Saturday, November 3, 2012

ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!

 இயந்திரத்துக்குள் வருவதில்லை..
ரசனை!
இதயத்தில்..இதயத்துள் மலர்வது..
ஈர்ப்பு!
ரசனையும்  ஈர்ப்பும்  பிரசவிப்பது
அன்பு!
காதலாக வளர்ப்பது..
கவிதை!

ரசிகனே காதலன்...
காதலனே கவிஞன்!


கவிதை எழுதா காதலன் ஏது?
கவிதையை விரும்பா காதலும் ஏது?



ரசிகனே காதலன்... காதலனே கவிஞன்!


எழுதுவது புதுக்கவிதையாகினும்...கவிதை
எழுதுவது இங்கு மரபாக' வைக்கப்படும்!

காதலன் தான் கவிதை எழுதுவானோ..காதலி?
அவளுக்குத் தெரியும்..கவிதைகள்
பொய்யென்று!
அவள் பொய்யுரையாள்..
ஆனால் தன்மெய் போல் ரசிப்பாள்!


சில ஆண்டாள்களும் இங்கு உண்டு!
ரங்கன்கள் அதிகமில்லை!


கவிதைகள் சற்று நீண்ட குறுஞ்செய்திகள்!
எழுதியவர் மறந்து போகலாம்..!
காகித்தில் பேனா மையின் கறை போல
அன்புநெஞ்சத்தில் கறை கொண்டிருக்கும்...!



புதுக்கவிதை தான் இனிக்கும்..
அது முடிவில்லா தொடர்கதை..!
புதுப்புது கவிதைகள் முதலில் இனிக்கும்
ஒரு கட்டத்தில் இனிமையே விலகிடும்!


கவிதை எழுத வேண்டும்
என்பது கட்டாயமில்லை..
கண்களால் சொன்னாலும்
புரிந்து கொள்ளப்படும்..
நினைவில் ஏற்றிக் கொள்ளப்படும்!









14 comments:


  1. மெளன மொழியில்
    எழுதும் கவிதைகள்...

    இருவருக்கு மட்டுமே
    உரித்தானது உணரக்கூடியது.

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கலாகுமரன் Sir!

    இருவர் வரையும் கவிதை..ம் .ம் இதுவும் சுவை கூட்டும்!

    ReplyDelete
  4. நண்டு @நொரண்டு -ஈரோடு Sir!

    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் sir!

    கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. தொழிற்களம் குழு!

    தங்கள் தளத்தில் இணைத்தாயிற்று! இணைந்து முன்னேறுவோம்! நன்றி!

    ReplyDelete
  7. கவிதைகளை ரசனையுள்ள கவிஞர்கள்
    எழுதுகிறார்கள்.கவிதைகள் தன்னை
    எழுதிக் கொள்வதில்லை
    ஒரு சிரிப்பில் கவிஞர்களுக்குள்
    கவிதை ஊற்றை பெருகவிட்டு அதனால்
    அவன் அடையும் இன்பத்தை அல்லது அவஸ்தையை
    சிரித்து ரசிப்பதையே அது (அவர்கள் )அழாகாய்ச் செய்கிறது(றார்கள் )
    காதலற்ற கவிதை ஜடமே
    கவிதையற்ற காதல் பாலையே
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. காலம் மாற மாற..கவிபாடிகள் ஏனோ மறைந்து கொண்டே வருகிறார்கள்..இன்று கண்டதும் காதலே..கவிதைகள் எழுதும் அளவிற்கு பொறுமை இல்லை!

      நன்றி சார்!

      Delete
  8. Replies
    1. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!சார்!

      Delete
  9. கவிதை என்று ஏற்றுக் கொண்டதற்கு
    நன்றி சார்!

    ReplyDelete
  10. வரிகள் உண்மையை அழகாகப் பேசுகிறது .வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகையும்..கருத்தும் எனக்கு உவகை அளித்தது...நன்றி!

      Delete