Monday, October 10, 2011

கஜல் மன்னன் ஜக்ஜித் சிங்!

நண்பர்களுக்கும்  அன்பர்களுக்கும்  வந்தனம்!

மெல்லிசைப்  பாடல்கள் என்பது திரைப்பாடல்கள் மட்டுமே என்பது நம் அனைவரின்    கருத்தாக உள்ளது ! ரேடியோவில் சில தேசபக்திப் பாடல்கள் மெல்லிசை எனும் போர்வையில் வந்து செல்லும்!

வல்லிசை சங்கீத கனவான்களும், அம்மணிகளும் பாரதி, சிவனின்  பாடல்களை மெல்லிசையாக போகிற போக்கில் பாடிப்போவர்!

முழுமையான மெல்லிசை என்பது திரைப்பாடலைத் தவிர்த்து தமிழில் மிகவும் குறைவுதான் !
ஆனால் வடநாட்டில் மெல்லிசை தனி மரியாதையுடன் திகழ்கிறது! ஒருவேளை அவர்களின் ஹிந்துஸ்தானி இசை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் தானோ !
கஜல் என்பது வடநாட்டு மெல்லிசையே !
பாடகர் தன்னோடு ஹோர்மொனியம் ,தபேலா ,புல்லாங்குழல்,கிடார் மட்டுமே வைத்துக் கொண்டு மெல்லிய குரலில் வசனத்தை ராகத்துடன் நம் காதில் ரகசியமாக பேசுவதே கஜல்! 
அதில் ஒரு ஜோடிக் குயில்கள் மிகவும் பிரபல்யம் !
அவர்கள் தான்  ஜகஜித் சிங் - சித்ரா சிங் ஜோடி!







அனுப் ஜலேடா  இவர்களது செல்லப் போட்டியாளர்! 

ஜகஜித் - சித்ரா ஜோடி தான் கஜலை பிரபலப் படுத்தியது என்பது மிகையாகாது !
கேட்பவரை சுகப் படுத்திய சித்ராவின் குரல் 1990 ல் மகனை இழந்த பின் ஒலிக்க மறந்து விட்டது பெரிய சோகம் !

பாடிக் கொண்டிருந்த ஆண்குயிலும் தற்போது நிரந்தரமாக கண் மூடிவிட்டது !

இசை ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு !

10 comments:

  1. மாப்ள அஞ்சலிகள்...நன்றி தங்கள் பதிவுக்கு!

    ReplyDelete
  2. ஜக்தித் குடும்பத்தினர்க்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். சூடான பதிவு.

    ReplyDelete
  3. அனூப் இவரது செல்லப் போட்டியாளராக இருந்தாலும் அவர் சற்று ஆன்மீகம் பக்கம் ஒதுங்கிவிட்டார். பங்கஜ் உதாஸ் தான் இவரின் முக்கிய போட்டியாளர். ஆனால், அவரது range, forte' எல்லாம் வேறு. இவர் மென் குரல் சக்கரவர்த்தி. இதயத்தை வருடும் சில நேரங்களில் உருக்கும்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. விக்கியுலகம், C.P. செந்தில்குமார், இராஜராஜேஸ்வரி!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. வேங்கட ஸ்ரீனிவாசன்!

    தொலைக்காட்சி அறிமுகமாகிய சமயம் அடிக்கடி இவர்களின் பாடல்களை கேட்க/ பார்க்க நேர்ந்தது! தமிழ் தொலைகாட்சிகள் வந்தவுடன் பாதை மாறிவிட்டது!

    பங்கஜ் உதாஸை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  6. ஜக்ஜித், சித்ரா சிங், அனூப் ஜலோட்டா, பங்கஜ் உதாஸ் எல்லாருமே போட்டி போட்டுண்டு தன் திறமையை வெளிப்படுத்தியவர்கள்.

    ReplyDelete
  7. Lakshmi மேடம்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  8. "என் ராஜபாட்டை"- ராஜா!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete