Tuesday, May 17, 2011

ரூபாயின் மதிப்பு 20 சதம் குறைய வாய்ப்பு?

 டிஸ்கி: இது பகிரப்பட்டுள்ள ஒரு செய்தியே! நாணய வியாபாரத்திற்கு அல்ல! மீறினால் நானோ, என்னைச் சார்ந்தோர் எவரும் பொறுப்பல்ல! அவரவர் யூக வணிகத்திற்கு அவரவரே பொறுப்பு!
Indian Banknotes




அடுத்து வரும் இரண்டு வருடங்களில், உலக நாணய சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு, சுமார் 20 - 30 சத வீழ்ச்சி அடையலாம் என "எவேல்யுசர்வ்" எனும் பொருளாதார/ வியாபார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது!

வளர்ந்த நாடுகளில் பொருளாதாரத் தேக்க நிலை நிலவுவதால், அங்குள்ள நிதி நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்கின்றன!ஒவொரு வருடமும் எந்த வளரும் நாட்டில் செய்யும் முதலீடு பாதுகாப்பாகவும், லாபகரமானதாகவும் இருக்கும் என ஆய்வு செய்து சில நிறுவனங்கள் பரிந்துரை செய்கின்றன! அதன் அடிப்படையிலெயே வெளிநாட்டு முதலீடுகள் நமது நாட்டிற்குள் வருகின்றன/ வெளி செல்கின்றன!



தற்போது வெளியிடப்பட்டுள்ள பரிந்துரை அறிக்கையில், முதலீடு செய்ய ஏற்ற நாடுகள் வரிசையில் ரஷ்யா(52+), சீனா (42+), இந்தொனேஷியா(27+)...இந்தியா(42-)

இதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை:

1. இந்தியப் பொருளாதாதாரத்தின் மேல் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை!
2. நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளி!
3. வெளிநாட்டு நிதி முதலீடு சுணக்கம்!
4. மெதுவாக வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள்!


வெளிநாடில் இருந்து பெறப்படும் முதலீடுகளில் முக்கியமானவை:
1. எஃடிஐ எனப்படும் நீண்ட கால முதலீடுகள் - இவைகள் பெரும்பாலும் கம்பெனிகளிலேயெ முதைஇடு செய்யப் படுகின்றன! (எ.கா- ஹோண்டா, டயோட்டா)
2. எஃப் ஐ ஐ எனப்படும் குறுகிய கால பண முதலீடுகள் - இவை இந்தியப் பங்கு சந்தைகளிலும், அரசாங்க கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப் படுகின்றன!


தற்போது நீண்ட கால முதலீடுகள் இந்தியாவின் உள்ளே வருவது குறைந்துள்ளது என்றும் குறுகிய கால முதலீடுகள் அடுத்து வரும் வருடங்களில் சுமார் 90000 கோடி ரூ அளவு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது!

உலக சந்திஅயில் நாணய மதிப்பு பல காரணங்களுக்காக ஏறி இறங்குகிறது! அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில காலமாக 44 - 47 எனும் அளவில் இருந்து வருகிறது.


 அதிகரித்துவரும் அந்நியச் செலாவணி நடப்புக் கணக்கின் இடைவெளியின் காரணமாக, அடுத்துவரும் இரண்டு வருட காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து, ஒரு அமெரிக்க டாலர் சுமார் ரூ55 - 60 அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது!

ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் தக்க நடவடிக்கை எடுத்தால் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது! இந்த அளவுக்கு, ரூபாயின் மதிப்பு குறைந்தால் வங்கி வட்டி விகிதம் மேலும் உயரும்! பணபுழக்கம் குறையும்! ஏற்றுமதியாளருக்கு லாபம்1இறக்குமதி பொருள் விலை உயரும்!

2G அலைக்கற்றை மற்றும் காமன்வெல்த் ஊழல்கள், உலகநாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் அவமானத்தையும், பெருத்த பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது!

யார் வருவாரோ? காப்பாற்ற!




2 comments:

  1. இந்திய‌நாட்டின் பொருளாதார‌ ஆளுமையில், செல்வாக்கான அர‌சிய‌ல்வாதிக‌ளின் தலையீடு ஒரு முக்கிய‌ கார‌ணி. அர‌சிய‌ல்வாதிக‌ளின் ப‌ல‌ம் அவ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ க‌ட்சி ம‌ற்றும் ம‌க்க‌ளின் தேர்வு சார்ந்து ஸ்திர‌த்த‌ன்மை இல்லாதிருப்ப‌தால், நீண்ட‌ கால பெரிய‌ முத‌லீடுக‌ளுக்கு வெளிநாட்டு முத‌லீட்டாள‌ர்க‌ள் த‌ய‌ங்குகின்ற‌ன‌ர். நம‌து அர‌சுகளின், நில கைய‌க‌ப்ப‌டுத்த‌ல் ச‌ட்ட‌ம், மின்காந்த‌ அலைவ‌ரிசை ஒதுக்கீடு, காடு ம‌ற்றும் மாசுக் க‌ட்டுப்பாடு ச‌ட்ட‌ம் போன்றவை அவ‌ற்றை நிர்வ‌கிக்கும் அமைச்ச‌ரையும் அவ‌ர்க‌ளது நம்ப‌க‌த் த‌ன்மையையும் சார்ந்திருப்ப‌தால், நீண்ட‌கால‌ முத‌லீடு ஒரு சிக்க‌லான, ச‌வாலான செய‌லாகவே இங்கு இருக்கிற‌து. மேலும் இந்திய‌ப் க‌ருப்புப் ப‌ண‌ம் வெளிநாட்டு வ‌ங்கிக‌ளில் அதிகமாக சேர‌ச்சேர‌ ரூபாயின் ம‌திப்பும் குறையும்.

    ReplyDelete
  2. vasan!

    வணக்கம்! வருகைக்கு நன்றி!


    நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது! வெளியெறும் இந்திய ஊழல் பணம், மொரீஷியஸ் போன்ற நாடுகளின் வழியேதிரும்ப நாட்டிற்குள் வருகிறது - வெள்ளை சட்டையோடு!

    ReplyDelete