரமா பகல்லே ரொம்ப நேரம் கிடைக்கும்.ஹாயா பொழுதைக் கழிக்கலாம்!//
ReplyDeleteஇது ஒரு நல்ல யோசனை... வேறு வழி இல்லை...
வீட்டம்மணிகள் பெரும்பாலும் சீரியல் அடிக்ட்டுகளாக மாறிவிட்டனர் !
Delete//அரசுக்கு ஒரு கோரிக்கை..எல்லா ஸ்கூல்லேயும் கட்டாய 'கேன்டீன்" வசதியும்,, அதிக அளவு " பாத்-ரூம்" வசதியும் அவசியமா செஞ்சு தரணும் //
ReplyDeleteஇது ரொம்ப நியாயமான கோரிக்கை. ரெண்டு வசதியும் வேணும். குறிப்பா சுத்தமான கழிப்பறை வசதி கட்டாயம் வேணும்.
//உங்க சுகத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்க..அவ்வளவு தான்!//
ReplyDeleteகுழந்தை பெத்தாச்சு .... வளர்த்து ஆளாக்கி பார்ப்பதுதான் சுகம்.
சார்..ஐ மீன் நித்ராசுகம் !
Delete//வீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க!//
ReplyDeleteநைட்லே கண்டபடி வெளியிலே சுத்தாமா நேரத்துக்கு வீட்டுக்கு வந்து படுத்தா போதுமானது.. அதிகாலை ... அந்த உன்னத வேளை உற்சாகமாக பரபரப்பாக துவங்கும்..
பெரும் இம்சைகளே நாமதானே !
Deleteசரி சார்... மதியம் ஸ்கூல் விடுற நேரம் மத்த போக்குவரத்து அதிகம் சேர்ந்து விடுமே..?
ReplyDeleteஅது ஒன்னும் பிரச்னை இல்லை... வீட்டுக்குதானே பிள்ளைகள் போகிறார்கள்.. மெல்லமா போகலாம்...
1.30 - 3.00 மதியம் சாலை காலியாகத்தான் இருக்கும்.நீங்க சொன்னமாதிரி சாவகாசமாக வீடு திரும்பலாம்!
Deleteஆனா ... அண்ணாமலை சார் இப்படி சொல்றார்...!!
ReplyDelete"அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.
இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்."
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=621761
இது அவர் சார்ந்த அமைப்பினரின் கடமை..சார் ! அண்ணாமலை சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..வாத்தியார்களுக்கு !
Deleteஇதுக்கு கல்வித் துறை இப்படி பதிலடி கொடுக்குது...
ReplyDeleteகல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ப்ரபோஸ் செய்ததில்..கல்வித்துறையின் பங்கு மறுப்பதற்கில்லை !
Deleteசெம மேட்டர் சார்...
ReplyDeleteஉங்க பேரை சொல்லி face book- ல பகிர்ந்து கொள்கிறேன்.
தாராளமாக பகிரவும் ! கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.. சார் !
Delete
ReplyDeleteவீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் ! //
சரியான விஷயத்தை இயல்பாகச் சொல்லிப்போய்
இறுதியில் சொல்லவேண்டிய முக்கியமான கருத்தைச்
சொன்னவிதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி...ரமணி சார் !
Deleteவீட்டாம்பிளைகளா..கொஞ்சம் உங்க உதவியும் தேவை..மறந்திடாதீங்க! ரெண்டு மாடுகளும் இழுத்தாதான் குடும்ப வண்டி நகரும் !
ReplyDeleteஎங்க இதை சொல்லாம இருக்கீங்களேன்னு நினைச்சேன்... நீங்க கூட இருந்து பேச்சுக் கொடுத்தாலே போதும் பாதிபலம் வந்திடும் பெண்களுக்கு நல்ல பதிவு
உதவி செய்யாம உபத்ரவம் செய்யும் நிறைய சண்டி காளைக இருக்கு...அவங்களுக்கும் பட்ற..சுட்ற மாதிரி..இன்னமும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமோன்னு தோணுது !
Deleteமிக்க நன்றிங்க ..மேடம்!
ஆக நம்மை நாம் எந்திரங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இயல்பு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க துணிந்து. நல்ல அலசல்.
ReplyDeleteஇயல்பு வாழ்கைக்கு ஒரு பாதிப்பும் இல்லைங்க..மேடம் ! ஜஸ்ட் ஒரு ஒன்றரை மணி நேரம் ..நம்ம தினசரி வாழ்க்கையை அட்வான்ஸ்..செஞ்சுக்கணும்..அவ்வளவுதான் ! இனி காலை என்பது 6.30க்கு பதிலா 5 மணி !
Delete"வைகறைத் துயிலெழு !"