Sunday, July 4, 2010

இலங்கைக்கு ஆப்பு வைக்க!

அமெரிக்காவுக்கு க்யூபா, சீனாவிற்கு தைவான் வரிசையில் இந்தியாவிற்கு இலங்கை மாறிவிடும் சூழல் இப்போது! க்யூபாவிற்கு ரஷ்யா உதவி, தைவானுக்கு அமெரிக்கா வரிசையில், இப்போது இலங்கைக்கு சீனா உதவி!

ஐ.நா சபை பாதுகாப்பு கௌன்சிலில், நிரந்தர உறுப்பினர் பதவியை அடையும் வரை,இந்தியா நல்லவன் வேஷம் போட்டேயாக வேண்டிய சூழ்நிலை!

இலங்கயைக் கட்டுப்படுத்த,நாம் செய்ய வேண்டியவை!
1. பொருளாதாரரீதியில் பயனில்லையெனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, சேது திட்டத்தை செயல்படுத்தி,கப்பற்படையை உலவ விட வேண்டும்!
2.குளச்சல் துறைமுகத்தை பெரியதாக அமைத்து,வியாபாரக் கப்பல்களை வரவழைத்து, கொழும்பு துறைமுகத்தை,வலுவிழக்கச் செய்ய வேண்டும்!
3. இலங்கை அரசை நிர்பந்தித்து, அந்நாட்டின் கட்டமைப்பு சேவைகளான தொலைதொடர்பு, எண்ணை போன்றவைகளை இந்திய கம்பெனிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!
4.இலங்கை விவகாரங்களுக்காக, காரியக்குழு அமைத்து, தமிழக முதல்வர் தலைமை ஏற்கச் செய்ய வேண்டும்!(அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு - தமிழர் நலன் காண)
5.இலங்கைத் தமிழர் துயர் தீர்க்க, அரசியல்ரீதியாக நிர்பந்திக்க வேண்டும்!

2 comments:

  1. தோழரே இலங்கையை கட்டுப்படுத்த வேண்டுமானால் நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்.
    ஆளும் வர்கம் கம்மியூனிஷ்ட்களாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து காத்து இருக்கின்றது என்பது இந்த அரசியல் வாதிகளுக்கு தெரிந்தும் தெரியாது போல நடித்து கொண்டு சுரண்டுவதே தமது தொழில் என்று சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நாலே வரியில் சொன்னாலும் நறுக்கென சொல்கிறீர்கள் , நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete