Wednesday, July 28, 2010

சாமி யார்?

உண்டு என்பது ஆன்மீகம்!
இல்லை என்பது நாத்திகம்!
உண்டா, இல்லையா? என்பதே பகுத்துவம்!

பக்தர் சொல்லுவது - இந்த பிரபஞ்சத்தை படைத்து, பஞ்சபூதங்களைப் படைத்து, ஜீவராசிகளைப் படைத்து விளையாடுபவன் கடவுளே! கடவுள் சக்தி ரூபம்! சக்தியை உணர முடியுமே தவிர, நேரில் காண முடியாது!கடவுள் பரமாத்மா! நாம் ஜீவாத்மா! மரணத்திற்கு பிறகு ஜீவன், பரமனுடன் கலக்கிறது!

நாத்திகர் கூற்று - கடவுள் இல்லவே இல்லை! அனைத்தும் கட்டுக்கதை! காலம் காலமாகத் தொடரும் மூடநம்பிக்கைகளின் கதை! அனைத்தையும் படைத்தவன், கடவுள் எனில், கடவுளின் மூலாதாரம்?

பகுத்தாய்வு!
அறிவியல் நிருபிக்காதவரை, கடவுளை ஏற்பது சிரமம்!
கடவுள் ஒருவரா,பலரா? ஒவ்வொரு மதமும் ஏன் கடவுளை விதம் விதமாக சித்தரிக்கிறது? ஒரு மதத்தின் கடவுள், மற்ற மதக் கடவுளுக்குப் பகையா/நட்பா?

இந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொரு அணுவும்/உயிரும், பிறவி/வாழ்நிலை/அழிவு எனும் சக்கரத்தில், சுழலுகிறது! இதற்கு யார் காரணம்! ஆன்மீக விதியா? அறிவியல் விதியா?

7 comments:

  1. ரம்மி சார் ..
    நல்ல படைப்பு ...
    மூவரில் நான் பகுத்தறிவாளனாயிருக்க விரும்புகிறேன் !
    எளிமைக்கும் தெளிவிற்கும் வந்தனங்கள் தோழர் !

    ReplyDelete
  2. நன்று மிகவும் நன்றாக உள்ளது உமது பதிவு.ஆனால்,குழழியை நீர் விமர்சித்தது ஏற்றுகொள்ளதக்கதாய் இல்லை.உமக்காகவே ஒரு பதிவு.சென்று பாரும்.

    ReplyDelete
  3. நீங்க எதுல வர்றிங்க?

    ReplyDelete
  4. திரு.வாலழகரே! ஐ 50:0:50!

    ReplyDelete
  5. பலபேர் பகுத்தறிவாதிகளையும், நாத்திகர்களையும் குழப்பிக் கொள்கிறார்கள். நல்ல விளக்கம் !

    ReplyDelete
  6. இந்த கேள்விக்கு எப்போதுமே பதில் இல்லை... கடவுள் பேரால நடக்குற அராஜகங்களை மட்டும் எப்போதும் ஏத்துக்க முடியாதவன் நான்...

    ReplyDelete
  7. புது போஸ்ட் போடலையா? சார்

    ReplyDelete