2006ம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலில், கலைஞரின் கட்சி வெற்றி பெற்றதற்குக் காரணம்," கதா நாயகன்" இலவசத் தேர்தல் அறிவிப்புகளே என்று, அனைவரும் நம்பிக் கொண்டிருந்தோம்! கலைஞரும் அதனை உறுதிப் படுத்தும் விதமாக, 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை கதாநாயகி என்று வர்ணித்திருந்தார்!
1970 களில் கலைஞர் ஆட்சிக் காலத்தில், நிறைய குடிசை மாற்று வீடுகள், ஏழைகளுக்கு குறிப்பாக சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு, கட்டித்தரப் பட்டது! வீட்டுப் பட்டாக்கள் பலவும் விநியோகிக்கப்பட்டன! அவசரநிலை முடிந்து, நடத்தப்பட்ட 1977ம் ஆண்டு தேர்தலில், பயனாளிகள் பலரும், கலைஞரை விடுத்து, எம்.ஜி.ஆர் பக்கமே நின்றனர்! - அவர் மறைந்து பல காலம் வரை!
தன்னைத் தெரிவு செய்யும் மக்களுக்கு, நன்றி தெரிவிக்கும் பொருட்டு, மனிதாபமிக்கத் தலைவரான, எம்ஜிஆர் இலவச உடை, காலணி, பற்பொடி என்று அறிமுகப் படுத்தினார்! காமராசரின் மாணவர்களுக்கான, மதிய உணவுத் திட்டத்தை, மாற்றங்களுடன் அனைத்துக் குழந்தைகளுக்கும் பயனளிக்கும் வகையில், சத்துணவுத் திட்டமாக அமல் படுத்தினார்! அப்போது எதிரணித் தலைவர் கலைஞர், எம்ஜிஆரின் இலவசத்திட்டங்களைக் குறை கூறினார்!
எந்த ஒரு அரசும் செய்ய வேண்டிய நலத் திட்டங்களை,வோட்டுகளாக மாற்றும் தந்திரத்தை, கலைஞரின் கட்சி, முதன் முறையாக, 2006ம் ஆண்டு தேர்தலில், பயன் படுத்தினர்!
ஜெயா அம்மையாரின், 2006 ஆண்டு வரையிலான ஆட்சியில் ஊழல் குற்றச் சாட்டுகள் அதிகம் இலையெனினும், அதிரடி ஆட்சியால் மக்களின், அபிமானத்தை இழந்ததால், 2004ம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில், ஜெ. பூஜ்ஜியத்தையே அடைந்தார்! அதன் பின்னர், ஓரளவு அம்மையார், சுதாரித்த படியால், அதனைக் கணித்த கலைஞர் அம்மையாரை வீழ்த்த எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச டி.வி/கேஸ் மற்றும் ரூ 2/1 அரிசித் திட்டங்கள்!
கலைஞரின் 2006ம் ஆண்டு வெற்றி, இலவச அறிவிப்புகளால், கிடைத்த வெற்றி என்று, அனைத்துத் தரப்பினரும் பேசியும், நம்பியும் வந்தனர்! இலவச அறிவிப்புகளை, நடை முறைப் படுத்தும் போது, வறுமையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, ஏனையோருக்கும் விரிவு படுத்தினர்!
இலவசங்களால் வெற்றியை ருசித்த தி.மு.கவின் மேல், இலவசத்தை ருசித்தோரும்/ அர்ச்சித்தோரும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது - 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கை!
2006ம் ஆண்டு இலவச தேர்தல் அறிக்கையைப் பிரசவித்த, அதே டீம், தற்போதைய அறிக்கையையும் பல ஊர்களில்/ரிசார்டுகளில், தங்கி, மூளையைக் கசக்கி, தயாரித்து வெளியிட்டது! ஆட்சியைத் தக்க வைக்கும் சக்தியைக் கொண்டது என்றே, மிகந்த எதிர்பார்ப்புகளுடனும், நம்பிக்கையுடனும், வெளியிடப் பட்டதி.மு.கவின் 2011 தெர்தல் அறிக்கை வெகு விரைவில் பிசுபிசுத்துவிட்டது!
போட்டிக்காக ஜெ.அம்மையாரால் வெளியிடப்பட்ட, தேர்தல் அறிக்கையும் பெரிதாக மக்களால் பேசப்படவில்லை!
இலவசத் திட்டங்கள் மட்டுமே, தெர்தலில் வெற்றியை நிர்ணயிக்க முடியாது!
இலவசங்களை யாரும் தங்கள் பையில் இருந்து கொடுப்பதில்லை என்பதையும், அவைகளில் சில (எ.க) உணவு,கல்வி, மருத்துவம் சார்ந்தவை அனைத்தும், வறுமையில் வாடுபவர்க்கு, அவசியம் செய்யப்பட வேண்டிய/ இதுவரை மறுக்கப்பட்டவையே என்பதையும், மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதையும், இத் தேர்தல் ஆட்சி மாற்றம் புரிய வைத்துள்ளது!
ஒவ்வொருத் தேர்தலிலும், ஆட்சி மாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன! கவர்ச்சி இலவச அறிவிப்புக்களால், ஓரளவு பாதிப்பைக் குறைக்க முடியுமே தவிர, கடைத் தேங்காயை,வழிப் பிள்ளையாருக்கு எப்போதும் உடைத்துக் கொண்டிருக்க முடியாது!

மாப்ள நச்!
ReplyDelete//கடைத் தேங்காயை,வழிப் பிள்ளையாருக்கு எப்போதும் உடைத்துக் கொண்டிருக்க முடியாது//
ReplyDeleteநீங்க உடைச்சிட்டீங்க உண்மையை.