Wednesday, April 3, 2013

1வது 6வது சேர்க்கைக்கு..நுழைவுத் தேர்வு தேவையா ?

 இந்த வெயிலுக்கு இருக்கிற "பிரச்சனைகள்" போதாதா..?
 நீ ஏன்யா ஆவி எடுக்கிறே..என்கிறீர்களா?


மழையில்லாமல் மாசடைந்திருக்கும் காற்றுவெளியில்..
இரவியின் கதிர்கள்..பூமியை நெருங்க..நெருங்க
வீரியம் கொண்டு தாக்குவதால்..
ஏற்கெனவே எண்ணை காணாத சிரசின் உள்ளே ஊடுருவி..
"நுரைடப்பா"வை, இளகச் செய்து விடுவதால்..
பற்பல கேனத்தனமான எண்ணங்கள் வெளிப்படுகின்றன..!

அதில் இதுவும் ஒன்று !


இப்போதான் மிகவும் சிரமப்பட்டு, தொழிற்கல்விக் கூடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு..எம்ஜியார் கொண்டு வந்த.."நுழைவுத் தேர்வு" பேயை அடிச்சு விரட்டி இருக்கோம்...ஏன் புதுசா.."பூதத்தை"க் கிளப்பி விடறேன்னு..பல்லைக் கடிக்கிற சத்தம் நல்லாவே கேட்குது !

கருவில் சிசு உருவாகிடுச்சு..கன்ஃபர்ம்னு டாக்டரம்மா..பச்சைக்கொடி காட்டியதும்..அப்பனாகப் போறோமுனு பயபுள்ளைக்கு ஒரே சந்தோஷம்..மகிழ்ச்சி !

எல்லாமே..சில மணி நேரம் தான் !
மெல்ல மனைவி தான் ஆரம்பிப்பாள்..."
ஏனுங்க ரொம்ப வலிக்குமா..அப்படிம்பாள்!
இப்பதான் "சிசேரியன்", "பெயின்லெஸ் டெலிவரி" வந்துடுச்சே!
டேய் ..பேடிக்கண்டா ..என்பார் நம்ம நாயகன் !
சேரனையும்..மோகன்லாலையும் மனசில் வெச்சு !
 
மனசாறும் மனைவி..மெல்ல இதழ் விரிச்சு
குழந்தைக்கு என்ன பேருங்க வைக்கலாம்..ம்பா!
சொக்கிடுவான் நம்மாளு..ஒரே புல்லரிப்பா இருக்கும்..
ஒரு அரைமணி நேரம் "டிஸ்கஸன்" நடத்தியும்...
முடிவு எடுக்கமுடியாது..! தள்ளிப் போட்றுவாங்க !


பாலாகட்டும், பீராகட்டும் அதிகமா குடிச்சா..
ஆட்டம் கொஞ்ச நேரம் தான்..
அப்பாலிக்கா வாந்தி பேதி ஆகிற கணக்கா..
அவனோட அளவு மீறுன சந்தோஷகிணத்துல
கல்லைத் தூக்கி வீசுவா..பாருங்க!

'ஏனுங்க..கொளந்தைய எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்?

அவ்வளவுதான்..சினிமா எடுக்க ஆரம்பிச்சு 80 வருஷமானாலும்...
இப்ப வந்த" விதேசி" படத்திலேயும் ..சோகக் காட்சியில் "ஷெனாய்" ஊதுறமாதிரி...ஆயிரம் சோககீதங்கள் காதுல கேட்குது !

வாயடைச்சுப் போயிடுவான்,..அதுக்கப்புறம் பாருங்க ஒரே சிந்தனைதான்..குழந்தை பொறந்து, பள்ளிக்கூட சீட் வாங்கற வரைக்கும்.".நெத்தியிலே பொட்டு வெச்சு"ன்னு மனசுக்குள் ஆயிரம் சிந்தனைகள் டேன்ஸ் ஆடும் !

 அடடா..புருஷனை "சேது"வாக்கிட்டோமேன்னு..பொண்டாட்டிக் காரி முழிச்சுக்குவா, பேக்கானுக்கு வழியும் சொல்லிக் கொடுப்பா!

ஏனுங்க..அந்த "கேக்கே மேக்கே"பப்ளிக் ஸ்கூல்ல..லச்சரூவாயக் கொடுத்தா..2017எல்.கேஜிஅட்மிஷன் போட்றுவாங்களாம்! பக்கத்துவீட்டு பரிமளா தான் சொன்னா! அவ போயி பணத்தைக் கட்டி..அட்வான்ஸ் புக்கிங்" செஞ்சுட்டாளாம்  என்பாள் !

மனைவி சொல்லே மந்திரம்னு கேட்டீங்க..பொழச்சுக்குவீங்க..இல்லைன்னா..எல்கேஜி அட்மிஷனுக்கு..நாயா..பேயாத் திரியணும்..நெறைய ஸ்கூல்களிலே..கண்துடைப்பு என்ட்ரன்ஸ்,இன்டர்வியூ எல்லாம் நடக்கும்..மாட்டிட்டு முழிக்கணும்..சொல்லிட்டேன் !

1வது 6வது சேர்க்கைக்கு..நுழைவுத் தேர்வு தேவையா ?

 இதைப் போல பெற்றோர்கள் படும் அவஸ்தைக்கு ..ஒரே தீர்வு.."கேட்" போன்ற பொது நுழைவுத் தேர்வு முறை !குழந்தைகளுக்கு ! கேஜி வகுப்புகளில் நன்றாக பயிற்சி அளித்தால்..நுதேர்வை எளிதில் எழுதிவிடலாம் !

வாங்கி இருக்கும் மார்க்குகள் அடிப்படையில், பல பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்...அந்த அந்த பள்ளிகளுக்கு வந்திருக்கும் விண்ணப்பங்களின், மதிப்பெண்களின் அடிப்படையில்..வரிசைப் பட்டியல் போடப்பட்டு.."அட்மிஷன்" கொடுக்கலாம்! சேர்வது ..அல்லது வேறு பள்ளியை தேர்ந்தெடுப்பது  என்பது " பெற்றோரின் விருப்பத்துக்கு விட்டு விடலாம் !

ஆறாம் வகுப்பிலும் இந்த முறையையே கொள்ளலாம்..!
காரணம் பெரும்பாலான பெற்றோர்கள் வேறு பள்ளிகளுக்கு தங்கள் செல்வங்களை மாற்றும் சமயம் அது !

இது என் மேலான யோசனை...!

திரியைக் கொளுத்தி போட்டாச்சு..என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!

வெயிலோடு வெளையாடி..வெயிலோடு உறவாடி !











7 comments:

  1. இப்பவே கண்ணை கட்டுதே...

    சாமீ...!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி ரோசனை எல்லாம் ..எனக்குத்தான் வருமாக்கும் ! நன்றி..தனபாலன் !

      Delete
  2. அடடா..புருஷனை "சேது"வாக்கிட்டோமேன்னு..பொண்டாட்டிக் காரி முழிச்சுக்குவா, பேக்கானுக்கு வழியும் சொல்லிக் கொடுப்பா!

    //என்னையும் அறியாமல் சப்தமாகச் சிரித்துவிட்டேன்
    பட்டாசு என்னுள் சப்தமாகவே வெடித்துக் கொண்டிருக்கிறது
    கசப்பு மருந்தை அல்வாவில் கலக்கிக் கொடுத்ததை
    மிகவும் ரசித்தேன்.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இளந்தாரிகளுக்கு என்னால் முடிந்த ஒரு அலாரம் பெல் !உற்சாக வார்த்தைகளுக்கு நன்றி..ரமணி சார் !

      Delete
  3. ரூம் போட்டு யோசிப்பீங்களோ??

    ReplyDelete
  4. என்னது மறுபடியுமா...

    ReplyDelete
  5. பள்ளிகளின் இந்நிலைக்குக் காரணம் பெற்றோர்களே என்பது என் கருத்து

    ReplyDelete