Saturday, January 7, 2012

மருத்துவர் மனிதனா..கடவுளா?

நிச்சயமாக மருத்துவர் கடவுள்தான் ! அதுவும் மனித 
 ருபத்தில் உலவும் கடவுள் !
யாருக்கு? நோயாளிக்கு ..நோயாளியின் குடும்பத்தார்க்கு ..மட்டுமே !
அதுவும் எதுவரை ..வந்த நோய் சொஸ்தமாகும்வரை!

நோய் குணமாகும்வரை மருத்துவர் தெய்வம்! அவர் சொல்வது வேதவாக்கு! பணிபுரியும் செவிலியர் பரிவார  தேவதைகள் !எப்படியாவது பிணியின் பிடிப்பில் இருந்து விலக்கித்தருமாறு மனமும் வாயும் இறைஞ்சும்!

குணமாக ஆரம்பித்தபின்னரே குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்!



 
 
இன்றைய மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் என்றாகிவிட்டது !
மருத்துவ உலகை பகுத்துப் பார்த்தால் , அதில் 

அ) உள்ளுரில் சிறுகடை நடத்தும் தனிமருத்துவர் 
ஆ ) 20 படுக்கை வரை கொண்ட சிறு மருத்துவமனை 
இ ) அரசு மருத்துவர் 
ஈ ) அனைத்து வசதிகளையும் கொண்ட கார்ப்பரேட் மருத்துவ மையங்கள் 
உ ) வெளிநாட்டு மருத்துவமனைகள் 

தனிமருத்துவர் :

சளி காய்ச்சல் தலைவலி வயிற்றுவலி பேதி பிரஷர் ..போன்ற சீசன் நோய்களை விரட்டும் மந்திரவாதி இவர் ! மக்கள் கூடும் இடங்களில் கடை விரித்திருப்பார்! வயதனாலும், கைராசி இருந்தாலுமே இவர் கும்மியடிப்பார்! இல்லையெனில் ஈ அடிப்பார்! தற்போது இவர்கள் புறநகர் பகுதிகளிலே தான் 
தென்படுகின்றனர்! சிலர் மருந்துக்கடையையும் சேர்த்து நடத்தி வருகின்றனர்!
ஏய்ப்பு என்பது தேவையற்ற மருந்துகளை வாங்க வைப்பது! என்னதான் 5 நாட்களுக்கு எழுதினாலும் யாரும் 2 ,3 நாட்களுக்கு மேல் மருந்து வாங்குவதில்லை!

சிறு மருத்துவமனை (கிளினிக்)

10  -20 படுக்கைகள் வரை புறநகர்களில் இயங்கும் அவசரத் தேவை ஆஸ்பத்திரிகள்! டைபாய்ட், காலரா, விஷமுறி ,கருக்கலைப்பு ,பிரசவம், 
விபத்துக் காயம்,குடலிறக்கம்,அப்பன்டிக்ஸ் போன்ற நிவாரணங்கள் 
கிடைக்குமிடம்! 
உண்மையில் நல்ல கவனிப்பும் சிகிச்சையும் கிடைக்கும் இடங்கள் இவைகளே! மக்களின் அறியாமையையும் அவசரத்தையும் வைத்துக் காசு
பார்ப்பவையும் இவையே !
நல்ல கவனிப்பு மருத்துவரின் கட்டாயக் கடமையாகிறது இங்கே! சிகிச்சை பெறுபவர் திரும்ப வருவதும், மற்ற நோயாளிக்கு சிபாரிசு செய்வதும் மருத்துவரின் கவனிப்பில் இருக்கிறது!
விபத்து விஷமுறி போன்ற கேஸ்களில் அதிகக் கட்டணம் வசுலிப்பதால் பிரச்சனை! வன்மம்! நோயாளி இறந்து விட்டால் மருத்துவர் பாடு படு திண்டாட்டம்!

அரசு மருத்துவர் !

கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  பணியாற்றும் இவ்வகையினர் மற்ற அரசுப் பணியினரைப் போலவே வேலை செய்ய சுணக்கம் காட்டுகின்றனர் !
ஆனால் நகர்ப்புற அரசுமனைகளில் பணியாற்றுவோர் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தொடர் கண்காணிப்பில் வேலையில் பிளிந்தேடுக்கப்படுகின்றனர்! 
அதிகப்படியான வேலையின் சுமையால் வேலையின் தரம் பாதித்து
மக்களோடு அடிக்கடி உரசல்கள்! வெளியில் தங்கள் கிளினிக் மூலம் வருபவர்க்கு பணம் வாங்கிக் கொண்டு அரசுமனைகளில் உயர் சிகிச்சை
 அளிப்பது மக்களிடம் வெறுப்பைத் தூண்டுகிறது!

கார்ப்பரேட் மருத்துவ மையங்கள் :

பெரும்பாலானவை வியாபார நோக்கம் கொண்டவையே! பணமுதலைகளால் 
ஆரம்பிக்கப்பட்டவை! அரசியல்வாதிகளின் பினாமி சொத்துக்கள்! 
ஆனால் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மற்றும் அறுவைச்சிகிச்சைகளை 
அளிப்பவை ! வாழ்நாட்களை நீட்டிப்பவை ! எல்லாம் பில்லை பார்க்கும்வரையே!

இன்சுரன்ஸ் கம்பெனிகளின் வருகைக்கு முன்னர் ஒன்றிரெண்டே இருந்தவை 
இன்று புற்ரிசல் போல கிளம்பிவிட்டன!இவற்றை வாழவைப்பது நம்முடைய சோம்பலான வாழ்க்கை முறையும், விபத்துகளும், ஹெல்த் இன்சுரன்ச்கலுமே! 
இங்கு அவர்களை எதிர்த்து பேசமுடியாது! கேஸ் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்!

வெளிநாட்டு மருத்துமனைகள் :

இருபது வருடங்களுக்கு முன்னர் வெகுபிரபல்யம்! புது ஆராய்ச்சிகள் 
இங்குதான் செயலுக்கு வருகின்றன! செலவு மிக அதிகம்!

நமது நாட்டில் பொருளுக்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கும் நாம் சேவைகளுக்கு விலை அதிக விலை கொடுக்கத் தயங்குகிறோம், மருங்குகிறோம்!
இங்கு  சேவை என்றாலே அது இலவசம் என்றாகிவிட்டது !

வெளிநாடுகளில் பொருள்கள் பெரும்பாலும் விலை குறைவான இடங்களில் 
இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விடுகிறது ! ஆனால் சேவைகள் அங்கே காஸ்ட்லி !

மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு!

கொலை நடந்ததால் மருத்துவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க ஒருநாள் கதவடைத்து போராடிஉள்ளனர்! அனுதாபம் தெரிவிப்போம்!

தொடர்கதையானால் மட்டுமே எதிர்ப்போம் !

10 comments:

  1. மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
    நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு!//

    நாட்டு நடப்பை பார்த்தாலே புரியுது!!!!

    ReplyDelete
  2. அருமையாக வரிசைப்படுத்தி
    மிக அழகாக விளக்கமும் கொடுத்துள்ளீர்கள்
    மருத்துவர்கள் கடவுள் என்பதை தாண்டி
    மனித நேயமிக்கவர்கள் என்பதையும் தாண்டி
    வியாபாரிகள் என்பதையும் தாண்டி
    எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் ஆதாயம் என்கிற
    மோசமானவார்களாக மாறிவருகிறார்கள் என்பது என் எண்ணம்
    உங்க்களுக்கும் கொஞ்சம் அந்த கருத்து இருக்கிறது என் நினைக்கிறேன்
    ஆனால் எழுத்தில் நாசூக்கு தெரிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நாம் ஆயிரம் தான் மருத்துவர்களின் செயல்களை
    சரியல்ல என்று பேசினாலும், நமக்கு நெருங்கியவர்கள்
    உயிருக்கு போராடுகையில் அதே மருத்துவரிடம் சென்று
    எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை காப்பாற்றுங்கள்
    என்று கூறுவது தவிர்க்க முடியாத ஒரு சொல்லாவே மாறிவிட்டது...

    ஆனாலும் அந்த சூழ்நிலையில் நாம் கடவுளையும் மீறி வணங்குதலுக்கு உரிய
    ஒருவராக மருத்துவரை பார்க்கிறோம். அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள்
    பணத்தையும் மீறி உள்ள மனித நேயத்தை கடைபிடிக்க வேண்டும்..
    அப்படிச் செய்தால் மனதில் என்றும் நிலைப்பார்கள்...

