Monday, January 16, 2012

புத்தாண்டை ஏன் மாற்றம் செய்ய வேண்டும்?

 ஆயிரம் பிரச்சனைகள் தீர்வு வேண்டி காத்திருக்க ஆட்சியாளர்கள்  தேவையற்ற
மாற்றங்களை மக்கள் தலையில் மாட்டி விடுகின்றனர்!

யார் இவர்களை இந்த மாற்றங்களைக் கோரினர் எனில் ஒரு சிறு கூட்டத்தை
காட்டிச்செல்வர்! பெரும்பான்மையர் மாக்கள் எனும் எண்ணம் இந்த ஆட்சியாளருக்கு!

மக்களின் வழிபாடுகளை குறை கூறி சட்டம் எனும் ஆயுதத்தால் மாற்றத் துடிக்கும் 'தீரா விடத் தூண்கள்"!

இவர்கள் மாற்றத் துடிப்பது மக்களின் வழிபாடு சார்ந்த நடைமுறைகளை !
அதற்கு இவர்கள் மாட்டி கொள்வது பகுத்தறிவுப் பலகையை!

எல்லா வழிபாட்டு முறைகளையும் மூடநம்பிக்கைகள் என்று சொல்ல ஆட்சியாளருக்கு என்ன உரிமை!நடைமுறை சார்ந்த திட நம்பிக்கைகளும்
உண்டு என்பதை அறிய முயலாமல்!



பொதுவாக மக்களிடம் நடைமுறையில் இருந்து வரும் கொண்டாட்ட முறைகளை அதிகாரம் கொண்டு கைகளை முறுக்கி மாற்றுவதில் ஆட்சியாளருக்கு என்ன ஆனந்தம்!
அவர்கள் செய்யும் குளறுபடிகளுக்கு
வக்காலத்து வாங்க அல்லக்கை கும்பல் வேறு!இன விரோதம், அறிவு விரோதம் என அவை கூக்குரலிடும்!
தங்களின் ஜனவிரோதத்தை மறைத்து !

யாகம் வளர்ப்பது, ஸ்லோகம் சொல்வது,அந்நிய மொழியில் கடவுள் வாழ்த்து சொல்லி அர்ச்சிப்பது, தீ மிதிப்பது ,அலகு குத்துவது,தியானிப்பது,விரதம் அனுஷ்டிப்பு ..இவையெல்லாம் வழிபாட்டு முறைகள்! இவையெல்லாம் மதங்களோடு வளர்ந்த வழிபாட்டு முறைகள்!
எளிய மக்களின் நடைமுறை சார்ந்த வழிபாட்டுமுறை சிறு விலங்குகளை
தன முன்னோருக்கும், குலசாமிகளுக்கும் "பலி கொடுப்பது"!அதை சட்டம் போட்டு தடுத்து மகிழ்ந்தது தன ஆட்சிக் காலத்தில் இலை கட்சி!அதை மாற்றி
மக்களை மகிழ்வித்தது அடுத்து வந்த சூரிய  கட்சி ஆட்சி!

சூரிய கட்சியோ தன் பங்கிற்கு புத்தாண்டு கொண்டாடுவதில் தவறு என்று குழுவமைத்து கண்டெடுத்து சித்திரையில் ஆரியசார்பு,இன விரோதம் எனக் கூறி தைமாத்ததிற்கு மாற்றியதோடு அல்லாமல்,தையில் கொண்டாடா விட்டால் தமிழன் அல்ல என்றது!அரசாங்க ஊழியர்களை மட்டும் வைத்து
ஊர்கள் தோறும் வண்ண விளக்குகளை எரிய வைத்து கொண்டாடி மகிழ்ந்தது!
அடுத்து வந்த இலை ஆட்சி மீண்டும் புத்தாண்டை சித்திரைக்கே மீட்டுச்சென்றது!

வைணவர்கள் தை முதல் நாள் "உத்தராயணம்" என்பர்! ஆனால் அறிவியலார்
மார்ச் 21  அன்றுதான் பூமிப் பந்து வடக்கு நோக்கித் திரும்பி, "உத்தராயணம் "
ஆரம்பிக்கிறது என்கின்றனர்! எனவே நம் ஊரில் அதை ஒட்டிய சித்திரையில் புத்தாண்டை நம் முன்னோர்கள் தொடங்கி உள்ளனர்!கோடையிலே தான் வருடப் பிறப்பை ஆரம்பித்துள்ளனர்!

பண்டைய தமிழகத்தில் எங்கோ ஒரு சாரார் தையில் புத்தாண்டு அனுசரித்திருக்கலாம்! ஆனால் அது கால ஓட்டத்தில் மறைந்து தமிழகம் எங்கும் சித்திரையில் புத்தாண்டை தொடங்குவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை! அதை மாற்றத் தேவையில்லை இனி எப்போதும்!

ஆங்கிலப் புத்தாண்டும் ஆரியப் புத்தாண்டே! அதை ஏற்று விடுமுறை விட்டு விமர்சையாகக் கொண்டாடும் "தீரா விட'க் கூட்டம்..தமிழர் நடைமுறைக் கொண்டாட்டத்தை விமர்சிப்பது விநோதம்!

தையில் புத்தாண்டு கொண்டாடுவது தான் தமிழர் கலாச்சாரம் என்று கட்டாயப் படுத்துவருக்கு, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதும் தமிழ் கலாச்சாரம் என்பதையும் நினைவுப் படுத்துகிறோம்!

என் அப்பன்,பாட்டன்,பூட்டன்,முப்பாட்டன் அனைவரும் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடினர்! நானும் அன்று தான் கொண்டாடுவேன்!இது ஒன்றும் மூட நம்பிக்கையல்ல!திட நம்பிக்கை!


17 comments:

  1. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. நண்டு @நொரண்டு//

    மிக்க நன்றி சார்! இனிய பொங்கல் திருநாட்கள் இனிதே கழியட்டும்! வரும் காலம் வசந்தமாகட்டும்!

    ReplyDelete
  3. என் அப்பன்,பாட்டன்,பூட்டன்,முப்பாட்டன் அனைவரும் சித்திரையில் தான் புத்தாண்டு கொண்டாடினர்! நானும் அன்று தான் கொண்டாடுவேன்!இது ஒன்றும் மூட நம்பிக்கையல்ல!திட நம்பிக்கை!////////


    அவர்களுக்கு அவர்களின் கருத்தில் இருக்கிற உறுதி, உங்களுக்கு உங்கள் கருத்தில் இருக்க தானே செய்யும். அது தானே நியாயம்.

    ReplyDelete
  4. ஒசை //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  5. நம் முன்னோர்களின் சீரிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் மூடநம்பிக்கை என்ற பெயரில் மறக்கடிக்க முயற்சிப்பதும் மாற்றிக் கொண்டாடுவதும் முட்டாள்தனமே. முன்னோர்களின் ஒவ்வொரு செயலுமே அறிவியலோடு இயைந்தவையே . அவற்றை அறியும் அறிவு இப்பொழுதைய தலைமுறைக்கு கொஞ்சம் கம்மிதான்.

    ReplyDelete
  6. கடம்பவன குயில்// sir!

    பெரும்பான்மையோரின் மன ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. சரியான அடி கொடுத்திருகீங்க மாப்ள!

    ReplyDelete
  8. என்ன சார்..? ஜாலியா, ஜோவியலா எழுதிகிட்டு இருந்தீங்க.. திடீர்ன்னு டென்சன் ஆய்டீங்க..!
    மனோகரா, பராசக்தி வசனம் மாதிரி பட்டைய கிளப்புது..
    அனல் பறக்குது... வாசிச்ச எனக்கு அந்த நெருப்பு பத்திகிச்சு..
    சபாஷ்..

    ReplyDelete
  9. விக்கியுலகம் வெங்கி மாம்ஸ்!

    விடுமுறையில் வெளியே செல்லாமல் கணிணியில் அதிக நேரம் இருந்ததால் வந்த எழுச்சி!

    ReplyDelete
  10. Advocate P.R.Jayarajan Sir//

    வாஸ்து புருஷன் கண்விழிப்பது போல் வெகுசில சமயம்,உறங்கும் அந்நியன் எழுந்துவிடுகிறான்!பொதுவாக ரெமோ தான்!

    ReplyDelete
  11. தையில் புத்தாண்டு கொண்டாடுவது தான் தமிழர் கலாச்சாரம் என்று கட்டாயப் படுத்துவருக்கு, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதும் தமிழ் கலாச்சாரம் என்பதையும் நினைவுப் படுத்துகிறோம்!//

    அடி மடியில் கைவைக்கிறீர்களே
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Ramani sir!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  13. மூட நம்பிக்கையல்ல!திட நம்பிக்கை!

    வசந்த நம்பிக்கைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. இராஜராஜேஸ்வரி மேடம்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  15. சூப்பரா போட்டிக போங்க பிறந்த நல மாத்தரவனுக்கு இதுவெல்லாம் சாதாரணம்

    ReplyDelete
  16. கோவைக் காற்று வீசி ரொம்ப நாளாகிவிட்டது போல உள்ளதே
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  17. பதிவுக்காக காத்திருக்கிறேன்..

    ReplyDelete