    அருமையான கட்டுரை ஒன்று சமைத்து அதை அழகாக ஒழுங்கு படுத்தி
    அற்புதமாக பதிந்திருக்கிறீர்கள்.
    நன்றிகள் பல நண்பரே.

    ReplyDelete
  4. பள்ளி்களில் அதிக காசுகொடுத்து படிக்கும் பள்ளிகள் - கட்டணம் குறைவாக வாங்கும் பள்ளிகள்,

    உணவுவிடுதிகளில் 5 ஸ்டார் உணவுவிடுதி - குறைந்தவிலையில் உணவுப்பண்டங்கள் கிடைக்கும் கையேந்திபவன்கள்

    ஏன் ஆண்கள் முடிதிருத்தும் இடம்கூட குறைவான கட்டணம் - அதிக கட்டணம் வசூலிக்கும் ஆடம்பர பியூட்டி பார்லர்கள்

    இதுபோன்ற அதிக கட்டணம் குறைவான கட்டணம் பேதம் இருக்கும்போது மருத்துவர்களையும் மருத்துவமனையையும் மட்டும் குறிவைத்து கணைகள் தொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை

    சாதாரணமானவர்கள் கவனக்குறைவு அவர்களுக்கு மட்டும் பாதிப்பு. ஆனால் மருத்துவர்கள், ஓட்டுனர்கள் கவனக்குறைவால் மற்றவர்களின் உயிருக்கே பாதிப்பு. அது மறுப்பதற்கில்லை. பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டியது இவர்களின் கடமை.

    ReplyDelete
  5. MANO நாஞ்சில் மனோ !

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,நண்பா!

    ReplyDelete
  6. Ramani Sir!

    என்று கருவிகள் துணையை மருத்துவர்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தனரோ அன்றே ஆரம்பித்தது மருத்துவர்களின் பணம் செய்யும் ஆசை! அதுவரை மனித மூளைக்கு மதிப்பு அதிகம் இருந்தது! அதைக் கொண்ட மருத்துவர் பின்னால் கூட்டம் ஓடியது! இன்றோ திறமைக்கு மதிப்பை விட வசதிகளுக்கு கூட்டம் மொய்க்கிறது!


    வருகைக்கும் நெடிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  7. மகேந்திரன் Sir!

    நோயாளிகளுக்கு காரியம் ஆகும்வரை இருக்கும் மன நிலை பின்னர் மாறிவிடுகிறது!

    மருத்துவத் துறையும் மற்ற சேவைத் துறைகளான தொலைபேசி,போக்குவரத்து போன்றவைகளில் நிலவும் மனப்பான்மையை பின்பற்ற ஆரம்பித்துவிட்டது!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. கடம்பவன குயில் Sir!

    உங்கள் விளக்கம் மிக்க சரியே! மருத்துவ சேவை மீதான நுகர்வோர் சட்டம் நோயாளிகளுக்கு நல்ல வரப்பிரசாதம்! ஆனால் அதுவே மருத்துவருக்கும், நோயாளிகளுக்கும் இடையே வெறுப்பை அதிகரித்து நெருக்கத்தை விலக்கிவிட்டது!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. //மருத்துவர்களிலும் பேராசை கொண்டோர் உண்டு!
    நன்றி மறந்த நோயாளிகளும் உண்டு//

    பேராசையும், நன்றி மறப்பதும் இயல்பான ஒன்று..

    வழக்கு ஜெயித்து விட்டால் கட்சிக்காரன் வக்கீல் வீட்டு வாசப்படி கூட மிதிப்பதில்லை. பலசமயங்களில் அவனிடத்தில் 'ஜெயிப்பு பீஸ்' கூட வாங்க முடிவதில்லை.
    ஒரு வழக்கு கிடைத்து விட்டால் அதை பல வழக்காக்கும் வக்கீல்களும் இருக்கேவே செய்கின்றனர், கட்சிக்காரனின் பை வீக்கத்தைப் பொறுத்து.

    நல்ல பகுப்பாய்வுப் பதிவு...
    வர்ணனைகள் பிரமாதம்..
    தொடர்க..

    ReplyDelete
  10. Advocate P.R.Jayarajan sir!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete